பேச்சு:ஐரோப்பிய இடலை
இங்கு ஒலிவ மரம் என்பதை முன்னிலைப் படுத்தலாமா?--Terrance \பேச்சு 05:57, 3 ஏப்ரல் 2008 (UTC)
சைதூண் எனபது தமிழ் சொல்லே தான். அது பாரசீக மூலத்திலிருந்து வந்தாலும் அது தமிழ் மொழிக்கு வந்தச் சொல். ஒலிவம் என்பது ஆங்கில மொழி ஒலிபெயர்ப்பு. - ராஜ் 17 - 8 - 08
சைதூண் என்பது தமிழ்ச்சொல் என்பதற்கான சான்று இக்கட்டுரையில் அளிக்கப்படவில்லை. எனவே தலைப்பை ஒலிவ மரம் என்று மாற்றுகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 01:29, 28 பெப்ரவரி 2019 (UTC)
ஒலிவம் என்பது தமிழ்ச் சொல்லல்ல. ஆங்கிலத்தின் மருவல். மாறாக, ஆங்கிலம் தமிழுடன் தொடர்புறப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சைத்தூன் என்ற சொல் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.--பாஹிம் (பேச்சு) 02:21, 28 பெப்ரவரி 2019 (UTC)
{{தலைப்பை மாற்றுக}} என்பதனை பயன்படுத்தி, குறிப்பிட்ட காலம் பிறரின் கருத்தினை அறிய காத்திருந்த பிறகே, ஒரு தலைப்பை மாற்ற வேண்டும். எனவே, நாம் அதனை பின்பற்ற கடமைப்பட்டுள்ளோம். அதுவே நமக்குள் ஒற்றுமையை மேம்படுத்தும். எனவே பின்பற்றுவோம்.--த♥உழவன் (உரை) 02:56, 28 பெப்ரவரி 2019 (UTC) மேலும் அந்த வார்ப்புருவின் உரையாடற் பக்கத்தில் தங்களின் எண்ணங்களைத் தெரியப்படுத்துங்கள். த♥உழவன் (உரை)
பாஹிம், தாங்கள் சைத்தூன் என்பது தமிழ்ச்சொல் என்பதற்கான சான்று இருந்தால் அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 04:16, 28 பெப்ரவரி 2019 (UTC)
இங்கும் வேறு பல இடங்களிலும் உள்ளது போன்றே விக்சனரியும் சைத்தூன் என்றே குறிப்பிடுகிறது. இவை தவிர, ஆங்கிலம் தமிழுலகுக்கு அறிமுகமாக முன்னர் எழுதப்பட்ட ஏராளமான இஸ்லாமியத் தமிழிலக்கியங்களும் சைத்தூன் என்ற சொல்லையே பயன்படுத்தியுள்ளன.--பாஹிம் (பேச்சு) 08:37, 28 பெப்ரவரி 2019 (UTC)
- 1 இந்த சான்றில் பின்வரும் வரி இடம்பெற்றுள்ளது: (”சைத்தூன்” என்கிற சொல் உருது மொழியிலிருந்து பெறப்பட்டது). தவிர அந்த சான்றில் ஒலிவ மரம் என்ற சொல்லே அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
- 2 இந்த சான்றில் சைத்தூன் என்பது தமிழ்ப்பெயர் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
- 3 இதில் உலங்கரை என்ற சொல்லுக்கு மட்டுமே தமிழ்பெயர் என்பதற்கான தக்க சான்று உள்ளது.[1]
- @பயனர்:AntanO, சைத்தூன் என்பது பழமையான சொல்லாக இருப்பினும் அது தமிழ்ச்சொல் இல்லை. எனவே உலங்கரை அல்லது இடலை என்ற தமிழ்ச்சொற்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுவதே பொருத்தமானது என்று கருதுறேன். நன்றி.Varunkumar19 (பேச்சு) 12:00, 28 பெப்ரவரி 2019 (UTC)
- இடலை= olive
- இடலைப் பச்சை= olive green
- இடலையெண்ணை= olive oil
சான்று: [2] Varunkumar19 (பேச்சு) 12:02, 28 பெப்ரவரி 2019 (UTC)
குழப்ப வேண்டாம்
தொகுஉலங்காரை அல்லது இடலை (Elaeocarpus serratus) என்பது வேறினம். Ceylon Olive என்பது சைத்தூன் (Olea europaea) அல்ல. அது வேறு இது வேறு. குழப்பிக் கொள்ளாதீர்கள்.--பாஹிம் (பேச்சு) 15:56, 28 பெப்ரவரி 2019 (UTC)io.
- ஆம் உலங்கரை என்பது வேறினம். ஆனால் இடலை என்பது Olive இனங்கள் அனைத்தையும் குறிக்கும் பொதுப்பெயர் ஆகும்.
வருண்குமார், நீங்கள் உங்களுக்குத் தெரியாத ஒரு பெயருக்காகக் கட்டுரையைத் தொடர்ந்து மீளமைத்து வருகிறீர்கள். இது முற்றிலும் தவறான செயல்.--பாஹிம் (பேச்சு) 02:00, 1 மார்ச் 2019 (UTC)
நீங்கள் கட்டுரைப் பக்கத்தை மீளமைப்பதையோ திருத்துவதையோ இத்துடன் நிறுத்துங்கள். உங்களது குழப்பம் தீரும் வரை காத்திருங்கள். ஏனைய பயனர்களும் வரட்டும்.--பாஹிம் (பேச்சு) 02:43, 1 மார்ச் 2019 (UTC)
இடலை என்பதே சரியான தலைப்பு
தொகுOlive என்பதன் தமிழ்ச்சொல் இடலை. இதற்கு நான் பல்வேறு நம்பத்தகுந்த சான்றுகளை அளித்துள்ளேன். எனவே இப்பக்கத்திற்கு இடலை என்பதே சரியான தலைப்பாக அமையும். நன்றி.
