பேச்சு:இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்)

இக்கட்டுரை விக்கி நடைக்கேற்ப எழுதப்படுகிறதா என்பதைக் கவனியுங்கள். இக்கையேட்டை உதவிக்குப் பயன்படுத்தலாம்.--Kanags \உரையாடுக 11:14, 14 செப்டம்பர் 2013 (UTC)

இன்றைய இலங்கையைக் குறிப்பதற்கு முற்காலத்தில் சிங்களத் தீவு என்ற பதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டதாக இந்நூலிற் குறிக்கப்பட்டுள்ளதாக இக்கட்டுரையின் பல்வேறு இடங்கிளிலும் குறிப்பிடப்பட்டுள்ள தகவல் முற்றிலும் தவறானது. சிலப்பதிகாரத்தில் இளங்கோவடிகள் கடல்சூழிலங்கைக் கயவாகு வேந்தனும் ... என்ற வரிகளில் அக்காலத்தில் இன்றைய இலங்கையை ஆட்சி செய்த கயவாகு மன்னன் சேர நாட்டு மன்னனான செங்குட்டுவனின் அழைப்பின் பேரில் அங்கு சென்றமையைக் குறிப்பிடுகிறார். அஃதாவது இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் குறிப்பிட்டுள்ளதையே இந்நூலின் ஆசிரியர் வேண்டுமென்றே மறைத்து விட்டாரென்பது இதன் மூலம் தெளிவாகிறது.--பாஹிம் (பேச்சு) 09:45, 14 சூன் 2015 (UTC)Reply

பாகிம், புத்தகத்தில் தரப்பட்டுள்ள செய்தியை அது சரியா அல்லது தவறா என்று நாம் இங்கு ஆய்வுக்கு எடுத்து அதன் நடுநிலை நோக்கை நாம் இங்கோ அல்லது கட்டுரையிலோ விமரிசிக்க முடியுமா எனத் தெரியவில்லை. நூல்களைப் பற்றிய விக்கி கட்டுரைகள் பற்றிய அறிவு எனக்கு மிகவும் குறைவு. மேலும், கட்டுரை விக்கிப்பீடியா நடையின் படி எழுதப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை. பெரும்பாலான பகுதிகள் மிகையாகவே எழுதப்பட்டுள்ளது. நூல்களில் ஆர்வமுள்ள பயனர்கள் இதனைக் கவனியுங்கள். @Mayooranathan and பா.ஜம்புலிங்கம்:.--Kanags \உரையாடுக 10:26, 14 சூன் 2015 (UTC)Reply
இக்கட்டுரை நூலைப்பற்றி எழுதாமல் இராமாணய விமர்சனம் போல் எழுதப்பட்டுள்ளது. இங்குள்ள உசாத்துணைகளும் வலிந்து அளிக்கப்பட்டுள்ளன. எ.கா: 1981 இல் எழுதப்பட்ட இந்நூலுக்கு 1969ஆம் ஆண்டு வெளிவந்த நூல் (RAMAYANA VIMARSA) உசாத்துணையாகியுள்ளது. இங்குள்ள விமர்சணத்தையும் பாருங்கள். இக்கட்டுரை திருத்தப்பட்டு உரிய உசாத்துணைகள் சேர்க்கப்பட வேண்டும். en:Wikipedia:Notability (books) இதனையும் கவனிக்க. --AntanO 11:03, 14 சூன் 2015 (UTC)Reply
வணக்கம். அதிகமான செய்திகள், விவாதங்கள் போன்றவற்றைக் கொண்டு மதிப்பீட்டிற்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நூலைப் பற்றி எழுதிய ஆய்வுக்கட்டுரையாக உள்ளது.அதிகமான உள் தலைப்புகள், வினாக்கள் எழுப்பும் முறை, விவாதத்துக்குள் விவாதம், தேவையற்ற எழுத்துரு அமைப்புகள் போன்றவற்றைப் பார்க்கும்போது விக்கியிலிருந்து சற்று விலகியிருப்பது போல் உள்ளது. வாய்ப்பிருப்பின் இதனை முற்றிலுமாகச் சுருக்கி தேவையானவற்றை மற்றும் எடுத்துக் கூறக் கேட்டுக்கொள்ளலாம். நான் அண்மைக்காலமாக எழுதிவருவதால் இன்னும் எனக்கு அனுபவம் இருந்தால் மட்டுமே மேலும் கருத்திட முடியும் என எண்ணுகிறேன்.நன்றி. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 13:13, 14 சூன் 2015 (UTC)Reply

