பேச்சு:டுவிட்டர்

சுட்டுரை எனத் தலைப்பை மாற்றிவிடலாமா?--நந்தகுமார் (பேச்சு) 06:33, 1 ஆகத்து 2015 (UTC)Reply

Untitled

தொகு
Twitter.comஇல் டுவிட்டர் என்றே உள்ளது. இலக்கண முறைப்படி துவிட்டர் எனலாம். --மதனாகரன் (பேச்சு) 08:02, 1 ஆகத்து 2015 (UTC)Reply
@Nan: டுவிட்டர் என்ற பெயர்தான் அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வப் பெயர் ([1]) அக்கட்டுரையை வேறு பெயருக்கு மாற்றிய போது 'டுவிட்டர்' என வழி மாற்றியாவது இருந்தது. கடைசியாக அதிகாரப்பெயரையும் இப்போது நீக்கி விட்டு இக்கட்டுரை யாருக்கும் தேடல் பெட்டி வழியாகக் கிடைக்காமல் செய்வது சரியா என எண்ணிப்பாருங்கள். -நீச்சல்காரன் (பேச்சு) 08:58, 7 சனவரி 2019 (UTC)Reply
டுவிட்டர் என்னும் வழிமாற்றியை தினேஷ்குமார் பொன்னுசாமியால் நீக்கப் பரிந்துரைச் செய்யப்பட்டது. அதை மீளமைப்புச் செய்யலாம் என இருந்தேன், பின்பு மறந்துவிட்டேன், அதை நந்தக்குமார் அண்ணன் அவசரப்பட்டு நீக்கிவிட்டார். டுவிட்டர் என்னும் பெயர் வழிமாற்றிலாவது இருத்தல் வேண்டும். நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 11:32, 7 சனவரி 2019 (UTC)Reply
@Nan: மிக்க நன்றி. அதே காரணத்திற்காக ட்வெயின் ஜான்சன், ட்விலைட் (நாவல்), ட்ரூ பேரிமோர், ட்விலைட் (2008 திரைப்படம்) மீளமைக்கப்படலாம். கவனிக்க @Dineshkumar Ponnusamy: -நீச்சல்காரன் (பேச்சு) 11:48, 7 சனவரி 2019 (UTC)Reply
@Neechalkaran: இவையும் அதிகாரப்பூர்வப் பெயர்களா? பல காலமாக உள்ள தமிழை, இலக்கணத்தைச் சிதைப்பது என்றாகிவிட்டது. என்ன செய்வது?--நந்தகுமார் (பேச்சு) 08:46, 8 சனவரி 2019 (UTC)Reply
பொதுவாக இலக்கணத்தை மீறும் உரிமை படைப்பாளிக்குள்ளதை நாம் ஏற்கும் வேளையில் படைப்பாளியின் உரிமையை மீறும் உரிமை நமக்கில்லை. இப்பெயர்கள் எல்லாம் வழக்கில் உள்ளன என்பதை மேற்கோளின்றி அறியமுடியும். இங்கே தலைப்புப்பற்றிய விவாதமில்லை வழிமாற்று பற்றியது என்பதால் அறியப்படுகின்ற தலைப்பை வழிமாற்றியாகவாது இருக்கவேண்டும் எனக் கேட்கிறேன். -நீச்சல்காரன் (பேச்சு) 08:56, 8 சனவரி 2019 (UTC)Reply
@Kanags:, @AntanO:, @Ravidreams:, @Sundar:, @Mayooranathan:, @Natkeeran:, @Sodabottle: இங்கு உங்கள் கருத்துகளைத் தெரிவியுங்கள். நன்றி!--நந்தகுமார் (பேச்சு) 11:40, 8 சனவரி 2019 (UTC)Reply
டுவிட்டர் என்று வழிமாற்று தரலாம். மொழியும் இலக்கணமும் முக்கியம். அதே வேளை, நாம் எழுதி வைத்திருப்பதை மக்கள் தேடிக் கண்டுபிடித்துப் படிக்குமாறும் இருப்பதும் முக்கியம். இல்லை என்றால், நம் உழைப்பு வீண். --இரவி (பேச்சு) 12:05, 8 சனவரி 2019 (UTC)Reply
@Ravidreams:, டுவிட்டர் என்னும் வழிமாற்றி மீளமைப்புச் செய்யப்பட்டது, அதிகாரப்பூர்வப் பெயர் என்பதால். அதே காரணத்திற்காக ட்வெயின் ஜான்சன், ட்விலைட் (நாவல்), ட்ரூ பேரிமோர், ட்விலைட் (2008 திரைப்படம்) மீளமைக்கப்படலாமா?--நந்தகுமார் (பேச்சு) 12:28, 8 சனவரி 2019 (UTC)Reply
நாலு பேருக்கு நல்லது என்றால் மொழி தொடர்பான இறுக்கமான கொள்கை வேண்டாம் என்ற நிலைப்பாட்டுக்கு வந்துவிட்டேன். வேறு யாரும் வலுவான எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றால், இதே போன்று தேவை உள்ள அனைத்து வழிமாற்றுகளையும் உருவாக்கலாம். --இரவி (பேச்சு) 13:45, 8 சனவரி 2019 (UTC)Reply
அம்புட்டு பேரும் மொத்தமா இங்க வரனும். (அனைவரும் இதே ஆதரவை ப்ளாக்செயின் பேச்சு பக்கத்தில் தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.) உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா? (ஒரே ஒரு கொள்கை ஒன்னு ஆமா, இல்லைன்னா இல்லை. ஏதாவதொரு முடிவுக்கு வரவும்.) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 19:02, 8 சனவரி 2019 (UTC)Reply
@Dineshkumar Ponnusamy: என்ன சொல்ல வருகிறீர்கள் எனத் தெரியவில்லை. அங்கு ப்ளாக்செயின் எனத் தலைப்பிடுவது தவறு. இதுவே மேலேயுள்ள முடிவுகளும் எடுத்துக் காட்டுகின்றன. இதுவே நான் விளங்கிக் கொண்டது. நீங்கள் வேறு மாதிரி விளங்கிக் கொண்டீர்களா?--Kanags (பேச்சு) 06:39, 9 சனவரி 2019 (UTC)Reply
வணக்கம், @Kanags:, மெய் எழுத்துக்களில் தொடங்கப்படும் கட்டுரைகளும், வழிமாற்றுகளும் நீக்க வேண்டும் என்ற ஒருமித்த கொள்கை வேண்டும். க் முதல் ன் வரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அனைத்து கட்டுரைகளுக்கு ஒரே விதி தொடர வேண்டும். டுவிட்டர், க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, லினக்சு, த்ரீ ரோசஸ் (திரைப்படம்), ப்ரியா (புதினம்) போன்ற சில கட்டுரைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஒருமித்த கொள்கை இருத்தல் நலம். அதையே நான் விரும்புகிறேன். இவ்வாறான தலைப்புகள் சில நேரங்களில் தேவைப்படுகின்றன. முதன்மைத் தலைப்பாக இல்லாமல் போனாலும் ஒரு வழிமாற்றாவது இருந்தால் அக்கட்டுரையை தேடுவோருக்கு பயன் தரும் என்பது என்னுடைய தனிப்பட்ட கருத்து. நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 18:22, 9 சனவரி 2019 (UTC)Reply
//உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா?// இதற்கு விளக்கம் தேவை.--Kanags (பேச்சு) 06:48, 10 சனவரி 2019 (UTC)Reply
@Kanags and Dineshkumar Ponnusamy: சிறீதரன், "உங்களுக்கு வந்தா இரத்தம், எனக்கு வந்தா தக்காளி சட்னியா" என்பது தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக் காட்சியை ஒட்டி முகநூல் போன்ற உரையாடல் தளங்களில் மிகப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. "உங்கள் பிரச்சினை மட்டும் தான் பெரிதா, இதே போன்று நான் இன்னொரு இடத்தில் பிரச்சினையை எழுப்பியுள்ளேன், அதையும் கவனியுங்கள்" என்று கவன ஈர்ப்பைக் கோரும் சொல்லாடலே இது. ஒரு வேளை இந்தச் சொல்லாடல் உங்களுக்குப் புதியதாக இருந்தால், வினோதமாகத் தோன்றியிருக்கலாம். ஆனால், இது தமிழக வெளியில் ஏற்றுக் கொள்ளக்கூடிய நகைச்சுவையே (harmless humour). அதைச் சிரித்துக் கொண்டே தான் நான் படித்தேன். --இரவி (பேச்சு) 19:01, 10 சனவரி 2019 (UTC)Reply

