மலாக்கா பொது மருத்துவமனை

மலாக்கா பொது மருத்துவமனை (மலாய்: Hospital Melaka; ஆங்கிலம்: Malacca General Hospital) என்பது மலேசியா, மலாக்கா மலாக்கா நகர்ப்பகுதியில் உள்ள மருத்துவமனை ஆகும்.[2]

மலாக்கா பொது மருத்துவமனை
Hospital Melaka
Malacca General Hospital
அமைவிடம் முப்தி அஜி காலில் சாலை, மலாக்கா மாநகரம், மலாக்கா
Jalan Mufti Haji Khalil, Malacca City, Malacca,
மலாக்கா,
 மலேசியா
ஆள்கூறுகள் 2°13′1″N 102°15′41″E / 2.21694°N 102.26139°E / 2.21694; 102.26139
மருத்துவப்பணி பொது நிபுணத்துவ மருத்துவமனை
நிதி மூலதனம் மலேசிய அரசு நிதியுதவி
வகை பயிற்சி மருத்துவமனை
முழு சேவை மருத்துவமனை
இணைப்புப் பல்கலைக்கழகம் மருத்துவத் துறை,
மலேசிய மணிப்பால் பல்கலைக்கழகக் கல்லூரி
Manipal University College Malaysia[1]
தரநிலை தேசிய தரநிலைகள்
அவசரப் பிரிவு 24 மணி நேர சேவை
படுக்கைகள் 806 (2024)[2]
நிறுவல் 12 பிப்ரவரி 1934
வலைத்தளம் மலாக்கா பொது மருத்துவமனை
Hospital Melaka
Malacca General Hospital
பட்டியல்கள்

இந்த மருத்துவமனை இரண்டாம் நிலை மற்றும் சிறப்பு மருத்துவமனைப் பராமரிப்புச் சேவைகளை வழங்குகிறது.[3]

மலாக்கா மாநிலத்திலுள்ள சுகாதார மையங்கள்; ஜொகூர் மாநிலத்தின் வடக்குப் பகுதி மற்றும் நெகிரி செம்பிலான் தம்பின் மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள நோயாளிகளுக்கு ஒரு பரிந்துரை மையமாகவும் செயல்படுகிறது.

பொது

தொகு

மலாக்கா நகரத்திலிருந்து 15 நிமிட பயண நேரத்தில் பெரிங்கிட் சாலை - புக்கிட் பாலா சாலைகளில் இந்தப் பொது மருத்துவமனை அமைந்துள்ளது. ஏறக்குறைய 17.4 ஏக்கர் (7.0 எக்டேர்) நிலப்பரப்பில், நவீன வசதிகள் மற்றும் உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது. தளத்தில் பல புதிய கட்டிடங்களைச் சேர்க்கும் ஒரு விரிவாக்கத் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.[4]

மலாக்கா மருத்துவமனையின் இதர பெயர்கள்

  • புக்கிட் பாலா மருத்துவமனை - (Bukit Pala Hospital)
  • மலாக்கா மருத்துவமனை - (Malacca Hospital)
  • மலாக்கா பொது மருத்துவமனை - (Malacca General Hospital)
  • மலாக்கா பெரிய மருத்துவமனை - (Hospital Besar Melaka)
  • மலாக்கா பொது மக்கள் மருத்துவமனை - (Rumah Sakit Umum Melaka)

வரலாறு

தொகு

1934 பிப்ரவரி 12-ஆம் தேதி, நீரிணை குடியேற்றங்களின் நிர்வாக அரசின் $ 2.34 மில்லியன் மலாயா டாலர் அரசு நிதியுதவியுடன் திறப்புவிழா கண்டது. நீரிணை குடியேற்றங்களின் ஆளுநர் சர் சிசில் கிளமந்தி ஸ்மித் (Sir Cecil Clementi) தலைமையில் மலாக்கா பொது மருத்துவமனை திறக்கப்பட்டது.[5]

மிகப் பெரிய அளவிலான அந்தத் திறப்பு விழாவில் பிரித்தானிய காலனித்துவச் செயலாளர் ஆண்ட்ரூ கால்டிகாட் (Andrew Caldecott) இராணுவக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் லெவின், மருத்துவ சிகிச்சை மற்றும் சுகாதார இயக்குநர் டாக்டர் ஆர்.டி. பிட்சுஜெரால்ட், குடியுரிமை ஆலோசகர் எம்.டபிள்யூ. மில்லிங்டன் மற்றும் மலாக்காவைச் சேர்ந்த 700 பேரும் கலந்து கொண்டனர்.

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி

தொகு

மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி என்று முன்பு அழைக்கப்பட்ட மலேசிய மணிப்பால் பல்கலைக்கழகக் கல்லூரியில் (Melaka Manipal Medical College), மலேசியாவைச் சேர்ந்த மாணவர்களும், வெளிநாட்டு மாணவர்களும் மருத்துவக் கல்வி பயின்று வருகின்றனர். மலாக்கா மாநகரத்தில் இருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ள ஆயர் குரோ பகுதியில், மலாக்கா மணிப்பால் மருத்துவக் கல்லூரி உள்ளது.

1997-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பட்ட இந்தக் கல்லூரியில் இது வரை 1800 மருத்துவர்கள் படித்துப் பட்டம் பெற்றுள்ளனர்.[6]

அமைவு

தொகு
 
மலாக்கா மருத்துவமனையின் அவசரப் பிரிவு

இந்த மருத்துவமனை அமைக்கப்படும் போது நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு திறந்தவெளி பூங்காவிற்குள் அமைக்கப்பட்டது.

மேலும் இந்த மருத்துவமனை திறக்கப்பட்டதில் இருந்து அனைத்து மருத்துவ வசதிகள் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளுடன் முழுமையாக உள்ளது. 17 நோயாளிக் கூடங்களில் (வார்டுகளில்) 806 படுக்கைகளை வழங்கும் நான்கு அடுக்குமாடிக் கூடங்கள் உள்ளன.

முகவரி

தொகு

Hospital Melaka, Jalan Mufti Haji Khalil, 75400 Melaka
Tel : +60 06-2892344 Faks : +06-2841590

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Manipal University College Malaysia". Manipal University College Malaysia | MUCM (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 11 July 2024.
  2. 2.0 2.1 "Hospital Melaka - Imbasan Sejarah". jknmelaka.moh.gov.my. பார்க்கப்பட்ட நாள் 11 July 2024.
  3. "Hospital Melaka - hospital.com.my". hospital.com.my. பார்க்கப்பட்ட நாள் 11 July 2024.
  4. "Malacca Hospitals (1511-present)". The Early Malay Doctors. 1 November 2011. பார்க்கப்பட்ட நாள் 11 July 2024.
  5. Arrangement for Opening Ceremony [1] as accessed on 19 May 2011
  6. "Melaka Manipal Medical College". manipal.edu.
  • Sejarah Perubatan dan Hospital-hospital di Melaka by Lourdes Pitchaimuthu (1997)

வெளி இணைப்புகள்

தொகு