- சான்றுகள்:
Varunkumar19 (பேச்சு) 01:06, 1 மார்ச் 2019 (UTC)
இல்லவே இல்லை. நீங்கள் சொல்வது முற்றிலும் தவறு. இலங்கையிலும் இந்தியாவிலும் இருக்கும் மரம் இடலை அல்லது உலங்காரை என்ற ஒரேயொரு இனம் தான். இது வேறு சாதி. சைத்தூன் என்பது இலங்கைக்கோ இந்தியாவுக்கோ தொடர்பற்றது. எனவே, தமிழ்ப் பெயர் வேறு மொழி மூலத்திலிருந்து மாத்திரமே வர முடியும். நீங்கள் தந்திருக்கும் ஆதாரங்களில் எதுவும் இவ்விடயத்தில் செல்லுபடியாவதில்லை. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பப் பார்க்க வேண்டாம். எங்களுக்கு உறுதியாகத் தெரிந்த பெயர்களுக்கெல்லாம் யாரோ எழுதியவற்றிலெல்லாம் ஆதாரம் தேடுவதது மடத்தனம். முன்னர் நீங்கள் கல் மீனுக்கு ஆதாரம் கேட்டதும் அப்படித்தான். நான் நாற்பதாண்டுகளாக அதனைப் பார்த்தும் உண்டும் வருகிறேன். எமது ஊரின் மீன் சந்தையில் அடிக்கடி அதனைக் காணலாம். அதற்கு எமது ஊரில் கல் மீன் என்றே பெயர். நீங்களோ தெரியாத கல் நவரை என்று ஒரு பெயரை ஏற்படுத்திக் குழப்பி வைத்துள்ளீர்கள். அத்தலைப்பையே எது சரி என்று உறுதியில்லாமல் தொடர்ச்சியாகப் பலமுறை கல் மீன், சிவப்புக் கல் மீன், கல் நவரை, நவரை என்று பல பெயர்களை முன்னுக்குப் பின் முரணாக மீண்டும் மீண்டும் மாற்றிக் கொண்டிருந்தீர்கள். அது போன்று இங்கும் குழப்ப வேண்டாம். இடலை எது என்பது எமக்கு நன்றாகத் தெரியும். எமது ஊரில் தாராளமாகக் கிடைக்கப் பெறும் ஒன்றின் பெயரை இந்தியத் துணைக் கண்டத்திலேயே காணப்படாத ஓரினத்தின் பெயரென்று கூறி அதனைத் தெரியாதோரைக் குழப்ப வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 01:11, 1 மார்ச் 2019 (UTC)
- தவறு. இடலை என்பது ஒரு குறிப்பிட்ட இனம் எதையும் குறிக்கும் சொல் அல்ல. Olive என்பதன் நேரடி தமிழ்ச்சொல் ஆகும். Olive இனங்கள் பல உள்ளன. எனவே இனத்திற்கு ஏற்றப்படி பெயரிடுவது பொருத்தமாக இருக்கும். அதன்படி Olea europea என்ற அறிவியல் பெயரின் நேரடி மொழிப்பெயர்ப்பான ஐரோப்பிய இடலை என்பதே இப்பக்கத்திற்கு சரியான தலைப்பாக இருக்கும் என்று கருதுகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 01:46, 1 மார்ச் 2019 (UTC)
@Kanags, Nan, and AntanO: தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 01:58, 1 மார்ச் 2019 (UTC)
@Kanags:, @AntanO:, வருண்குமார், நீங்கள் கருதும் எதனையும் சரியென்று கூறவியலாது. இடலை என்பது Elaeocarpus என்ற சாதியைச் சேர்ந்த ஓரினம். அதற்குக் கிஞ்சித்தும் தொடர்பில்லாத Olea சாதியைச் சேர்ந்த ஓரினத்துக்கு நீங்கள் வேண்டுமென்றே ஏன் இப்பெயரைத் திணிக்கப் பார்க்கிறீர்கள்? சைத்தூன் (Olea europaea) இனத்துக்குத் தொடர்பற்ற ஓரினமே இடலை என்பது. ஆனால் அதன் இலைகளும் பழங்களும் சற்று அதனை ஒத்திருப்பதைப் பார்த்து விஞ்ஞான இருசொற் பெயரீட்டுக்கு முன்னரே இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர் இட்ட பெயர் Ceylon Olive என்பது. இதனை அப்படியே இலங்கைச் சைத்தூன் என்று கூற முடியாதல்லவா? அது போன்றுதான் இடலை என்ற சொல்லை அதற்குச் சற்றும் தொடர்பில்லாத ஓரினத்துக்குப் பெயரிடப் பயன்படுத்த முடியாது. ஏற்கனவே அதற்கு சைத்தூன் என்றொரு சொல் பல நூற்றாண்டுகளாகத் தமிழ் வழக்கில் இருப்பதை அறிந்த பின்னரும் ஏன் அதை வேண்டுமென்றே புறந் தள்ளப் பார்க்கிறீர்கள் என்பதுதான் விளங்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 01:58, 1 மார்ச் 2019 (UTC)
- Ceylon Olive (Elaeocarpus Olea) என்பதற்கு உலங்கரை என்ற தமிழ்ப்பெயர் உள்ளது. ஆனால் ஒரு உயிரியல் இனத்திற்கு தமிழ்ப்பெயர் இல்லாதவிடத்தில் அறிவியல் பெயரை தமிழ்ப்படுத்துவதில் தவறில்லையே? தமிழ் விக்கிப்பீடியாவில் உயிரியல் பக்கங்கள் பலவும் அவ்வாறே உருவாகியுள்ளன. Varunkumar19 (பேச்சு) 02:08, 1 மார்ச் 2019 (UTC)
@பாஹிம், உரையாடலில் தீர்வு எட்டப்படுவதற்கு முன்பே பக்கத்தில் இருந்து வார்ப்புருவை நீக்குவது விக்கிப்பீடியா கொள்கைகளுக்கு முரணானதாகும். எனவே இனி அவ்வாறு செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 02:11, 1 மார்ச் 2019 (UTC)
பக்க வார்ப்புருவை அல்ல, நீங்கள் தொடர்ச்சியாகப் பக்கத்தையே வேண்டுமென்றே மீளமைத்து வருகிறீர்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு பெயரை வேண்டுமென்றே திணிக்கப் பார்க்கிறீர்கள். அதுதான் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முரணானது.--பாஹிம் (பேச்சு) 02:25, 1 மார்ச் 2019 (UTC)
- தாங்கள் தான் சைத்தூன் என்ற பிறமொழிப் பெயரை திணிக்க முயல்கிறீர்கள். நான் தமிழ்ப்பெயரில் பக்கம் இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அதுதான் விக்கிப்பீடியாவின் கொள்கையும் ஆகும். நன்றி. Varunkumar19 (பேச்சு) 02:27, 1 மார்ச் 2019 (UTC)
இங்கே தீர்வு வரும் வரை கட்டுரைப் பக்கத்தில் நீங்கள் எதையும் மாற்ற வேண்டாம். நீங்கள் வேண்டுமென்றே எல்லாவற்றையும் குழப்பி வருவதாகத்தான் தோன்றுகிறது. பல மீனினங்களின் பெயர்களைக் குழப்பி விட்டது போன்று இங்கும் உங்களுக்கு அறவே தெரியாத ஒன்றுக்கு உங்களது மனத்தில் தோன்றும் ஒரு சொல்லைத் திணிக்கப் பார்ப்பது தமிழ் விக்கிப்பீடியாவின் கொள்கைகளுக்கு முற்றிலும் முரணானது. இனி அவ்வாறு செய்ய வேண்டாம்.--பாஹிம் (பேச்சு) 02:27, 1 மார்ச் 2019 (UTC)
