பேச்சு:நாடார்

Latest comment: 10 ஆண்டுகளுக்கு முன் by தென்காசி சுப்பிரமணியன் in topic விசமிகள் தொந்தரவு

இந்தக் கட்டுரையில் சமுதாயத்தினர் நிலை எனும் உட் தலைப்பில் கீழ்காணும் ஆதாரமற்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

  • மதுரையை ஆண்ட பாண்டியர்கள், இவர்களுள் ஒரு உட்பிரிவினர் எனப் பரவலாக நம்பப்படுகிறது. மகாவம்சத்தில் காணப்படும் குறிப்புகளும் சேர அரசில் பணிபுரிந்தவர்களின் பல பெயர்களும் நாடார்கள் போர்வீரர்கள் என்பதை உறுதி செய்கின்றன.

சமுதாய வரலாற்றுக் கதை எனும் உட் தலைப்பில் கீழ்காணும் ஆதாரமற்ற செய்தி இடம் பெற்றுள்ளது.

  • தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.

பொதுவாக நம்பப்படுகிறது, சொல்லப்படுகிறது என்று பயன்படுத்தும் சொற்கள் நம்பிக்கையற்ற வெளிப்பாடுகளே. இது போன்ற துணைத் தலைப்புகளுக்கு ஆதாரப்பூர்வமான செய்தி இருந்தால் வெளியிடலாம். அல்லது இது போன்ற செய்திகளைத் தவிர்த்துவிட்டு சிறப்பு மிக்க செய்திகளை பதிவேற்றம் செய்வது நல்லது. --Theni.M.Subramani 16:40, 15 மார்ச் 2010 (UTC)


மதுரையை ஆண்ட பாண்டியர்கள் நாடார்களே.

இக்கட்டுரையில் கடந்த சில நாட்களாக விசமிகள் தொந்தரவு அதிகமாக இருக்கிறது. புகு பதிகை செய்யாத விசமிகள் கட்டுரையின்பெரும்பகுதியை அழித்திருந்தனர். மேலும் பயனர்:Arunprakash.pts செய்த தவறான திருத்தம் மீளமைக்கப்பட்டபின்னர். புகுபதிகை செய்யாத பயனர் அதே திருத்தங்களை மேற்கொண்டுள்ளார். மேலும் இன்று கட்டுரையின் பெரும் பகுதியும் புகுபதிகை செய்யாத பயனரால் அழிக்கப்பட்டது. நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 08:58, 15 சூன் 2014 (UTC)Reply

பாலா அவர்களே! கட்டுரை நன்றாக உள்ளது--யாழ்ஸ்ரீ (பேச்சு) 09:05, 15 சூன் 2014 (UTC)Reply

முரண்பாடுகள்

கட்டுரையில் முரண்பாடுகள் என்ற தலைப்பிலான கீழ்க்கண்ட கருத்துப் பதிவுகள் காரணம் குறிப்பிடப்படாமல் நீக்கப்பட்டுள்ளன.

தோள்சீலை அடக்குமுறைக்கு ஆளாகாத தேவகோட்டைப் பகுதி நாடார் சமூகத்தினர் மற்ற ஆதிக்க சமூகத்தினருடன் இணைந்து தலித் இனத்துப் பெண்கள் தோளாடை அணிவதற்கு அனுமதி மறுத்து அடக்குமுறை செய்தனர்.[1]

காரணம் குறிப்பிட்டால் நன்று. --Kuzhali.india (பேச்சு) 14:00, 11 ஆகத்து 2014 (UTC)Reply

