மலேசிய விண்வெளி நிறுவனம்
மலேசிய விண்வெளி நிறுவனம் (மலாய்: Agensi Angkasa Malaysia; ஆங்கிலம்: Malaysian Space Agency) (MYSA); என்பது மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சின் கீழ் உள்ள ஒரு மலேசிய அரசு நிறுவனம் ஆகும்.[1][2]
Malaysian Space Agency Agensi Angkasa Malaysia MYSA | |
அங்காசா விண்வெளித் திட்டம், 2007 | |
துறை மேலோட்டம் | |
---|---|
அமைப்பு | 20 பெப்ரவரி 2019 |
முன்னிருந்த அமைப்புகள் |
|
ஆட்சி எல்லை | மலேசிய அரசாங்கம் |
தலைமையகம் | No.13, Jalan Tun Ismail, 50480 கோலாலம்பூர் மலேசியா 03°08′52″N 101°41′43″E / 3.14778°N 101.69528°E |
மூல அமைப்பு | மலேசிய அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சு |
வலைத்தளம் | www |
20 பிப்ரவரி 2019 அன்று, மலேசிய தொலையுணர் நிறுவனம் (Malaysian Remote Sensing Agency) மற்றும் மலேசியாவின் அங்காசா விண்வெளித் திட்டம் (Malaysian National Space Agency) ஆகிய இரண்டு அமைப்புகளையும் இணைத்து, மலேசிய விண்வெளி நிறுவனம் எனும் புதிய நிறுவனத்தை அமைப்பதற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.[3]
பொது
தொகுமார்ச் 2019-இல், தொழில்நுட்பம், உள்கட்டமைப்பு, விண்வெளி பயன்பாட்டு மேம்பாட்டில்; மலேசிய விண்வெளி நிறுவனம் கவனம் செலுத்தும் என்று மலேசிய எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத் துறை அமைச்சர் யோ பீ யின் (Yeo Bee Yin) அறிவித்தார்.
சுற்றுச்சூழல், இயற்கை வளங்கள், உணவுப் பாதுகாப்பு, பேரிடர் மேலாண்மை; மற்றும் காலநிலை மாற்ற மேலாண்மை; ஆகியவற்றின் அடிப்படையில், பல்வேறு பொது நிறுவனங்களுக்கு உதவுவதற்காகவும்; செயற்கைக் கோள் தரவுகள் மற்றும் தகவல்களைச் சேகரிப்பதற்கும்; மலேசிய விண்வெளி நிறுவனம் உதவி புரியும் என்றும் அவர் கூறினர்.
சேகரிக்கப்பட்ட தரவுகளும் தகவல்களும், தனியார் துறையுடன் பகிர்ந்து கொள்ளப்படும் என்றும்; தனியார் துறையின் சொந்த புத்தாக முறைமைகளுக்கு அந்தத் தரவுகளும் தகவல்களும் உதவும் என்றும் அவர் கூறினர். 2020-ஆம் ஆண்டு தொடக்கம், துவான் அஜி அசுலிகாமில் நாபியா (Tuan Haji Azlikamil Napiah) என்பவர் மலேசிய விண்வெளி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகப் பொறுப்பு வகிக்கிறார்.[4]
செயல்பாடுகள்
தொகு- தொழில்நுட்பம், பயன்பாடுமற்றும் விண்வெளி அறிவியல் துறையில்; நாட்டின் திறனை மேம்படுத்துதல்
- ஆய்வு மற்றும் அறிவியல் மேம்பாடுகளைச் செயல்படுத்துதல்
- விண்வெளி தொழில்நுட்ப பயன்பாடுகள், விண்வெளி அறிவியல் ஆகியவற்றில் முழுமையான தீர்வுகளை வழங்குதல்
- தேசிய விண்வெளி நிலையத்தின் மூலம் செயற்கைக் கோள் தரவுகளைப் பெறுதல்
- பல்வேறு துறைகளில் பயன்பாட்டிற்கான தகவல்களை உருவாக்குதல்
- தேசிய விண்வெளிக் கொள்கையைச் செயல்படுத்துதல்
- தற்போதைய தேசியக் கொள்கையின் மதிப்பைக் கூட்டுதல்
- உள்ளூர் நிபுணத்துவத்தை வலுப்படுத்தல்
- விண்வெளி தொழில்நுட்ப ஆராய்ச்சியின் வழி, பன்னாட்டு ஒத்துழைப்பை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்[5]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Federation, International Astronautical. "IAF : Malaysian Space Agency (MYSA)". www.iafastro.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "Malaysian Space Agency - RADARS MOSTI". radars.mosti.gov.my. பார்க்கப்பட்ட நாள் 20 September 2024.
- ↑ "Background". Malaysian Space Agency (MYSA). Archived from the original on 10 ஆகஸ்ட் 2020. பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Management". Malaysian Space Agency (MYSA). பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.
- ↑ "Function". Malaysian Space Agency (MYSA). பார்க்கப்பட்ட நாள் 10 July 2020.