- மனதில் தோன்றும் சொல் அல்ல. இடலை என்பது தமிழ்ச்சொல் என்பதற்கான பல சான்றுகளையும் அளித்துவிட்டேன். தாங்கள் தான் சான்றே இல்லாமல் சைத்தூன் என்ற பிறமொழிச் சொல்லை தமிழ்ச்சொல் என்று கூறி வருகிறீர்கள். எது எப்படியிருந்தாலும் இங்கு சரியான தீர்வு எட்டப்படும் வரை தாங்கள் வார்ப்புருவை நீக்க வேண்டாம். நன்றி.Varunkumar19 (பேச்சு) 02:34, 1 மார்ச் 2019 (UTC)
இடலை என்பது வேறினம் என்பதை எவ்வளவு எடுத்துக்கூறினாலும் நீங்கள் எதற்காகப் பிடிவாதமாக மறுக்கிறீர்கள்? இடலை என்பது Ceylon Olive. அதற்கும் சைத்தூன் இனத்துக்கும் சற்றும் தொடர்பில்லை.--பாஹிம் (பேச்சு) 02:30, 1 மார்ச் 2019 (UTC)
- @செல்வா: இங்கு தங்களின் கருத்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--நந்தகுமார் (பேச்சு) 02:32, 1 மார்ச் 2019 (UTC)
@பாஹிம், தாங்கள் கூறுவது முற்றிலும் தவறு. Elaeocarpus serratus (Ceylon Olive) என்பதற்கான தமிழ்ப்பெயர் உலங்கரை.[6] அதற்கும் இடலை என்ற சொல்லுக்கும் தொடர்பில்லை. Varunkumar19 (பேச்சு) 02:38, 1 மார்ச் 2019 (UTC)
உலங்கரை அல்ல உலங்காரை. அதுவும் உங்களுக்குத் தெரியாது. உலங்காரை என்பதும் இடலை என்பதும் ஒன்றே. எமது சூழலில் இருக்கும் ஒரு மரத்தின் பெயரை எதற்காக மாற்றப் பார்க்கிறீர்கள் என்பதுதான் விளங்கவில்லை.--பாஹிம் (பேச்சு) 02:41, 1 மார்ச் 2019 (UTC)
- தாங்கள் அனைத்தையும் சான்றில்லாமல் பேசி வருகிறீர்கள். நான் தக்க சான்றுகள் பலவற்றையும் அளித்துவிட்டேன். உலங்காரை வேறு, இடலை வேறு. இடலை வகையில் உள்ள பல இனங்களில் ஒன்று உலங்காரை (Ceylon olive). Varunkumar19 (பேச்சு) 02:48, 1 மார்ச் 2019 (UTC)
உங்களுக்குத் தாவரவியல் தெரியாதென்றால் அதற்கு நான் பொறுப்பல்ல. Elaeocarpus என்ற சாதிக்கும் Olea என்ற சாதிக்கும் அவற்றின் குடும்ப மட்டத்திலேனும் தொடர்பில்லை. உங்களுக்குத் தெரியாத ஒன்றை இன்னொன்றுக்குத் திணிக்கப் பார்ப்பதுதான் தவறு. ஒரு தமிழ்ப் பெயரை அதற்குச் சற்றும் தொடர்பில்லாத ஓரினத்துக்கு வைக்கப் பார்க்கிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 02:50, 1 மார்ச் 2019 (UTC)
- தற்போது தாங்களே ஒப்புக்கொண்டு விட்டீர்கள். உலங்காரை என்பதும் இடலை என்பதும் துளியும் தொடர்பில்லாத வேறு வேறு இனங்கள் என்று. பிறகு ஏன் முன்பு இரண்டும் ஒன்றுதான் என்று கூறினீர்கள்? Varunkumar19 (பேச்சு) 03:02, 1 மார்ச் 2019 (UTC)
நான் எங்கே ஒப்புக் கொண்டேன்? உலங்காரை என்பதும் இடலை என்பதும் ஒரே இனம். இதைப் பல முறை சொல்லியும் விளங்கவில்லையா? சைத்தூன் என்பது வேறினம்.--பாஹிம் (பேச்சு) 03:07, 1 மார்ச் 2019 (UTC)
- தங்களுக்குத் தான் இது புரியவில்லை போல் தோன்றுகின்றது.
- Elaeocarpus serratus= உலங்காரை
- Olive= இடலை (இது ஒரு பொதுப்பெயர் ஆகும். எந்தவொரு தனி இனத்தையும் இது குறிக்காது.) Varunkumar19 (பேச்சு) 03:10, 1 மார்ச் 2019 (UTC)
மீண்டும் குழப்பிக் கொள்கிறீர்கள். எந்த அடிப்படையில் இடலை (இது ஒரு பொதுப்பெயர் ஆகும். எந்தவொரு தனி இனத்தையும் இது குறிக்காது.) என்று கூறுகிறீர்கள்? எனக்கு இடலை மரத்தையும் இலையையும் பழத்தையும் தெரியும். அதனைக் கண்டுமிருக்கிறேன் உண்டுமிருக்கிறேன். இடலை என்பது Ceylon Olive. இதைச் சிங்களத்தில் වෙරළු என்பார்கள். தென்னிலங்கையில் ஏராளமாகக் காணப்படுகிறது. இதனை எனக்குத் தெரியாதா?--பாஹிம் (பேச்சு) 03:19, 1 மார்ச் 2019 (UTC)
- மான் (Deer) என்பது ஒரு பொதுப்பெயர். அது எப்படி காட்டுமான், புள்ளிமான், சருகுமான், மறிமான், துருவமான் போன்ற பல்வேறு இனங்களைக் குறிக்கிறதோ அதுபோல் தான் இடலை (Olive) என்பதும் ஒரு பொதுப்பெயராகும். Varunkumar19 (பேச்சு) 03:24, 1 மார்ச் 2019 (UTC)
இடலை என்பது பொதுப் பெயரல்ல. ஆங்கிலேயன் அறியாத் தனமாக இடலைக்கு Ceylon Olive என்று பெயரிட்டதைப் பார்த்து அதுதான் Olive இற்கான பெயரென்று வாதிடுகிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 03:33, 1 மார்ச் 2019 (UTC)
- இடலைப் பச்சை நிறத்தில் அதன் பழங்கள் இருப்பதால் இலங்கை இடலை (Ceylon olive) என்று பெயர் வைத்திருக்கலாம். உலங்காரை என்ற தமிழ்ப்பெயர் இருக்கும்போது அதைப்பற்றி ஆராய தேவையில்லை.Varunkumar19 (பேச்சு) 03:42, 1 மார்ச் 2019 (UTC)
முரண்
தொகுநீங்களே இப்பக்கத்தில் முன்னுக்குப் பின் முரணாகக் கூறி வருகிறீர்கள். முதலில் உலங்காரை என்பதும் இடலை என்பதும் ஒரே இனம் என்றீர்கள். பின்னர் இரண்டும் தனித் தனியான இரு இனங்கள் என்றீர்கள். தற்போது இடலை என்பது பொதுப் பெயரென்கிறீர்கள்.--பாஹிம் (பேச்சு) 03:35, 1 மார்ச் 2019 (UTC)
- நான் ஒப்பக்கொள்கிறேன். தமிழ் விக்சனரியில் [7] உள்ளதைக் கண்டு உலங்காரை மற்றும் இடலை ஆகிய இரண்டும் ஒன்றாக இருக்கும் என்று தவறாக எண்ணிவிட்டேன். தற்போது என் குழப்பம் தீர்ந்துவிட்டது.
