மணற்குன்று அரங்கம்
மணற்குன்று அரங்கம் அல்லது டுனாசு அரங்கம் ("Arena das Dunas") பிரேசிலின் நத்தால் நகரில் காற்பந்தாட்டங்களுக்கெனவே போப்புலசு நிறுவனத்தின்[2] முன்னணி விளையாட்டிட வடிவமைப்பாளர் கிறித்தோபர் லீ வடிவமைத்துள்ள[3] விளையாட்டரங்கமாகும். சனவரி 2011[4] முதல் கட்டப்பட்டு வரும் இந்த விளையாட்டரங்கு 2014 உலகக்கோப்பை காற்பந்து ஆட்டங்களை ஏற்று நடத்தவிருக்கிறது. ஏற்கனவே இருந்த மக்காடோவ் விளையாட்டரங்கை இடித்து புதியதாக இது கட்டப்பட்டு வருகிறது.[5]
மணற்குன்று அரங்கம் Arena das Dunas | |
---|---|
முழு பெயர் | அரீனா டாசு டுனாசு |
இடம் | லாகோவா நோவா, நதால், பிரேசில் |
எழும்புச்செயல் முடிவு | 2011 - 2014 |
திறவு | 26 சனவரி 2014 |
உரிமையாளர் | பொதுத்துறை-தனியார் கூட்டுறவு |
கட்டிட விலை | R$ 400 மில்லியன் |
கட்டிடக்கலைஞர் | போப்புலசு[1] |
குத்தகை அணி(கள்) | அமெரிக்க காற்பந்துக் கழகம் (RN) ஏபிசி காற்பந்துக் கழகம் 2014 உலகக்கோப்பை காற்பந்து |
அமரக்கூடிய பேர் | 45,000 |
புதிய அரங்கத்தில் 45,000 பேர் அமரக்கூடும். இந்த வளாகத்திலேயே அங்காடி மையம், வணிக கட்டிடங்கள், பன்னாட்டு தரம் பேணும் விடுதிகள், செயற்கை ஏரி ஆகியன அமைக்கப்படுகின்றன.[6]
2014 உலகக்கோப்பை காற்பந்து
தொகுநாள் | நேரம் (UTC-03) | அணி #1 | முடிவு | அணி #2 | சுற்று | வருகைப்பதிவு |
---|---|---|---|---|---|---|
சூன் 13, 2014 | 13:00 | மெக்சிக்கோ | ஆட்டம் 2 | கமரூன் | குழு ஏ | |
சூன் 16, 2014 | 19:00 | கானா | ஆட்டம் 14 | ஐக்கிய அமெரிக்கா | குழு ஜி | |
சூன் 19, 2014 | 19:00 | சப்பான் | ஆட்டம் 22 | கிரேக்க நாடு | குழு சி | |
சூன் 24, 2014 | 13:00 | இத்தாலி | ஆட்டம் 39 | உருகுவை | குழு டி |
மேற்கோள்கள்
தொகு- ↑ [1] architect: Populous
- ↑ [2]
- ↑ "Christopher Lee, architect of Dunas Stadium and London 2012". Archived from the original on 2013-11-13. பார்க்கப்பட்ட நாள் 2010-09-13.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-06-12. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2009-04-13. பார்க்கப்பட்ட நாள் 2014-02-18.
- ↑ [3]