நூலைப் பற்றிய கட்டுரையில் நூல் எத்தகையது, எதைப் பற்றிக் கூறுகிறது, நூலின் பாணி, முரண்பாடான செய்திகளைக் கையாண்டுள்ள விதம், நூலிலேயே முன்னுக்குப் பின் முரண்பாடு காணப்படின் அதனைப் பற்றிய தகவல் போன்றவற்றைப் பற்றிக் கூறாமல் அதிலுள்ள கருத்துக்களை மெய்ப்பிக்க முயல்வது ஏற்க முடியாதது. இங்கே இந்நூலின் கருத்துக்களை அப்படியே மெய்ப்பிக்க முயல்வதுதான் நடுநிலையற்ற செயல்.--பாஹிம் (பேச்சு) 14:39, 14 சூன் 2015 (UTC)Reply

நண்பர் பாஹிம் இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) கட்டுரையின் உப தலைப்பு இலக்கியப் புரட்டர்கள் புகுந்தது எப்போது? மிக தெளிவாக தக்க ஆதாரங்களை உள்ளடக்கியுள்ளது. இப்போதைய இலங்கை சிறீலங்காவானது எப்போது? மகாகவி பாரதி சிங்களத்தீவு என்றுதான் குறித்தார்.

மிகையான தகவல்கள் எவை என தயவுசெய்து கூறுங்கள், 1981ல் எழுதப்பட்ட நூலுக்கு எந்த ஆண்டு வெளிவந்த நூல் உசாத்துணையாக கொள்ள வேண்டும் என்பதை தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும். இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) பற்றிய கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள தகவல்கள் விக்கி நடைக்கு விலகியிருப்பது என்றால் அதை தயவு செய்து தெளிவுபடுத்துங்கள்.--Yokishivam (பேச்சு) 16:50, 14 சூன் 2015 (UTC)Reply

இருபதாம் நூற்றாண்டைச் சேர்ந்தவரான பாரதியாருக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் இலங்கை என்று குறித்திருப்பதை எதற்காக மறைக்க முயல்கிறீர்கள்? ஆய்வு என்ற பெயரில் ஒருவர் தனக்கு நினைத்தவாரெல்லாம் எழுதுவது சரியாவதில்லை. தக்க ஆதாரங்களென்று எதனைக் குறிப்பிடுகிறீர்கள்? ஸ்ரீ லங்கா என்பது பாளி மொழியில் இலங்கையைக் குறிக்கிறது. லங்கா என்பது இலங்கை. இங்கே ஸ்ரீ என்பது திரு அல்லது நல்ல என்ற பொருளைத் தருவது. இன்றும் இலங்கையின் அரசாங்க ஏடுகளனைத்தும் தமிழில் இலங்கை என்றே குறிப்பிடுகின்றன. ஒரு பெயர் பல்வேறு மொழிகளிலும் அவ்வம்மொழிகட்கேற்பத் திரிபடைவது இயல்பு. இந்தியா என்பது அரபியில் ஹிந்த் என்றும் ஆங்கிலத்தில் இண்டியா என்றும் சிங்களத்தில் இந்தியாவ என்றும் குறிக்கப்படுகிறது. அவ்வாறே England என்பது ஆங்கிலத்தில் இங்லண்ட் என்றும் மலாய மொழியில் இங்ரிஸ் என்றும் சிங்களத்தில் எங்கலந்தய என்றும் தமிழில் இங்கிலாந்து என்றும் அழைக்கப்படுகிறது. ஒரே பெயரைப் பல்வேறு மொழிகளிலும் எழுதப்படும் விதத்தைக் கொண்டு அதில் பெயர் மாற்றம் ஏற்பட்டு விட்டதாகக் கருதிக் கொள்வது தவறு. இங்கே நாம் இன்று இலங்கை என்பதை சிலப்பதிகாரம் கிட்டத்தட்ட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே அதே பெயர் கொண்டு குறிப்பிடுவதைத்தான் நான் கூறுகிறேன். இதில் கிஞ்சித்தும் மாற்றமேற்படவில்லை என்பது தெளிவு. இந்நிலையில் அர்த்தமற்ற ஆய்வை எவ்வாறு மெய்ப்பிக்க முயல்கிறீர்கள்?--பாஹிம் (பேச்சு) 18:18, 14 சூன் 2015 (UTC)Reply

