புபுட்டன் (Puputan) என்பது சரணடையும்போது அவமானத்தை எதிர்கொள்ளாமல் இருப்பதற்காகாக வீரர்களின் தற்கொலை சடங்குக்கிற்கான ஒரு பாலினீசிய சொல்லாகும்.[1][2] பாலி வரலாற்றில் குறிப்பிடத்தக்க புபுட்டன்கள் 1906 மற்றும் 1908 ஆம் ஆண்டுகளில், பாலினியர்கள் இடச்சுக்காரர்களால் ஆக்கிரமிக்கப்பட்டபோது இந்தவகையான தற்கொலைகள் நிகழ்ந்தன.

தமன் புபுட்டனில் அமைந்துள்ள 1906 புபுட்டானின் நினைவுச்சின்னம், தென்பசார், பாலி.
 
1849 ஆம் ஆண்டு இடச்சுக்காரர்களுக்கு எதிரான ஒரு தற்கொலை நிகழ்ச்சியான புபுட்டனில் புலேலெங்கின் மன்னன் தனனை பின்தொடர்பவர்கள் 400 பேருடன் சேர்ந்து தானும் தற்கொலை கொண்டார். "இலு பெட்டிட் இதழ், 1849.

1906 பதுங் புப்புட்டன்

தொகு
 
பதுங் புபுட்டன் 1906

செப்டம்பர் 20, 1906 இல், அரச இடச்சு கிழக்கிந்திய இராணுவத்தின் கணிசமான படை, ஆறாவது இராணுவ பயணம் என பெயரிடப்பட்டு, ஆளுநர் எம்பி ரோஸ்ட் வான் டோனிங்கனின் கட்டளையின் கீழ் சனூர் கடற்கரையின் வடக்கு பகுதியில் தரையிறங்கியது.[3][4] செப்டம்பர் 15 ஆம் தேதி சனூரில் இடச்சுக்காரர்களின் இரு இடங்கள் மீது பதுங் வீரர்கள் சில தாக்குதல்களை நடத்தினர். இன்டரன் கிராமத்தில் சிறிது எதிர்ப்பு ஏற்பட்டது. [a]

கேசிமான்

தொகு

ஒட்டுமொத்தமாக, படை அதிக எதிர்ப்பின்றி நாட்டிற்குள் நுழைந்து, 1906 செப்டம்பர் 20 அன்று கெசிமான் நகருக்கு வந்து சேர்ந்தது. அங்கே பதுங் மன்னரின் அடிமையாக இருந்த உள்ளூர் மன்னன் இடச்சுக்காரர்களுக்கு எதிராக ஆயுதமேந்தி படையை வழிநடத்த மறுத்துவிட்ட காரணத்தால் ஒரு பாதிரியாரால் கொல்லப்பட்டிருந்தான். அரண்மனை தீவைத்து எரிக்கப்பட்டது. நகரம் வெறிச்சோடியது.[4]

தென்பசார்

தொகு

பாலி இராணுவம், தென்பசார் வரை சென்றது.[4] அவர்கள் அரண்மனையை அடைந்ததும், நான்கு பேர் சுமந்துவரும் பல்லக்கில் மன்னனின் தலைமையில் ஒரு அமைதியான ஊர்வலம் நடந்தது. மன்னன் பாரம்பரிய வெள்ளை ஆடைகளை அணிந்து, நகைகளை அணிந்து, சடங்கு கிரிசுக் கத்தியை எடுத்துச் சென்றார். ஊர்வலத்தில் இருந்த மற்றவர்கள் மன்னனின் அதிகாரிகள், காவலர்கள், பாதிரியார்கள், மனைவிகள், குழந்தைகள் மற்றும் அனைவருமே இதேபோல் உடையணிந்தார்கள். [4] அவர்கள் மரணச் சடங்குகளைப் நடத்திச் சென்றனர். வெள்ளை நிற உடையில் இருந்தனர். அவர்களின் சடங்கு கிரிசுக் கத்தியால் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தனர்.[5] ஊர்வலம் இடச்சுப் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டது. மன்னன் பல்லக்கிலிருந்து ஒரு பாதிரியாரால் கீழே இறக்கப்பட்டார். ஊர்வலத்தின் மீதமுள்ளவர்கள் அவர்களையும் மற்றவர்களையும் கொல்லத் தொடங்கினர். [6] பெண்கள் கேலிக்கூத்தாக நகைகள் மற்றும் தங்க நாணயங்களை துருப்புக்கள் மீது வீசினர். [6]

