பேச்சு:உயிரியல் வகைப்பாடு
பயன்பாட்டில் இல்லாத இணைப்புகள்
தொகுதானியங்கி மூலம் செய்த சோதனைகளின் போது இவ்விணைப்புகள் தற்போது பயன்பாட்டில் இல்லையென கண்டறியப்பட்டது. இணைப்புகளின் தற்போதைய நிலையை ஆராய்ந்து வேலை செய்யாவிடில் கட்டுரையில் இருந்து நீக்கிவிடவும்!
- http://www.cat.cc.md.us/courses/bio141/lecguide/unit1/3domain/3domain.html
- In அறிவியல் வகைப்பாடு on 2007-05-06 10:14:47, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In அறிவியல் வகைப்பாடு on 2007-05-06 11:27:21, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- In அறிவியல் வகைப்பாடு on 2007-05-14 00:45:30, Socket Error: (11001, 'getaddrinfo failed')
- genus - இனம்
- species - சிற்றினம்
- Chordata - முதுகுநாணிகள்
- Hemichordata - அரை முதுகுநாணிகள்
- Echinodermata - முட்தோலிகள்
- Porifera - துளையடலி
- Nematoda - உருளைப்புழு இனம்
- Tetrapoda - நான்குகாலிகள்
- Cephalopoda - தலைக்காலிகள்
- Cephalochordata - தலைமுதுகுநாணிகள்
- Urochordata - வால்முதுகுநாணிகள்
- Coelenterata - குழியுடலி
- Protozoa - ஒரு செல்லுயிரி
- Platyhelminthes - தட்டைப்புழுவினம்
−முன்நிற்கும் கருத்து Sivakumar (பேச்சு • பங்களிப்புகள்) என்ற பயனர் ஒப்பமிடாமல் பதிந்தது.
கலைச்சொற்கள்
தொகுஇங்குள்ள உரையாடலைப் பார்க்கவும் --செல்வா 22:46, 22 ஏப்ரல் 2008 (UTC)
மேற்கோள்கள்
தொகுதலைப்பு மாற்றம்
தொகு- அறிவியல் வகைப்பாடு என்பது மிகக்குறிப்பாக, உயிரியல் என்ற அறிவியல் உட்பிரிவைக் குறிக்கவில்லை. எனவே, 'உயிரிய வகைப்பாடு' என்று தலைப்பிடுதல் நலம். 'உயிரின வகைப்பாடு' என்றால், உயிரோடிருக்கும் உயிரினங்களை மட்டும் குறிக்கிறதல்லவா? 'உயிரிய' என்ற உரிச்சொல்லே இறந்த மற்றும் உயிரோடிருக்கும் உயிரினங்களைக் குறிக்கும் என்பது என் எண்ணம். ---த* உழவன் 15:35, 5 ஆகஸ்ட் 2009 (UTC)தொடர்புக்கு..
- மிக முக்கியமான கருத்து, த.உழவன். கட்டாயம் ஆய்ந்து எடுக்க வேண்டிய முடிவு. -- சுந்தர் \பேச்சு 15:50, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
- உயிரியல் வகைப்பாடு எனக் கூறலாம். உயிரின வகைப்பாடு என்றாலும் தவறில்லை. ஓருயிரினம், இன்று முற்றிலுமாய் அற்றுவிட்டாலும், அதுவும் உயிரினம்தான் (இன்று அற்றுவிட்ட உயிரினம்). ஆகவே உயிரின வகைப்பாடு என்பதில் எந்தத் தவறும் இல்லை. ஓர் அறிவாளி இறந்துவிட்டாலும் அவரை அறிவாளி என்று கூறலாம். ஆனால் உயிரியல் வகைப்பாடு என்பது ஒரு துறையில் மேற்கொள்ளும் வகைப்பாடு என்று கொள்ளலாம். --செல்வா 15:57, 5 ஆகஸ்ட் 2009 (UTC)
- உயிரின வகைப்பாடு, உயிரியல் வகைப்பாடு கூடிய பொருத்தமே. --Natkeeran 00:45, 6 ஆகஸ்ட் 2009 (UTC)
1) paleontology, biology என்ற சொற்களுக்குரிய, மூலங்களைப் பார்த்தேன். 'இனம்' என்பதைவிட 'இயல்' என்பதனை, 'உயிரி' என்பதனுடன் சேர்த்து பார்க்கும் போது, உயிரியல் வகைப்பாடு என்பதேப் பொருத்தமானதாகப்படுகிறது. இச்சொல், 'உயிரியல்' என்பதன் தொடர்ச்சியாகவும் இருக்கிறது. உயிரியல் வகைப்பாடு என்பதற்கு நகர்த்தலாமா?