- Elaeocarpus serratus= உலங்காரை
- Olive= இடலை (இது ஒரு பொதுப்பெயர் ஆகும். எந்தவொரு தனி இனத்தையும் இது குறிக்காது.) ஆனால் தங்களின் குழப்பம் தான் இன்னும் தீரவில்லை போல் தோன்றுகிறது. Varunkumar19 (பேச்சு) 03:44, 1 மார்ச் 2019 (UTC)
உங்களது குழப்பம் தீரவில்லை. அதனாலேயே பலமுறை கேட்டுக் கொண்டேன் இக்கட்டுரைப் பக்கத்தில் எம்மாற்றத்தையும் செய்ய வேண்டாமென்று. நிருவாகிகள் சிலர் இங்கு உதவிக்கு வரட்டும். அது வரை உங்களது குழப்பத்தை ஒதுக்கி வைத்திருங்கள்.--பாஹிம் (பேச்சு) 04:01, 1 மார்ச் 2019 (UTC)
- அதையே தான் நானும் தங்களுக்குக் கூறுகிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 04:12, 1 மார்ச் 2019 (UTC)
ஐரோப்பிய இடலை
தொகுOlea பேரினத்தைச் சேர்ந்த பல இனங்கள் Olive (இடலை)[8] என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன. ஆனால் Olea europaea என்பது மாதிரி இனம் (type species) என்பதால் ஆங்கிலத்தில் பொதுவாக Olive என்று அழைக்கப்படுகின்றது. அதற்காக அதையே தமிழிலும் கையாள வேண்டும் என்று அவசியமில்லை. Olea europaea என்ற அறிவியல் பெயரின் படி ஐரோப்பிய இடலை எனறு பெயரிடலாம். Varunkumar19 (பேச்சு) 03:50, 1 மார்ச் 2019 (UTC)
இடலை என்பது Olea குடும்பத்துடன் கிஞ்சித்தும் தொடர்பற்ற ஒரு தாவரம். சைத்தூன் துணையினங்கள் ஆறு காணப்படுகின்றன (இனங்களல்ல). அவை முறையே:
- Olea europaea subsp. europaea ஐரோப்பியச் சைத்தூன்
- O. e. subsp. cuspidata கசுவீனியச் சைத்தூன்
- O. e. subsp. guanchica பெருங்கடல் சைத்தூன்
- O. e. subsp. cerasiformis சிறுமணிச் சைத்தூன்
- O. e. subsp. maroccana மகுரிபுச் சைத்தூன்
- O. e. subsp. laperrinei சகாராச் சைத்தூன்
--பாஹிம் (பேச்சு) 04:23, 1 மார்ச் 2019 (UTC)
- Olea பேரினத்தைச் சேர்ந்த Olea dioica என்ற இனம் தமிழில் இடலை, காட்டொலிவம் அல்லது இடலை கோலி என்று அழைக்கப்படுகின்றது. காண்க: [9] Varunkumar19 (பேச்சு) 04:42, 1 மார்ச் 2019 (UTC)
- @Varunkumar19: கோலி யன்று, கோழி. தமிழில் கோழி என்றாலும் இடலைதான். Olea dioica என்பதன் இன்னொரு பெயர்.இன்னும் ஒரு பெய குலைமரம்.--செல்வா (பேச்சு) 15:39, 2 மார்ச் 2019 (UTC)
@Fahimrazick: மேலே நீங்கள் சொன்ன கூற்றுக்கு என்ன சான்று //இடலை என்பது Olea குடும்பத்துடன் கிஞ்சித்தும் தொடர்பற்ற ஒரு தாவரம். சைத்தூன் துணையினங்கள் ஆறு காணப்படுகின்றன (இனங்களல்ல).// ? Olea dioica என்பது இடலை. இதனை நாம் இந்திய இடலை என்றுவேண்டுமானால் சொல்லலாம். இடலை என்பதைப் பேரினத்தின் பெயராக வழங்கலாம். நீங்கள் ஏன் சிற்றினத்தின் பெயரை இங்கே இட்டு மறுக்கின்றீர்கள். Olea europaea என்பதை ஐரோப்பிய இடலை என்பதில் சிக்கல் இல்லை. சிற்றினங்களைக் குறிப்பிடவேண்டுமாயின், "ஐரோப்பிய இடலை சிற்றினம் ஐரோப்பியம் ('Olea europaea subsp. europaea) என்றும் இதேபோல பிறவற்றையும்:
- O. e. subsp. cuspidata ஐ.இ. சிற். கசுவீனியம்
- O. e. subsp. guanchica ஐ.இ. சிற். பெருங்கடல்
- O. e. subsp. cerasiformis ஐ.இ. சிற். சிறுமணி
- O. e. subsp. maroccana ஐ.இ. சிற். மகுரி
- O. e. subsp. laperrinei ஐ.இ. சிற். சகாரா
எனலாம் அல்லது வேறு தக்கசிற்றினப்பெயருடன் வழங்கலாம். ஐரோப்பிய இடலை என்பதில் சிக்கல் இருக்கத்தேவையில்லையே. --செல்வா (பேச்சு) 15:50, 2 மார்ச் 2019 (UTC)
- ஆயிற்று, நன்றி. Varunkumar19 (பேச்சு) 03:55, 3 மார்ச் 2019 (UTC)
