மயங்க் யாதவ்
மயங்க் யாதவ் (Mayank Yadav) ஓர் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் உள்நாட்டுத் துடுப்பாட்டத்தில் டெல்லி அணிக்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் வலது கை வேகப்பந்து வீச்சாளரும் வலது கை மட்டையாளரும் ஆவார்.[1]
தனிப்பட்ட தகவல்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 17 சூன் 2002 புது தில்லி, இந்தியா | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது கை | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது கை வேகப்பந்து | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்து வீச்சாளர் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2022–தற்போது | தில்லி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2023–தற்போது | லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ஈஎசுபிஎன் கிரிக்கின்போ, 31 மார்ச் 2024 |
தொழில் வாழ்க்கை
தொகுஇவர் தனது தொழில்முறை இருபது20 போட்டியில் டெல்லி அணிக்காக மணிப்பூருக்கு எதிராக, அக்டோபர் 11, 2022 அன்று அறிமுகமானார்.[2] 12 திசம்பர், 2022 அன்று அரியானாவுக்கு எதிராக தில்லி அணிக்காக பட்டியல் அ போட்டியில் அறிமுகமானார்.[3] அதற்கு அடுத்த நாள், இவர் மகாராட்டிராவுக்கு எதிராக தில்லி அணிக்காக முதல் தரத் தொடரில் அறிமுகமானார்.[4]
பிப்ரவரி 2023-இல், இவரை லக்னோ சூப்பர் ஜயண்ட்ஸ் அணி 2023 இந்தியன் பிரீமியர் லீக் தொடருக்காக ரூ. 20 லட்சத்திற்கு வாங்கியது. காயம் காரணமாக 2023 தொடரைத் தவறவிட்ட யாதவ் பின்னர் 2024ஆம் ஆண்டில் பஞ்சாப் கிங்ஸுக்கு எதிராக ஐபிஎல்லில் அறிமுகமானார். இந்தப் போட்டியல் 27 ஓட்டங்களைக் கொடுத்து மூன்று இலக்குகளை வீழ்த்தினார். இந்தப் போட்டியில், ஐபிஎல் 2024-இல் மிக வேகமாகப் பந்து வீசிய யாதவ், மணிக்கு 155.8 கிலோ மீட்டர் வேகத்தை பதிவு செய்தார். ஐபிஎல் தொடரில் தனது முதல் போட்டியில் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Mayank Yadav". பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2023.
- ↑ "Mayank Yadav makes his professional and T20 debut". பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2023.
- ↑ "Mayank Yadav make his List A debut". பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2023.
- ↑ "Mayank Yadav makes his first-class debut one day after making his List A debut". பார்க்கப்பட்ட நாள் 6 ஏப்பிரல் 2023.
- ↑ "Fastest delivery In IPL 2024". பார்க்கப்பட்ட நாள் 30 மார்ச்சு 2024.