"டுவிட்டர்" என்பது தமிழ் மரபுப்படி பிழை. மெய்யெழுத்துக்களுடன் தொடங்கும் சொற்களைத் தலைப்பாக இடுவது தமிழ் விக்கிப்பீடியாவுக்குப் பொருத்தமானதாக இராது என்பது எனது கருத்து. மெய்யெழுத்துக்களுடன் தொடங்கும் ஒரு சொல் அதிகாரபூர்வப் பெயராக அல்லது தவிர்க்க முடியாதபடி பொது வழக்கில் நிலைத்து விட்டது என்றால் மட்டும் வழிமாற்றாக அதுவும் அரிதாகவே பயன்படுத்துவது நல்லது. இப்பயன்பாட்டை ஒரு விதிவிலக்காகக் கொள்ளலாமே அல்லாது வழக்கமாகக் கொள்ளுவது நல்லதல்ல. இல்லாவிட்டால், "ப்ரபு", "ப்ரேசில்", "த்ரிபுரா", "க்ரோமியம்" என்று எல்லாவற்றையும் வழிமாற்றாகக் கொடுத்துவிடுவார்கள். வழிமாற்றாகப் பயன்படுத்தினாலும் அவ்வாறான மரபுக்கு மாறான சொற்களுக்கு ஒரு அங்கீகாரத்தை வழங்குகிறோம் என்பதை நாம் உணர்ந்துகொள்ள வேண்டும். --மயூரநாதன் (பேச்சு) 09:54, 10 சனவரி 2019 (UTC)Reply

  விருப்பம்--நந்தகுமார் (பேச்சு) 10:21, 10 சனவரி 2019 (UTC)Reply
துவிட்டர் அல்லது இட்டுவிட்டர் என்பதை முதன்மைத்தலைப்பாகக்கொண்டு மற்ற எழுத்துக்கூட்டல்களிலமைந்த தலைப்புக்களிலிருந்து வழிமாற்றைத்தரலாம். அரிதாகவே இவ்வாறு தரவேண்டுமென்ற மயூரநாதனின் கருத்தையும் எண்ணிப்பார்க்கவேண்டியுள்ளது. அதற்கு ஏதாவது வரையறையொன்றை எட்டினால் நல்லது. -- சுந்தர் \பேச்சு 13:19, 14 சனவரி 2019 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:டுவிட்டர்&oldid=3938898" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "டுவிட்டர்" page.