பேச்சு:ராஜ்கோட்

இதனை இராசகோட்டை என மாற்றலாமா? சாண்டில்யன் தன்னுடைய புதினங்களில் ராஜகோட்டை என்று குறிப்பிட்டிருப்பதாக ஞாபகம்.--பாஹிம் (பேச்சு) 04:09, 31 ஆகத்து 2012 (UTC)Reply

நகர்த்தியுள்ளேன். --மதனாகரன் (பேச்சு) 07:15, 31 ஆகத்து 2012 (UTC)Reply
ராஜ்கோட் எப்படி இராசாவின் கோட்டையானது, எந்த இராசா அங்கு சென்று கோட்டை காட்டினாரோ தெரியவில்லையே? :DDD .. கேட்கவும்
(கோப்பு)
--சண்முகம்ப7 (பேச்சு) 07:29, 31 ஆகத்து 2012 (UTC)👍 விருப்பம்--சங்கீர்த்தன் (பேச்சு) 07:51, 31 ஆகத்து 2012 (UTC)Reply
தமிழார்வத்தால் த.வி பொதுமக்களுக்குப் பயனில்லாததாக ஆகி வருகிறது. குசராத் செல்பவர்கள் இராசகோட்டை என்று விசாரித்தால் என்ன பதில் கிடைக்கும். வழிமாற்று இருக்கிறது என்று முற்றிலும் ஒரு அன்னியமான சூழல் ஆங்கில விக்கிக்குத் தான் செல்ல வைக்கும். தமிழார்வத்தாலேயே இனி தமிழ் விக்கி மெல்லச் சாகும் ;(--மணியன் (பேச்சு) 11:45, 31 ஆகத்து 2012 (UTC)Reply

அப்படியானால் இந்த இலக்கணம், அது, இது என்பதெல்லாம் எதற்கு? இலக்கண வரம்புகளாற் பயனில்லை. தமிழ் இலக்கணத்தைத் தகர்த்தெறியும் காலம் வந்துள்ளதா அல்லது திருத்தி எழுதியாக வேண்டுமா? இலக்கணத்தைக் கைவிட்டதனாற்றான் செயல்பாடு, உள்பட, தொழில்நுட்பம் போன்ற அடிக்கடி நிகழும் இலக்கணப் பிழைகளை இந்தியர்கள் யாருமே கண்டுகொள்வதில்லை போலும்.--பாஹிம் (பேச்சு) 12:09, 31 ஆகத்து 2012 (UTC)Reply

இந்த இலக்கண மாற்றங்கள், கருத்துகள் ஒரு பக்கம் இருந்தாலும் ஒரு நாட்டினைரை குறிப்பிட்டு சாடுவது தமிழ் விக்கியின் வளர்ச்சிக்கு நல்லதல்ல என்பதனை மட்டும் கூறிக்கொள்கிறேன். பாஹிம் பல இடங்களில் இலக்கண விதிகளை மீறி எழுதியுள்ளதை பார்த்துள்ளேன், அதனால் தமிழ் அழிந்து போகாதா? மேலும் கோட் என்பது எந்த இலக்கண முறைப்படி கோட்டை என ஆனது எனக் கூறினால் நன்று--12:37, 31 ஆகத்து 2012 (UTC)

நான் ஒரு நாட்டினரைக் குறிப்பிட்டுச் சாடுவதாக நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால், குறிப்பிட்ட பிழைகள் எங்கு கூடுதலாக, மிகப் பரவலாக, அச்சு ஊடகங்கள் உட்பட நடக்கின்றனவோ அதைத்தான் குறிப்பிட்டுள்ளேன். நான் இலக்கண விதிகளை மீறியுள்ளதாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள். திருத்திக் கொள்கிறேன். கோட் என்பது எந்த இலக்கணத்தின் படி சரி என்பதைக் கூறுங்கள். தமிழில் டகர மெய்யிற் சொற்கள் முடியலாமா?--பாஹிம் (பேச்சு) 12:50, 31 ஆகத்து 2012 (UTC)Reply

கோட் என்பது கோட்டை (கோட்+ட்+ஐ) என எந்த விதியின் அடிப்படியில் டை சேர்த்தீர்கள் பாஹிம், மேலும் கோட் என்பதை நான் இலக்கண முறைப்படி சரி எனக் கூறவில்லையே, மற்ற இடங்களில் இலக்கணப் பிழை இருந்தாலும் மூல ஒலிப்பு சரி எனில் சரியானது என்கிறீர்கள், இங்கு மட்டும் ஏன்?.--சண்முகம்ப7 (பேச்சு) 13:00, 31 ஆகத்து 2012 (UTC)Reply