துப்பாக்கிகளாலும், பீரங்கிகளாலும் இடச்சுக்காரர்கள் சுடப்பட்டனன்ர். அரண்மனையிலிருந்த மக்கள் அதிக அளவில் கொல்லபட்டனர்.[6] முழு ஊர்வலமும் நூற்றுக்கணக்கானவர்களைக் கொண்டிருந்தது. மேலும் மொத்தம் 1,000 க்கும் மேற்பட்ட மக்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது.[7]

அரண்மனை வாயிலுக்கு வெளியே செல்லும் பாலினிய பொது மக்களின் மீது இடச்சுக்காரர்கள் முதன்முதலில் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இவர்களிடம் பாரம்பரிய கிரிசு கத்திகள் ஈட்டிகள் மற்றும் கேடயங்ளை மட்டுமே வைத்திருந்ததாகவும், தப்பிப்பிழைத்தவர்கள் தற்கொலை செய்து கொண்டதாகவும், அல்லது பப்புட்டனின் கட்டளைகளின்படி தங்களைப் பின்பற்றுபவர்களால் கொல்லப்பட்டதாகவும் மாற்று கணக்குகள் விவரிக்கின்றன. [7] வீரர்கள் விலைமதிப்பற்ற பொருட்கள் மற்றும் சடலங்களையும், எரிந்த அரண்மனையின் இடிபாடுகளையும் அகற்றினர். தென்பசார் அரண்மனை தரைமட்டமாக்கப்பட்டது. [7]

அதே நாளின் பிற்பகலில், இதேபோன்ற நிகழ்வுகள் அருகிலுள்ள பெம்குட்டனின் அரண்மனையிலும் நிகழ்ந்தன. அங்கு இணை ஆட்சியாளர் குஸ்டி கெடே நுகுரா வசித்து வந்தார். பெம்குட்டானில் உள்ள பிரபுக்கள் தங்களை கொள்ளையடிக்கவும், கொல்லவும் அனுமதித்தனர். இந்த படுகொலை உள்நாட்டில் "பதுங் புபுட்டன்" என்று நினைவுகூரப்படுகிறது. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் எடுத்துக்காட்டாக இது அமைந்தது. இந்நிகழ்ச்சியின் நினைவாக தென்பசாரின் மத்திய சதுக்கத்தில் ஒரு பெரிய வெண்கல நினைவுச்சின்னம் அமைக்கப்பட்டது. இது புபுட்டானில் பாலினியர்களின் எதிர்ப்பை பெருமைப்படுத்தியது.

தபனான்

தொகு

இடச்சு படைகள் தபனான் வரை தனது படையெடுப்பைத் தொடர்ந்தது. அங்கிருந்த மன்னன் குஸ்டி நுகுரா அகுங் மற்றும் அவரது மகன் இருவரும் தப்பி ஓடிவிட்டனர். பின்னர், அவர்கள் இடச்சுக்காரர்களிடம் சரணடைந்தனர். மேலும் நெதர்லாந்தின் ஆட்சிப் பகுதியாக மாறுவதற்கான பேச்சுவார்த்தைக்கு முயன்றனர்.