இங்கு கருத்திட்டவர்களுக்கு வணக்கம்! இராமாயணம் பற்றி காலம்காலமாக நாம் கொண்டிருக்கின்ற நம்பிக்கை அது குறித்த மாற்றுக்கருத்தை ஏற்க மனம் ஒப்பாது. அது போலவே வலைதள நண்பர் அரசனது விமர்சனமும். பல நூறு ஆண்டுகளாக மக்கள் மத்தியில் உலவி வரும் கருத்துக்கள், நம்பிக்கைகள், இவைகளை மாற்றிக்கொள்வது எளிமையான வேலையல்ல. இராமாயணம் கம்பரால் தமிழில் எழுதுகிறபோது தன்னை ஆதரித்த சடையப்பவள்ளலை 100 பாடல்களுக்கு ஒரு பாடலில் பாடுபொருளாக வைக்கிறார். இராமாயணம் அரங்கேற்றத்தின் போது ஒட்டக்கூத்தர் மறுத்து 1000 பாடலுக்கு ஒரு பாடல் என்ற முறையில் அமைக்கலாம் என முடிவாகிறது. இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) ஆய்வுக்கு உட்படுத்தப்படுமானால் எனக்கு மகிழ்ச்சியே!! நன்றியுடன்--Yokishivam (பேச்சு) 17:27, 14 சூன் 2015 (UTC)Reply

