பேச்சு:தேவாரத் திருத்தலங்கள்

தேவாரத் திருத்தலங்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரத் திருத்தலங்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
தேவாரத் திருத்தலங்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கட்டுரைகள்

தொகு

இப்பகுப்புக்குள் அடங்கும் கோயில்கள் தொடர்பான விபரங்களை ஒரு சிறு நினைவு நூலிலிருந்தே பெற்றேன். தலங்களின் பெயர்களில் எழுத்துப் பிழைகள் இருப்பின் பொருத்தமான மாற்றங்கள் செய்ய வேண்டும். மேலும் ஒவ்வொரு பாடல் பெற்ற தலங்களில் பாடப்பெற்ற தேவாரப் பதிகங்கள் எவை என்பது தொடர்பான விபரங்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும். பின்னர் விக்கிமூலத்தில் குறித்த பதிகங்கள் சேர்க்கப்படும்போது அவற்றுக்கான இணைப்பைக் கொடுத்தல் வேண்டும். கோயில்கள் தொடர்பான குறுங்கட்டுரைகளைத் தொடர்ந்து உருவாக்கவுள்ளேன். கோபி 11:34, 12 ஆகஸ்ட் 2006 (UTC)

கோபி, பாடல் பெற்ற தலமென்றால், தேவாரத்தில் அத்தலம் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டுமா அல்லது சமயக்குரவர்களே அக்கோயிலுக்குச் சென்று அப்பாடலை பாடியிருக்க வேண்டுமா? இலங்கையில் உள்ள கோயில்களும் பாடல்கள் பெற்றிருப்பதால் இந்த ஐயம்.--ரவி 12:26, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

குறித்த தலத்தின் மீது பாடல் பாடப்பட்டிருப்பின் அது பாடல் பெற்ற தலம்தான். பெரும்பாலும் பாடல்களில் தலப்பெயர் இருப்பதை அவதானிக்கலாம். --கோபி 13:11, 30 செப்டெம்பர் 2006 (UTC)Reply

பெருந்தகை சோடாபாட்டில்!
தொகுப்பாய்க் கிடந்த ஊர்களை எண்ணிட்டுச் செம்மைப்படுத்தியுள்ளீர்கள்.
எனது பணியை எளிமையாக்கித் தரும் தங்களின் தொண்டுக்கு எளியேன் கடப்பாடு

பாடல் பெற்ற தலங்கள் என்னும் தலைப்பு இதற்குப் பொருந்தாது. நான்கூட புகழூரிலுள்ள ஆறுநாட்டான் மலைக்கோயில் மீது 'ஆறுநாட்டான் உலா' என்னும் சிற்றிலக்கியம் படைத்துள்ளேன். நாமக்கல் வட்டம் மோகனூரிலுள்ள உமையம்மை மீது 'கொங்குக்குமரி பிள்ளைத்தமிழ்' என்னும் இலக்கியம் படைத்துள்ளேன். இவையெல்லாம் பாடல்பெற்ற தலங்கள் அல்லவா?

எனவே தேவாரத் திருத்தலங்கள் வேறு, பாடல் பெற்ற தலங்கள் வேறு. இரண்டும் தனித்தனியே இருந்துவிட்டுப் போகட்டும்

இவற்றையும் பார்க்க என்று இரண்டிலும் இணைப்பு காட்டிவிடலாம் --Sengai Podhuvan 22:53, 3 செப்டெம்பர் 2011 (UTC)Reply

இன்று உலகில் உள்ள அனைத்து சைவக் கோயில்களும் ஒரு வகையில் பாடல் பெற்ற தலங்களே. ஆனாலும் "பாடல் பெற்ற தலங்கள்" என நம் முன்னோர் குறிப்பிடுவது "தேவாரத் திருத்தலங்களே". எனவே பாடல் பெற்ற தலங்களுக்கு தனிக் கட்டுரை தேவையில்லை (உலகின் அனைத்துக் கோயில்களும் பட்டியலிட வேண்டி வரும்). பாடல் பெற்ற தலங்கள் கட்டுரையை தேவாரத் திருத்தலங்கள் கட்டுரையுடன் இணைப்பதே சிறந்தது.--Kanags \உரையாடுக 23:28, 3 செப்டெம்பர் 2011 (UTC)Reply

வேண்டுகோள்

தொகு

பொருளடக்கம கிடைவரிசையில் தரப்பட்டுள்ளதால், தானே இயங்கும் குத்துவரிசைப் பொருளடக்கத்தை நீக்கி உதவுங்கள் --Sengai Podhuvan 02:08, 7 செப்டெம்பர் 2011 (UTC)Reply

  • அன்புள்ள பார்வதி, வணக்கம். மேலே உள்ள செய்தியைப் பாருங்கள். இந்தக் கட்டுரைகள் தனித்தனியாகவே இருக்க வேண்டும் இன்பது விளங்கும். வைணவத் திருத்தலங்கள் கட்டுரையையும் நோக்குங்கள். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:44, 13 பெப்ரவரி 2013 (UTC)