தெளிவுக்காகத்தான் Olea europaea subsp. europaea என்று எழுதப்படுகிறது. சரியான முறை Olea europaea europaea என்பதாகும், Homo sapiens sapiens என்பது போல. துணையினங்களைக் குறிப்பிடுகையில் மூன்று சொற்கள் சேர்ந்த தொடர்களாக வருவதே விஞ்ஞான முறை. அடுத்தது, இடலை என்ற கட்டுரை தொடங்கப்பட்டது என்னுடன் முரண்படப் போய்த்தான். சரியாக ஓரினத்தைத் தாவரவியல் அடிப்படையில் தெரியாத ஒருவர் வெறுமனே ஓரிடத்திலுள்ள ஒரு பெயரைப் பார்த்து விட்டு, அல்லது ஒரு தாவரத்தை ஒத்த மற்றொரு தாவரத்தைப் பார்த்து விட்டு இது அதுதான் என்று குழப்பிக் கொள்வது கூடாது. எடுத்துக் காட்டாக ஆடாதோடையும் (Adathoda indica) பாவட்டையும் (Pavatta vasica) இலை, தண்டு, பூ எனத் தோற்றத்தில் ஒத்தவை. ஆனால் இவையிரண்டும் அறவே தொடர்பற்ற இரு வரிசைகளிலிருந்து வருபவை. இதை அறியாத சிலர் பாவட்டையைப் பார்த்து இதுதான் ஆடாதோடை என்று கூறுகின்றனர். இரண்டும் ஒன்றென நினைக்கின்றனர். அவர்களுக்கு தாவரவியல் அடிப்படையில் அவற்றின் வேறுபாடுகளைக் கண்டறியத் தெரியாது. அது போன்றதுதான் இங்கு நடந்த பிரச்சினையும். உலங்காரை என்பதும் இடலை என்பதும் ஒரே இனம். வெவ்வேறு இனங்களல்ல. சைத்தூன் (Olea europaea) என்பது இடலைக்கு (Elaeocarpus serrata) அவற்றின் வரிசை மட்டத்திலேனும் தொடர்பற்றது. இங்கே இவ்வினங்களின் இலைகளும் தண்டும் பழங்களும் ஒத்துக் காணப்படுவதைப் பார்த்து ஆங்கிலேயர் இட்ட பெயர் Ceylon olive என்பது. அப்படியிருக்கையில், Elaeocarpus சாதியிலுள்ள இனத்துக்கு ஏற்கனவே பயன்படுத்தப்படும் பெயரை இச்சாதியுடன் தொடர்பற்ற மற்றொரு சாதியிலுள்ள இனத்துக்கு வலிந்து திணிக்க முற்படுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அதே நேரம், Olea europaea இற்கு சைத்தூன் என்ற சொல் ஏற்கனவே பயன்பாட்டிலுள்ளதே. அவ்வாறிருக்கையில் அதற்குத் தொடர்பில்லாத மற்றொரு இனத்தின் பெயரை அங்கு பொருத்தி அது இதுதான் என்று கூறத் தொடங்கினால் பிரச்சினை இன்னும் கூடிச் செல்லும். இதற்குப் பல காரணங்களைக் கூறலாம். எடுத்துக் காட்டாக, தமிழில் எழுதப்பட்ட மூலிகை மருத்துவ நூற்கள் பல்லாயிரக் கணக்கில் காணப்படுகின்றன. அவற்றிலெல்லாம் இடலை என்று கூறப்பட்டுள்ள தாவரம் Olea europaea அல்லவே அல்ல. அவ்வாறிருக்க அது இதுதான் என்று வாதிட்டு, அதுவல்லாத ஒன்றை முடிவெடுத்துத் தலைப்பிட்ட பின்னர் அவற்றைப் பார்ப்பவர்களெல்லாம் தவறாகப் பொருள் கொள்வர். அப்போது மூலிகை மருத்துவத்திற் சொல்லப்பட்ட தாவரம் அதுவல்லாதிருக்க, அதற்குச் சற்றும் தொடர்பில்லாத ஒரு தாவரத்தைக் கொண்டு வந்து பயன்படுத்தி விட்டு, அதன் விளைவுகள் மோசமானால், மூலிகை மருத்துவத் துறையையே குறை சொல்லும் நிலையும் ஏற்படும். உண்மையான பெயர் ஒன்றிருக்க மற்றொன்றுக்கு ஒரு பெயரை வலிந்து திணிக்கும் போது இவ்வாறு இன்னும் பல சிக்கல்கள் நேரலாம்.--பாஹிம் (பேச்சு) 16:50, 2 மார்ச் 2019 (UTC)
- @Fahimrazick:, மிக்க நன்றி. நீங்கள் சொல்லவருவது இப்பொழுதுதான் புரியவருகின்றது. Elaeocarpus serrata என்பதுதான் இடலை என்பதற்கு என்ன சான்று? Elaeocarpus serrata என்பது ceylon olive என்று பொது ஆங்கிலத்தில் கூறுகின்றார்கள் என்பதை நான் உணர்கின்றேன். ஆனால் எவ்விடத்தில் இது ( Elaeocarpus serrata ) "இடலை" எனப்படுகின்றது? ஏன் இக்கேள்வியைக் கேட்கின்றேன் எனில் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon) Olea dioica என்பதைத்தான் இடலை என்கின்றது. --செல்வா (பேச்சு) 19:30, 2 மார்ச் 2019 (UTC)
