பூ யுவானூய்

பூ யுவானூய் (Fu Yuanhui) (பிறப்பு: 1996 சனவரி 7) இவர் ஓர் சீனாவைச் சேர்ந்தபெண் நீச்சல் போட்டி வீரரவார். இவர் பின்னால் நீந்துவதில் நிபுணத்துவம் பெற்றவர். [3] இவர், 100 மீட்டர் பின்னால் நீந்தும் நீச்சலில் 2016 இரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் தனது ஆளுமைக்கும், மகிழ்ச்சிக்கும் பெயர் பெற்றவர்.

பூ யுவானூய்
2015 உலகப்போட்டியின் வெற்றியில் பூ யுவானூய்
தனிநபர் தகவல்
முழு பெயர்傅园慧
சுட்டுப் பெயர்(கள்)ஆங்கௌங்க் பெண் (洪荒少女)[1]
பிறப்புசனவரி 7, 1996 (1996-01-07) (அகவை 28)
காங்சூ, செஜியாங் மாகாணம், சீனா
உயரம்1.77 மீ
எடை67 கி[2]
விளையாட்டு
விளையாட்டுநீச்சல்
நீச்சல்பாணிகள்பின்புற நீச்சல்
சங்கம்செஜியாங் நீச்சல் அணி
பதக்கத் தகவல்கள்
மகளிர் நீச்சல்
நாடு சீனா
நிகழ்வு முதல் இரண்டாம் மூன்றாம்
கோடை ஒலிம்பிக் 0 0 1
உலகபோட்டிகள் 2 2 0
உலகப்போட்டிகள் 0 2 0
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் 2 1 0
Total 4 5 1
ஒலிம்பிக் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2016 இரியோ டி செனீரோ 100 மீ
உலகப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 கசான் 50 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2015 கசான் 4×100 மீ மெட்லே
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 பார்செலோனா 50 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 புடாபெசுட்டு 50 மீ
உலகப்போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 காங்சூ 4×50 மீ மெட்லே
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 காங்சூ 4 × 100 மீ மெட்லே
ஆசியப்போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் 50 மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2014 இஞ்சியோன் 100 மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 ஜகார்த்தா

ஆரம்ப கால வாழ்க்கை

தொகு

1996 சனவரி 7, அன்று இவர் சீனாவின் செஜியாங்கில் உள்ள காங்சூவில், பூ சுன்செங், சென் யிங் ஆகியோருக்கு ஒரே மகளாகப் பிறந்தார். [4] இவர் தனது ஐந்து 5 வயதில் நீச்சலைத் தொடங்கினார். [5] [6]

நீச்சல் தொழில்

தொகு

2012 கோடை ஒலிம்பிக்

தொகு

2012 இலண்டனில் நடந்த கோடைகால ஒலிம்பிக்கில், பெண்கள் 100 மீட்டர் நீச்சலில் போட்டியிட்டு, இறுதிப் போட்டியில் 8 வது இடத்தைப் பிடித்தார்.

2013 உலகப் போட்டி

தொகு

பார்செலோனாவில் நடைபெற்ற 2013 உலகப் போட்டியில், இவர் 50 மீட்டர் நீச்சலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். உடன் நீந்திய வீராங்கனை ஜாவோ ஜிங்கிடம் 27.39 வினாடிகளில் தோற்றார்.

2014 ஆசிய விளையாட்டு

தொகு

2014 தென் கொரியாவின் இஞ்சியோனில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், இவர் 50 மீட்டர், 100 மீட்டர் நீச்சல் ஆகிய இரண்டிலும் தங்கப் பதக்கங்களை வென்றார்.

2015 உலகப் போட்டிகள்

தொகு
 
4 × 100 மீ ரிலே வெற்றி விழாவில் (2015) பூ யுவானாய் (மேல் படி)

2015 ஆம் ஆண்டில் நடந்த உலக நீச்சல் போட்டியில் 50 மீட்டரை வென்ற இவர், 4x100 மீட்டரில் மெட்லியை வெல்ல சீனாவுக்கு உதவினார். [7]

2016 கோடை ஒலிம்பிக்

தொகு

இரியோவில் நடந்த 2016 கோடைகால ஒலிம்பிக்கில், இவர் பிரபலமடைந்து நாடு முழுவதும் நீச்சல் சின்னமாக மாறினார். [8]

கனடிய நீச்சல் வீரர் கைலி மாஸ்ஸுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்து 100 மீட்டரில் வெண்கலப் பதக்கம் வென்றார். இவர் 58.76 நேரத்தின் தேசிய சாதனையை நிகழ்த்தினார். ஒலிம்பிக் முழுவதும், இவரது மகிழ்ச்சியான நேர்காணல்களும், நடத்தையும் இவரை மிகவும் பிரபலமாக்கியது. [9] [10]

