பெல்ஜியம்

மேற்கு ஐரோப்பிய நாடு
(பெல்கியம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பெல்ஜியம் (/ˈbɛləm/ (கேட்க) BEL-jəm; டச்சு: België; பிரென்சு: Belgique; ஜெர்மன்: Belgien) (அதிகாரப்பூர்வமாக பெல்ஜிய பேரரசு) மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். இது ஐரோப்பிய ஒன்றியத்தின் நிறுவன உறுப்பினர் ஆகும். இதன் தலைநகரான பிரஸ்ஸல்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமையகமாக மட்டுமன்றி, நேட்டோ போன்ற பல முக்கிய சர்வதேச அமைப்புக்களின் தலைமையகமாகவும் உள்ளது. பெல்ஜியத்தின் பரப்பளவு 30,528 சதுர கிலோமீட்டர் (11,787 சதுர மைல்) மற்றும் இதன் மக்கள்தொகை 11 மில்லியன் ஆகும்.[1][2][3]

பெல்ஜியம் இராச்சியம்
(டச்சு) Koninkrijk België
(பிரெஞ்சு) Royaume de Belgique
(ஜெர்மன்) Königreich Belgien
கொடி of பெல்ஜியம்
கொடி
சின்னம் of பெல்ஜியம்
சின்னம்
குறிக்கோள்: Eendracht maakt macht  (டச்சு)
L'union fait la force"  (பிரெஞ்சு)
Einigkeit macht stark  (ஜெர்மன்)
"ஒன்றியத்திலிருந்து பலம்"
நாட்டுப்பண்: த "பிராபன்சொன்"
ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பெல்ஜியத்தின் இடம்
ஐரோப்பாவிலும் ஐரோப்பிய ஒன்றியத்திலும் பெல்ஜியத்தின் இடம்
தலைநகரம்பிரசெல்சு
பெரிய மிகப்பெரிய மாநகராட்சிபிரசெல்சு தலைநகரப் பகுதி
ஆட்சி மொழி(கள்)டச்சு, பிரெஞ்சு, ஜெர்மன்
மக்கள்பெல்ஜியன்
அரசாங்கம்நாடாளுமன்ற மக்களாட்சி, அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
ஆல்பர்ட் II
எலியோ டி ரூபோ
விடுதலை
• கூற்றம்
அக்டோபர் 4 1830
ஏப்ரல் 19 1839
பரப்பு
• மொத்தம்
30,528 km2 (11,787 sq mi) (139th)
• நீர் (%)
6.4
மக்கள் தொகை
• 2007 மதிப்பிடு
11,007,020 (76வது [2005])
• 2001 கணக்கெடுப்பு
10,296,350
• அடர்த்தி
344.32/km2 (891.8/sq mi) (2006) (29th [2005])
மொ.உ.உ. (கொ.ஆ.ச.)2018 மதிப்பீடு
• மொத்தம்
$550 பில்லியன் (38வது)
• தலைவிகிதம்
$$48,224 (17வது)
ஜினி (2000)33
மத்திமம் · 33வது
மமேசு (2005)Increase 0.919
Error: Invalid HDI value · 17வது
நாணயம்ஐரோ (€)1 (EUR)
நேர வலயம்ஒ.அ.நே+1 (CET)
• கோடை (ப.சே.நே.)
ஒ.அ.நே+2 (CEST)
அழைப்புக்குறி32
ஐ.எசு.ஓ 3166 குறியீடுBE
இணையக் குறி.be