கவனம்

தொகு

(அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும்) மாவட்டப் பாகுபாடு செய்தளித்த நூலிலிருந்து தொகுக்கப்பட்டுள்ள கட்டுரையில் ஊர்ப் பெயர்கள் திரு என்னும் அடைமொழியுடன் உள்ளன். இவை சங்ககால ஊர்ப்பெயர்களுடன் உள்ள தொடர்பு வரலாற்றை ஒப்பாய்வு செய்ய இன்னல் தரும். அங்கே அந்தக் கட்டுரை தெய்வத் திருக்கோயில்களாக இருக்கட்டும். வழிபடுவோருக்கு உதவும். வரலாற்றுக்கு உதவும் வகையில் தேவாரத் திருத்தலங்கள் என்னும் இந்தக் கட்டுரை தனியாக இருந்தே ஆகவேண்டும். --Sengai Podhuvan (பேச்சு) 15:15, 14 மார்ச் 2013 (UTC)

  • இணைப்புக் குறியை நீக்கிய பார்வதிசீர் அவர்களுக்கு நன்றி. --Sengai Podhuvan (பேச்சு) 16:59, 14 மார்ச் 2013 (UTC)

உள்ளடக்கத்தில் வேறு தளங்களுக்கான இணைப்பு

தொகு

கட்டுரையின் உள்ளடக்கத்தில் உள்ள இணைப்புகள் பலவும், வேறு தளத்திற்கு செல்கின்றன. தக்க கட்டுரை விக்கிப்பீடியாவில் இயற்றப்பெற்றுள்ளன என்பதால், விக்கிப்பீடியாவிற்குள்ளேயே இணைப்புகள் தரலாம். இல்லாத கட்டுரையை சிவப்பிணைப்பாக்கினால் அடியவர்கள் எவரேனும் புதிய கட்டுரையை இயற்றுதல் எளிதாகும். நன்றி. - ஜெகதீஸ்வரன்

துப்புரவு குறியிட்ட ஆசிரியரின் கருத்துப்படி நடை மாற்றப்பட்டுக் குறி நீக்கப்பட்டுள்ளது. --Sengai Podhuvan (பேச்சு) 19:12, 8 சூன் 2013 (UTC)Reply

நன்றி ஐயா --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 02:46, 20 சூன் 2013 (UTC)Reply

வேறு தளங்களுக்கான உள் இணைப்புகள் நீக்க வேண்டுகோள்

தொகு

வேறு தளங்களுக்கான உள் இணைப்புகள் கட்டுரையில் உள்ளது. தற்போது மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள் கட்டுரை முழுமையாக எழுதப்பட்டு விட்டமையால் இந்த தளங்களின் இணைப்புகளை நீக்கி விக்கியில் உள்ள கட்டுரைகளையே இணைக்க வேண்டுகிறேன். நன்றி.--சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 12:22, 12 செப்டம்பர் 2013 (UTC)

இணைப்பு

தொகு

இணைப்பு பொருந்தாது

காரணம்
தேவாரத் திருத்தலங்கள் மாவட்ட வாரியான தேவாரம் பாடல் பெற்ற சிவாலயங்கள்
ஆரூர் அமர்ந்த அம்மானே. (அப்பர் தேவாரம் 4.004.1) திருவாரூர் என்பது இக்காலப் பெயர்
கட்டுரையில் திரு அடைமொழி இல்லாத ஊர்ப்பெயர் கட்டுரையில் இறைவனுக்கு உரிய திரு அடைமொழி ஊருடன் சேர்க்கப்பட்டுள்ளது
அகர வரிசையில் அனைத்தையும் ஒருசேரப் பார்க்கலாம் மாவட்ட அரசியல் பாகுபாடு மாற்றத்துக்கு உரியது

தேவாரப் பதிபுகளில்
காவிரித் தென்கரை
காவிரி வடகரை
பாண்டி மண்டலம்
கொங்கு மண்டலம்
தொண்டைமண்டலம் முதலான பாகுபாடுகள் இருந்தன. அவை அன்றைய அரசியல் பாகுபாடு

கட்டுரை 2006 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது கட்டுரை 2013 ஆம் தொடங்கப்பட்டது
வரலாற்றுக் கோணத்தில் உள்ளது வழிபாட்டுக் கோணத்தில் உள்ளது

எண்ணிப் பார்ப்பது கடமை. --Sengai Podhuvan (பேச்சு) 08:07, 13 செப்டம்பர் 2013 (UTC)