ஏதோ ஒரு குறிப்பிட்ட பகுதியில் நாடார் இனத்தவர் கலாட்டா செய்ததை பொதுவான நாடார் கட்டுரையில் தரலாமா? ஒட்டுமொத்த நாடார் சமூகமும் அடக்குமுறை செய்தார்கள் என்றல்லவா நினைக்கத் தோன்றும். தமிழர்கள் சிலர் எங்கோ கலாட்டா செய்தால் அதைத் தமிழர் என்ற பொதுக் கட்டுரையில் தருவீர்களா? அவ்வாறு தான் இதுவும். இதனாலேயே இப்பகுதியை நீக்கியிருந்தேன். இவ்வாறான கருத்து தோள்சீலைப் போராட்டம் போன்ற ஒரு செய்திக் கட்டுரையில் தரலாம். மேலும் மூலச் செய்தியில் "அடக்குமுறை" போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் பயன்படுத்தியிருந்தாலும், என்னவிதமான அடக்குமுறை செய்தார்கள் என ஆராய்ந்து அதனை விக்கியில் எழுத வேண்டும். கொலை செய்தார்களா?, அடித்தார்களா, அல்லது வேறு என்ன செய்தார்கள்? அறிய முடியாவிட்டால் இவ்வாறான பொதுவான குறிப்புகளைத் தவிர்ப்பது நல்லது. ஆதிக்க சமூகம் என யாரைக் குறிப்பிடுகிறீர்கள்?--Kanags \உரையாடுக 22:33, 11 ஆகத்து 2014 (UTC)Reply

தங்கள் கண்ணோட்டம் பாராட்டுக்குரியது. எவ்வாறு பல இடங்களில் பரவியிருக்கும் ஒரு இனத்தார் ஓரிடத்தில் செய்த ஆதிக்கத்தை மட்டும் ஒரு இனத்தின் பொதுவான கருத்தின் கீழ் கொணரக்கூடாதோ, அதேபோல் அவர்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் ஒரு இடத்தில் அடக்கப்பட்டதும் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த பிரச்சனை. அதுவும் அவ்வினத் தலைப்பின் கீழ் கொணரப்படக்கூடாதல்லவா? தோள்சீலை அணிய அனுமதி மறுப்பு என்பதே அடக்குமுறையல்லவா? தோள்சீலைப் போராட்டத் தகவல்கள் படியும் குறிப்பிட்ட ஒரு சில பிரிவினரே அதிகம் பாதிப்புக்குள்ளானவர்கள். அப்படியிருக்க திருவாங்கூர் போராட்டத்தை குறிப்பிட்ட சாதியில் மட்டும் பதிவது எவ்வாறு? இத்தகைய முரண்பாடான கருத்துக்கள் பல கொண்ட கட்டுரைகளை தாங்கள் முன்னரே எனது மாற்றத்தைத் திருத்தி சரியான உதாரணம் தந்தார்போன்று பரந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பது வளப்படுத்தும் என்பது என் கருத்து. மனிதர்களை இணைக்கும் இணையம் அவர்களைப் பிரிக்கும் கருவியாக ஆகி விடக்கூடாது.--Kuzhali.india (பேச்சு) 06:38, 14 ஆகத்து 2014 (UTC)Reply

மேலும் ஒரு சிறு சந்தேகம், கிறித்துவ புரொட்டஸ்டன்ட் சபைகள் இந்த சமூகத்தின் ஒரு பிரிவினருக்காக மட்டுமே போராடினரா? அதனால்தான் இந்தத் தலைப்பிற்குக் கீழே குறிப்பிடப்படுகின்றனரா? மேலும் ஒரு ஐயம் இந்து மதத்தின் சாதீயப் பிரிவுகள் மதம்மாறியோருக்கும் உண்டா? கிறித்துவ மதம் சாதீயக் கொள்கையை முற்றாக புறக்கணிக்கும் ஒன்று அல்லவா? அப்படியெனில் மதம் மாறியோரையும் குறிப்பிட்ட சாதியின் கீழ் குறிப்பிடுவது கிறித்துவத்துக்கு எதிரானதா? சரியானது தானா? தெளிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். நன்றி..--Kuzhali.india

___


//இந்து மதத்தின் சாதீயப் பிரிவுகள் மதம்மாறியோருக்கும் உண்டா? //

நாடார் என்பது இந்து மதச் சாதிப்பிரிவு அல்ல. இந்து மதச் சாதிப்பிரிவுகள் நான்கு. அவை பிராமணர், சத்ரியர், வைசியர், சூத்திரர். நாடார் என்னும் சாதிப்பிரிவு மதம் மாறிய கிருத்துவர்களுக்கு வைக்கப்படுகிறது. தமிழ்நாடு சாதிகள் பட்டியல் கிருத்துவ நாடாரையும் சேர்த்து அனைத்து நாடார்களையும் ஒரே எண்ணோடே குறிக்கிறது. முக்குலத்தோருக்கும் இது பொருந்தும்.