2)உயிரியல் சொற்களின் மூலங்களை, நேரிடையாகாத் தமிழில் மொழிபெயர்ப்பதே சிறந்ததென எண்ணுகிறேன். தற்போதுள்ள ஒலிபெயர்ப்புகள், மாணவர்களுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.
- (எ.கா)Isoptera - ஐசோபெட்ரா(ஒலிபெயர்ப்பு) - சம இறகிகள்(மொழிபெயர்ப்பு) த* உழவன் 07:46, 10 ஆகஸ்ட் 2009 (UTC)
படத்தில் அடியினம்
தொகுஅடிநிலை இனம் அல்லது அடியினம் (Subspecies) என்பது விடுபட்டுள்ளது. அதனையும் [:[File:Biological classification ta.svg]] படக்கோப்பில் இணைத்தால், இப்படத்தின் நோக்கம் முழுமையடையும்.பல இனங்கள், தங்களின் கீழே அடியினங்களை கொண்டுள்ளன.
அடியினம் என்று முன்மொழியக்காரணம், பேரினம்(genus), சிற்றினம்(species) என்றே தமிழகத்தில் கற்பிக்கப்படுகிறது. பேரினம், இனம், சிற்றினம் என்று வழங்கப்படுதல் சிறப்பு என்பது எனது தனிப்பட்ட எண்ணம். பலர் ஏற்கனவே கற்ற முறைகளால், குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புண்டு என்பதால் அடிநிலை இனம் அல்லது அடியினம் என்ற சொல்லை முன்மொழிகிறேன்.--த♥ உழவன் +உரை.. 08:26, 11 சூலை 2012 (UTC உள்ளினம் என்ற சொல்லை சுந்தர் முன்மொழிந்தார். இச்சொல் மிகச்சிறப்பாக பொருந்துகிறது.--≈ த♥உழவன் ( கூறுக ) 09:41, 4 நவம்பர் 2013 (UTC)
- உள்ளினம் நானாக ஆக்கிய சொல்லில்லை என நினைக்கிறேன், தகவலுழவன். எங்காவது விக்கியில்தான் படித்துப் பயன்படுத்தியிருப்பேன். :) -- சுந்தர் \பேச்சு 10:15, 4 நவம்பர் 2013 (UTC)
- ஆம். பேச்சு:திணை (உயிரியல்) பக்கத்தில் மயூரனாதன் குறிப்பிட்டு இருக்கிறார்.--≈ த♥உழவன் ( கூறுக ) 17:37, 10 நவம்பர் 2013 (UTC)
உயிரியல் வகைப்பாட்டின் உட்பிரிவுகள்
தொகுதற்போதுள்ள வகைப்பாட்டியல் தரவுகள் இற்றைப்படுத்த வேண்டியுள்ளது. அதன்படி தற்போதுள்ள உயிரியில் வகைப்பாடு மேலும் பிரிந்து, விலங்கியல் வகைபாடு, தாவரவியில் வகைப்பாடு, பூக்கும் தாவரங்களின் வகைப்பாடு என மேலும் சில வகைபாடுகளாக விரிவு படுத்த வேண்டியுள்ளது. ஏனெனில், தற்போது வகைப்பாட்டியல் தகவற்பெட்டி (Taxobox) தரும் குறிப்புகள் பழைய குறிப்புகள் ஆகும். அவை ஆங்கில விக்கிப்பீடியாவிலும் தவறாகவே உள்ளன. இவற்றின் அவசியத்தைப் புரிந்து கொள்ள, இவ்வகைப்பாட்டியல் உட்பிரிவுகளுக்குரிய கட்டுரைகள் மிக முக்கியமானவை ஆகும். பிறரின் கருத்தறிய ஆவல்.--≈ த♥உழவன் ( கூறுக ) 12:22, 12 நவம்பர் 2013 (UTC)
இலங்கையில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்கள்
தொகுஇலங்கையில் வேறு கலைச் சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. இக்கலைச் சொற்களையும் குறிப்பிட முடியுமா என அறியத் தரவும். ஏனெனில் தமிழ்நாட்டுக் கலைச் சொற்களைப் பயன்படுத்த இங்கு அனுமதியில்லை.
