பேனுபனா சாயா

இந்தியா நாட்டின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பைஷ்னப்கதா பட்டுலி நகரத்தில் உள்ள பூ

பேனுபனா சாயா (Benubana Chhaya) என்பது இந்திய நாட்டின் மேற்கு வங்க மாநில தலைநகரான கொல்கத்தாவில் உள்ள கிழக்கு பெருநகர புறவழிச்சாலை, பைசுனாப்கதா பட்டுலி நகரத்தில் அமைந்துள்ள வகைப்படுத்தப்பட்ட நீர் பூங்கா ஆகும். இது கொல்கத்தா பெருநகர வளர்ச்சி ஆணையத்தால் 2013 ஆம் ஆண்டு கொல்கத்தாவை உயர்நிலைப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது. [1] இச்சாலை ஒரு ஏரியைச் சுற்றி கட்டப்பட்ட ஒரு பொது பூங்கா மற்றும் இருபுறமும் ஏரிகளால் சூழப்பட்ட மரங்கள் நிறைந்த பாதையைக் கொண்டுள்ளது. இப்பூங்கா குடும்பம் மற்றும் நண்பர்களுடன் நேரத்தை செலவிட ஒரு அமைதியான இடமாகும். பார்வையாளர்கள் படகு சவாரி செய்யலாம் மற்றும் பூங்காவிற்குள் அமைந்துள்ள டிராம் உணவகத்தையும் பார்வையிடலாம். பூங்காவிற்குள் நுழைய டிக்கெட் வாங்க வேண்டும். ஒரு நபருக்கு டிக்கெட்டின் விலை ரூபாய் பத்து ஆகும்.

பேனுபனா சாயா
Benubana Chhaya
বেণুবন ছায়া
பூங்காவில் ஏரி
Map
வகைநகர்ப்புற பூங்கா
அமைவிடம்பைசுனாப்கதா பட்டுலி நகரம், கொல்கத்தா
ஆள்கூறு22°28′34″N 88°23′22″E / 22.47611°N 88.38944°E / 22.47611; 88.38944
திறப்பு2013
இயக்குபவர்கொல்கத்தா பெருநகர மேம்பாட்டுக் குழுமம்
திறந்துள்ள நேரம்ஆண்டு முழுவதும் (காலை 10:00 மணி - இரவு 9:00 மணி)

மேற்கோள்கள்

தொகு
  1. "Kolkata Metropolitan Development Authority". kmdaonline.org.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேனுபனா_சாயா&oldid=3788526" இலிருந்து மீள்விக்கப்பட்டது