புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப் பள்ளி

தமிழ்நாட்டில் அமைந்துள்ள ஒரு கிறுத்துவப் பள்ளி

புனித தேவதை ஆங்கிலோ இந்தியன் உயர்நிலைப்பள்ளி (Holy Angels Anglo Indian Higher Secondary School); இது தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் அமைந்துள்ள, அனைத்து சிறுமியர்களுக்கான கத்தோலிக்க திருச்சபையின் தனியார், கன்னி மட (Convent) பாடசாலையாகும். உயர்நிலைப்பள்ளியாக உள்ள இது, மழலையர் (Nursery) நிலையிலிருந்து, உயர்நிலை (பன்னிரெண்டாம்) வரையில் கல்வி வழங்கும் பள்ளியாக உள்ளது. [1] மேரி பிரான்சிஸ்கன் மிஷினரிகள் (Franciscan Missionaries of Mary) மூலம் இயங்கக்கூடிய இப்பள்ளி, “உண்மையான தொண்டினை நோக்கி” என்பதனை குறிக்கோளாகக் கொண்டுள்ளது. 2009 / 10 கல்வி ஆண்டில் நடைபெற்ற, இப்பள்ளியின் 75 ஆவது ஆண்டுவிழாவான, பிளாட்டினம் பெருவிழா கொண்டாட்டத்தின்போது, 11 ஆவது இந்தியக் குடியரசுத் தலைவரும், இந்திய அறிவியலாளருமான ஆ. ப. ஜெ. அப்துல் கலாம் கலந்துகொண்டு சிறப்பித்தார். பற்பல சமயங்களைச் சார்ந்த சுமார் 2100 மாணவர்களுக்கும் மேலாக பயிலும் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் இந்திரா நூயி, பெப்சி நிறுவத்தின் தலைவராகவும், முதன்மை செயல் அலுவலராகவும் பணியாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.[2]

வரலாறு

தொகு

இக்கல்வி நிறுவனம், சென்னை மயிலாப்பூரில் செயின்ட் தாமஸ் கான்வென்ட் (St. Thomas Convent) எனும் பெயரில் நிறுவப்பட்டது. பின்னர் 1888 இல், செயின்ட் தாமஸ் பள்ளியை, ஆங்கிலோ இந்தியர்கள் குழந்தைகளுக்காக திருச்சபையின் சமயகுருவால் நடத்தப்பட்டுவந்தது. பின்பு 1897 ஆம் ஆண்டில், மேரி சகோதரிகளின் பிரான்சிஸ்கன் சபையின் சமயப்பரப்பாளர்கள், இப்பள்ளிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டனர், அதன்பின் "செயிண்ட் தாமஸ் ஐரோப்பியர்கள் பள்ளி" (St. Thomas European School) என அழைக்கப்பட்டது. 1909 ஆம் ஆண்டில் ஆங்கிலோ-இந்தியப் பிள்ளைகளுக்கு "புனித தேவதை" (Holy Angels) என்ற பெயரில் தங்கும் விடுதி வழங்கப்பட்டது. ஆனால், விரைவில் பெரிய குடியிருப்பு வசதி தேவைப்பட்டது. 1928 ஆம் ஆண்டிலிருந்து மைலாப்பூரின் போர்த்துகீசிய பேராயர் டெக்ஸ்சிரா, எப் எப் எம் க்கு (FFM) மாம்பலம் (தற்போது தியாகராய நகர்) இல் ஏறத்தாழ 5 ஏக்கர் அளவைக் கொண்ட தேவாலய சொத்துக்களுக்கு விற்க முன்மொழியப்பட்டது.

1933 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அந்நிறுவனம் அந்த நிலத்தை வாங்கியது, அங்கு ஆங்கிலோ-இந்திய பள்ளி, தங்கும் விடுதி, மற்றும் கான்வென்ட் ஆகியவற்றை நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டது. 1934, மார்ச்சு 21 இல் அங்கு எட்டு அறைகள் எழுப்பப்பட்டன. பின்பு இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பேராயர் கார்வால்ஹ (Carvalho) அப்போதைய மாம்பலத்தில் (தற்போது தியாகராய நகர்)) ஒரு புதிய கட்டிடத்திற்கான அடித்தளத்தை அமைத்தார். 1934, சூன் 1 அன்று, பெண்குழந்தைகளுக்கான விளையாட்டு முறை கல்விக் கூடம் உள்ளிட்ட கட்டிடம் திறக்கப்பட்டது. இப்பள்ளியின் முதல் தலைமை ஆசிரியை எம். நோட்ரே டேம் டி பாம்பீ (M. Notre Dame de Pompei) ஆவார், அவர் ஒரு ஐரிய பெற்றோர்களுக்கு பிறந்த இந்தியராவார்.

1934 ஆம் ஆண்டு, ஆகத்து 2, அன்று, புதிய கட்டிடத்திற்கான அடித்தளம் அமைக்க, மைலாப்பூர் பேராயர் மூலம் ஆசீர்வதிக்கப்பட்டது. 1935, சூன் 27 அன்று, பேராயர், மைலாப்பூர் கார்வால்ஹ (Mgr. Carvalho) புதிய கட்டுமானத்தின் ஒவ்வொரு பகுதியையும் ஆசீர்வதித்தார். 1935, சூலை 2 இல், "புனித தேவதை" (Holy Angels) என்ற ஒரு சிறப்புவாய்ந்த பெயரை புதிய கட்டிடத்திற்கு சூட்டப்பட்டது. 1937 மற்றும் 1940 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அசல் தொகுதி நீளமாக இருந்தது, அதில் ஒரு பிரிவு சேர்க்கப்பட்டு மற்றுமொரு மேல்தளம் கட்டப்பட்டு, மற்றும் முழு கட்டிடமும் பிரதான கட்டிடத்திற்கு இணைப்புப் பாலம் கட்டப்பட்டது.

கன்னி மடம்

தொகு

1935 சூலையில், மைலாப்பூரில் உள்ள எப் எம் எம் (FMM) மேலதிகாரி, "புனித தேவதை" (Holy Angels) எனும் இந்த கல்வி நிறுவனத்தை அதன் சொந்த மேன்மையான ஒரு தனி சமுதாயத்தை கொண்டிருக்க வேண்டும் என்று முடிவு செய்தார். 1935,ஆகத்து 5, அன்று அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஒன்பது சகோதரிகள் ஒரு புதிய கட்டிடத்தின் ஒரு பிரிவில் குடிபெயர்ந்தனர். 1937 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 28 ஆம் தேதி முதல் - 30 ஆம் தேதி வரையில் சென்னை சர்வதேச மன்றம் நடைபெற்றது. அந்த மாநாட்டில் பல்வேறு சபைகளின் சகோதரிகள் பலர் கன்னி மடத்தில் கலந்துகொண்டார்கள்.

சான்றுகள்

தொகு
  1. "Basic Information Of Holy Angels Anglo Indian Higher Secondary School". www.sqoolz.com (ஆங்கிலம்). © 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-03-22. {{cite web}}: Check date values in: |date= (help)[தொடர்பிழந்த இணைப்பு]
  2. Indra K. Nooyi Chairman & Chief Executive Officer at PepsiCo, Inc.