ஆனால் இசுலாமியர்களில் மதம் மாறிய மருதம் நெய்தலைச் சேர்ந்த தமிழ்-அரபு கலப்பான மக்கள் தங்களை வணிகம் பொருட்டு குதிரை வாணிகர் என்றால் இராவுத்தர் என்றும் கடல்வணிகர் என்றால் மரைக்காயர் என்றும் 19ஆம் நூற்றாண்டு வரைச் சொன்னார்கள். இப்போது அவர்கள் அனைத்துத் தொழிலும் செய்கிறார்கள்.

//கிறித்துவ மதம் சாதீயக் கொள்கையை முற்றாக புறக்கணிக்கும் ஒன்று அல்லவா? அப்படியெனில் மதம் மாறியோரையும் குறிப்பிட்ட சாதியின் கீழ் குறிப்பிடுவது கிறித்துவத்துக்கு எதிரானதா? சரியானது தானா? தெளிவிக்கும் படி கேட்டுக்கொள்கிறேன்.//

இதை நீங்கள் கிருத்துவம் பேச்சுப்பக்கத்தில் ஒரு தகவல் கேட்பது போல் கேட்கலாம். பதில் தெரிந்து அளிக்க விருப்பமிருந்தால் தெரிந்தவர்கள் பதிலளிப்பார்கள்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:45, 14 ஆகத்து 2014 (UTC)Reply

//அதேபோல் அவர்களில் குறிப்பிட்ட ஒரு பிரிவினர் ஒரு இடத்தில் அடக்கப்பட்டதும் ஒரு குறிப்பிட்ட பகுதி சார்ந்த பிரச்சனை.//

நாடாரில் எல்லாப் பிரிவுகளுக்குமே சேலை அணிய உரிமை மறுக்கப்பட்டது என்றே படித்ததாக நினைவு. பிற்பாடு கிருத்துவ நாடார் போராடி சில சலுகைகளை அதில் பெற்றார்கள் என நினைக்கிறேன். தாலி கட்டிக்கொள்வதும் அக்குலப்பெண்டிருக்கு மறுக்கப்பட்டது. மீறிய ஒரு பெண்ணின் தாலியை நம்பூதிரிகள் அறுத்து எறிந்ததற்கு சாட்சியாய் கன்னியாகுமரி மாவட்டத்தில் 'தாலி அறுத்தான் சந்தை ' எனும் ஊர் உள்ளதாகச் சொல்வர்.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 11:58, 14 ஆகத்து 2014 (UTC)Reply

ஜூலை இரண்டாம் தியதிக்குப் பின்னர் இக்கட்டுரையில் பெரிய அளவு விரும்பத்த்தகாத மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. மேற்கோள் குறிப்பிட்டு எழுதப்பட்ட பகுதிகள் காரணமின்றி அழிக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே இக்கட்டுரையில் விசமிகளின் தொந்தரவு அதிகமாக இருந்ததாலேயே இக்கட்டுரை புகுபதிகை செய்தவர் மட்டும் தொகுக்கும்படி காக்கப்பட்டது. புதிதாக சேர்க்கப்பட்ட கருத்துகள் பயனரின் சொந்தக்கருத்துகளாகவே உள்ளன.--ஆர்.பாலா (பேச்சு) 03:10, 18 ஆகத்து 2014 (UTC)Reply