இது நாம் சாதாரணமாக அறிந்துள்ள மரத்தைப் பற்றித்தான் கூறுகிறேன். எங்கேனும் குறிப்பிடப்பட்டதா என்பது தெரியவில்லை. தேடிப் பார்க்க வேண்டும். சில வேளை இலங்கை தமிழக வேறுபாடுகளாக இருக்கலாம். எடுத்துக் காட்டாக இலங்கையில் பாசி என்பது வேறு தமிழகத்தில் பாசி என்பது வேறு, இலங்கையில் கொசு என்பது வேறு தமிழகத்தில் கொசு என்பது வேறு, இலங்கையில் நுளம்பு என்பது வேறு தமிழகத்தில் நுளம்பு என்பது வேறு, இலங்கையில் சர்க்கரை என்பது பனை வெல்லம் வட தமிழகத்தில் சர்க்கரை என்பது கரும்பு வெல்லம். இவ்வாறான வேறுபாடுகள் சில காணப்படுகின்றன. ஆயினும் ஏற்கனவே Olea dioica இற்கு இடலை என்று கூறும் தமிழகத்திலேயே Olea europaea இற்கு சைத்தூன் என்று கூறும் வழக்கம் இருக்கிறது. பண்டைய தமிழகத்தினர் இவற்றின் வேறுபாடுகளை உணர்ந்து இச்சொல்லை வேற்று மொழியிலிருந்து தழுவிக் கொண்டிருக்கக் கூடும். இத்தாவரத்துக்கு இங்கே இந்தோனேசியாவிலும் சைத்தூன் என்றே கூறப்படுகிறது. மலாயத்திலும் இங்குள்ள வேறு பல்வேறு மொழிகளிலும் சைத்தூன் என்றே கூறப்படுகிறது. பாரசீகத்திலிருந்து உருது வழியாக வந்ததென்ற கருத்து நிலவுகின்ற போதிலும் பண்டைக் காலந் தொட்டே அறபு நாடுகளுடனும் யவன நாட்டுடனும் மலாயத் தீவுக் கூட்டங்களுடனும் அரசியல், வணிக உறவுகளைக் கொண்டிருந்த தமிழகம் இத்தீவுக் கூட்டங்களிற் பேசப்படும் மொழிகளிலிருந்து ஏராளமான சொற்களைத் தமிழுக்கு உள்வாங்கிக் கொண்டிருக்கும் சாத்தியம் அதிகம். இதனாற்றான்(ஸ்ரீவிஜயம், சாவகம், கடாரம் போன்றவற்றினதும் சிங்களம், சோனகம் போன்றவற்றினதும்) இம்மொழிகளிலிருந்து சொற்களைப் பெறுவதை நன்னூலார் ஏற்புடையதாக்கினார் என்பர் நன்னூலுக்கு விளக்கம் கூறும் தமிழறிஞர். இதனாலேயே இத்தலைப்பு மாற்றப்படக் கூடாது என்று கூறுகிறேன். அடுத்த சிக்கல் என்னவென்றால், விஞ்ஞான இருசொற் பெயரீட்டு முறைப்படி தமிழிலும் உயிரினங்கள் குறிக்கப்பட வேண்டும் எனும் கருத்து நான் பாடசாலையில் கற்ற காலத்திலிருந்தே என்னிடம் இருந்து வருகிறது. அப்போது பல சிக்கல்களைத் தீர்க்கலாம். ஆங்கிலக் கட்டுரைகளில் பொது ஆங்கிலப் பெயரைக் குறிப்பிட்டு அதனாற் குறிக்கப்படும் எல்லாத் தாவரங்களையும் சுட்டிக் காட்டுவதுடன், இருசொற் பெயரீட்டு முறைத் தலைப்புக்களின் கீழ் வெவ்வேறு மொழிகளிலுள்ள பொதுப் பெயர்களையும் சுட்டிக் காட்டப்படுகிறது. அப்போது இது தொடர்பான தெளிவு ஏற்படும் வாய்ப்பு அதிகம். இலங்கை - தமிழகச் சொல் வழக்குகள் பற்றிய சிக்கல்களும் தீரும். இலங்கையில் பல்வேறு பகுதிகளிலும் தும்பை என்று கூறப்படுவது தமிழகத்தில் பழுபாகல் என்று கூறப்படுவதாகவும் தமிழகத்தில் தும்பை என்பதற்கு இலங்கையின் பல பகுதிகளில் மற்றொரு பெயர் கூறப்படுவதைப் பற்றியும் அக்கட்டுரையின் பேச்சுப் பக்கத்தில் கலந்துரையாடப்பட்டது. ஆயினும் தென்னிலங்கையின் காலி நகரிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் தும்பை என்று கூறப்படுவது தமிழகத்தில் தும்பை என்பதற்கே என்பதை அண்மையிலேயே என் மதினி மூலமாக அறிந்து கொண்டேன். இவ்வாறு பிரதேசத்துக்குப் பிரதேசம் உள்ள வேறுபாடுகளைக் களைய வேண்டுமானால் நாம் குறைந்த பட்சம் தமிழ் விக்கிப்பீடியாவிலாவது தமிழ் இருசொற் பெயரீட்டு முறையைப் பின்பற்ற வேண்டி வரும். துணையினங்களுக்கு தொடர்ச்சியாக மூன்று சொற்கள் வர வேண்டும். இதற்கான கொள்கை வகுக்கப்பட முடியுமாயின் இப்பிரச்சினைகள் தீரும்.--பாஹிம் (பேச்சு) 02:36, 3 மார்ச் 2019 (UTC)
நம்பத்தகுந்த சான்று
தொகுதமிழ் இணையக் கல்விக்கழகத்துடன் கூட்டாளியாக இருக்கும் ilearntamil.com என்ற இணையதளத்தில் பல்வேறு ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச்சொற்கள் வழங்கப்பட்டுள்ளன.
