பெரிநாக் (Berinag) என்பது ஒரு மலை வாழிடமாகும். இது இந்தியாவின் உத்தராகண்டம் மாநிலத்தில் கிழக்கு திசையில் உள்ள இமயமலை மாவட்டமான பிதௌரகர் மாவட்டத்தின் நைனித்தாலிருந்து, 160 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது பிதௌரகரின் ஆறு நிர்வாக உட்பிரிவுகளில் (வட்டம்) ஒன்றாகும். [1] தேசிய நெடுஞ்சாலை 309ஏ இதன் வழியாக செல்கிறது. காரவோன், தனோலி, பனா, பட்டிகான், பனோலி, குவாராலி, திரிபுராதேவி மற்றும் சங்கர் ஆகியவை இங்குள்ள சில கிராமங்களில் அடங்கும்.

பெரிநாக்
बीणाग
மலை வாழிடம்
பெரிநாக்கிலிருந்து இமயமலையின் காட்சி
பெரிநாக்கிலிருந்து இமயமலையின் காட்சி
பெரிநாக் is located in உத்தராகண்டம்
பெரிநாக்
பெரிநாக்
உத்தராகண்டம் மாநிலத்தில் பெரிநாக்கின் அமைவிடம்
பெரிநாக் is located in இந்தியா
பெரிநாக்
பெரிநாக்
பெரிநாக் (இந்தியா)
ஆள்கூறுகள்: 29°48′N 80°04′E / 29.80°N 80.07°E / 29.80; 80.07
நாடு India
மாநிலம்உத்தராகண்டம்
மாவட்டம்பிதௌரகட்
ஏற்றம்1,860 m (6,100 ft)
மொழிகள்
 • அலுவல்இந்தி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுஉகே
இணையதளம்uk.gov.in

பின்னணி தொகு

பெரிநாக் அதன் பெயரை பெரிநாக் கோயிலில் இருந்து பெறுகிறது [2] (உள்ளூரில் 'பெடிநாக்' என்று அழைக்கப்படுகிறது). இது பெரிநாக் மலையுச்சியில் அமைந்துள்ள ஒரு நாக தேவதை கோயிலாகும். நாக வழிபாடுகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட தௌலிநாக் (தாவல்நாக்) (விஜய்பூர்), காளிநாக் (காளியாநாக்), பெனிநாக் (பானிநாக்), பாசுகிநாக் (வாசுகிநாக்), பிங்லெநாக் மற்றும் ஹரிநாக் போன்ற பல கோயில்களும் இங்குள்ளது. பெரிநாக் இமயமலையின் பரந்த காட்சியை வழங்குகிறது. கார்வால் இமயமலை முதல் நேபாள எல்லைகள் வரை, குறிப்பாக பஞ்சசூலி மற்றும் நந்தா தேவி போன்ற உயரமான சிகரங்கள் இங்கு அமைந்துள்ளன. இந்த பகுதி பிரித்தானியர் ஆட்சியின் போது உருவாக்கப்பட்ட தேயிலை தோட்டங்களுக்கு பிரபலமானது. இங்கு வளர்க்கப்படும் பெரிநாக் தேயிலையானது இலண்டன் தேநீர் விடுதிகளில் அதிகம் விரும்பப்படும் தேயிலையாகும்.

போக்குவரத்து தொகு

  • 112 கி.மீ. தூரத்திலுள்ள பிதௌரகர், நைனி சைனி விமான நிலையம் அருகிலுள்ள விமான நிலையமாகும். பந்த்நகர் விமான நிலையம் 210 கி.மீ. தொலைவிலுள்ளது
  • அருகிலுள்ள இரயில் நிலையம் கத்கோடம் : 178 கி.மீ.
  • பெரிநாக் சாலை வழியாக நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அல்மோரா -96 கி.மீ, நைனித்தால் -160 கி.மீ, ஹல்துவானி -200 கி.மீ, பாகேசுவர் -62கி.மீ, பிதௌரகட் -85 கி.மீ.

படத் தொகுப்பு தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Tehsils in Pithoragarh District, Uttarakhand". www.census2011.co.in. பார்க்கப்பட்ட நாள் 3 October 2016.
  2. "Pithoragarh District Gazetteer" (PDF). Archived from the original (PDF) on 1 August 2014. பார்க்கப்பட்ட நாள் 10 Mar 2018.

வெளி இணைப்புகள்= தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிநாக்&oldid=3139124" இலிருந்து மீள்விக்கப்பட்டது