பேச்சு:நேர்பாலீர்ப்பு பெண்

தன்பால் சேர்க்கையில் இதுவும் ஒரு பிரிவுதானே!. அதனுடன் இணைத்துவிடலாமே!.

மேலும் லெஸ்பியன் என்ற வார்த்தைக்குப்பதில் வேறொரு பெயரை தமிழ்ப் பெயரை இடலாம் என்பது என் கருத்து.

பெண் பெண் சேர்க்கை என்பது சரியா!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

இணைக்க வேண்டாம். இத்தலைப்பு தனியாகவே பெரிய அளவில் வளரக்கூடியது ஆனால் இணையான தமிழ்ப் பெய்ர் வைப்பது பற்றி ஆராய வேண்டும். பெண்-பெண் சேர்க்கை என்பது lesbianism என்று பொருள்படும். சற்றே மாற்ற வேண்டும்.--சோடாபாட்டில்உரையாடுக 07:42, 25 சனவரி 2011 (UTC)Reply

பெண்ணியர் உறவு என்று எளிதாக (ஆங்கில ஒலிப்பெயர்ப்பு தலைப்பு அல்லாமல்) தலைப்பிடலாமே. சுருங்கக்கூறின் பெண்ணியர் என்று கூறலாம் --HK Arun 09:06, 25 சனவரி 2011 (UTC)Reply

பெண் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் ்க்கே என்பதற்கு ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்றும் தற்போது தலைப்பிடலாம். அருண் கூறுவதுபோல ஓர்சொல்லாக்கம் சிறந்தது; இருப்பினும் பொதுக்கருத்தாக ஓர் சொல் உருவாகும் வரை காத்திருப்போம்.--மணியன் 10:23, 25 சனவரி 2011 (UTC)Reply

தேனி.எம்.சுப்பிரமணி, நாங்கள் ஆண்கள் மற்றும் பெண்கள் என இருபாலாராக மட்டுமே வரையரை செய்கிறோம். ஆனால் மேற்கத்தைய நாடுகள், மேற்காசிய நாடுகள் நான்குபாலராக வரையரை செய்துள்ளனர்.

  • men
  • women
  • Lesbian
  • Gay

நீங்கள் கூறும் வகையில் பார்த்தால், பெண்கள் எனும் ஒரு பாலருக்கு இடையிலேயான உறவு நிலையாக மட்டுமே கொள்ள முடியும். --HK Arun 10:26, 25 சனவரி 2011 (UTC)Reply

பெண் ஓரினச்சேர்க்கையாளர், ஆண் ஓரினச்சேர்க்கையாளர் என்பது சரியாகவே தோன்றுகிறது. தனித்து வளரும் வாய்ப்பினை தவிர்க்க விரும்பவில்லை. பங்கெடுக்க இத்தனை உள்ளங்கள் இருக்கும் போது என்ன கவலை@!.

- சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு

தமிழ்நாட்டில் நங்கை என்று பயன்படுத்துகிறார்கள். எவ்வளவு பரவலாகப் பயன்படுத்துகிறார்கள் என்று தெரியவில்லை. பார்க்க --Natkeeran 20:25, 6 நவம்பர் 2011 (UTC)Reply
ஓரினம் குழுவே தமிழ்நாட்டில் முதன் முதலாக வெளிப்படையாக தங்களை மாற்றுப் பாலீர்ப்பினர் என்று வெளிக்காட்டிக் கொள்வோர் என நினைக்கிறேன். நானறிந்து ஓரினம் குழு கடந்த சில வருடங்களாகத்தான் இப்பெயர்களை பயன்படுத்துகிறது. நங்கை/நம்பி/திருனர் ஆகிய பெயர்கள் இன்னும் பொது மக்களால் பரவலாகப் பயன்படுத்தப்படவில்லை (திருநங்கை பொதுப் பயன்பாட்டில் வந்து விட்டது). --சோடாபாட்டில்உரையாடுக 05:10, 7 நவம்பர் 2011 (UTC)Reply


