மஞ்சள் மலைகள்

மஞ்சள் மலைகள் அல்லது குவாங்சான் (Huangshan அல்லது Yellow Mountains; எளிய சீனம்: ; மரபுவழிச் சீனம்: 黃山பின்யின்: Huángshān),[2] என்பது கிழக்கு சீனாவின் தென் அன்ஹுயி மாகாணத்தில் உள்ள ஒரு மலைத் தொடர் ஆகும். இத்தொடர் பகுதியில் உள்ள தாவர வளர்ச்சிச் செறிவு 1,100 மீட்டர்கள் (3,600 அடி) இதற்குக் கீழும் மரங்களின் வளர்ச்சி 1,800 மீட்டர்கள் (5,900 அடி) என்ற அளவிலும் காணப்படுகிறது.

மஞ்சள் மலைகள்
Huangshan
மஞ்சள் மலைகளின் அகலப்பரப்புக் காட்சி
உயர்ந்த இடம்
உயரம்1,864 m (6,115 அடி)[1]
இடவியல் புடைப்பு1,734 m (5,689 அடி)[1]
பட்டியல்கள்மிக உயரம்
புவியியல்
மஞ்சள் மலைகள் Huangshan is located in சீனா
மஞ்சள் மலைகள் Huangshan
மஞ்சள் மலைகள்
Huangshan
Location in China
அமைவிடம்அன்ஹுயி மாகாணம், சீனா
அலுவல் பெயர்குவாங்சான் மலை
வகைகலாச்சாரம், இயற்கை
வரன்முறைii, vii, x
தெரியப்பட்டது1990 (14 வது தொடர்)
உசாவு எண்547
State PartyChina
Regionஆசியா பசுபிக்

இப்பகுதி இயற்கைக்காட்சி, சூரிய மறைவு, விசித்திரமான வடிவ கருங்கல் உச்சிகள், குவாங்சான் ஊசியிலை மரங்கள், வெந்நீர் ஊற்றுகள், குளிர்காலப் பனி, மேலிருந்து பார்க்கக்கூடிய மேகக் காட்சிகள் போன்றவற்றுக்காக நன்கு அறியப்படுகிறது. மஞ்சள் மலைகள் பாரம்பரிய சீன ஓவியம், இலக்கியம் ஆகியவற்றுடன் தற்கால ஒளிப்படவியல் போன்றவற்றின் விடயப் பொருளாகவுள்ளது. இது ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தின் உலகப் பாரம்பரியக் களமாகவும், சீனாவின் முக்கிய உல்லாசப் பயண இடங்களில் ஒன்றாகவும் உள்ளது.

வரலாறு தொகு

மஞ்சள் மலைகள் கிட்டத்தட்ட 100 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் உருவாகி, தனித்துவமான மலை அமைப்பைப் பெற்றன.[3]

சின் அரசமரபு காலத்தில், இது யிசான் (ஜி மலை) என அழைக்கப்பட்டது. கி.பி. 747 இல், குவாங்சான் (அதாவது மஞ்சள் மலைகள்) அல்லது குவாங் மலை எனப் பேரரசினால் பெயர் மாற்றம் பெற்றது.[4] இப்பெயர் முக்கிய சீனப் பேரரசரும், ஹான் சீனரின் புராணப் பரம்பரையைச் சேர்ந்த குவாங் டிக்கு (மஞ்சள் பேரரசர்) புகழ் கொடுப்பதற்காக அமைந்தது.[5] குவாங்சானிலிருந்துதான் குவாங் டி பேரரசர் வானுலகுக்கு ஏறினார் என்ற ஒரு கதையும் உள்ளது.[6] இன்னொரு கதை மஞ்சள் பேரரசர் மலைகளில் அறநெறித்தன்மையையும் சுத்திகரிக்கப்பட்ட இறவாமை மாத்திரைகளையும் பயிரிட்டார், ஆகவே அம்மலைகளுக்கு அவரது பெயரே கொடுக்கப்பட்டது என்கிறது.[3] குவாங்சான் (மஞ்சள் மலைகள்) என்ற பெயர் முதன்முதலில் சீனப் புலவர் லி பையினால் பயன்படுத்தப்பட்டது.[5] ஆரம்பத்தில் இம்மலையைப் பற்றி சிறிதளவே அறிந்திருந்ததோடு, அநேகமாக யாரும் இதனை அணுகுவதில்லை. ஆனாலும், கி.பி. 747 இல் பெயர் மாற்றம் பெற்றதும் இப்பகுதிக்கு அதிக முக்கியத்துவம் கிடைக்கப்பட்டதிலிருந்து இன்று வரை அதிகமானோரால் பார்க்கப்படுவதோடு, பல கோயில்களையும் கொண்டுள்ளது.[4]

