மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம்

மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (மலாய்: Perbadanan Kemajuan Filem Nasional (FINAS); ஆங்கிலம்: National Film Development Corporation Malaysia); என்பது மலேசிய தொடர்பு மற்றும் இலக்கியவியல் துறை அமைச்சின் (Malaysian Prime Minister's Department) கீழ் செயல்படும் மலேசிய அரசாங்கத்தின் ஓர் அரசு நிறுவனமாகும்.[3]

மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம்
National Film Development Corporation Malaysia
Perbadanan Kemajuan Filem Nasional Malaysia

FINAS
மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகச் சின்னம்
துறை மேலோட்டம்
அமைப்பு26.07.1980
ஆட்சி எல்லை மலேசிய அரசாங்கம்
தலைமையகம்Studio Merdeka Complex,
Ulu Klang Road, 68000
அம்பாங், சிலாங்கூர்
ஆண்டு நிதிMYR 35,000,000 (2023)[1]
அமைச்சர்
வலைத்தளம்
www.finas.gov.my

மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம்; அமெரிக்காவில் உள்ள மோசன் பிக்சர் அசோசியேசன் ஆப் அமெரிக்கா (Motion Picture Association of America) எனும் திரைப்பட கழகத்தைப் போன்றது. 2013-இல், மலேசியாவில் ஒரு தனி திரைப்பட நிறுவனத்தை உருவாக்குவதற்காக, இந்தத் திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மலேசியாவின் பிலிம் நெகாரா மலேசியாவுடன் (Filem Negara Malaysia) (FNM) இணைக்கப்பட்டது.[4]

வரலாறு தொகு

மலேசியாவில் ஒரு திரைப்பட நிறுவனத்தை உருவாக்குவதற்கான முயற்சியில், 1980 சூலை 26-ஆம் தேதி, மலேசிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட தேசிய திரைப்பட மேம்பாட்டுக் குழுவினர் (National Film Development Committee) எடுத்த முடிவின் விளைவாக உருவானதே மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் (FINAS) எனும் 'பினாசு' ஆகும்.

1981 சூன் 1-ஆம் தேதி மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் அமைக்கப்பட்டது. முதலில் அம்பாங் சாலையில் (Jalan Ampang) செயல்படத் தொடங்கியது. பின்னர் 19 திசம்பர் 1988-இல் உலு கிள்ளான் (Hulu Kelang) மெர்டேகா திரைப்பட பணியரங்கம் (Studio Merdeka Complex) எனும் வளாகத்திற்கு மாற்றப்பட்டது. டான்ஸ்ரீ அப்துல் சாமட் இட்ரிசு (Tan Sri Abdul Samad Idris) என்பவர் அதன் தலைவர் பொறுப்பை ஏற்றார்.[5]

அமைச்சு மாற்றங்கள் தொகு

27 திசம்பர் 2004 முதல், மலேசிய திரைப்பட மேம்பாட்டு கழகம் மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சின் (Ministry of Culture, Arts and Heritage of Malaysia) கீழ் கொண்டு வரப்பட்டது. பின்னர் 2008-இல் கலை மற்றும் பாரம்பரிய கலாசார ஒற்றுமை அமைச்சிற்கு (Ministry of Arts and Heritage Culture Unity) மாற்றப்பட்டது. ஏப்ரல் 2008 முதல், தகவல் தொடர்பு மற்றும் கலாசார அமைச்சின் (Ministry of Information, Communication and Culture) கீழ் கொண்டு வரப்பட்டது.

பின்னர் இந்தக் கழகம் மலேசியாவில் நடைபெறும் திரைப்படச் செயல்பாடுகளை ஊக்குவிப்பதிலும் ஈடுபட்டது. 1986-ஆம் ஆண்டில், முதலீட்டாளர்கள் ஊக்குவிப்புச் சட்டம் 1986 (Investors Promotion Act 1986) அமலாக்கம் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து உள்ளூர் திரைப்படங்கள் மற்றும் காணொலி தயாரிப்பு நடவடிக்கைகளைத் தணிக்கை (Censure) செய்யத் தொடங்கியது.