தலைப்பு மாற்ற கோரிக்கை

தொகு

நங்கை எனும் சொல் தமிழில் பின்வரும் பொருற்களைக் கொண்டிருக்கிறது,

1. பெண்ணிற் சிறந்தவள் 2. மகன் மனைவி; மருமகள் 3. அண்ணன் மனைவி பயனர்:Technicalganesh

நங்கை எனும் சொல் பெண்ணைக் குறிப்பதாகவே தோன்றுகிறது. திரு (ஆண்) + நங்கை (பெண்) = திருநங்கை. ஆணும் பெண்ணும் சேர்ந்த இயல்பு அல்லது உடலமைப்புடையவர் எனும் பொருளில் வந்தது. தமிழகத்தில் நங்கை எனும் சொல் பெண்களுக்கு வைக்கப்படுகிறது. அது போலவே நம்பி எனும் சொல்லும். எனவே இது ஒருபாலினரைக் குறிக்கும் சொல் என்பது பரிசீலனைக்குரியது.--இரா.பாலா (பேச்சு) 16:56, 19 சனவரி 2015 (UTC)Reply
பெண்விழையாள் என ஆன்டன் முகநூல் குழுமத்தில் விக்சனரியை சுட்டிக்காட்டியுள்ளார். காண்க https://ta.wiktionary.org/s/12fn . நங்கை என்ற சொல்லானது இலக்கியத்தில் பல்வேறு இடங்களில் பெண்ணைக் குறிப்பதாக உள்ளமையாலும், பரவலான பயன்பாட்டில் நங்கை என்பது பெண்ணைக் குறிப்பதாக உள்ளமையாலும். தலைப்பு மாற்றம் குறித்து ஆலோசிக்க வேண்டுகிறேன். --சகோதரன் ஜெகதீஸ்வரன் (பேச்சு) 17:24, 19 சனவரி 2015 (UTC)Reply

நற்றமிழ்ச் சொல் மிகப் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. நங்கை என்றால் பெண் என்றே பொருள். தமிழில் பொதுவாக இளம் பெண்களைக் குறிக்கப் பயன்படுகிறது. அவ்வாறே இதற்கு நெருங்கிய ஓசை கொண்ட வேற்று மொழிச் சொற்களும் இளம் பெண்களையே குறிக்கின்றன. சிங்களத்தில் நகா (නගා) என்ற சொல்லும் சுண்டா மொழியில் நெங் (neng) என்ற சொல்லும் இளம் பெண்களை விளிக்கும் சொற்களாவே இருக்கின்றன. நங்கை என்றால் பெண் ஓரினச் சேர்க்கையாளர் என்பதற்கு ஆதாரமில்லை.--பாஹிம் (பேச்சு) 17:55, 19 சனவரி 2015 (UTC)Reply

  விருப்பம் ஓரினம் என்ற ஓர் வலைத்தளத்தில் வந்துள்ள கலைச்சொல்லாக்கலை அடிப்படையாகக் கொண்டு தமிழ் விக்கியில் ஆளப்பட்டுள்ளது சரியல்ல. இது குறித்த அரசு சார் துறைகளில் பயன்படுத்தப்படும் கலைச்சொற்களுக்கு முன்னுரிமை தரலாம். அதுவரை பெண்விழையாள் போன்ற காரணப்பெயர்களை placeholderஆகப் பயன்படுத்தலாம். --மணியன் (பேச்சு) 00:24, 20 சனவரி 2015 (UTC)Reply

விழை-விரும்பு, விழையாள்-விரும்பாதவள் என்ற பொருள்தருகிறதே. இது முரண்பாடாக இருக்காதா? (தொழு-வணங்கு, தொழாள்-வணங்காதவள்; குறள்:தெய்வம் தொழாள் கொழுநன் தொழுதெழுவாள்...)--Booradleyp1 (பேச்சு) 04:34, 20 சனவரி 2015 (UTC)Reply