கட்டுரையின் கருப்பொருளான நூலை நான் பார்க்கவில்லை. ஆனாலும், கட்டுரையைப் பார்க்கும்போது அதிலுள்ளவை நூலிலுள்ள விடயங்களை அப்படியே தந்திருப்பதுபோலவே தெரிகிறது. ஒரு நூலைப்பற்றிய கட்டுரை எழுதும்போது அந்த நூலைப்பற்றி எழுதவேண்டுமேயொழிய அந்நூலின் சுருக்கத்தையே கட்டுரையாகத் தருவது சரியாகாது. தரப்பட்டுள்ள மேற்கோள்களும் மூலநூலின் கருத்துக்களுக்கான மேற்கோள்களேயன்றி நூல்பற்றிய கருத்துக்களுக்கான மேற்கோள்கள் அல்ல. ஒரு நூலைப்பற்றி எழுதும்போது, அதன் ஆசிரியர் இன்னின்ன கருத்துக்களை முன்வைக்கிறார் என்றும் அது எவ்வாறு பொதுக் கருத்துக்களில் இருந்து வேறுபடுகிறது என்றும் எழுதலாம். அவரது கருத்துக்களுக்கான சான்றுகளாக அவர் எவற்றைக் கொள்கிறார் என்றும் எழுதலாம். ஆனால் கட்டுரை, நூலை வெளியில் இருந்து நோக்கி எழுதுவதாக அமையவேண்டும். நூலின் கருத்துக்களைக் கட்டுரையாகத் தரக்கூடாது. இவ்வாறான, சர்ச்சைகளுக்கு உள்ளாகக்கூடிய நூல்களைப் பற்றி எழுதும்போது நடுநிலை நோக்குக் கருதி இந்நூல்குறித்த விமர்சனங்கள் கிடைத்தால் அதையும் குறிப்பிடுவது நல்லது. தற்போதைய நிலையில் கலைக்களஞ்சிய நடைக்குக் கொண்டுவருவதற்குக் கட்டுரை மேம்படுத்தப்பட வேண்டும்.
  • இதற்கு என்னுடைய ஆலோசனைகள் பின்வருமாறு:
    • கட்டுரையின் அறிமுகப் பகுதியில் இராமாயணம் பற்றிய கருத்துக்களை நீக்கிவிட்டு, குறித்த நூலைப்பற்றிய அறிமுகத்தை மட்டும் தரலாம்.
    • கட்டுரையில் ஏற்கெனவே இருப்பதுபோல் உள்ளடக்கப் பட்டியல் இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு அத்தியாயத்தின் கீழும் அதுகுறித்த நூலின் கருத்துக்களை அப்படியே தராமல். எடுத்துக்கொண்ட விடயம் குறித்த ஆசிரியரின் கருத்துக்களை வெளியிலிருந்து நோக்கிச் சுருக்கமாகத் தரலாம். ஒரு பத்தி அல்லது இரண்டு பத்திகள் போதும் (தனித்தனித் தலைப்புக்களின் கீழ் எழுதவேண்டியது இல்லை).
    • ஆசிரியரின் கருத்துக்களுக்கான சான்றுகளை இக்கட்டுரையில் தரவேண்டியது இல்லை. இந்தக் கட்டுரையில் எடுத்துக்கொண்ட நூலில் இவ்வாறு சொல்லப்பட்டிருக்கிறது என்பதற்கு மட்டுமே சான்று தேவை. எனவே அந்த நூலைச் சான்றாகக் காட்டினால் போதும்.
    • இராமாயணம் பற்றிய பொதுவான கருத்துக்கள் நிச்சயமாகக் கட்டுரையில் தரப்பட்டு அவை எவ்வாறு நூலின் கருத்துக்களுடன் வேறுபடுகின்றன என்று காட்டலாம்.
    • இந்த நூல் குறித்து பத்திரிகைகளிலோ அல்லது வேறு நூல்களிலோ விமர்சனங்கள் வந்திருந்தால் அதைச் சேர்க்கலாம்.
    • முக்கியமாக நூலின் கருத்துக்களுக்கு உடன்பாடான தொனி கட்டுரையில் இருந்து நீக்கப்பட்டு நடுநிலை நோக்கிலிருந்து கட்டுரை எழுதப்படவேண்டும்.
கட்டுரையை எழுதிய பயனர் யோகிசிவம் பல ஆண்டுகால விக்கிப்பீடியர். விக்கியின் கொள்கைகள் பற்றிய தெளிவு அவருக்கு உண்டு. எனவே, எனது இந்த ஆலோசனைகளை அவர் ஏற்றுக்கொள்வார் என நம்புகிறேன். ---மயூரநாதன் (பேச்சு) 19:04, 14 சூன் 2015 (UTC)Reply
நன்றி மயூரநாதன்!! தங்களின் ஆலோசனையை ஏற்கிறேன், 2013 ஏப்ரலில் விக்கியில் வந்த நான் கட்டுரைகள் எழுதுவது புதிதே! விக்கியின் கொள்கைகளை புறம்தள்ளி கட்டுரைகள் எழுத மாட்டேன். நான் ஆங்கிலப் புலமை, பாண்டித்தியம் பெற்றவனில்லை. சுட்டும்போது மாற்றிக்கொள்வேன். இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்) கட்டுரையை மேற்ச்சொன்ன ஆலோசனைகளைக் கணக்கிலெடுத்துக்கொண்டு திருத்தியமைக்க முயற்ச்சிக்கிறேன்.--Yokishivam (பேச்சு) 19:27, 14 சூன் 2015 (UTC)Reply
@யோகிசிவம், என்னால் இயன்றளவு விக்கியாக்கம் செய்து உதவுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 09:44, 15 சூன் 2015 (UTC)Reply
@ மா. செல்வசிவகுருநாதன் நன்றியுடன் வரவேற்கிறேன்.--Yokishivam (பேச்சு) 02:06, 17 சூன் 2015 (UTC)Reply
Return to "இராமாயணம் ஒரு ஆய்வு (நூல்)" page.