இடச்சுக்காரர்கள் அவர்களை அருகிலுள்ள மதுரா தீவு அல்லது லொம்போக்கிற்கு நாடுகடத்த முன்வந்தனர். ஆனால் அவர்கள் இரண்டு நாட்களுக்குப் பிறகு சிறையில் தங்களை (புப்புட்டன்) கொல்ல விரும்பினர். [8] [6] அவர்களின் அரண்மனை இடச்சுக்காரர்களால் சூறையாடப்பட்டது. [6]

1908 குளுங்குங் புபுட்டன்

தொகு

1908 ஏப்ரல் 18 ஆம் தேதி குளுங்குங் அரண்மனையில் மற்றொரு 'புப்புட்டன் ஏற்பட்டது. தங்களுக்கு ஆதரவாக ஒரு அபினி ஏகபோகத்தை திணிக்க இடச்சுக்காரர்களின் முயற்சிக்கு எதிராக ஒரு பாலினியர்களின் இது நிகழ்த்தப்பட்டது. [9] கரங்கசெம் மன்னன் ஏகபோகத்தை எதிர்த்தார். இது குளுங்க்குங்கின் தலைநகரில் பாலினிய கலவரத்திற்கு வழிவகுத்தது. [10] கெல்கலில் கலவரம் வெடித்தது. பாலினியர்கள் ஒரு சாவானிய அபினி வியாபாரியைக் கொன்றபோது. [10] கலவரத்தைத் தணிக்க இடச்சுக்காரர்கள் துருப்புக்களை அனுப்பினர். கெல்கலில், அவர்கள் 100 பாலினியர்களைக் கொன்றனர். மன்னனை குளுங்க்குங்கிற்கு தப்பிச் செல்லுமாறு கட்டாயப்படுத்தினர். [10] பின்னர் இடச்சுக்காரர்கள் குளுங்க்குங் நகரத்தில் குண்டுவீசினர்.

1908 ஆம் ஆண்டு ஏப்ரல் 18 ஆம் தேதி நடந்த ஒரு இறுதி மோதலில், 200 பின்தொடர்பவர்களுடன், குலுங்க்குங்கின் மன்னன் தேவா அகுங் ஜம்பே, தனது அரண்மனையிலிருந்து வெளியேறி, வெள்ளை நிற உடையணிந்து, ஒரு புகழ்பெற்ற கிரிசுக் கத்தியுடன் ஆயுதம் ஏந்தியபடி சென்றார். இது எதிரிகளின் மீது பேரழிவை ஏற்படுத்தும் தீர்க்கதரிசனம் என்று கூறினார்.[9] இச்சடங்கு விரும்பிய முடிவை நிறைவேற்றத் தவறிவிட்டது. அதற்கு பதிலாக மன்னன் சுடப்பட்டார். [10] உடனடியாக, மன்னனின் ஆறு மனைவிகள் பப்புட்டானை தேர்தெடுத்து, தங்களது சொந்த கிரிசுக்கத்தியால் தற்கொலை செய்து கொண்டனர். [10]

1946 மார்கா புபுட்டன்

தொகு
 
சுதந்திரப் போராளி முதலாம் குஸ்டி நுகுரா ராய் 1946 இல் மார்கரனா போரில் இடச்சு இராணுவத்திற்கு எதிராக கடைசி 'பப்புட்டனை' ஏற்பாடு செய்தார். அதில் 98 வீரர்கள் அவருடன் இறந்தனர்.

மார்கரனா போர் என்பது நெதர்லாந்து இந்திய ஆட்சி நிர்வாகம் மற்றும் இந்தோனேசியாவின் பாலியின், மார்காவில் நிகழ்ந்த சியுங் வனாரா பட்டாலியனுக்கு எதிராக சமீபத்தில் உருவாக்கப்பட்ட ஒரு போராட்டமாகும்.

மேலும் காண்க

தொகு

குறிப்புகள்

தொகு
  1. Notice at the Bali Museum

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
  • History of Puputan Badung. Denpasar Government Municipality Tourism Office.
  • History of Puputan Badung, page 2. Denpasar Government Municipality Tourism Office.
  • "Puputan Square". Denpasar Government Municipality Tourism Office. Archived from the original on 18 அக்டோபர் 2011. பார்க்கப்பட்ட நாள் 13 December 2008.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புபுட்டன்&oldid=3778414" இலிருந்து மீள்விக்கப்பட்டது