புள்ளி மார்பு சிரிப்பான்

புள்ளி மார்பு சிரிப்பான் (Spot-breasted laughingthrush)(கார்ருலாக்சு மெருலினசு) என்பது லியோத்ரிச்சிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும். இது யுன்னான், வடகிழக்கு இந்தியா, லாவோஸ், மியான்மர், வடமேற்கு தாய்லாந்து மற்றும் வடக்கு வியட்நாமில் காணப்படுகிறது. இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

புள்ளி மார்பு சிரிப்பான்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
கார்ருலாக்சு
இனம்:
G. merulinus
இருசொற் பெயரீடு
Garrulax merulinus
பிளைத், 1851

தென்-மத்திய வியட்நாமின் ஆரஞ்சு மார்பு சிரிப்பான் (கா. அனாமென்சிசு) முன்பு இந்தப் பறவையின் துணையினமாகக் கருதப்பட்டது, ஆனால் இப்போது பெரும்பாலும் தனி இனமாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International (2016). "Garrulax merulinus". IUCN Red List of Threatened Species 2016: e.T22735112A95102126. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22735112A95102126.en. https://www.iucnredlist.org/species/22735112/95102126. பார்த்த நாள்: 11 November 2021.