பெண்விழைபெண்? பெண்சேர்க்கையாளர்? --AntonTalk 05:21, 20 சனவரி 2015 (UTC)Reply
பெண்விழைவாள் ? பெண்விழைத்தி ? --மணியன் (பேச்சு) 06:40, 20 சனவரி 2015 (UTC)Reply

ஆம். விழையாள் என்றால் விரும்பாதவள் என்று பொருள். பெண் தற்பால் விரும்பி என்றோ பெண் விழைவாள் என்றோ இருப்பது நல்லது. ஒரு சொல்லில் வரத்தான் வேண்டுமென்று எந்த விதியும் இல்லை.--பாஹிம் (பேச்சு) 09:55, 20 சனவரி 2015 (UTC)Reply

பெண்விழைவோள் என்பது பொருந்துமா? அல்லது எத்தலைப்புக்கு மாற்றலாம்? --AntonTalk 16:52, 20 சனவரி 2015 (UTC)Reply

ஒரே சொற்றொடராக இருந்தால் பயன்பாட்டிற்கு எளிதாக இருக்குமென நினைக்கிறேன். பாடினி, பாணினி, போன்று "பெண்விழைஞி" -lesbian, "ஆண் விழைஞன்" - gay (இலக்கண மரபுப்படி எந்த 'ந'கரம் விகுதியில் வரலாம் என்றும் தெரியவில்லை) என்று கொள்ளலாமா? இது எனது ஒரு பரிந்துரை மட்டுமே. பொருள் மற்றும் இலக்கண அமைப்பிற்கு சரியாக இருக்குமா என்றும் எனக்கு உறுதியாகச் சொல்ல இயலவில்லை.

மேலே தரப்பட்ட பிற பரிந்துரைகளில் "பெண்விழைவாள்" என்பதைவிட "பெண்விழைவோள்" ஒத்துவரும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 17:20, 20 சனவரி 2015 (UTC)Reply

பெண்விழைஞி பொருள், இலக்கண மரபுப்படி தக்கதாயின் பொருத்தமாயிருக்கும். --AntonTalk 17:41, 20 சனவரி 2015 (UTC)Reply

பிழையாக இருப்பதைவிட குறிப்பிடத்தக்க தலைப்புக்கு நகர்த்தியுள்ளேன். மிகவும் பொருத்தமான சொல் இருப்பின் அதற்கு நகர்த்தலாம். --AntonTalk 18:04, 20 சனவரி 2015 (UTC)Reply

ஒரு சொல் பல சூழமைவுகளில் பல மாதிரி பயன்படுத்தப்படுவது நாம் அறிந்ததே. நங்கை என்ற சொல் நங்கை, நம்பி, ஈரர், திருனர் சமூகம் தொடர்பான உரையாடல்களில் ஓரளவாவது பயன்பாட்டில் இருப்பது. ஆகவே, ஓரினம்.நெட் போன்ற தளங்களில் பயன்படுத்தப்படும் சொற்களுக்கு மாற்றாக நாம் வேறு சொற்களைப் பயன்படுத்த வேண்டும் என்பது அவசியமற்றது மட்டும் அல்லாமல் தவறான அணுகுமுறையும் ஆகும். --Natkeeran (பேச்சு) 14:19, 19 பெப்ரவரி 2015 (UTC)