  • {{துப்புரவு}} இந்தக் குறி இக்கட்டுரையில் இடப்பட்டுள்ளது. ஆய்க --Sengai Podhuvan (பேச்சு) 08:19, 13 செப்டம்பர் 2013 (UTC)
நீங்கள் தவறாக பொருள் கொள்ள காரணமான என்னை மன்னிக்கவும், இக்கட்டுரையின் உள் இணைப்புகளான http://www.thevaaram.org/, http://www.shivatemples.com/ என்ற வேறுதளங்களுக்கான இணைப்புகள் உள்ளன. பொதுவாக பிற தள இணைப்புகளை வெளி இணைப்புகள் பகுதியில் மட்டுமே இணைக்கும் வழக்கம் உள்ளது. அவற்றை நீக்க விக்கிப்பீடியாவில் எழுதப்பட்டிருக்கும் சிவாலயங்கள் குறித்தான கட்டுரையை இணைக்கவே கோரினேன். இக்கட்டுரை அழித்து வேறு கட்டுரைக்கு இணைப்பு கொடுக்க கோரவில்லை. புரிதலுக்கு நன்றி --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 09:00, 13 செப்டம்பர் 2013 (UTC)
இக்கட்டுரையின் உள்பகுதியிலிருந்து பிற இணையதளங்களுக்கு நேரடியாகச் செல்லும் வழியில் இணைப்புகள் செய்யப்பட்டிருந்தது எப்படி இதுநாள் வரை கவனிக்கப்படாமலிருந்தது என்று தெரியவில்லை. அனைத்து இணைப்புகளும் நீக்கப்பட்டன. சுட்டிக்காட்டிய சகோதரன் ஜெகதீஸ்வரனுக்கு நன்றி.--தேனி. மு. சுப்பிரமணி./உரையாடுக. 15:21, 13 செப்டம்பர் 2013 (UTC)

வேண்டுகோள்

தொகு

குறுக்கீடுகள்

  1. அடிக்குறிப்பில் அடிக்காட்டி செயலிழந்துள்ளது. செயல்பட வைக்குமாறு வேண்டுகிறேன்.
  2. [இ] எழுத்தின் கீழ் தனியே அடிக்காட்டி ஒன்று வருகிறது. பிழைகாட்டியாக வருகிறது. அதனை நீக்க வேண்டுகிறேன்

அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 11:00, 13 செப்டம்பர் 2013 (UTC)

காவிரி வடகரை, தென்கரைத்தலங்கள்

தொகு

வணக்கம். விக்கி மாரத்தான் 2016 மேற்கொள்ளப்பட்ட இன்று இக்கட்டுரையில் காவிரி வடகரை மற்றும் தென்கரைத் தலங்கள் தொடர்பாக முடிந்தவரை இணைப்புகள் தரப்பட்டன. பிற மாவட்டங்கள் தொடர்பான பிற இணைப்புகள் பின்னர் இணைக்கப்பட்டு பதிவு மேம்படுத்தப்படும்.--பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 12:44, 31 சூலை 2016 (UTC)Reply

அகர வரிசை

தொகு

அகர வரிசைப்படி உள்ள பட்டியலில் விடுபட்ட கோயில்களுக்கான இணைப்புகள் அந்தந்த கோயிலுடன் இணைக்கப்படுகிறது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 07:40, 28 மார்ச் 2019 (UTC)

கண்டியூர், திருக்கண்டியூர்

தொகு

க வரிசையில் கண்டியூர் அப்பர் பாடல் பெற்றதாகவும், கண்டியூர் வீரட்டம் சம்பந்தர் பாடல் பெற்றதாகவும் தனித்தனியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. கண்டியூர் என்பதும் கண்டியூர் வீரட்டம் என்பதும் இருவராலும் பாடப் பெற்ற ஒரே கோயிலாகும். (பு.மா.ஜெயசெந்தில்நாதன், திருமுறைத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009, ப.932) ஆதலால் இரு பதிவிற்கும் திருக்கண்டியூர் பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் இணைப்பு தரப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 10:37, 28 மார்ச் 2019 (UTC)

திருக்கேதீச்சரம்

தொகு

கே பகுப்பில் உள்ள மூன்று கோயில்களில் 2ஆவது மற்றும் மூன்றாவது கோயில் தனித்தனியாக கேதீச்சரம் ச, ஈழநாட்டில் உள்ள ஊர் கேதீச்சரம் சு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இவ்விரு தலங்களும் ஈழநாட்டில் உள்ள ஒன்றே. அந்த ஒரே தலம் சம்பந்தராலும், சுந்தரராலும் பாடப்பெற்றதாகும். பட்டியலில் தனித்தனியாக சந்தரர், சம்பந்தர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆதலால் தனித்தனியாக திருக்கேதீச்சரம் என்ற இணைப்பு தரப்பட்டது. --பா.ஜம்புலிங்கம் (பேச்சு) 05:41, 29 மார்ச் 2019 (UTC)

Return to "தேவாரத் திருத்தலங்கள்" page.