மலேசிய பொருளாதார அமைச்சு

மலேசிய பொருளாதார அமைச்சு (மலாய்: Kementerian Ekonomi Malaysia; ஆங்கிலம்: Ministry of Economy) (MOE) என்பது மலேசிய அரசாங்க அமைச்சுகளில் ஒன்றாகும். இந்த அமைச்சு தொடக்கத்தில் பிரதமர் துறையின் கீழ் தனி ஒரு துறையாக இருந்தது; மற்றும் ஓர் அமைச்சரால் நிர்வகிக்கப்பட்டது. அப்போது அந்தத் துறையின் கீழ் பொருளாதாரத் திட்டமிடல் பிரிவு (Economic Planning Unit) இயங்கி வந்தது.

மலேசிய பொருளாதார அமைச்சு
Kementerian Ekonomi
Ministry of Economy


(MOE)
துறை மேலோட்டம்
அமைப்புமே 21, 2018 (2018-05-21)
முன்னிருந்த
  • பொருளாதாரப் பணி அமைச்சு
ஆட்சி எல்லைமலேசிய அரசாங்கம்
தலைமையகம்Menara Prisma, No. 26, Persiaran Perdana, Presint 3, Pusat Pentadbiran Kerajaan Persekutuan, 62675 புத்ராஜெயா
அமைச்சர்
துணை அமைச்சர்
  • அனிபா அஜார் தாயிப்
    (Hanifah Hajar Taib),
    * 1. துணை நிதியமைச்சர்
அமைப்பு தலைமை
  • நோர் அசுமி டிரோன்
    (Nor Azmi Diron),
    * பொதுச் செயலர்
வலைத்தளம்www.ekonomi.gov.my

பின்னர் 21 மே 2018-ஆம் தேதி, பொருளாதாரச் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மகாதீர் பின் முகமதுவால் ஒரு பொருளாதார அமைச்சு புதிதாக உருவாக்கப்பட்டது.

பொது

தொகு

2020-ஆம் ஆண்டில் மலேசியாவில் ஓர் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. அதன் விளைவாக, மலேசியாவின் அரசியல் அதிகாரத்தை பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி கைப்பற்றிக் கொண்டது. அரசாங்கம் மாறியதும், இந்தப் பொருளாதார அமைச்சு மீண்டும் பிரதமர் துறையின் கீழ் இணைக்கப்பட்டது.

அன்வார் இப்ராகிம் அமைச்சரவை ஆட்சிக்கு வந்ததும், அதே அமைச்சு மீண்டும் நிறுவப்பட்டு, பொருளாதார அமைச்சு என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2 டிசம்பர் 2022 அன்று, பிரதமர், டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம், புதிய பொருளாதார அமைச்சராக ராபிசி ராம்லியை நியமித்தார்.[1]

பிரிவுகள்

தொகு
பொருளாதார அமைச்சின் உள்பிரிவுகள்
உள் அமைப்பு
(ஆங்கிலம்)
உள் அமைப்பு
(தமிழ்)
குறிப்புகள்
Economic Action Council பொருளாதார நடவடிக்கை மன்றம் தலைமைச் செயலாளர் தலைமையில்
Development Budget Division வரவு செலவு மேம்பாட்டுப் பிரிவு
Corporate Communications Unit நிறுமத் தொடர்பு பிரிவு
Integrity Unit ஒழுங்கமைவு பிரிவு
Internal Audit Unit உள் தணிக்கை பிரிவு
Legal Division சட்டப் பிரிவு
Management and Financial Services Division நிதி மேலாண்மை பிரிவு மூத்த செயலாளர் (மேலாண்மை) பொறுப்பு
Human Resources மனித வளம்
Accounts Department கணக்குத் துறை
Infrastructure and Public Facilities Division உள்கட்டமைப்பு மற்றும் பொது வசதிகள் பிரிவு துணை தலைமைச் செயலாளர் (பகுதி) பொறுப்பில்
Bahagian Pertanian வேளாண்மைத் துறை
Value Management Division மதிப்பீட்டு மேலாண்மை பிரிவு
Energy Division ஆற்றல் துறை
The Safety and Public order பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு
Macro Economics Division பேரியப் பொருளியல் பிரிவு துணை தலைமைச் செயலாளர் பொறுப்பின் கீழ்
Service Industry Division சேவைத் தொழில் பிரிவு
Division of Manufacturing Industry, Science and Technology உற்பத்தித் தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவு
Environmental Economics and Natural Resources Division சுற்றுச்சூழல் பொருளாதாரம் மற்றும் இயற்கை வளங்கள் பிரிவு
K-Economics Section K-பொருளாதாரப் பிரிவு
Development Division உருவாக்கப் பிரிவு
Information Management Department தகவல் மேலாண்மை துறை
Statistical Units புள்ளியியல் பிரிவுகள்
Equity Development Division ஒப்புரவு மேம்பாட்டுப் பிரிவு துணைத் தலைமைச் செயலாளர் தலைமையில்
Division of Social Services சமூகச் சேவைகள் பிரிவு
Regional Development Division மண்டல வளர்ச்சிப் பிரிவு
Human Capital Development Division மனித மூலதன மேம்பாட்டுப் பிரிவு
Coordination, Control and Monitoring Division ஒருங்கிணைப்பு, கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு பிரிவு
Economic Action Council Secretariat பொருளாதார நடவடிக்கை மன்றச் செயலகம்
International Cooperation Division பன்னாட்டு ஒத்துழைப்பு பிரிவு

சான்றுகள்:[2]

மேலும் காண்க

தொகு

சான்றுகள்

தொகு
  1. "Sejarah". Portal Rasmi Kementerian Ekonomi Malaysia. பார்க்கப்பட்ட நாள் 2023-12-14.{{cite web}}: CS1 maint: url-status (link)
  2. "Agensi Di Bawah Kementerian Ekonomi". Portal Rasmi Kementerian Ekonomi Malaysia. 2022-12-27. பார்க்கப்பட்ட நாள் 2023-12-15.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

தொகு