பூட்டானில் பௌத்தம்
பூட்டானில் பௌத்தம், பூட்டான் நாட்டின் அரச சமயம் வச்சிரயான பௌத்தம் ஆகும். இந்நாட்டின் மொத்த மக்கள்தொகையில் நான்கில் மூன்று பங்கினர் பௌத்தர்களாகவும், ஒரு பங்கினர் இந்துக்களாகவும் உள்ளனர்.[1]
பூட்டான் நாட்டில் வஜ்ஜிரயான பௌத்தப் பிரிவான, திபெத்தியப் பௌத்தத்தை சில வேறுபாடுகளுடன், கிபி எட்டாம் நூற்றாண்டு முதல் மக்கள் பயில்கின்றனர். [2]
பௌத்தம் இந்நாட்டின் அரச சமயம் என்பதால், பௌத்த விகாரைகளுக்கும், வழிபாட்டிடங்களுக்கும், பிக்குகள் மற்றும் பிக்குணிகளுக்கும் பூட்டான் அரசு நிதியுதவிகள் வழங்குகிறது.
நவீன காலத்தில் பூட்டான் மன்னர் ஜிக்மே தோர்ஜி வாஞ்சுக், தங்கத்தால் மெருகூட்டப்பட்ட 10,000 கௌதம புத்தர் உருவச்சிலைகளை செய்து, பூட்டான் நாடு முழுவதும் நிறுவினார்.
பௌத்த அமைப்புகள்
தொகுதிபெத்தை போன்றே பூட்டானிலும், பௌத்தர்களின் ஆன்மீகத் தலைமை குருவாக லாமா போற்றப்படுகிறார். பூட்டான் நாட்டின் தலைநகர் திம்புவில் 1,000 பிக்குகள் கொண்ட மத்திய பிக்குகள் சங்கத்தையும், மாவட்டங்கள் அளவில் 4,000 பிக்குகளின் சங்கங்கள் நிறுவப்பட்டது. பிக்குகள் மற்றும் பிக்குணிகள் தவிர பௌத்த உபாசகர்கள் இல்லற வாழ்வில் ஈடுபட அனுமதியுண்டு. பூட்டானில் வஜ்ஜிரயான திபெத்திய பௌத்தம் பெரும்பான்மை மக்களால் பயிலப்படுகிறது.
பூட்டானில் போன் பௌத்தம்
தொகுகிபி எட்டாம் நூற்றாண்டில் வஜ்ஜிராயன திபெத்திய பௌத்தப் பிரிவை புத்துணர்வூட்டுவதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட போன் பௌத்த தத்துவம், பூட்டானில் கிபி 11 - 12ம் நூற்றாண்டுகளில் பூட்டான் மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.[3] பௌத்த சமயத்தை நவீனமாக்கிய போன் பௌத்தம், தன்னைத் தனித்தன்மை வாய்ந்த தத்துவப்பள்ளியாக பூட்டானில் தொடர்ந்து செயல்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "International Religious Freedom Report 2007 - Bhutan". U.S. Department of State. 2007-09-14. பார்க்கப்பட்ட நாள் 2008-01-06.
- ↑ "Advent of Buddhism in Bhutan". Archived from the original on 2020-09-20. பார்க்கப்பட்ட நாள் 2018-04-23.
- ↑ Baruah, Bibhuti. Buddhist Sects and Sectarianism. p. 235.
This article incorporates public domain material from websites or documents of the Library of Congress Country Studies.
ஆதார நூற்பட்டியல்
தொகு- Marks, Thomas A. (1977), Historical Observations on Buddhism in Bhutan, The Tibet Journal, Vol. 2 (2), pp. 74-91 (subscription required)