ஜெர்மானிய மற்றும் இலத்தீன்-ஐரோப்பிய கலாச்சார எல்லைகளுக்கு இடையே விரிந்திருக்கும் பெல்ஜியத்தில், பெரும்பான்மையாக இடச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் 60 சதவீதமும், பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் 40 சதவீதமும் இருந்தாலும், மிகச்சிறிய அளவில் ஜெர்மன் மொழியும் பேசப்பட்டு வருகிறது. எனவே தான், பெல்ஜியத்தில் டச்சு, பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் ஆகிய மொழிகள் அலுவல் மொழிகளாக உள்ளன. இடச்சு மொழி பேசும் ஃபிளம்மியர்கள் வசிக்கும் வடக்கு பிராந்தியம் ஃப்ளாண்டர்ஸ் என்றும் பிரெஞ்சு மொழி பேசும் வலோனியர்கள் வசிக்கும் தெற்கு பிராந்தியம் வலோனியா என்றும் அழைக்கப்படுகிறது. ஜெர்மானிய மொழி பேசும் சமூகம் கிழக்கு வலோனிய பகுதியில் வசித்து வருகின்றனர். பிரஸ்ஸல்ஸ்-தலை நகர பகுதியானது, ஃபிளம்மிய எல்லைக்குட்பட்ட பகுதியாக இருந்தாலும், இங்கு பெரும்பாலானோர் பிரெஞ்சு மொழியே பேசுகின்றனர். எனவே, டச்சு மற்றும் பிரெஞ்சு ஆகிய இரண்டு மொழிகளுமே அதிகார மொழிகளாக உள்ளன.

வரலாறு

தொகு

பெல்ஜியம் அல்லது பெல்கியம் என்ற பெயர் காலியா பெல்கிகா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டதாகும்.காலியா பெல்கிகா என்பது காவுலுக்கு பகுதியிக்கு வடக்கு பகுதியில் ஒரு ரோமானிய மாகாணமாகும்.

  • கிமு 100 இல் ரோமானிய படையெடுப்பிற்கு முன்பு, செல்டிக் மற்றும் ஜெர்மானியர்களின் கலவையான 'பெல்கே' இன மக்கள் வசித்து வந்த இடமாக இருந்தது.
  • 5 வது நூற்றாண்டில் மெரோவிஞ்சியன் அரசர்களின் ஆட்சியின் போது ஜெர்மானிய ஃப்ரான்கிஷ் பழங்குடியினர் இப்பகுதியில் குடியேறினர்.
  • 8 ஆம் நூற்றாண்டில் அதிகார மாற்றம் காரணமாக கரோலிஞ்சியன் பேரரசிலிருந்து பிராங்க்ஸ் பேரரசு இப்பகுதியில் உருவானது.
  • 843 ல் வெர்டன் உடன்படிக்கை மூலம் இப்பகுதிகள் பிரிக்கப்பட்டு மத்திய மற்றும் மேற்கு பிரான்சிகா ஆகிய இரு நாடுகளாக உருவாக்கப்பட்டது.
  • 1540 ல் நெதர்லாந்து பேரரசர் ஐந்தாம் சார்லஸின் ஆட்சியின் கீழ் இப்பகுதிகள் கொண்டுவரப்பட்டன.
  • 1568 லிருந்து 1648 வரை நடந்த எண்பது ஆண்டு போரின் முடிவில் வடக்கு,தெற்கு பகுதிகள் இரு மாகாணங்களாக பிரிந்து இசுபானிய மற்றும் ஆஸ்திரிய ஹப்ஸ்பர்க்ஸ் நாடுகளால் கைபெற்றப்பட்டது.இதுவே 17 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுகளின் போது நடந்த பிரெஞ்சு-இசுபாணிய மற்றும் பிரெஞ்சு-ஆஸ்திரிய போர்களுக்கான முக்கிய காரணமாக அமைந்தது.
  • 1815 ஆண்டு நெப்போலியனின் தோல்விக்கு பிறகு பிரஞ்சு பேரரசு கலைக்கப்பட்ட பின் ஐக்கிய நெதர்லாந்து ராஜ்யத்தின் ஒரு பகுதியானது.
  • 1830 ல் பெல்ஜிய புரட்சி மூலம் நெதர்லாந்திலிருந்து சுதந்திரம் பெற்று ஒரு இடைக்கால அரசின் கீழ் ஒரு கத்தோலிக்க மற்றும் முதலாளித்துவ நடுநிலை பெல்ஜியம் உருவாக்கப்பட்டது.
  • 1893 ல் ஆண்களுக்கும்,1949 ஆம் ஆண்டு பெண்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
  • 1914 மற்றும் 1940 ல் ஜெர்மனி பெல்ஜியத்தை ஆக்கிரமித்தது அதன் கட்டுப்பாட்டில் 1944 வரை இருந்தா அது கூட்டுபடைகளின் வெற்றிக்கு பின் பழைய நிலையை அடைந்தது.