மஞ்சள் மலைகளின் பக்கங்களில் செதுக்கப்பட்டுள்ள அதன் கற்படிகளினால் அறியப்பட்டது.[6] இவை 60,000 இற்கும் அதிகமாக இப்பகுதிகளில் இருக்கலாம் என் நம்பப்படுகிறது.[7][8][9] படிகள் அமைக்கப்பட்ட காலம் தெரியாதுள்ள போதிலும், 1,500 வருடங்களுக்கு மேல் பழமையானது எனக் கூறப்படுகிறது.[8]

பல ஆண்டுகளாக, இம்மலையின் மீது கண்ணுக்கினிய இடங்களும் மற்றும் பௌதீக அம்சங்களும் பெயரிடப்பட்டுள்ளன.[10] உதாரணமாக, ஒரு கதை இவ்வாறு கூறுகிறது: இம்மலையின் அழகு பற்றிய கதையை நம்பாத ஒருவர், அதைப் பார்ப்பதற்காக அங்கு சென்றார். உடனடியாக அவர் மலையின் அழகு பற்றிய கதையை நம்பினார். அவர் சென்ற மலை உச்சி ஒன்றுக்கு "சிக்ஸ்சின்" (Shixin; 始信) என்று, அதாவது "நம்ப ஆரம்பித்தல்" என்ற பெயரிடப்பட்டது.[10]

1982 இல், சீன மக்கள் குடியரசின் அரச மன்றத்தினால் இம்மலை "கண்ணுக்கினிய அழகின் இடமும், வாரலாற்று ஆர்வமிக்கதும்" என அறிவிக்கப்பட்டது.[4] இம்மலை அதன் கண்ணுக்கினிய தோற்றம், அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள அருகிய இனங்களின் வாழ்விடமாக இருத்தல் ஆகியவற்றுக்காக யுனெஸ்கோ உலக பாரம்பரியக்களம் என 1990 இல் பெயரிடப்பட்டது.[11]

2002 இல், மஞ்சள் மலைகள் "சுவிஸ் அல்ப்சின் யுங்பிராவின் சகோதர மலை" எனப் பெயர் பெற்றது.[6]

இவற்றையும் பார்க்க தொகு

உசாத்துணை தொகு

  1. 1.0 1.1 1.2 "Lianhua Feng – Lotus Peak, HP Huang Shan" on Peaklist.org – Central and Eastern China, Taiwan and Korea. This data is specific to the high point of the range only. Retrieved 2011-10-5.
  2. Bernstein, pp. 125–127.
  3. 3.0 3.1 Huangshan Mountains, p. 12.
  4. 4.0 4.1 4.2 "Mount Huangshan Scenic Beauty and Historic Interest Site". Protected Areas and World Heritage. ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம். October 1990. Archived from the original on 2007-12-18. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08. {{cite web}}: External link in |work= (help)
  5. 5.0 5.1 "Huang Shan". ChinaTravel.net. Archived from the original on 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08. {{cite web}}: External link in |work= (help)
  6. 6.0 6.1 6.2 Cao, pp. 114–127.
  7. Butterfield, Fox (1981-02-08). "China's Majestic Huang Shan". த நியூயார்க் டைம்ஸ். பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.
  8. 8.0 8.1 "The Mystic World of Shanshui: Huangshan". UNESCO Culture Center. ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனம். Archived from the original (.wmv) on 2008-08-16. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08. {{cite web}}: External link in |work= (help)
  9. McGraw, David (2003). "Magic Precincts" (PDF). University of Hawaii. Archived from the original (PDF) on 18 செப்டம்பர் 2009. பார்க்கப்பட்ட நாள் 6 December 2008. {{cite web}}: Check date values in: |archive-date= (help) p. 52.
  10. 10.0 10.1 Guo, pp. 62–64.
  11. "Mount Huangshan". China.org.cn. 1990. பார்க்கப்பட்ட நாள் 2008-10-08.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மஞ்சள்_மலைகள்&oldid=3566131" இலிருந்து மீள்விக்கப்பட்டது