பொலன்னறுவை

இலங்கையின் வடமத்திய மாகாணத்தில் அமைந்துள்ள நகரம்
(பொலன்நறுவ இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பொலன்னறுவை இலங்கையின் வடமத்திய மாகாணத்திலுள்ள ஒரு நகரமாகும். தற்பொழுது இது பொலன்னறுவை மாவட்டத்தின் தலைநகராக உள்ளது. எனினும் கி.பி 10 நூற்றாண்டு தொடக்கம் கி.பி 13 நூற்றாண்டு வரை பண்டைய இலங்கையின் தலைநகரமாகப் பெயரும், புகழும் பெற்று விளங்கியது இந்நகரம். அனுராதபுரத்திற்கு பாதுகாப்பு வழங்குமொரு அரணாகவிருந்த இந்நகரை, சோழர் இலங்கையின் தலைநகராக தெரிவுசெய்தனர். பின்னர் இந்நகரம் சிங்கள மன்னர் காலத்திலும் இலங்கையின் தலைநகரமாக விளங்கியது.

பொலன்னறுவை
பராக்கிரமபாகுவின் அரச மாளிகை
பராக்கிரமபாகுவின் அரச மாளிகை
அடைபெயர்(கள்): පුලතිසිපුර
நாடுகள்இலங்கை
மாகாணம்வடமத்திய மாகாணம்
பொலன்னறுவைகி.பி. 1070இற்கு முன்
நேர வலயம்ஒசநே+5:30 (இலங்கையின் நியம கால வலயம்)
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
பொலன்னறுவை பழைய நகரம்
உலக பாரம்பரிய பட்டியலில் உள்ள பெயர்
.
வகைகலாச்சாரம்
ஒப்பளவுi, iii, vi
உசாத்துணை201
UNESCO regionதென்னாசியா
பொறிப்பு வரலாறு
பொறிப்பு1982 (6th தொடர்)

இந்த நகரைச் சுற்றி, பல பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மன்னர்களால் கட்டப்பட்டுள்ளது. பராக்கிரமபாகு மன்னரால் கட்டப்பட்டவை குறிப்பிடத்தக்கனவாகும். இவை பொலன்னறுவையில் வாழ்ந்த பெருந்தொகையான மக்களின் உணவுத் தேவைக்காகவும், சுற்றியுள்ள பரந்த பிரதேசத்தில் விவசாயம் செய்வதற்காகவும் பயன்பட்டன. சுமார் 1000 ஆண்டுகளுக்குப் பின்னரும் இக் குளங்கள் இன்னும் பயன்பாட்டில் உள்ளன. நகருக்கு அணித்தாக இங்கே பல பாரிய பௌத்த விகாரைகளும் , இந்து கோவில்களும் இருக்கின்றன.[1][2][3]

கைவிடப்பட்ட பின்னர், பாழடைந்து, காடடர்ந்து, மறக்கப்பட்டுக்கிடந்த இப் பண்டைய நகரின் அழிபாடுகள், 19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதியில், தொல்பொருளாய்வாளர்களினால் வெளிக்கொணரப்பட்டது. அரண்மனைகள், மாளிகைகள், கோவில்கள், பௌத்த பிக்குகளுக்கான வசிப்பிடங்கள், மருத்துவமனைகள், பயணிகள் தங்குமிடங்கள், மற்றும் அலங்காரத் தடாகங்கள் முதலியவற்றின் இடிபாடுகள், நகரின் அக்கால வளத்துக்குச் சாட்சியாக உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Category:Polanaruwa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேற்கோள்கள்

தொகு
  1. Sastri, K. A (2000). The CōĻas. University of Madras. pp. 172–173.
  2. "Ancient City of Polonnaruwa". World Heritage Convention, UNESCO. பார்க்கப்பட்ட நாள் 21 May 2015.
  3. "President commences "Pibidemu Polonnaruwa" – The official website of the President of Sri Lanka". www.president.gov.lk. பார்க்கப்பட்ட நாள் 2015-11-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொலன்னறுவை&oldid=4101115" இலிருந்து மீள்விக்கப்பட்டது