புவியியல்

தொகு

பெல்ஜியமானது பிரான்ஸ், ஜெர்மனி, லக்சம்பர்க் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளுடன் தனது எல்லைகளை பகிர்ந்துகொள்கிறது.இதன் மொத்த பரப்பளவு 30.528 சதுர கிலோமீட்டர் ஆகும் இந்நாட்டில் 3 வேறுபட்ட நில அமைப்புகளை கொண்டுள்ளது. தென்கிழக்கில் ஆர்டென்னேஸ் உயர் நிலப்பகுதிகள், வட மேற்கு கடற்கரை சமவெளி மற்றும் ஆங்கிலோ-பெல்ஜிய தாழ்நிலப் பகுதியின் மத்தியில் அமைந்துள்ள பீடபூமி ஆகியவை ஆகும்.

இதில் கடற்கரை சமவெளியில் மணற்குன்றுகள் நிறைந்து காணப்படுகிறது.மேலும் நாட்டினுள் வளமான பள்ளத்தாக்குகள் மற்றும் எண்ணற்ற பாசன நீர்வழிகள் மற்றும் வடகிழக்கில் காம்பின் மணல் பரப்பு காணப்படுகிறது.மேலும் ஆர்டென்னேஸ் பகுதியில் குகைகள் மற்றும் கரடுமுரடான பாறைகள் நிறைந்த அடர்ந்த காடுகள் உள்ளது. இந்நாட்டின் மிகஉயர்ந்த பகுதி 694 மீட்டர் (2,277 அடி) உயரம் கொண்ட ""சிக்னல் டி பாட்ரேஞ்"" ஆகும்.

காலநிலை

தொகு

இங்கு நிலவும் காலநிலையானது பொதுவாக வடமேற்கு ஐரோப்பாவின் காலநிலையை கொண்டது.இங்கு ஆண்டுமுழுவதும் குறிப்பிடத்தக்க மிதமான மழை பெய்யும் கடல் சார்ந்த காலநிலையை கொண்டுள்ளது.இதன் குறைந்தபட்ச வெப்பநிலை ஜனவரி மாதத்தில் 3 °C (37.4 °F) செல்சியஸ் ஆகவும் சராசரி அதிகபட்ச வெப்பநிலை ஜுலை மாதத்தில் 18 °C (64.4 °F). ஆகவும் உள்ளது. கடந்த 2000 முதல் 2006 வரையிலான கணக்கிடுகளின் படி இதன் தினசரி சராசரி குறைந்தபட்ச வெப்பநிலை 7 °C (44.6 °F) ஆகவும் தினசரி சராசரி அதிகபட்ச வெப்பநிலை 14 °C (57.2 °F) ஆகவும் மற்றும் மாதந்திர சராசரி மழையளவு 74 மிமீ ஆகவும் உள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Data.europa.eu".
  2. "Government type: Belgium". The World Factbook. CIA. Archived from the original on 7 February 2012. பார்க்கப்பட்ட நாள் 19 December 2011.
  3. "Land use according to the land register" (in ஆங்கிலம்). Statbel. 16 November 2023. பார்க்கப்பட்ட நாள் 31 July 2024.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெல்ஜியம்&oldid=4101049" இலிருந்து மீள்விக்கப்பட்டது