விசமிகள் தொந்தரவு

சூன் 15 ஆம் தியதிக்குப் பின்னர் இக்கட்டுரையில் விசமிகளின் கைங்கர்யம் அதிக அளவு காணப்படுகிறது. கட்டுரையின் அமைப்பைக் குலைத்தும் பெருமளவில் சொந்தக் கருத்துகளை ஆதாரமின்றிப் புகுத்தியும் வந்துள்ளனர். அதன் பின்னர் இக்கட்டுரை கனக்ஸ்ஸால் புகுபதிகை செய்தவர்கள் மட்டும் தொகுக்குமாறு காக்கப்பட்டது. இரண்டு பயனர்கள் கட்டுரையின் பெருமளவு பகுதிகளையும் ஆதாரங்களாக இணைக்கப்பட்ட மேற்கோள்களையும் நீக்கிவிட்டனர். கனக்ஸ், குழலி, தமிழ்க்குரிசில் மற்றும் செல்வசிவகுருநாதன் ஆகியோரால் விசமிகளின் நீக்கம் மீளமைக்கப்பட்டது. தற்போதைய கட்டுரை தன் சுயபெருமை பேசும் தொனியில் உள்ளது. சூன் 15 ஆம் தியதிக்கு முன்னர் இருந்த நிலையிலே கட்டுரையைக் காக்கலாம் என நினைக்கிறேன். மீளமைத்த அனைவருக்கும் நிருவாகிகள் மட்டுமே தொகுக்குமாறு கட்டுரையைக் காத்த செல்வசிவகுருநாதனுக்கும் நன்றி.--ஆர்.பாலா (பேச்சு) 03:55, 19 ஆகத்து 2014 (UTC)Reply

ஓரளவு விவரமறிந்த நிருவாகி எவரேனும் கட்டுரையை ஒருமுறை படித்து, உரியன செய்ய வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 04:08, 19 ஆகத்து 2014 (UTC)Reply

கட்டுரையை நான் முன்பிருந்தே கவனித்து வரவில்லை. அதனால் எப்படியிருந்து தற்போதைய நிலைக்கு வந்திருக்கிறது என்று தெரியவில்லை. தற்போதைய நிலையிலும் கட்டுரையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. கட்டுரை எழுதப்பட்டுள்ள நடையும், தொனியும் ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரைக்கு ஏற்ற வகையில் அமையவில்லை. கட்டுரைகளுக்குத் தகவல்களைப் பெறும் மூலங்களில் உள்ள வசனங்களை அப்படியே பயன்படுத்தியதால் இந்த நிலை ஏற்பட்டிருக்கலாம். இக்கட்டுரையின் பெரும்பாலான தகவல்கள் குறித்த சமுதாயத்தைப் பெருமைப்படுத்துவதற்காக எழுதப்பட்ட மூலங்களில் இருந்து பெறப்பட்டிருப்பது வெளிப்படை. இதில் எவ்வித தவறும் கிடையாது. ஆனால், அத் தகவல்களை ஒரு கலைக் களஞ்சியக் கட்டுரையில் பயன்படுத்தும்போது கவனமாகப் பயன்படுத்தவேண்டும் அதேவேளை அச்சமுதாயத்துக்குப் பாதகமான விடயங்களும் காழ்ப்புணர்வுடன் கூடிய தொனியிலேயே உள்ளன. இப்படியான தலைப்புக்களில் கலைக்களஞ்சியக் கட்டுரை எழுதும்போது விருப்புவெறுப்பற்ற நிலையில் இருந்து எழுத வேண்டியது அவசியம். உலகின் பல சமூகங்கள் தமது தோற்றம் குறித்து இயல்புக்கு மாறான கதைகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றுக்கெல்லாம் நிச்சயம் எவ்வித சான்றுகளும் இருக்காது. ஆனாலும் இவற்றை ஒரு மானிடவியல் பார்வையுடன் கட்டுரையில் பயன்படுத்த வேண்டும்.

//தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் இடையே பிறந்த ஏழு குழந்தைகளை பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களே நாடார்கள் என்றும் சொல்லப்படுகிறது. `பத்திரகாளியின் மைந்தர்கள்' என்றே இவர்கள் அழைக்கப்படுகிறார்கள்.//

என்று எழுதுவதற்குப் பதிலாக,

"நாடார்களின் தோற்றம் குறித்த தொன்மக்கதை ஒன்று உண்டு. இதன்படி, தேவகன்னிகளுக்கும் சத்திரிய மகரிஷிக்கும் பிறந்த ஏழு குழந்தைகளைப் பத்திரகாளி அம்மன் எடுத்து வளர்த்ததாகவும் அவர்களிலிருந்தே நாடார் சமூகம் தோன்றியதாகவும் சொல்லப்படுகிறது. இதன் அடிப்படையில் நாடார்களைப் பத்திரகாளியின் மைந்தர்கள் என்று அழைப்பது உண்டு."

என்று எழுதலாம்.

அதேவேளை, கால்ட்வெல்லின் நாடார் குறித்த கருத்துக்களையும் கவனமாகவே பயன்படுத்த வேண்டும். ஒரு தனிமனிதனுக்கோ, ஒரு சமுதாயத்துக்கோ மன உழைச்சலை ஏற்படுத்தக்கூடிய மேற்கோள்களை மிகக் கவனமாகவே விக்கிப்பீடியாவில் பயன்படுத்த வேண்டும். உண்மையில் கால்ட்வெல்லின் நாடார்கள் மீதான குற்றச் சாட்டுக்கள் பல, அவரது அவர் ஒரு கிறித்தவப் பரப்புரையாளர் என்ற பார்வையுடன் முன்வைக்கப்பட்டவை என்றும், நாடார்கள் கிறித்தவத்தைச் சரியாகப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டின் பாற்பட்டவை என்றும் கருத்துக்கள் உள்ளன. அதேவேளை கிறித்தவத்தினால் நாடார்கள் முன்னேறி உயர்நிலையை அடைந்துள்ளார்கள் என்றும் கால்டுவெல் கூறியுள்ளார்.

எனவே ஏட்டிக்குப் போட்டியாகக் கட்டுரைகளில் தொகுப்புக்கள் செய்வதை விடுத்துக் கட்டுரைகளைக் கலைக்களஞ்சியத்துக்கு ஏற்ற வகையில் உருவாக்குவதற்குப் பயனர்கள் உதவ வேண்டும். ---மயூரநாதன் (பேச்சு) 19:37, 24 ஆகத்து 2014 (UTC)Reply

பயனர்:Mayooranathan கால்டுவெல்லின் இந்த சார்பு நிலைப் போக்கை யாரேனும் நூல்களில் எழுதி உள்ளார்களா? இருந்தால் அறியத்தரவும். கால்டுவெல்லின் சார்பு நிலைக் கருத்துகள் குறித்த விமர்சனங்கள் பல விதங்களில் தேவைப்படும் ஒன்று. நூல் ஏதேனும் கிடைத்தால் கால்டுவெல் பற்றிய பத்தியை ஒரே வரியாக்கி கால்டுவெல் நாடார்கள் எதிராக சார்பு நிலைக் கருத்துகளை முன்வைத்தார் என்பது போன்று மாற்றிவிடலாம். இது சரி வருமா?--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 23:24, 24 ஆகத்து 2014 (UTC)Reply

