புனித பிரான்சிசு தேவாலயம், கொச்சி

புனித பிரான்சிசு தேவாலயம் (ஆங்கிலம்:St. Francis Church) என்றழைக்கப்படும் தென்னிந்தியத் திருச்சபை தேவாலயம் கேரளாவின், கோட்டைக் கொச்சியில் 1503 ஆம் ஆண்டு முதன் முதலில் இந்தியாவில் கட்டப்பட்ட பழமையான ஐரோப்பிய கிறித்துவ தேவாலயம் ஆகும்.[1]

புனித பிரான்சிசு சீஎஸ்ஐ தேவாலயம்
இரவில் தேவாலயத்தின் முன் தோற்றம்
புனித பிரான்சிசு சீஎஸ்ஐ தேவாலயம் is located in கேரளம்
புனித பிரான்சிசு சீஎஸ்ஐ தேவாலயம்
புனித பிரான்சிசு சீஎஸ்ஐ தேவாலயம்
9°57′57″N 76°14′28″E / 9.965945°N 76.241102°E / 9.965945; 76.241102
அமைவிடம்இந்தியா, கொச்சி, கேரளம்
நாடுஇந்தியா
சமயப் பிரிவுதென்னிந்தியத் திருச்சபை
வலைத்தளம்http://stfranciscsichurch.org/church/st-francis-csi-church http://stfranciscsichurch.org
வரலாறு
நேர்ந்தளித்த ஆண்டு1506 ஆம் ஆண்டு
Architecture
நிலைவழிபாட்டுத் தலம்
செயல்நிலைசெயல்பாட்டில் உள்ளது
பாணிஐரோப்பியக் கலை
நிறைவுற்றது1516 ஆம் ஆண்டு

வரலாறு

தொகு
 
தேவாலயத்தின் முற்புறப்பார்வை

புகழ்பெற்ற போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான வாஸ்கோ ட காமா ஐரோப்பாவிலிருந்து இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடித்து மே 20, 1498 ஆம் ஆண்டு கோழிக்கோடு நகருக்கு அருகே உள்ள கப்பத் என்னும் கிராமத்தில் வந்திறங்கினார்.[2] இவரைப் பின் தொடர்ந்து வந்த பெட்ரோ ஆல்வாரெசு காப்ரால் மற்றும் அஃபோன்சோ தே ஆல்புகெர்க்கே இவர்கள் தங்குவதர்க்கு கொச்சி அரசர் அனுமதியுடன் ஒரு கோட்டையுடன் மரத்தால் ஆன தேவாலயம் கட்டப்பட்டது. இந்த ஆலயத்தை இயேசுவின் பன்னிரு திருத்தூதர்களுள் ஒருவரான புனித பர்த்தலமேயுவின் பெயரில் அமைக்கப்பட்டது.

 
புனித பிரான்சிசு தேவாலயத்தின் முன்புறம் உள்ள நுழைவாயில் நோக்கி

அதன்பின் ஃப்ரான்ஸிஸ்கோ டே அல்மிடியா (Francisco de Almeida) என்னும் ஆளுனரின் தலையில் 1506 ஆம் ஆண்டில் பிரான்சிஸ்கன் சபை என்னும் கிறித்தவத் துறவிகளின் பிரிவு இதனை கற்கள் மற்றும் சுண்ணாம்புக்கலவை கொண்டு உருவாக்கியுள்ளனர். இதன் கட்டுமானம் 1516 ஆம் ஆண்டில் முடிக்கப்பட்டு புனித அந்தோனியார் பெயர் இடப்பட்டது.[2] பின்னர் சீர்திருத்த இயக்கப் பிரிவை சேர்ந்த டச்சுக்காரர்கள் இந்த ரோமன் கத்தோலிக்க தேவாலயத்தை கைப்பற்றிய போது இதனை சேதப்படுத்தவில்லை. பின்னாளில், 1804 ஆம் ஆண்டு டச்சுக்காரர்கள் இந்த ஆலயத்தை ஆங்கிலிக்கம் மதகுருக்களிடம் ஒப்படைத்த பின் இது புனித பிரான்சிசு பெயரால் அழைக்கபட்டது.[2] இந்த தேவாலயம் 1904 ஆம் ஆண்டின் பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னங்களின் சட்டத்தின் கீழ் ஏப்ரல் 1923 இல் இது ஒரு பாதுகாக்கப்பட்ட நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இது பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னமாக இந்தியத் தொல்லியல் ஆய்வகம் கீழ் உள்ளது. மேலும் வட கேரள மாவட்டத்திர்க்குச் சொந்தமான தென்னிந்தியத் திருச்சபையானது வாரவாரம் ஞாயிறு மற்றும் நினைவு நாட்களில் சேவைகள் புரிகிறது. மற்ற நேரங்களில் பார்வையாளர்களுக்காகத் திறந்திருக்கும்.[2]

வாஸ்கோட காமா

தொகு

போர்ச்சுகீசிய நாடுகாண்பயணியான வாஸ்கோ ட காமா ஐரோப்பாவிலிருந்து மூன்றாவது முறையாக இந்தியா வந்த போது திசம்பர் 24, 1524 ஆம் ஆண்டு கொச்சியில் காலமானார். இவரது உடல் முதலில் இந்த தேவாலயத்தில் புதைக்கப்பட்டது, பின்னர் பதினான்கு ஆண்டுகள் கழித்து அவரது எஞ்சியுள்ள மிச்சங்கள் போர்த்துகல் நாட்டின் தலைநகரான லிஸ்பன் நகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. மேலும் வாஸ்கோடகாமாவின் வெறுங்கல்லறை இன்னும் இங்கே காணலாம். இது தெற்கு பக்கத்தில் தரையில் அமைந்துள்ளது. மேலும் இன்னும்பிற போர்த்துகீசியர்களின் கல்லறைகள் வடக்கு பக்கத்திலும் மற்றும் டச்சுக்காரர்களின் கல்லறை தென்பகுதியிலும் உள்ளது. [3]

படத்தொகுப்புகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "http://india.gov.in/myindia/facts.php". இந்திய அரசு. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 13, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help); External link in |title= (help)
  2. 2.0 2.1 2.2 2.3 "புனித பிரான்சிசு தேவாலயத்தின் வரலாறு". webindia123. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 18, 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "வாஸ்கோடகாமாவின் மரணம் மற்றும் கல்லறை அமைவிடம்" (in ஆங்கிலம்). பிபிசி.