நங்கை, நம்பி பயன்பாட்டு எடுத்துக்காட்டுக்கள்

தொகு
  • lesbians பெண்களே, ஆகவே நங்கை என்ற சொல்லை அவர்களைக் குறிக்கப் பயன்படுத்துவதில் இலக்கிய நோக்கிலும் தவறு இல்லை. பயன்படுத்தப்படும் சூழமைவைக் கொண்டு நாம் பொருள் அறிந்து கொள்வது எல்லா மொழிகளிலும் உள்ள வழமை தான்.
  • மேற் சுட்டப்பட்டது போன்று பெண்விழைவோள் என்ற சொல் பயன்பாட்டில் இல்லை. எனவே கூடிய பயன்பாட்டில் உள்ள சொல்லை, சூழமைவுக்கு ஏற்ப பயன்படுத்தப் பரிந்துரைக்கிறேன்.
  • மேலும், திருநங்கை, திருநம்பி போன்ற சொற்களிலும் நங்கை, நம்பி என்ற சொற்கள் பிற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது. கலைச்சொல்லாக்கத்தில், பயன்பாட்டில் இருக்கும் நல்ல தமிழ்ச் சொற்களுக்கு முன்னுருமை தருதல் வேண்டும். அவ்வாறு இல்லாமல் உள்ள போது மட்டுமே, அறிஞர்கள் துணையுடன் நாம் உருவாக்கா முடியும்.
  • பெண்விழைவோள் தனியே பாலியல் ஈர்ப்பை மட்டுமே முதன்மைப்படுத்தி அமைகிறது. அவை offensive ஆக அமைய வாய்ப்பு உள்ளன.

--Natkeeran (பேச்சு) 14:28, 19 பெப்ரவரி 2015 (UTC)

நக்கீரன், சில பெண்களுக்கு மங்கை என்று பெயரிடப்பட்டுள்ளது. நம்பி என்ற பெயர் புழக்கத்தில் உள்ளதா என அறியேன். இத்தகையோர் மனம் புண்படும் என்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டுகின்றேன். அண்மைக்காலத்தில் புழக்கத்தில் வந்துள்ள இச்சொற்களுக்கு மாற்றுச் சொற்கள் காண வேண்டியதும் அதனை ஓரினம்.நெட் போன்றோரிடம் எடுத்துச் சொல்ல வேண்டியதும் அவசியமாகின்றது. --மணியன் (பேச்சு) 14:51, 19 பெப்ரவரி 2015 (UTC)

"அண்மைக்காலத்தில் புழக்கத்தில் வந்துள்ள இச்சொற்களுக்கு" என்ற உங்கள் கருத்துச் சரியானதே. இவற்றின் சொல் உருவாக்கம் பற்றிய குறிப்புக்களையும் கூட கட்டுரையில் இடலாம். சிலருக்கும் இச் சொற்களில் இந்தக் குறிப்பிட்ட பயன்பாடு குறித்து தயக்கங்கள் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கதே. எனினும் தமிழ்ச் சூழலில் பாலியச்சிறுபான்மையினர் தொடர்பான சொற் பயன்பாடுகள் மிகவும் இழிவாக நெடுங்காலம் அமைந்தன என்பதை இங்கு குறிப்பிடத்தக்கது. விக்கியில் அரவாணி என்ற சொற் பயன்பாட்டில் இருந்து திருநங்கை என்ற சொற் பயன்பாட்டிற்கு நகர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. மாற்றுத்திறனாளி போன்ற சொற்பயன்பாடுகளுடன் ஒப்பிடலாம். அந்த வகையில் நங்கை, நம்பி ஆகிய சொற் பயன்பாடுகள் நேர்முக நோக்கிலேயே பயன்படுத்தப்படுகின்றன என்று நம்புகிறேன். --Natkeeran (பேச்சு) 15:10, 19 பெப்ரவரி 2015 (UTC)