- Domain- பேரிராச்சியம்
- Kingdom - இராச்சியம்
- Phylum/Division - கணம்/ பிரிவு
- Class - வகுப்பு
- Order - வருணம்
- Family - குடும்பம்
- Genus - சாதி
- Species - இனம்--G.Kiruthikan (பேச்சு) 11:32, 28 சூலை 2014 (UTC)
- இவற்றில் சிலவற்றை அதே பெயரில் தமிழகத்திலும் குறிப்பிடுகிறோம். -தமிழ்க்குரிசில் (பேச்சு) 12:11, 28 சூலை 2014 (UTC)
- அவ்வாறெனில் இலங்கை வழக்குச் சொற்கள் என இக்கட்டுரையில் இவற்றை ஒரு பிரிவில் இணைக்கலாமா?--G.Kiruthikan (பேச்சு) 06:19, 4 ஆகத்து 2014 (UTC)
- இலங்கை உயிரியல் சொற்கள் பல தமிழின் அழகோடு, தமிழகத்தினை விட கையாளப்படுகிறது. இருப்பினும் முழுமையாக இல்லை என்பதே எனது ஏக்கமாக உள்ளது. (எ.கா) இராஜ்ஜியம் என்பதே இராச்சியம் ஆனது. தமிழ் எழுத்தில் உள்ள அயலகச் சொல், தமிழ் சொல் ஆகுமா? இதுபற்றியும் நாம் சிந்திக்க வேண்டும். என்னைப் பொறுத்தவரை, இது போன்ற சொற்கள் 'பசுதோல் போர்த்திய புலி' யாகும். நம் தமிழ் மொழி, அயலகச்சொல்லில்லாமல் தனித்து இயங்காதா? என்ன? இந்த இராச்சியம் என்பதை தமிழகத்தில் உலகம் என்பர். உலகம் என்பதற்கு world என்பது மட்டும் பொருள் அல்ல என்பதையும் நாம் கவனத்தில் கொள்ளணும். தனிப்பட்டியில் , இலங்கை உயிரியல் சொற்களைதொகுப்பது மிகவும் தேவையான உயிரியல் பணிகளில் ஒன்றே. எனவே, அதனைச் செய்யக் கோருகிறேன்.--≈ த♥உழவன் ( கூறுக ) 06:31, 4 ஆகத்து 2014 (UTC)
- அவ்வாறெனில் இலங்கை வழக்குச் சொற்கள் என இக்கட்டுரையில் இவற்றை ஒரு பிரிவில் இணைக்கலாமா?--G.Kiruthikan (பேச்சு) 06:19, 4 ஆகத்து 2014 (UTC)
தாவரவியல் கலைச்சொற்கள், விலங்கியல் கலைச்சொற்கள் போன்ற நூல்கள் இலங்கை அரச கரும மொழித் திணைக்களத்தால் பல்லாண்டுகளுக்கு முன்னரே வெளியிடப்பட்டுள்ளன. முன்னர் அவை என்னிடமும் இருந்தன. இப்போது கைவசம் இல்லை. யாராவது அத்தகைய கலைச்சொற்களடங்கிய நூல்களை வைத்திருப்பின் இத்திட்டத்துக்கு உதவலாம்.--பாஹிம் (பேச்சு) 11:18, 4 ஆகத்து 2014 (UTC)
தலைப்பை நகர்த்த கோரிக்கை
தொகுஇந்தக் கட்டுரையின் முதன்மை பத்தியில் குறிப்பிடப்பட்டதுபோல இதனை வகைப்பாட்டியல் (taxonomy) எனப் பெயரிடுதல் பொருத்தமானது. உயிரியல் வகைப்பாடு குறித்து ஆங்கில விக்கியில் தனியாக Biological classification என்ற கட்டுரை உள்ளது. இதற்கு இணையான தமிழ் கட்டுரை இல்லை என [இந்தப் பட்டியலில்] குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே நான் உயிரிய வகைப்பாடு என்ற புதிய குறுங்கட்டுரையை துவக்கியுள்ளேன். இவற்றை துறையியல் வல்லுநர்கள் முறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன். --மணியன் (பேச்சு) 09:01, 7 சூன் 2018 (UTC)