- இடலை= olive
- இடலைப் பச்சை= olive green இடலை
- இடலையெண்ணை= olive oil
எனவே இது நம்பத்தகுந்த சான்றாகும்: [10] Varunkumar19 (பேச்சு) 05:03, 1 மார்ச் 2019 (UTC)
நீங்கள் தொடர்ந்தும் உங்களது மனம் போன போக்கில் இக்கடுரையில் மாற்றங்களைச் செய்து வருகிறீர்கள். நிருவாகிகள் சிலர் வந்து உதவட்டும். அதுவரையாவது காத்திருக்கவும் பொறுமையில்லையா? நீங்களே இதைப் பற்றி முன்னுக்குப் பின் முரணாகத் தலைப்புக்களை இட்டு வருகிறீர்கள் என்பதை ஒப்புக் கொண்டீர்கள். நீங்கள் இதற்குச் சொன்ன பெயர்கள் பல. தற்போதாவது நிருவாகிகள் வந்து அவர்களின் கருத்தைத் தர இடமளியுங்கள். உங்களுக்கு நினைத்தவாறு மாற்றாதீர்கள்.--பாஹிம் (பேச்சு) 08:26, 1 மார்ச் 2019 (UTC)
- இங்கு நிர்வாகிகள் கருத்தை அறியும்வரை ஐரோப்பிய இடலை என்ற பெயரும் அப்பக்கத்தில் இருப்பது தவறில்லை. Varunkumar19 (பேச்சு) 08:49, 1 மார்ச் 2019 (UTC)
அது தவறு. ஏற்கனவே சாதாரண வழக்கிலுள்ள ஒரு சொல் இருக்கும் போது அதற்கு மாறாக எங்கும் காணப்படாத, உங்களுக்கு நினைத்த ஒரு பெயர் ஒரு கட்டுரைப் பக்கத்தில் இருப்பது முற்றிலும் தவறு. நிருவாகிகள் வரட்டும்.--பாஹிம் (பேச்சு) 09:08, 1 மார்ச் 2019 (UTC)
- தங்கள் பார்வையில் அவ்வாறு இருக்கலாம். ஆனால் என் பார்வையில் ஐரோப்பிய இடலை என்பதே சரியான பெயராகத் தோன்றுகிறது. நிர்வாகிகள் கருத்தை அறியும்வரை அப்பக்கத்தில் ஐரோப்பிய இடலை என்ற சொல்லை நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். Varunkumar19 (பேச்சு) 09:11, 1 மார்ச் 2019 (UTC)
உங்களுக்குத் தோன்றுவதெல்லாம் சரியான பெயர்களல்ல. ஏற்கனவே இடப்பட்டுள்ள தலைப்பு சாதாரண வழக்கிலுள்ள பெயர். நீங்களோ அதை மாற்றிப் புதிதாக உருவாக்க நினைக்கிறீர்கள். நீங்கள் நினைப்பதெல்லாம் சரியாவதில்லை. சாதாரண வழக்கிலுள்ள ஒரு பெயருக்குப் பதிலாக இல்லாத ஒரு பெயரைக் கட்டுரையில் இட முன்னர் ஏனைய பயனர்களின் கருத்துக்களை அறிந்தாக வேண்டும். நீங்களோ அது எதுவுமில்லாமல் உங்களுக்கு நினைத்ததைச் சாதிக்கப் பார்க்கிறீர்கள். இடலை என்பது Olive அல்ல.--பாஹிம் (பேச்சு) 09:18, 1 மார்ச் 2019 (UTC)
- ஏற்கனவே இடப்பட்டுள்ள சைத்தூன் என்ற தலைப்பு பிறமொழிப் பெயர். Olive என்பது இடலை தான். அதற்கான நம்பத்தகுந்த சான்றையும் அளித்துவிட்டேன். எப்படி ஜன்னல் என்ற பிறமொழிப் பெயர் சாதாரண வழக்கில் இருப்பினும் சாளரம் என்ற பக்கத்தின் தலைப்பை ஜன்னல் என்ற தலைப்பிற்கு மாற்ற முடியாதோ அதுபோல்தான் இதுவும். Varunkumar19 (பேச்சு) 09:24, 1 மார்ச் 2019 (UTC)
இடலை என்பது Olive அல்ல. இதைத் தெரியாமல் ஏன் இவ்வளவு முரண்பாடு உங்களிடம்? நீங்கள் ஆதாஞ் சுட்டிள்ள இணையத் தளத்திலேயே முன்னுக்குப் பின் முரணாகச் சொற்கள் காணப்படுகின்றன.--பாஹிம் (பேச்சு) 09:31, 1 மார்ச் 2019 (UTC)
- இது நம்பத்தகுந்த சான்று. [11] Varunkumar19 (பேச்சு) 09:32, 1 மார்ச் 2019 (UTC)
@பயனர்:Info-farmer, வணக்கம். பாஹிம் என்ற பயனர் தொடர்ந்து விசமத் தொகுப்புகளை செய்து தொகுத்தல் போர் தொடுக்கிறார். எனவே தாங்கள் உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 09:43, 1 மார்ச் 2019 (UTC)
எல்லா நிருவாகிகளையும் வருக வருகவென அழைக்கிறேன். யார் விசமத் தொகுப்புச் செய்கிறாரென்பதைப் பார்க்கலாம்.--பாஹிம் (பேச்சு) 09:47, 1 மார்ச் 2019 (UTC)
- தமிழ் விக்கிப்பீடியா என்பது தமிழ் மொழிக்கானது. உங்களுக்கு சைத்தூன் என்ற சொல் வேண்டுமென்றால் உருது அல்லது பாரசீக விக்கிப்பீடியாக்களில் வைத்துக்கொள்ளுங்கள். Varunkumar19 (பேச்சு) 09:52, 1 மார்ச் 2019 (UTC)
அடடா. இப்படியொரு கருத்தும் இருக்கிறதா? முன்னுக்குப் பின் முரணாகத் தலைப்புக்களைப் பல முறை மாற்றி ஒருமித்த கருத்தில்லாமல் இருப்பவர்களெல்லாம் இப்படிச் சொல்வது புதினமே.--பாஹிம் (பேச்சு) 09:54, 1 மார்ச் 2019 (UTC)
- நமக்குள் இவ்வாறான பிணக்கு தேவையற்றது. சைத்தூன் என்ற தலைப்பு குறித்து நிர்வாகிகளின் கருத்தை அறியும் வரை நான் அப்பக்கத்தைத் தொகுக்க மாட்டேன் என்று உறுதி கூறுகிறேன். அதுவரை தாங்களும் தலைப்பு மாற்றக் கோரும் வார்ப்புருவை அப்பக்கத்தில் இருந்து நீக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். நன்றி. Varunkumar19 (பேச்சு) 10:14, 1 மார்ச் 2019 (UTC)
நன்றி. இதைத்தானே நான் அப்போதிருந்தே கூறி வருகிறேன்.--பாஹிம் (பேச்சு) 10:19, 1 மார்ச் 2019 (UTC)
வேண்டுகோள்
தொகு@Varunkumar19 and Fahimrazick: கட்டுரையை விட, பேச்சுப்பக்கத்தின் அளவு நீண்டுள்ளது வருத்தம் அளிக்கிறது. கட்டுரையை வளர்க்கக் கேட்டுக் கொள்கிறேன். எது சரி? பொருத்தமற்றது? என்பதை காலமே நிலைநிறுத்தும். போதுமான சொல்லாய்வு இந்த பக்கத்தில் நடந்துள்ளதாகவே எண்ணுகிறேன். இந்திய அளவில் நமது தமிழ் வளம் கூட நாம் அதிகம் உழைக்க வேண்டியுள்ளது. எனவே இந்த இலக்கில் ஒன்று சேர்ந்து உழைப்போம். எனவே தயவுசெய்து தங்களது மேலதிக உயர்வான நேரத்தினை தமிழ் வளம் கூட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டுகிறேன். --த♥உழவன் (உரை) 01:06, 2 மார்ச் 2019 (UTC)