தமிழில் ஏற்கனவே நங்கை நல்லாள் என்று ஒழுக்கமுள்ள நல்ல பெண்களைக் குறிக்கப் பயன்படும் வழக்கமிருக்கிறது. வீர நங்கை என்றால் வீரமான பெண். நங்கை என்ற சொல்லுக்கு பெண் என்ற பொருளேயன்றி, பெண்களின் மீது பாலியல் நாட்டம் கொண்ட பெண் என்று பொருளில்லை. அத்தகைய பொருளில் பயன்படுத்துவதை நான் எதிர்க்கிறேன். வெறுமனே ஒரு பெண்ணைக் குறிக்க, பொதுவாக ஓர் இளம் பெண்ணைக் குறிக்க நங்கை என்று பயன்படுத்துவது தகும். Lesbian என்று சொன்னாலே பாலியல் நாட்டம் தானே பொருள் படுகிறது? ஆதலின், சாதாரணமாக எப்பெண்ணையும் குறிக்கக்கூடிய சொல்லை ஏனைய பெண்களின் மீது பாலியல் நாட்டங்கொள்ளும் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்துவது அத்தகைய நாட்டமில்லாத பெண்களை உள்ளத்தால் காயப்படுத்தக்கூடிய செயலாகும். மேலும், நங்கை என்ற சொல்லைப் பயன்படுத்துவது ஏற்கனவே புழக்கத்திலுள்ள தமிழ் வழக்கிற்கு மாறானதும், ஏற்கனவே சாதாரணமாக ஒரு பெண்ணைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டுள்ள இடங்களிலெல்லாம் பிற்காலத்தில் அவள் ஒரு பெண் பாலியல் நாடி என்று எண்ணங் கொள்ளவும் வழி வகுக்கும்.--பாஹிம் (பேச்சு) 16:18, 19 பெப்ரவரி 2015 (UTC)

இள நங்கை, அழகிய நங்கை, வீர நங்கை, நற்றமிழ் நங்கை, பருவ நங்கை, நங்கை நல்லாள் போன்று ஏற்கனவே இருக்கும் சொற்பயன்பாடுகளுக்கு அவர்களெல்லாம் பெண்களின் மீது பாலியல் நாட்டங் கொண்ட பெண்கள் என்று பொருள் கொடுக்க வேண்டுமா? ஒரு சிலருக்கு, குறிப்பாக சில சமயங்களில் மதிக்கப்படும் சிலருக்கு ஆழ்வார் நம்பி, ஆவுடையார் நம்பி, ஆலிலை நம்பி, திருக்குருகூர் நம்பி, வடிவழகிய நம்பி என்றெல்லாம் பெயரிடப்பட்டுள்ளது. அவர்களெல்லோரும் பிற ஆண்களின் மீது பாலியல் நாட்டங் கொண்டோர் என்று பொருள் கூற வேண்டுமா? சாதாரண வழக்கிலுள்ள ஒரு சொல்லை, குறிப்பான ஒரு விடயத்தில் பயன்படுத்தும் போது காலப்போக்கில் அச்சொல்லின் பொருள் அதுவென்றே நிலை பெறுகின்றது. மிக எளிமையாக நங்கை, நம்பி என்று கூறப்படும் சொற்களை குறிப்பாக தற்பால் நாட்டங் கொண்டோரைக் குறிக்கப் பயன்படுத்துவது அத்தகையோரல்லாத பெண்களையும் ஆண்களையும் மிகவும் புண்படுத்தும் (offensive) என்பது திண்ணம். இதனாற்றான், நங்கை என்ற சொல்லை பெண் பாலியல் நாடிகளைப் பற்றிய கட்டுரைக்கு வழிமாற்றாக வைப்பதையும் எதிர்க்கிறேன்.--பாஹிம் (பேச்சு) 16:42, 19 பெப்ரவரி 2015 (UTC)

இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தின் வரந்தரு காதையில் செம்மொழி மாதவர் சேயிழை நங்கை, பருவமன்றியும் பைந்தொடி நங்கை போன்ற வரிகளில் பயன்படுத்தியிருக்கும் நங்கை என்ற சொல்லுக்கும் பெண் பாலியல் நாடி என்று பொருள் கூற வேண்டுமா? இரண்டாயிரம் ஆண்டுகளாக சாதாரணமாக இளம் பெண்களைக் குறிக்கப் புழக்கத்திலிருக்கும் ஒரு சொல்லை ஏனைய பெண்களின் மீது பாலியல் நாட்டங் கொள்ளும் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்துவது தகாது.--பாஹிம் (பேச்சு) 16:52, 19 பெப்ரவரி 2015 (UTC)

