மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்

இந்தியாவின் இருபத்து ஐந்தாவது பெரிய விமான நிலையம் மற்றும் தமிழகத்தின் 4 -வது பெரிய நிலையம்
(மதுரை சர்வதேச வானூர்தி நிலையம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மதுரை பன்னாட்டு[4] வானூர்தி நிலையம் தமிழ்நாட்டில் உள்ள சுங்கத்தீர்வு மற்றும் பன்னாட்டு நிலை பெற்ற வானூர்தி நிலையம் ஆகும். தமிழ்நாட்டில் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளிக்கு அடுத்த நான்காவது பெரிய விமான நிலையம் ஆகும். இது மதுரை மற்றும் தென் தமிழ்நாட்டிற்குத் தனது சேவையை வழங்குகிறது.[5] இந்த வானூர்தி நிலையம் மதுரை தொடருந்து நிலையத்தில் இருந்து சுமார் 12 km (7.5 mi) தொலைவில் நகருக்குத் தெற்கே அமைந்துள்ளது. இந்த வானூர்தி நிலையம் 1957 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. 28 மார்ச் 2014, அன்று மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையத்துக்கு 9001:2015 தரம் சான்றிதழ் வழங்கப்பட்டது. இருப்பினும் சென்னை, கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி என மூன்று மாநகரங்களில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் மதுரை விமான நிலையத்திற்கு இன்னுமும் சர்வதேச அந்தஸ்து வழங்கப்படவில்லை.

மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ஐஏடிஏ: மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம்
  • ஐசிஏஓ:
    IXM is located in இந்தியா
    IXM
    IXM
    இந்தியாவில் வானூர்தி நிலைய இருப்பிடம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்/இயக்குனர்இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
சேவை புரிவதுமதுரை & தெற்கு தமிழ்நாடு
அமைவிடம்மதுரை, தமிழ்நாடு,  இந்தியா
உயரம் AMSL459 ft / 140 m
ஆள்கூறுகள்09°50′04″N 078°05′36″E / 9.83444°N 78.09333°E / 9.83444; 78.09333
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
09/27 7,500 2,286 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2018 வரை)
பயணிகள் இயக்கங்கள்1,520,016 (Increase4.6%)
விமான இயக்கங்கள்12,084 (Increase4.4%)
சரக்குப் போக்குவரத்து2,470 (Increase37.1%)
சான்று AAI [1][2][3]

டெர்மினல் (முனையம்)

தொகு

விமான நிலையத்தில் இரண்டு முனையங்கள் உள்ளன. பழைய முனையம் மற்றும் புதிய ஒருங்கிணைந்த முனையம். தற்போது ஒருங்கிணைந்த முனையம் சர்வதேச மற்றும் உள்நாட்டு நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பழைய முனையம் 20 நவம்பர் 2017 முதல் சரக்கு முனையமாக மாற்றப்பட்டது. சமீபத்திய ஆண்டுகளில் விமான நிலையத்தின் அதிவேக வளர்ச்சிக் காரணமாக, தனி உள்நாட்டு மற்றும் சர்வதேச முனையங்களை உருவாக்குவது திட்டங்களில் உள்ளது.

வரலாறு

தொகு

இரண்டாம் உலகப் போரின் போது ராணுவ வானூர்தித் தளமாக மதுரை விமானநிலையம் இருந்தது[6]. பின், மதுரையில் இருந்த பிரிட்டன் அதிகாரிகளின் போக்குவரத்திற்கும், அவர்களுக்கு பத்திரிகைகள் எடுத்து வரவும் விமான போக்குவரத்து துவங்கியது. ராணுவ வானூர்தித் தளமாக இருந்த மதுரை வானூர்தி நிலையம், 1960க்கு பின் உள்நாட்டு விமானப் போக்குவரத்திற்கு பயன்படுத்தப்பட்டது. சுதந்திரத்திற்கு பின் இந்தியன் ஏர்லைன்ஸ் வானூர்தி அவ்வப்போது மதுரை வந்து செல்லும். பின்னர் சில ஆண்டுகளில், தினமும் மும்பையிலிருந்து சென்னை வழியாக மதுரை, மீண்டும் அதே வழியில் மும்பைக்கு வானூர்தி சென்றது. இடையில் தனியார் நிறுவனங்கள் சிறிய ரக வானூர்திகளை இயக்கித் தொடர முடியாமல் விட்டு விட்டன.

மதுரையிலிருந்து கொழும்பிற்கு முதலாவது பன்னாட்டு விமான சேவையை செப்டம்பர் 20, 2012 ல் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் துவக்கியது.

ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் மதுரையிலிருந்து துபாய்|துபாய்க்கு தனது இரண்டாவது பன்னாட்டு விமான சேவையை நவம்பர் 22, 2013 ல் துவக்கியது.

பயணிகள் முனையம்

தொகு

129 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் 12 செப்டம்பர் 2010 அன்று தொடங்கப்பட்டது.[7] 17,560 சதுர மீட்டர் அளவு கொண்ட இரண்டடுக்கு முனையத்தில் ஒரே நேரத்தில் 500 பயணிகளைக் கையாளும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.[8] புதிய முனையத்தின் சில அம்சங்கள் :[9]

  • 16 பயணச்சீட்டு சாவடிகள்
  • 12 குடியேற்றச் சாவடிகள்
  • 5 சுங்கச் சாவடிகள்
  • 1 பாதுகாப்பு சாவடி
  • 3 கொணரிகள்(conveyor) (47 மீ ஒவ்வொன்றும்)
  • 2 பயணப்பை எக்ஸ்ரே வருடுபொறிகள் (Luggage X-Ray Scanner)
  • 3 வானூர்திப் பாலம்
  • 7 விமானம் நிற்கும் இடங்கள்
    • 3 B737-800W/A320-200
    • 2 ATR 72-500
    • 1 B767-400
    • 1 A310-300

