புரு மொனார்க்

புரு மொனார்க்
வளர்ச்சியடைந்த (வலது), இளம் புரு மொனார்க் (இடது)
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
மொனார்க்கிடே
பேரினம்:
சையோரினிசு
இனம்:
சை. டிக்கெல்லியே
இருசொற் பெயரீடு
சையோரினிசு டிக்கெல்லியே
வாலேசு, 1843
வேறு பெயர்கள்
  • மொனார்ச்சா லுகுரசு லோரிகேடசு
  • மொனார்ச்சா லோரிகேடா
  • மொனார்ச்சா லோரிகேடசு
  • சிம்போசியர்சசு லோரிகேடசு

புரு மொனார்க் (Buru monarch)(சிம்போசியாக்ரசு லோரிகேடசு) என்பது மொனார்கிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினமாகும். இது இந்தோனேசியாவில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி ஆகும்.

வகைப்பாட்டியல்

தொகு

இந்தச் சிற்றினம் முன்னர் சிம்போசியாக்ரசுக்கு மாற்றப்படும் வரை மொனார்ச்சா பேரினத்தில் வைக்கப்பட்டது.[2] சில வகைப்பாட்டியலாளர்கள் கருப்பு முனை மன்னர்,காய் மன்னரின் கிளையினமாக இதனைக் கருதுகின்றனர். இதனுடைய மாற்றுப் பெயராக புரு தீவு மொனார்க் மற்றும் கருப்பு முனை மொனார்க் ஆகியவையும் அடங்கும்.

பரவல்

தொகு

புரு மொனார்க் தெற்கு மலுக்கு தீவில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழிவிடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நில காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

வகைப்பாட்டு நிலை

தொகு

இந்தச் சிற்றினங்கள் 20,000 சதுர கி.மீ.க்கும் அதிகமான பரப்பளவில் காணப்படுகின்றது. இதனுடைய நிலையான எண்ணிக்கை 10,000க்கு மேல் உள்ளது, எனவே இவை அச்சுறுத்தலுக்கு உட்பட்டதாகக் கருதப்படவில்லை.

மேற்கோள்கள்

தொகு
  1. BirdLife International (2016). "Symposiachrus loricatus". IUCN Red List of Threatened Species 2016: e.T22707291A94115352. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22707291A94115352.en. https://www.iucnredlist.org/species/22707291/94115352. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "IOC Bird List v2.0". 2009. பார்க்கப்பட்ட நாள் October 28, 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரு_மொனார்க்&oldid=3602965" இலிருந்து மீள்விக்கப்பட்டது