பெண்ணேஸ்வர மடம்
பெண்ணேஸ்வரமடம் (Panneswaramadam) என்ற ஊர் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி வட்டத்தின், பெண்ணேஸ்வர மடம் ஊராட்சியைச் சேர்ந்த சிற்றூராகும். இந்த ஊர் பருகூர் சட்டமன்றத் தொகுதிக்கும், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.
பெண்ணேஸ்வரமடம் | |||
— சிற்றூர் — | |||
ஆள்கூறு | |||
நாடு | இந்தியா | ||
மாநிலம் | தமிழ்நாடு | ||
மாவட்டம் | கிருஷ்ணகிரி | ||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||
மாவட்ட ஆட்சியர் | ம. சரயு, இ. ஆ. ப [3] | ||
ஊராட்சித் தலைவர் | |||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||
குறியீடுகள்
|
பெயராய்வு
தொகுஇந்த ஊரில் 33 கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் ஊரின் பழைய பெயர் பெண்ணையாண்டார் மடம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பெண்ணையாண்டார் மடம் என்பது சமசுகிருதமயமாக்கலால் பெண்ணை ஈசுவரர் மடம் என்றும் பின்னர் பெண்ணேஸ்வர மடம் என்றும் படிப்படியாக மாறியுள்ளது தெரிய வருகிறது.[4]
அமைவிடம்
தொகுஇந்த ஊரானது மாவட்டத்தின் தலைநகரான கிருஷ்ணகிரியில் இருந்து 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
மக்கள்வகைப்பாடு
தொகு2011 ஆண்டு மக்கள் கணக்கெடுப்பின்படி இக்கிராமத்தில் 663 வீடுகள் உள்ளன. கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,686 ஆகும். இதில் ஆண்கள் எண்ணிக்கை 1,352, பெண்களின் எண்ணிக்கை 1,334 என உள்ளது. மக்களின் கல்வியறிவு விகிதமானது 59.31% என உள்ளது.[5] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ விடக்குறைவு ஆகும்.
பெண்ணேசுவரர் கோயில்
தொகுஇவ்வூரில் மிகப் பழமையான சிவன் கோயில் உள்ளது. கோயிலின் பெயர் பெண்ணேஸ்வரர் கோயில் ஆகும். கோயில் அருகே தென்பெண்ணை ஆறு பாய்கிறது. இந்த கோயில் மூன்றாம் குலோத்துங்கச் சோழனால் கட்டப்பட்டது[6] . தமிழ் நாட்டிலேயே அதிகமான நவகண்டச் சிற்பங்களை கொண்டுள்ளது[சான்று தேவை]. மேலும் அருகே அதிகமான சிற்பங்களும் உள்ளன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
- ↑ முனைவர் கோ. சீனிவாசன், கிருஷ்ணகிரி ஊரும் பேரும். கிருஷ்ணகிரி மாவட்ட வரலாற்று ஆய்வு மையம், ஒசூர். 2018 திசம்பர். p. 118.
{{cite book}}
: Check date values in:|year=
(help) - ↑ "Panneswaramadam Village in Krishnagiri, Tamil Nadu". villageinfo.in. பார்க்கப்பட்ட நாள் 2023-02-17.
{{cite web}}
: Text "villageinfo.in" ignored (help) - ↑ dr.major syed shshabdeen (2009). தென்பெண்ணை ஆற்றங்கரைக் கிருஷ்ணகிரி மாவட்டக் கருத்தரங்க மலர். தருமபுரி: ஸ்ரீ விவேகானந்தர் கொடை மற்றும் அறக்கட்டளை. pp. 158–164.