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி. உங்கள் கருத்துக்களில் குறித்துக் கொள்ள வேண்டிய விடயங்கள் உண்டு. ஒரு சொல்லின் பொருள் பயன்படுத்தும் சூழமைவுக்கு ஏற்பவும், கால ஓட்டத்துக்கும் ஏற்பவும் மாறுபடும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆங்கிலச் சொல்லான gay கூட, அவ்வாறி மருவி புழங்கப்படும் சொல்லே. மேலும், விக்கியில் கலைச்சொற் பயன்பாடு என்று பார்க்கும்போது வழக்கில் இருக்கும் தமிழ்ச் சொற்களை கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே வழக்கம். நங்கை, நம்பி தற்போதே புழக்கத்திற்கு வரும் சொற்கள் என்பதால் இவை கூடிய சிக்கல் தரும் சொற்களாக உள்ளன. --Natkeeran (பேச்சு) 16:59, 19 பெப்ரவரி 2015 (UTC)

//ஒரு சொல்லை ஏனைய பெண்களின் மீது பாலியல் நாட்டங் கொள்ளும் பெண்களைக் குறிக்கப் பயன்படுத்துவது தகாது//   விருப்பம் --AntanO 15:38, 28 சூன் 2015 (UTC)Reply

உரையாடலில் இணக்க முடிவு இல்லை, எனவே original தலைப்புக்கு மாற்றி உள்ளேன். --Natkeeran (பேச்சு) 15:43, 28 சூன் 2015 (UTC)Reply

பயனர் கருத்து

தொகு

இக்கட்டுரையின் தலைப்பு ஏனைய பயனர்களின் கருத்துக்கு விடப்பட வேண்டும். பெரும்பாலான முடிவின் அடிப்படையில் தலைப்பை அமைக்கலாம். --AntanO 16:01, 28 சூன் 2015 (UTC)Reply

சிக்கலை நடுநிலை நோக்கோடு உரையாட இன்னும் கூடுதல் காலமும் பங்கேற்பும் தேவை. உரிய முயற்சிகளை எடுத்து வருகிறேன். அதன் பிறகு, வாக்கெடுப்புக்குச் செல்வது சரியான அணுகுமுறையாக இருக்கலாமா என்று உரையாடலாம்.--இரவி (பேச்சு) 14:39, 16 நவம்பர் 2015 (UTC)Reply

இக்கட்டுரைத் தலைப்பு ஒருமித்த உடன்பாடு காணப்படாமலே பழைய தலைப்புக்கு மாற்றப்பட்டதால் "நடுநிலைமை" வார்ப்புரு இடுகிறேன். தலைப்பை மாற்றுக அல்லது உள்ளடக்கத்தை மாற்றுக. பாராமரிப்பு வார்ப்புருவை ஒருமித்த உடன்பாடு காணப்படாமல் நீக்க வேண்டாம். நன்றி. --AntanO 06:08, 8 அக்டோபர் 2016 (UTC)Reply

ஒருபாலீர்ப்புள்ள பெண் என்பது அல்லது பெண் ஓரினச்சேர்க்கையாளர் போன்ற விளங்கக் கூடிய சொற்கள் இருப்பது சிறப்பு. --AntanO 03:42, 9 அக்டோபர் 2016 (UTC)Reply
வார்ப்புருவை நீக்கயுள்ளேன். ஆனால், கவனிக்க பேச்சு:அகனன்#நடுநிலைமை கேள்விக்குட்படுத்தப் பட்டுள்ளது. --AntanO 01:20, 18 அக்டோபர் 2016 (UTC)Reply
Return to "நேர்பாலீர்ப்பு பெண்" page.