நானும் உங்களது கேள்வியையே திருப்பிக் கேட்கிறேன். கோட்டை என்பதுதான் சரியென நான் கூறினேனா? மாற்றலாமா என ஆலோசனை மட்டும் கேட்டிருக்கிறேன். மாற்ற வேண்டுமெனக் கூறினேனா?--பாஹிம் (பேச்சு) 13:07, 31 ஆகத்து 2012 (UTC)Reply

இங்கு மட்டும் சரியற்றவைக்கு ஆலோசனை கேட்கிறீர்கள், என்ன சொல்வது :D.. @மதன்: சிறிது காலத்திற்கு பொருத்திருந்து எந்த மாற்றுக் கருத்தும் வரவில்லை எனில் மாற்றலாம், உடனே வேண்டாமே :)--சண்முகம்ப7 (பேச்சு) 13:22, 31 ஆகத்து 2012 (UTC)Reply

தற்போது மீண்டும் ராஜ்கோட் என்று தலைப்பை மாற்றலாம் 50000 கட்டுரைகளை தொட்டபின் ஒட்டுமொத்தமாக இது பற்றி கலந்து முடிவெடுக்கலாம்--சங்கீர்த்தன் (பேச்சு) 13:13, 31 ஆகத்து 2012 (UTC)Reply

//குசராத் செல்பவர்கள் இராசகோட்டை என்று விசாரித்தால் என்ன பதில் கிடைக்கும்// என்பதைப் போன்றே இந்தோனேசியாவுக்குச் செல்வோர் தெமாகு என்று விசாரித்தாற் கிடைக்கும் பதிலே இதற்கும் கிடைக்கும். எனினும், தமிழின் தனித்தன்மைக்கு என்னவாகுமோ அறியேன்.--பாஹிம் (பேச்சு) 14:00, 31 ஆகத்து 2012 (UTC)Reply

திரு.பாஹிம் அவர்களுக்கு, தங்களது மொழியறிவும் தமிழார்வமும் மிகவும் போற்றுதலுக்குரியது. பல திருத்தங்களுக்கு தாங்கள் வழிகோலியுள்ளீர்கள். உங்களுடன் நான் வேறுபடுவது தமிழின் தூய்மை கருதி நமது இலக்கை மறக்கிறமோ என்பதில்தான். பல்வேறு நாடுகள், இனங்கள், வரலாறு குறித்த செய்திகளை பரவலான தமிழறிந்தோருக்கு கொண்டு செல்வதே நமது முதன்மை நோக்கமாக இருத்தல் வேண்டும். ஊடகத்தமிழ் (உடனே இரவி ஆனந்த விகடனின் தமிங்கிலீசை சுட்டிக்காட்டுவார், நான் மனதிலிருத்துவது மக்கள் குரல் அளவில்) நடையில் தற்போது எழுதி பின்னர் சமுதாய முன்னேற்றங்களுக்கேற்ப படிப்படியாக முன்னேற்றலாம். விரைவான சமுதாய மாற்றங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. 20களில் இருந்த ஊடகத்தமிழ் 50களில் இல்லை; 50 களில் இருந்த நடை 80களில் இல்லை; 80களின் நடை இப்போதில்லை. இவை தாமாகவே சிறிய வற்புறுத்தல்களால் நிகழ்ந்தவை. நீங்கள் எதிர்நோக்கும் துல்லியத் தமிழ் நிச்சயமாக ஒருநாள் நடைமுறையில் இருக்கும். அன்று தமிழ் விக்கிப்பீடியாவும் அதற்கேற்ப உருவாகும். அதுவரை நமது தமிழறிவை சோதிக்கும் களமாக விக்கியை ஆக்கி விடாதீர்கள்.
இலக்கணத்தைப் பொறுத்தமட்டில் நமது இலக்கணநூல்கள் யாவையுமே செய்யுள் வடிவத்திற்கும் ஓலைச்சுவடி வடிவத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டவை. உரைநடைக்கென இலக்கணம் வரையறுக்கப்படவில்லை. தொல்காப்பியத்திலே கூறியுள்ளபடி பழையன கழிதலும் புதியன ஏற்றலும் இயல்பே. இங்கு அச்சிடப்படும் தமிழ் செய்யுள்கள் கூட சந்தி பிரித்து அச்சிடப் படுகின்றன. --மணியன் (பேச்சு) 04:25, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