பொதுவாகவே நாடார் எனும் சொல் நாடாள்வார் என்பதிலிருந்து உருவானது சாணார் என்பது சான்றோர் என்பதன் திரிபு போன்ற வாதங்களெல்லாம் அ.கணேசன் மற்றும் ராமச்சந்திரன் ஆகியோர் சமீப காலங்களில் கட்டுரைகளில் எழுதி வருகின்றனர். இவர்கள் தங்களது சாதியை உயர்வாக காட்டும் பொருட்டு இவ்வாறான கட்டுரைகளை எழுதுகின்றனர் என்கிற கருத்தும் சுட்டிக் காட்டப்பட்டு வருகிறது. இவர்கள் முதலில் தன் சாதியை உயர்த்தும் பொருட்டு தன் மனதிற்கு உவப்பான ஒரு கருத்தைச் சொல்கிறார்கள். பின்னர் ஊகங்களின் அடிப்படையில் அதை வளர்த்தெடுக்கிறார்கள். சிலகாலங்களுக்குப் பின்னர் அவர்களின் ஊகத்தை முதலில் சொன்ன கருத்து நிருபிக்கிறது என்கிறார்கள். தோள்சீலைக் கலகம் தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் என்ற புத்தகத்தில் இவாறான முரண்பாட்டைக் காணமுடியும். வின்செண்ட் என்பவர் கால்டுவெல் நாடார்களுக்கு உரிமைகளை வழங்கினார் என எழுதியுள்ளார். கால்டுவெல் நாடார் இனத்தவரைப் பற்றி தவறாக எழுதினார் என்பதற்காகவே அ.கணேசன் போன்றோர் அவரை நிராகரிக்கின்றனர். இது தொடர்பான கட்டுரை ஒன்று பல வருடங்களுக்கு முன்னர் திண்ணை இணைய இதழில் படித்ததாக நியாபகம். கடந்த 10 ஆண்டுகளில் நாடார் சமுதாய மக்கள் உயர்வானவர்கள் ஆண்ட பரம்பரை போன்ற வாதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்ற கருத்தும் உண்டு. என இரு சாரரின் கருத்துகளையும் அவற்றின் மறுப்புகளையும் கட்டுரையில் இணைத்தல் நல்லது.--ஆர்.பாலா (பேச்சு) 10:46, 25 ஆகத்து 2014 (UTC)Reply

எனில் அதையும் பயனர்:Balurbala நீங்களே செய்து விடுவது நலம் பயக்கும். ஆனால் ஒரு ஆய்வாளர் ஒரு சாராரை தாக்கி எழுதுகையில் அதன் அனைத்து கருத்துகளையும் கொடுக்காமல் சுருக்கிக் கொடுப்பது நல்லது.--தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 12:10, 25 ஆகத்து 2014 (UTC)Reply

கட்டுரையின் அமைப்பு மேலும் சீர் குலைக்கப்பட்டிருந்தது. அதிக அளவு விசமத் தாக்குதல்களுக்கு உள்ளாகி சுய புராணம் பாடும் தொனியில் கட்டுரையின் வடிவம் மாற்றி அமைக்கப்பட்டுகிறது. நாடார் எனும் சொல் நாடாள்வர் எனும் பொருளுடைத்து- என்பதற்கு தவறான ஆதாரம் கொடுக்கப்பட்டிருந்தது. கால்டுவெல் சொன்ன கருத்துகள் ஆலயப்பிரவேசம் போன்ற ஆதாரம் இணைக்கப்பட்டிருந்த பகுதிகள் நீக்கப்பட்டிருந்தது. இப்போது கலைக்களஞ்சிய நடையில் ஓரளவு சரி செய்துள்ளேன். நிருவாகிகள் கட்டுரையைப் பூட்டிக் காக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.--இரா.பாலா (பேச்சு) 03:54, 7 செப்டம்பர் 2014 (UTC)

1947 வரை இந்தியாவே ஆங்கிலேயரிடம் அடிமையாக இருந்தது.ஆனால் சில வக்கிர புத்தி உள்ளவர்கள் அடிமை முறை ஒளிப்பு என்று சொல்கிறார்கள்

படாத பாடு...

இந்தக் கட்டுரை, பலவித தொகுத்தற் போர்களால் படாதபாடு படுகிறது! சீர்ப்படுத்தி, கட்டுக்குள் கொண்டுவர எனக்கு நேரமில்லை; மீண்டும் பூட்டுவதைவிட, இப்போதைக்கு வழியில்லை! --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 08:00, 8 செப்டம்பர் 2014 (UTC)

  விருப்பம். செயற்படுத்திவிட்டேன் --நந்தகுமார் (பேச்சு) 08:13, 8 செப்டம்பர் 2014 (UTC)

ஆதாரம்

  1. நியூ செஞ்சுரியின் உங்கள் நூலகம்; ஜூலை 2014; இந்தியப் பின்னணியில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தமிழகம்; வரலாற்றியல் நோக்கு; கி.ரா.சங்கரன்; கட்டுரை; பக்கம்: 24
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நாடார்&oldid=1720376" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "நாடார்" page.