பொழுதுபோக்கு மானியத் திட்டம் தொகு

1987-இல் திரைப்பட கழகத்தை (Film Academy) நிறுவியது. திரைப்படத் தயாரிப்பில் ஆர்வமுள்ள ஊழியர்களுக்கு குறுகிய கால பயிற்சி, சான்றிதழ் மற்றும் டிப்ளமோ கல்வித் தகுதிகலை வழங்குவதில் முனைப்புக் காட்டியது. கூடுதலாக, உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர்களும் கேளிக்கை மானியத் திட்டத்தின் (Entertainment Grants Scheme) கீழ் அரசாங்கத்தின் நிதிச் சலுகைகளைப் பெற்றனர்.[6]

மலேசியாவில் திரைப்படத் தயாரிப்பை ஊக்குவிக்க, மலேசியத் திரைப்பட மேம்பாட்டு கழகமும் கடன் வசதிகளை வழங்கியது; படப்பிடிப்பு உபகரணங்களை வாடகைக்கு (Rental of Shooting Equipments) கொடுத்தது; திரைப்பட தயாரிப்பு வசதிகள் (Film Production Facilities), முன்னோட்டக் காட்சிகளுக்கான அரங்குகள் மற்றும் திரைப்பட பணியரங்க வசதிகளை (Preview Halls and Studios) செய்து கொடுத்தது.

அத்துடன் தகவல் அமைச்சின் மூலமாக அரசாங்க தொலைக்காட்சி விளம்பரங்களில் (Government Television Advertisements) 50% தள்ளுபடியை வழங்கியது. அதன் மூலம் உள்ளூர் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு நேரடியாகவே அரசாங்கம் உதவியது.

கட்டாய விதிமுறைகள் தொகு

மலேசிய திரைப்படத் துறையை மேம்படுத்தும் முயற்சியில் அரசாங்கம் ஜனவரி 1991 முதல் சில கட்டாய விதிமுறைகளையும் (Compulsory Terms) அமல்படுத்தியது.[7]

2020 சூலை 20-ஆம் தேதி, மலேசியாவில் அனைத்து காணொலி பதிவுகளுக்கும் உரிமம் விதிக்கப்படும் என்று மலேசிய சுற்றுலா, கலை மற்றும் பண்பாட்டு அமைச்சு அறிவித்தது. அதில் சமூக ஊடகப் பதிவுகளும் அடங்கும். இருப்பினும் 2 நாட்களுக்குப் பிறகு, 2020 சூலை 25-ஆம் தேதி அந்த அறிவிப்பு அரசாங்கத்தால் மீட்டுக் கொள்ளப்பட்டது.[8][9]

மேற்கோள்கள் தொகு

  1. "KEMENTERIAN KOMUNIKASI DAN DIGITAL (2022 – 2023)" (PDF). பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  2. "தமிழ் ஊடகங்களுடன் இணைந்து செயல்படுவோம் என்று தகவல் தொடர்பு, பல்லூடக துணையமைச்சர் தியோ நீ சிங் கூறினார். கல்வி துணையமைச்சராக இருந்த போது தமிழ் ஊடகங்களின் பிரதிநிதிகளை சந்திப்பதை வழக்கமாக கொண்டிருந்தேன். இந்திய சமுதாயத்திற்கு கொண்டு செல்லும் பாலமாக இந்த ஊடகங்கள் விளங்குகின்றன". Nambikkai. 6 March 2023. பார்க்கப்பட்ட நாள் 20 May 2023.
  3. Akmal Abdullah (3 June 2012). "FINAS is 31 years old". Berita Harian. https://www.klik.com.my/item/story/5374481/finas-sudah-31-tahun. பார்த்த நாள்: 26 August 2018. 
  4. FINAS And Film Negara Merged To Form A Single Film Corporation Umno Online. Retrieved 28 November 2012.
  5. "Today's filmmaking challenges". Kosmo. 25 October 2015. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
  6. "Finas urged to strengthen local film industry". The Malaysian Times. 10 January 2013. பார்க்கப்பட்ட நாள் 17 January 2013.
  7. Shazryn Mohd Faizal (6 August 2015). "No more pampering from Finas". The Rakyat Post. பார்க்கப்பட்ட நாள் 17 January 2016.
  8. "All filming, even on social media, requires licence, says Saifuddin".
  9. "No licence needed for social media videos after all". The Star (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-03-27.

மேலும் காண்க தொகு

வெளி இணைப்புகள் தொகு