வானூர்திச் சேவைகள் மற்றும் சேரிடங்கள்

தொகு
வானூர்திச் சேவைகள் சேரிடங்கள்
அலையன்ஸ் ஏர் -
ஏர் இந்தியா மும்பை, சென்னை
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் சிங்கப்பூர்
இன்டிகோ ஐதராபாத்து, தில்லி, மும்பை, சென்னை, பெங்களூர்
சிறீலங்கன் விமானச் சேவை கொழும்பு
ஸ்பைஸ் ஜெட் ஐதராபாத்து, துபாய்

நிகழ்வுகள்

தொகு
  • மதுரைக்கு 1965 ல் "டகோடா(டி.சி.,3)' ரக வானூர்தி சென்னையிலிருந்து வந்து சென்றது. அதில் 26 பேர் செல்லலாம். பின் 40 பேர் பயணம் செய்யும் "போக்கர் பிரண்ட்ஷிப்' ரக விமானம் மதுரை வந்தது.
  • 1970 களில் மதுரை வந்த "ஆவ்ரோ' ரக வானூர்தியில் 48 பேர் பயணம் செய்தனர். சென்னை-மதுரை- திருவனந்தபுரம் மற்றும் சென்னை-மதுரை-பெங்களூரு என இரு விமான சேவை நடந்தது.
  • 1980 க்கு பின் "போயிங் 737' ரக வானூர்தி மதுரை வந்தது. அதில் 147 பேர் பயணம் செய்ய வசதி இருந்தும், விமானஒடுதளம் பலவீனமாக இருந்ததால், குறைந்த அளவு பயணிகளே அனுமதிக்கப்பட்டனர். அதன்பின், என்.இ.பி.சி., தனியார் நிறுவனம் "ஏ.டி.ஆர்.,' ரக விமானத்தை சென்னை- மதுரை போக்குவரத்திற்கு பயன்படுத்தியது.
  • ஈஸ்ட் வெஸ்ட் ஏர்லைன்ஸ் தனியார் நிறுவனம் "போயிங்' ரக வானூர்தியில் மும்பை-மதுரை போக்குவரத்தை துவக்கியது. சில ஆண்டுகளுக்கு பின் இரு நிறுவனமும் போக்குவரத்தை ரத்து செய்தது.
  • இந்திய வானூர்தி நிறுவனம் "ஏர்பஸ் 320' ரக வானூர்தியைப் பயன்படுத்துகிறது. இதில் குறைந்தது 170 பயணிகள் செல்லலாம். தற்போது மதுரை வரும் சிறிய ரக விமானங்களுக்கு இடையே "ஏர்பஸ் 320 ' ரக வானூர்தி ஜாம்பவானாக உள்ளது.
  • தனியாருக்கு அனுமதி அளித்ததும், ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் ஏ.டி.ஆர்., ரக வானூர்தியுடன் மதுரையில் போக்குவரத்தைத் துவக்கியது. சென்னை-மதுரை மீண்டும் சென்னை என சேவையை துவக்கியது. பின், ஏர் டெக்கான் நிறுவனம் சென்னை-மதுரை-சென்னை, சென்னையிலிருந்து மதுரை வழியாக தூத்துக்குடி என ஏ.டி.ஆர்., ரக வானூர்திப் போக்குவரத்தை துவக்கியது.
  • செப்டம்பர் 10, 2013 அன்று மதுரை சர்வதேச முனையமாக, வானூர்திப் போக்குவரத்து அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.[10].

மேற்கோள்கள்

தொகு
  1. "Traffic Statistics-2019" (PDF). AAI. Archived from the original (PDF) on 27 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  2. "Aircraft Movements-2019" (PDF). AAI. Archived from the original (PDF) on 27 சனவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  3. "Cargo Statistics-2019" (PDF). AAI. Archived from the original (PDF) on 20 பெப்பிரவரி 2020. பார்க்கப்பட்ட நாள் 20 பெப்பிரவரி 2020. {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)
  4. "Fly abroad from smaller cities more easily". Hindusan Times (Chennai, India) இம் மூலத்தில் இருந்து 2013-09-13 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20130913064335/http://www.hindustantimes.com/business-news/SectorsAviation/Fly-abroad-from-smaller-cities-more-easily/Article1-1120829.aspx. பார்த்த நாள்: 2013-09-12. 
  5. "Customs facility for Madurai airport". The Hindu (Chennai, India). 2011-01-06. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/article1037271.ece. பார்த்த நாள்: 2011-01-06. 
  6. http://www.dinamalar.com/district_detail.asp?id=831468 மதுரை விமான நிலைய வரலாறு
  7. "Madurai Airport new terminal inauguration". The Hindu. 12 September 2010. http://www.thehindubusinessline.com/todays-paper/tp-logistics/article1003852.ece?ref=archive. பார்த்த நாள்: 4 February 2012. 
  8. "Airports Authority of India". Aai.aero. 2011-01-06. Archived from the original on 2017-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-01-29.
  9. "Airports Authority of India". Aai.aero. 2011-01-06. Archived from the original on 2017-01-02. பார்க்கப்பட்ட நாள் 2012-02-17.
  10. http://economictimes.indiatimes.com/news/news-by-industry/transportation/airlines-/-aviation/international-traffic-rights-for-flights-from-8-regional-centres/articleshow/22467342.cms

வெளி இணைப்புக்கள்

தொகு

மதுரை வானூர்தி நிலையத்தின் இணையத்தளம் பரணிடப்பட்டது 2009-04-30 at the வந்தவழி இயந்திரம்