மன்சார் (இந்தியா)
மன்சார் ( Mansar ) என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவில் நாக்பூர் மாவட்டத்திலுள்ள ராம்டெக் வட்டத்திலுள்ள ஒரு மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். இந்த நகரம் ராம்டெக்கிற்கு மேற்கே 5 கிமீ தொலைவிலும் நாக்பூர் நகரத்திலிருந்து 45 கிமீ வடகிழக்கேயும் அமைந்துள்ளது.
மன்சார் | |
---|---|
ஆள்கூறுகள்: 21°24′N 79°15′E / 21.4°N 79.25°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மகாராட்டிரம் |
மாவட்டம் | நாக்பூர் |
ஏற்றம் | 471 m (1,545 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 6,458 |
மொழிகள் | |
• அலுவல் | மராத்தி |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
நிலவியல்
தொகுமன்சார், 21°24′N 79°15′E / 21.4°N 79.25°E இல் அமைந்துள்ளது. [1] இது சராசரியாக 471 மீட்டர்கள் (1545 அடி) உயரத்தில் உள்ளது.
வரலாறு
தொகுமன்சாரில் உள்ள ஒரு மலையிலிருந்து 1972 ஆம் ஆண்டில், பின்னர் சிவ வாமனராக அடையாளம் காணப்பட்ட ஒரு தெய்வத்தின் உருவம் கண்டுபிடிக்கப்பட்டது, இது உள்ளூரில் "இடிம்பா தெக்ரி" என்று அழைக்கப்படுகிறது. நாக்பூரில் உள்ள போதிசத்வ நாகார்ஜுன் சமாரக் சம்ஸ்தா வ அனுசந்தன் கேந்திரா மற்றும் ஜகத் பதி ஜோஷி மற்றும் ஏ.கே. ஷர்மா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் 1997-98 முதல் மன்சாரின் பழமையான இடங்களில் முக்கியமான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. மன்சாரில் இதுவரை புத்த மடாலயம், புத்த பெட்டி வடிவத் தூண், சிறிய கோயில்கள், அரண்மனை அமைப்பு ஆகியவற்றைக் கொண்ட வெளிப்படையான செங்கல் கட்டமைப்புகள் என 5 தளங்கள் அகழ்வாராய்ச்சி செய்யப்பட்டுள்ளன. அகழ்வாராய்ச்சியின் போது பல்வேறு கல் படங்களும் வெளிப்பட்டன. இது வாகாடகர்களின் தலைநகரமாக அடையாளம் காணப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சிகளின் விளைவாக, பல்வேறு ஆலயங்களும் அரண்மனை வளாகமும் கண்டுபிடிக்கப்பட்டது. இது வாகடக மன்னர் இரண்டாம் பிரவரசேனனின் (5 ஆம் நூற்றாண்டின் முதல் பாதி) தலைநகரான பிரவரபுரம் என அடையாளம் காணப்பட்டது. இந்த அரண்மனையை ஒட்டி, 'இடிம்பா தெக்ரி'யில் , பிரவரேசுவரர் என அடையாளம் காணப்பட்ட ஒரு விரிவான கோயில் வளாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. [2] இதன் மேல் தளத்தின் ஒன்றின் அடியில் 3 மீ உயரமுள்ள ஒரு ஆண் மனித உருவம் குனிந்த நிலையில் காணப்பட்டது. அகழ்வாராய்ச்சியில் இந்து தெய்வங்களின் 5 ஆம் நூற்றாண்டின் குறிப்பிடத்தக்க சிற்பங்கள், கலைப்பொருட்கள் மற்றும் சில நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இந்த இடத்தைச் சுற்றியுள்ள நீர்த்தேக்கம், பழங்கால கருவிகள், மேலும் பிற பொருள்களின் கண்டுபிடிப்புகள் 1600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய மக்கள் இப்பகுதியில் வாழ்ந்ததை சுட்டிக்காட்டுகின்றன. இந்த கண்டுபிடிப்பு மன்சார் நாட்டின் முதன்மையான தொல்பொருள் தளங்களில் ஒன்றாக மாறியுள்ளது. [3]
மக்கள்தொகையியல்
தொகு2001, இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி,[4] மன்சாரின் மக்கள் தொகை 6458 ஆகும். இதில் ஆண்கள் 50%, பெண்கள் 50% என இருந்தனர். மன்சாரின் சராசரி கல்வியறிவு விகிதம் 69% ஆகும். இது தேசிய சராசரியான 59.5% ஐ விட அதிகமாக உள்ளது: ஆண்களின் கல்வியறிவு 76% மற்றும் பெண்களின் கல்வியறிவு 61% ஆகும். மன்சாரில், 13% மக்கள் 6 வயதுக்குட்பட்டவர்கள்.
சான்றுகள்
தொகு- ↑ Falling Rain Genomics, Inc - Mansar
- ↑ "Proceedings of the international symposium at the British Museum, London, 2008". Archived from the original on 2019-07-17. பார்க்கப்பட்ட நாள் 2022-03-23.
- ↑ Excavations reveal Wakataka relics, Indian Express
- ↑ "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
மேலும் படிக்க
தொகு- Joshi, Jagadpati; Sharma, A.K. (2005). Mansar Excavations 1998-2004: The Discovery of Pravarapur பரணிடப்பட்டது 2012-01-05 at the வந்தவழி இயந்திரம், Puramanthana 3, 1-26