2016 ஆசிய நீச்சல் போட்டி

தொகு

தோக்கியோவில் நடைபெற்ற 2016 ஆசிய நீச்சல் போட்டியில், இவர் முதல் முறையாக தங்கப் பதக்கங்களை வென்றார். இவர் 50 மீட்டரிலும், 100 மீட்டரிலும் இரண்டு தங்கப் பதக்கங்களையும், 4 × 100 மீ மெட்லி ரிலேவில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றார். [11] [12] [13] [14] இவர் தனது வெய்போவில் தனது பதக்கங்களைக் காட்டியதில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். [15]

தனிப்பட்ட வாழ்க்கை

தொகு

2016 முதல், இவர் சீனாவில் மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களில் ஒருவராக இருந்து வருகிறார். இவர் சில தொலைக்காட்சி பேச்சு நிகழ்ச்சிகள், தொண்டு நடவடிக்கைகள் போன்றவற்றில் பங்கேற்கிறார். சன் யாங், யே சிவென் போன்ற பல நீச்சல் வீரர்களுடனும் இவர் நட்புடன் இருக்கிறார். [16] [17] [18] [19] [20] [21] [22] [23] [24] [25] [26] [27] [28] [29] இவர் 2017 சிசிடிவி புத்தாண்டு காலாவின் விருந்தினராக இருந்தார். [30]

மேற்கோள்கள்

தொகு
  1. 奥运“网红”傅园慧:“洪荒之力”的段子手 Retrieved 2016-10-05
  2. "Yuanhui Fu". Rio 2016 Organization. Archived from the original on August 25, 2016. பார்க்கப்பட்ட நாள் August 22, 2016.
  3. "Yuanhui Fu". 2012 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள். Archived from the original on 26 April 2013. பார்க்கப்பட்ட நாள் 16 October 2012.
  4. “妈妈,这个小雨伞哭了”——傅园慧从小就是段子手 Retrieved 2016-10-05
  5. 傅园慧谈为啥学游泳:小时候锻炼身体游着游着就游到现在 Retrieved 2016-12-17
  6. 或许就出自这里! பரணிடப்பட்டது 2020-08-23 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2017-01-06
  7. 傅园慧:泳衣太紧胸都被勒平 出国主打肢体语言 Retrieved 2016-12-17
  8. 劳伦斯冠军奖揭晓 傅园慧获最受欢迎女运动员 Retrieved 2016-12-17
  9. "Fu Yuanhui: China falls in love with Olympic swimmer and her 'mystic energy'". August 9, 2016. https://www.theguardian.com/sport/2016/aug/10/fu-yuanhui-china-falls-in-love-with-olympic-swimmer-and-her-mystic-energy. 
  10. Editor, Maxwell Strachan Senior; Post, The Huffington (9 August 2016). "Meet Fu Yuanhui, The Most Lovable Athlete At The Rio Olympics". {{cite web}}: |last= has generic name (help)
  11. Fu Yuanhui takes Asian Swimming Championship gold பரணிடப்பட்டது 2016-12-09 at the வந்தவழி இயந்திரம், GBTIMES BEIJING, 18. November 2016
  12. China's Fu Yuanhui wins women's 50m backstroke at Asian Swimming Championships, CCTV, 18. November 2016
  13. AASF Championships: Fu sets record in Women's 100m backstroke
  14. AASF Championships: Xu Jiayu grabs fourth gold medal in Tokyo, CCTV, 21. November 2016
  15. 傅园慧首摘亚锦赛金牌 太激动:我少女心爆发了! Retrieved 2016-12-17
  16. 傅园慧聊被孙杨抱 பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2016-12-17
  17. 傅园慧自曝看厌宁泽涛摸腻孙杨:腹肌胸肌都差不多 Retrieved 2016-12-17
  18. 镜头外的傅园慧:和叶诗文是闺蜜 比采访中更有趣 Retrieved 2017-01-06
  19. “洪荒少女”傅园慧来广州啦!她说游泳池里都是她的眼泪 Retrieved 2016-12-17
  20. 傅园慧领衔浙江游泳队走进特殊群体参与公益 Retrieved 2016-12-17
  21. 傅园慧公益为儿童绘制图画 பரணிடப்பட்டது 2016-12-20 at the வந்தவழி இயந்திரம் Retrieved 2016-12-17
  22. 父亲称傅园慧曾推千万代言 Retrieved 2016-12-17
  23. 傅园慧纯粹的性格带给我们快乐的背后 Retrieved 2016-12-17
  24. “洪荒少女”傅园慧的红与黑:我不是段子手 Retrieved 2016-10-05
  25. 孩子王!傅园慧跨年很high Retrieved 2017-01-01
  26. 去年爆红 傅园慧:我就是自己的偶像 Retrieved 2017-01-06
  27. 傅园慧一句话拉5万赞助,一碗拉面卖50 Retrieved 2017-01-06
  28. 点评傅园慧生日长文 Retrieved 2017-01-09
  29. 体育界"文豪":张继科"新月派" 傅园慧散文少女 Retrieved 2017-01-09
  30. "CCTV Spring Festival Gala 2017: Former EXO members Lu Han and Wu Yifan to set the stage on fire?". IB Times. பார்க்கப்பட்ட நாள் 24 January 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பூ_யுவானூய்&oldid=3574255" இலிருந்து மீள்விக்கப்பட்டது