மணிக்கட்டு எலும்புகள்
மணிக்கட்டு எலும்புகள் (ஆங்கிலம்:Carpals - இலத்தின்:καρπὁς)[1] என்பவை கையின் மணிக்கட்டில் அமைந்த 8 சிறு எலும்புகள் ஆகும்.[2][3]
மணிக்கட்டு எலும்புகள் | |
---|---|
கையின் மணிக்கட்டில் உள்ள 8 சிறு எலும்புகள்
| |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | ossa carpi |
MeSH | D002348 |
TA98 | A02.4.08.001 |
TA2 | 1249 |
FMA | 23889 |
Anatomical terms of bone |
மனித கை எலும்புகள்:
முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 1.படகெலும்பு (Scaphoid)
- 2.பிறைக்குழி எலும்பு (Lunate)
- 3.முப்பட்டை எலும்பு(Triquetrum)
- 4.பட்டாணி எலும்பு (Pisiform)
இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- 5.சரிவக எலும்பு (Trapezium)
- 6.நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- 7.தலையுரு எலும்பு (Capitate)
- 8.கொக்கி எலும்பு (Hamate)
அமைப்பு
தொகுமுதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அரந்தி, ஆரை எலும்புகளுடன் இணைந்து மணிக்கட்டு மூட்டின் பகுதிகளை உருவாக்குகிறது. இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள் அங்கை முன்னெலும்புகளுடன் இணைந்துள்ளது. இந்த எலும்புகள் கையில் அசைவுகளை உண்டாக்கும் தசைகளுடன் பிணைக்கப்ட்டுள்ளது.[2] மணிக்கட்டின் நிலைத்தன்மை அதன் முன்புற மற்றும் பின்புற பிணைப்பிகள் மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது.[4] சில பறவை இனங்களில் எலும்புகள் இணைந்து காணப்படுகிறது.[5]
- முதல் வரிசை மணிக்கட்டு எலும்புகள்
- படகெலும்பு (Scaphoid)
- பிறைக்குழி எலும்பு (Lunate)
- முப்பட்டை எலும்பு(Triquetrum)
- பட்டாணி எலும்பு (Pisiform)
- இரண்டாம் வரிசை மணிக்கட்டு எலும்புகள்:
- சரிவக எலும்பு (Trapezium)
- நாற்புறவுரு எலும்பு (Trapezoid)
- தலையுரு எலும்பு (Capitate)
- கொக்கி எலும்பு (Hamate)
-
முப்பரிமாணம்.
-
8 மணிக்கட்டு எலும்புகள்.
-
இடது கை எலும்புகள்.
-
மணிக்கட்டு எலும்புகள்.
-
மணிக்கட்டு எலும்புகள்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Diab 1999, p 48
- ↑ 2.0 2.1 Kingston 2000, pp 126-127
- ↑ Platzer 2004, p 126
- ↑ Platzer 2004, p 124
- ↑ Romer, Alfred Sherwood; Parsons, Thomas S. (1977). The Vertebrate Body. Philadelphia, PA: Holt-Saunders International. pp. 200–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-03-910284-X.