ஆம், மணியன். உண்மையிலேயே இங்கிருக்கும் பெரிய குழப்பம் யாதெனில், நாம் பள்ளியிற் கற்ற தமிழுக்கும் நடைமுறையில் உள்ள தமிழுக்கும் இடையில் எம்மைப் பொருத்திக்கொள்ள முயலும்போது ஏற்படும் வசதிக் குறைவே. நான் ஒரு போதும் தமிழில் ஆங்கிலம் கலப்பதை மதிப்பதில்லை. அதேநேரம், சரியான தமிழ்ச் சொல்லை அறியாத ஒருவர் அங்கு வேற்றுமொழிச் சொல்லைப் பயன்படுத்துவது இயல்பே. அதை நான் குற்றமெனக் கருதுவதுமில்லை. இங்கு எமக்கு ஏற்படும் குழப்பங்களை நான் இரண்டு வகையினவாகக் காண்கிறேன். முதலாவது, இயற்றமிழில் உள்ள சொற்களைப் பிழையாகத் திரித்து எழுதுவது. இரண்டாவது வேற்றுமொழிச் சொற்களை எழுதும்போது தமிழ் இலக்கண விதிகளை மீறுவது. இவற்றில் முதலாவது வகையை நான் எப்போதும் குற்றமென்றே கருதுகிறேன். எடுத்துக் காட்டாக தொழில்நுட்பம், செயல்பாடு, உள்பட, செயல்முறை போன்ற பிழைகளைக் கூறலாம். அண்மையில் இந்திய நாளிதழ்கள் சிலவற்றை வாசிக்க முனைந்தபோது இவ்வாறான பிழைகள் ஏராளமாக இருப்பதைக் கண்டு மிகுந்த கவலையுற்றேன் (இதைக் கூறப்போய்த்தான் நான் இந்தியர்களைச் சாடுவதாகச் சண்முகம் கருதிக் கொண்டார்). அடிப்படைத் தமிழில் உள்ள சொற்களை எவரும் நினைத்தவாறெல்லாம் மாற்றுவது தவறென்றே நினைக்கிறேன் (தமிழுக்கு இலக்கணம் வகுத்தோர் வெறும் ஓரிருவரேயாயிருக்கப் பல மில்லியன் கணக்கானோர் பின்பற்ற வேண்டியுள்ளது என்பதை இங்கு கூறிக் குழப்பிக்கொள்ளத் தேவையில்லை). எப்படியாயினும், இரண்டாம் வகைத் தவறுகளாக நான் காணும் வேற்று மொழிச் சொற்கள் தொடர்பில் எமக்குச் சரியான வழிகாட்டல் தேவை. ஆங்கில வழியிற் தமிழாக்கம் செய்வோர்/செய்தோர் விட்ட தவறுகள் இன்று பெருஞ்சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளன. எடுத்துக்காட்டாக, னகர மெய்யைத் தொடர்ந்து டகரம் வரவே வராது. அப்படியிருக்க, ஒரு சிலர் ஆன்டனி, ஒன்டாரியோ போன்று பல சொற்களைப் பிழையாக எழுதி வருகின்றனர். அவற்றை அந்தனி என்றும் ஒன்ராறியோ அல்லது ஒண்டாரியோ என்றும் எழுதலாமே. ஒலிப்பு நுணுக்கம் கருதிப் புதியதொரு விதியை உட்புகுத்துவதை எப்படி ஏற்க முடியும்? அதேவேளை, அப்படி உட்புகுத்தத்தான் வேண்டுமெனில், தமிழ் இலக்கண வரம்புகளிற் சில மாற்றங்கள் கட்டாயம் தேவைப்படுகின்றன என்பதை மறுக்கவியலாது. சில வேற்று மொழிச் சொற்கள் டகரத்தில் அல்லது ரகரத்திற் தொடங்கும்போது அல்லது அவ்வாறாக முடியும்போது நாம் ஒலிப்பு நுணுக்கம் கருதிச் செய்யும் வேறுபாடுகள்தான் குழப்பங்கலுக்கு வழிகோலுகின்றன. இதனாற்றான், வேற்றுமொழிச் சொற்கள் தொடர்பில் எமக்குச் சரியான வழிகாட்டல் தேவைப்படுகின்றது. அரசாங்கங்கள், பல்கலைக்கழகங்கள் போன்றன சேர்ந்து செய்ய வேண்டிய வேலையை நாம் தலைக்கு மேல் எடுத்துக் கொண்டுள்ளோமா அல்லது இவ்வாறான குறைகளைக் காணச் சகியாமல் நாம் இன்னுமின்னும் குழப்புகிறோமா அல்லது எது எக்கேடு கெட்டாலும் காவில்லை, எனக்கு வாய்த்த தமிழில் நான் எழுதுகிறேன் என உளநிறைவு கொள்கிறோமா என்பதுதான் இங்கு நாம் கண்டறிய வேண்டியுள்ளது. தகவல்களைக் கொடுக்க வேண்டுமென்பதற்காக நாம் கற்ற தமிழை இழக்க வேண்டுமா அல்லது தமிழுக்காக நாம் தகவல்களைச் சிதைக்கிறோமா அல்லது ஒரு சிலர் நினைப்பது போன்று தமிழ் இந்தக் காலத்துக்குச் சரிப்பட்டு வராதா என்பதை இங்கு புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. எது எவ்வாறாயினும் என்னைப் பொருத்தவரையில், நான் கற்ற தமிழை இழக்க விரும்பவில்லை என்னும் அதேவேளை "செய்வன திருந்தச் செய்" என்ற வாக்கியத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.--பாஹிம் (பேச்சு) 05:21, 1 செப்டெம்பர் 2012 (UTC)👍 விருப்பம் --மதனாகரன் (பேச்சு) 06:30, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply

//தொல்காப்பியத்திலே கூறியுள்ளபடி பழையன கழிதலும் புதியன ஏற்றலும் இயல்பே.//
இக்கூற்று நன்னூலிற்கூறப்பட்டதாகவே அறிந்துள்ளேன். மேலும் சரியான இலக்கண விதிகளுக்குட்பட்ட தமிழ்ச் சொற்களோ எழுத்துப்பெயர்ப்போ வழக்கிலிருக்கும்போதே பிறமொழிச் சொற்களோ இலக்கண விதிகளுக்குட்படாத எழுத்துப்பெயர்ப்போ பயன்படுத்தப்படுகின்றன (எ-டு: ஆக்சிசன், நைட்ரசன், வேகம், வோல் வீதி ஆக்கிரமிப்பு). வடசொற்களைத் தமிழ் மொழிக்குக் கொண்டு வருவதற்கான முறை நன்னூலிற்கூறப்பட்டுள்ளது. அதே முறையை பிறமொழிச் சொற்களுக்கும் கையாளுவதே பொருத்தமாகும். இவ்வாறே தமிழிலக்கண விதிகள் மீறப்பட்டே போனால் விக்கிப்பீடியாவின் உரைநடை வணிக இதழ்களின் உரைநடை போன்றே (பஸ், கார், வேன், ஸ்டோர்ஸ், ஜாவாஸ்க்ரிப்ட், ஃப்ரீ என்று தமிங்கில நடை) ஆகி விடும். எந்த மொழியும் தத்தமது மொழியின் இயல்புக்கேற்பச் சொற்களை எழுத்துப்பெயர்த்தெழுதுவதே முறை. தூத்துக்குடி Tuticorin ஆகியதும் தமிழ் Tamil ஆகியதும் மட்டக்களப்பு Batticaloa ஆனதும் 日本 (நிப்பொன்) Japan ஆனதும் இவ்வாறே. --மதனாகரன் (பேச்சு) 06:30, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
Rajkot என்பது இராசகோட்டை ஆகாது (வழக்கு இருந்தாலொழிய). இராச்சுக்கோட்டு என்று எழுதலாம். கிரந்தம் வேண்டுமெனில் இராஜ்கோட்டு எனலாம். ஆனால் அருள்கூர்ந்து முன்னால் வரும் இகரத்தையும் கடைசியில் வரும் குற்றியலுகரம் டுகரத்தையும் இணைக்க வேண்டுகிறேன். அதில் பிறழ்வு ஏற்படும்போது தமிழ்ச்சொற்களிலும் ஐயம் எழத் தொடங்கும். விரிவாகப் பின்னர் உரையாடும்போது பேசலாம். -- சுந்தர் \பேச்சு 07:46, 1 செப்டெம்பர் 2012 (UTC)Reply
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:ராஜ்கோட்&oldid=3591789" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "ராஜ்கோட்" page.