- @Info-farmer: உரையாடல் நீண்டால் தவறில்லை. இதுவும் வரலாற்றில் பதிவாகும் இலக்கியமே, கருத்துக்குவியலே. உரையாடல், கருத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு அறிவடிப்படையில் நிகழவேண்டும். இது ஒன்றே வேண்டுகோள். மாறுபட்ட கருத்துகளை உரையாடும்பொழுது பல செய்திகளும் கருத்துகளும் தெரிய வருவதும் நல்லதே. இதனை வீண் எனக் கருதவேண்டாம். கட்டுரையில் உள்ளடக்கத்தைப் பெருக்குவதையும் செய்யவேண்டும் என்பதை மறுக்கவில்லை. //நேரத்தினை தமிழ் வளம் கூட்ட மட்டுமே பயன்படுத்த வேண்டுகிறேன்/// இதுவும் தமிழ்வளம் கூட்டுவதே என்பதைப் புரிந்துகொல்ளுதல் வேண்டும். ஆனால் சுருக்கமாகவும் கருத்தாகவும் இருந்தால் நல்லது. விரித்து எழுதுவதும் தவறன்று, ஆனால் கருத்தாக இருப்பது வேண்டும் @Nan: உங்கள் வேண்டுகோளைப் பார்த்தேன். நன்றி. எனக்கு ஏதும் தெரிந்தால் கருத்துரைக்கின்றேன். --செல்வா (பேச்சு) 11:58, 2 மார்ச் 2019 (UTC)
இடலை, குலைமரம், கோழி
தொகுநான் தாவரவியல் வல்லுநன் அல்லேன். ஆனால் தாவவியல் ஆரவலன். மதராசு தமிழ்ப்பேரகராதி (Tamil Lexicon) இடலை என்பதை Wild Olive என்றும் Olea dioica என்றும் தந்துள்ளார்கள். தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதே அகரமுதலி குலைமரம் என்றும் இன்னொரு பெயரும் இதே Wild Olive என்பதற்குத் தந்துள்ளார்கள். இது தவிர கோழி என்னும் சொல்லும் "Indian Wild Olive" என்பதைக் குறிக்கும் என்று அதே அகரமுதலி தெரிவிக்கின்றது. இந்த Olea dioica Roxb. என்பது இந்தியா வங்காள தேசம், பர்மா (மியான்மா) ஆகிய பகுதிகளில் காணப்படும் இனம் என்று ஆங்கில விக்கிப்பீடியாவில் தந்துள்ளார்கள். இது சேர்ந்த பேரினம்(genus) Olea என்றழைக்கப்படுகின்றது. இந்தப் பேரினத்தில் 40 இனங்கள் உள்ளனவாம். தமிழ் விக்கிப்பீடியாவில் இடலை என்றொரு கட்டுரை உள்ளது இது Olea என்னும் ஆங்கில விக்கிப்பீடியாவில் உள்ள பேரினத்திற்கான கட்டுரைக்கு ஈடாக உள்ளது. இப்போதைக்கு என் கருத்தின்படி, இடலை என்பதோடு ஒரு முன்னொட்டு தந்து ஐரோப்பிய இடலை என்றழைப்பது சரியாக இருக்கும். உண்மையில் Olive என்னும் ஆங்கிலச்சொல்லின் மூலமாகிய கிரேக்கச்சொல் elaia என்பதே கிரேக்கம் அல்லாத மொழியொன்றில் இருந்து பெற்ற வொன்று. இச்சொல்லைப்பற்றிய ஆய்வைத் தொடர்வதைவிட, தமிழ்ப் பேரகராதியில் ஏற்கனவே உள்ள இடலை என்னும் சொல்லோடு ஒரு முன்னொட்டு இட்டு அழைப்பதே சரியாக இருக்கும். அல்லது குலைமரம் என்றோ, கோழி என்றோ அழைக்கலாம். சைத்தூன் என்பதை மாற்றுப்பெயராகக் கட்டுரையி குறிப்பிடலாம். இச்சொல் எங்கு வழங்குகின்றது என்றும் குறிப்பிடலாம். இக்கருத்துகள் பற்றி மேலும் கூற இருந்தால் சொல்ல முற்படுவேன். --செல்வா (பேச்சு) 12:31, 2 மார்ச் 2019 (UTC)
- ஆங்கில விக்சனரியில் தந்துள்ள கருத்து: "Probably a borrowing from a Mediterranean Pre-Greek source, which also gave Old Armenian եւղ (ewł, “oil”)." எனவே இது கிரேகத்திலேயே கடன் சொல். பார்க்கவும் [12] --செல்வா (பேச்சு) 13:00, 2 மார்ச் 2019 (UTC)
செல்வா, Olea europaea இற்கு ஐரோப்பிய இடலை என்று பெயரிட்டால் Olea europaea subsp. europaea இற்கு எப்படிப் பெயரிடுவது? ஐரோப்பிய-ஐரோப்பிய இடலை என்று பெயரிட வேண்டுமா? Olea europaea இல் ஆறு துணையினங்கள் உள்ளன. நான் மேலே அவற்றைக் குறிப்பிட்டுள்ளேன். அடுத்தது, விஞ்ஞான இருசொற் பெயரீட்டு முறை இது வரை தமிழுலகில் தமிழ் மொழியில் உத்தியோகபூர்வமாகப் பயன்படுத்தப்பட்ட வரலாறு கிடையாது. ஐரோப்பிய இடலை என்று குறிப்பிடத் தொடங்கினால், எல்லாவற்றுக்கும் தமிழில் விஞ்ஞான இருசொற் பெயரீட்டு முறையை அமைக்க வேண்டி வரும்.--பாஹிம் (பேச்சு) 15:08, 2 மார்ச் 2019 (UTC)
- பாஃகிம், தாவரவியல் இருசொற் பெயரீடாக இருக்கவேண்டுமென்னும் கருத்தில் சொல்லவில்லை. Olea europaea என்பதை ஐரோப்பிய இடலை என்றழைப்பதில் சிக்கல் இல்லை. நீங்கள் சொல்லும் Olea europaea subsp. europaea என்பதிலேயே europaea என்னும் சொல் இருமுறை வந்திருப்பதைப் பாருங்கள். எனவே ""ஐரோப்பிய இடலை சிற்றினம் ஐரோப்பியம்"" எனலாம். தமிழில் முறையான இருசொற் பெயரீட்டு முறையை சிலர் பயன்படுத்தியிருக்கின்றனர். ஆனால் நீங்கள் சொன்னவாறு ஏற்புப்பெற்றதாக இல்லாமல் இருக்கலாம். திரு இரா. பஞ்சவர்ணம் அவர்களின் நூல்களில் இருசொற் பெயரீட்டு முறையைத் தமிழில் வழங்கியுள்ளார். பார்க்கவும்: [13]. இந்நூல்களில் மிகப்பலவும் என்னிடம் உள்ளன.--செல்வா (பேச்சு) 15:29, 2 மார்ச் 2019 (UTC)