பெ. ஜான் பாண்டியன்

இந்திய அரசியல்வாதி, வழக்கறிஞர் மற்றும் சமூக சேவகர்

பெ. ஜான் பாண்டியன் (B. John Pandian) என்பவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு வழக்கறிஞர், சமூக சேவகர் மற்றும் ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். 2000 ஆம் ஆண்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை நிறுவினார்.

பெ. ஜான் பாண்டியன்
2020ல் ஜான் பாண்டியன்
மாநில இளைஞர் அணி செயலாளர், பாட்டாளி மக்கள் கட்சி
பதவியில்
1989–1996
தேவேந்திரர் உடலியக்க மருத்துவக் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1998
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் மற்றும் தலைவர்
பதவியில் உள்ளார்
பதவியில்
2000
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 நவம்பர் 1955 (1955-11-30) (அகவை 69)
சிவலார்குளம்,ஆலங்குளம்
திருநெல்வேலி மாவட்டம்,
சென்னை மாநிலம்
(தற்போதைய தென்காசி மாவட்டம்,
தமிழ்நாடு), இந்தியா
அரசியல் கட்சி தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம்[1]
(2000-–present)
பிற அரசியல்
தொடர்புகள்
பாட்டாளி மக்கள் கட்சி (1989–1995)
துணைவர்பிரிசில்லா பாண்டியன்
பிள்ளைகள்வியங்கோ பாண்டியன்
வினோலின் நிவேதா பாண்டியன்

அரசியல் வாழ்க்கை

தொகு

இவர் ஆரம்பத்தில் 1989 முதல் பாட்டாளி மக்கள் கட்சி கட்சியில் இருந்தார், இளைஞர் பிரிவு செயலாளராக பதவியை வகித்தார்.[2] 1989 இந்தியப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் பாட்டாளி மக்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டார், 1991 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டார் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.[3]

2000 ஆம் ஆண்டு தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கினார். 2001ல் அதிமுக தலைமையிலான கூட்டணியில் கட்சி சேர்ந்தது இக்கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஜான் பாண்டியன் அதிமுக ஆதரவு பெற்று 2001 தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் எழும்பூரில் போட்டியிட்டு 86 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.[4]

இவர் 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் முதுகுளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராகப் போட்டியிட்டார், ஏனெனில் எந்த ஒரு கட்சிக் கூட்டணி இல்லாமல் போட்டியிட விரும்பினார்.[5]

2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக ஆதரவில்லாமல் திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டார்.[6]

2017 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார். பின்னர் அவர் பட்டியலிடப்பட்ட சாதி பட்டியலிலுள்ள ஆறு துணை சாதிகளை ஒன்றிணைத்து, "தேவேந்திரகுல வேளாளர்" என்று பெயரிட முன்மொழிந்தார். அந்த உட்பிரிவுகளை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இருந்து நீக்குவதற்கும் முன்மொழிந்தார்.[7] பெயர் மாற்றம் மற்றும் ஒன்றிணைப்பு வெற்றியுடன், 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் எழும்பூர் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட்டார். தேர்தலுக்குப் பிறகு, தேர்தலில் தொகுதிப் பங்கீடு தொடர்பாக ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் இருந்து விலகினார்.[8][9]

2024 இல் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து, தென்காசி மக்களவைத் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.[10]

தேர்தல்கள்

தொகு

மக்களவைத் தேர்தல்

தொகு
தேர்தல்கள் தொகுதி கட்சி விளைவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
1989 பெரம்பலூர் பாமக தோல்வி 12.54 அ. அசோக்ராஜ் அதிமுக 53.41
2024 தென்காசி பாஜக

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல்

தொகு
தேர்தல்கள் தொகுதி கட்சி விளைவு வாக்கு சதவீதம் எதிர்க்கட்சி வேட்பாளர் எதிர்க்கட்சி எதிர்க்கட்சி வாக்கு சதவீதம்
1991 முதுகுளத்தூர் பாமக தோல்வி 30.24 அ. அசோக்ராஜ் இதேகா 41.74
1996 வலங்கைமான் சுயேச்சை தோல்வி 12.67 கோமதி சீனிவாசன் திமுக 50.78
2001 எழும்பூர் அதிமுக தோல்வி 47.57 பரிதி இளம்வழுதி திமுக 47.69
2011 முதுகுளத்தூர் தமமுக தோல்வி 12.22 எம். முருகன் அதிமுக 46.87
2011 நிலக்கோட்டை தமமுக தோல்வி 4.80 ஆ. இராமசாமி புதிய தமிழகம் கட்சி 52.45
2016 திருவாடானை தமமுக தோல்வி 5.14 கருணாஸ் அதிமுக 41.14
2021 எழும்பூர் அதிமுக தோல்வி 25.46 ஐ. பரந்தாமன் திமுக 58.29

மேற்கோள்கள்

தொகு
  1. "Tamizhaga Makkal Munnetra Kazhagam, India". www.crwflags.com.
  2. "Ramadoss 1st to support Devendrakula Velalars' demand". DT Next (in ஆங்கிலம்). 16 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  3. "Ramadas is full of emotion". DT Next (in ஆங்கிலம்). 15 February 2021. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  4. "AIADMK contests Egmore". Deccan Chronicle (in ஆங்கிலம்). 14 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  5. "John Pandian's TMMK to go it alone in Assembly polls". DT Next (in ஆங்கிலம்). 22 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  6. "Not for splitting votes, says John Pandian". DT Next (in ஆங்கிலம்). 28 April 2016. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  7. "TMMK president John Pandian's remarks draw flak from Vathiriyar community". The New Indian Express (in ஆங்கிலம்). 6 October 2020. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  8. "John Pandian's TMMK exits AIADMK alliance". The New Indian Express (in ஆங்கிலம்). 19 July 2021. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  9. "BJP invites allies in TN for NDA meet". Times of India (in ஆங்கிலம்). 19 July 2023. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
  10. "Radikaa Sarathkumar, John Pandian in BJP's fourth list of Lok Sabha candidates". India Today (in ஆங்கிலம்). 22 March 2022. பார்க்கப்பட்ட நாள் 2024-03-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெ._ஜான்_பாண்டியன்&oldid=3943997" இலிருந்து மீள்விக்கப்பட்டது