மவுனா லோவா (Mauna Loa, /ˌmɔːnə ˈl.ə/; நீண்ட மலை[2]) என்பது ஐக்கிய அமெரிக்கா, அவாய் தீவில் அமைந்துள்ள ஐந்து எரிமலைகளுள் ஒன்றாகும். இதுவே உலகில் உள்ள எரிமலைகளில் மிகப்பெரியதாகக் கருதப்படுகிறது. 2,035 சதுர மைல்கள் (5,271 சதுர கிலோமீட்டர்) பரப்பளவுடையது. கடல் மட்டத்தில் இருந்து 13,680 அடி உயரத்தில் மௌனா லோவாவின் உச்சி அமைந்துள்ளது. செயல்படும் கேடய எரிமலை வகையைச் சேர்ந்த இந்த எரிமலை அண்ணளவாக 75,000 கிமீ3 கனவளவைக் கொண்டது.[3] ஆனாலும், இதன் உயரம் இதன் அருகிலுள்ள மவுனா கியா எரிமலையை விட 37 மீ குறைவானதாகும். இதன் எரிமலைக் குழம்பு அதிகமான நீர்ம நிலையிலும், சிலிக்கா-குறைவானதாகவும், வெடிக்கும் தன்மை அற்றதாகவும் உள்ளது.

மவுனா லோவா
மவுனா லோவா எரிமலை
உயர்ந்த புள்ளி
உயரம்13,679 அடி (4,169 m)[1]
புடைப்பு7,079 அடி (2,158 m)
புவியியல்
அமைவிடம்ஹவாய், அமெரிக்க ஐக்கிய நாடு
மூலத் தொடர்ஹவாய் தீவுகள்
நிலவியல்
பாறையின் வயது700,000–1 மில்லியன்
மலையின் வகைகேடய எரிமலை
கடைசி வெடிப்புமார்ச் - ஏப்ரல் 1984
ஏறுதல்
முதல் மலையேற்றம்பண்டைய காலங்கள்
எளிய வழிஅய்னாபோ பாதை
எரிகற்குழம்பு

மவுனா லோவா எரிமலை 700,000 ஆண்டுகளாக வெடித்து வருவதாகவும், 400,000 ஆண்டுகளுக்கு முன்னர் இது கடல்-மட்டத்தில் தோன்றியதாகவும் கருதப்படுகிறது. இவ்வெரிமலையில் இருந்து அறியப்பட்ட பாறைகள் 200,000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானதல்ல.[2]

கடைசியாக இவ்வெரிமலை வெடித்தது 1984 மார்ச் 24 முதல் ஏப்ரல் 15 வரையான காலப்பகுதியிலாகும். அண்மைக்கால வெடிப்புகள் பெரும் சேதங்களை உண்டுபண்ணாத போதிலும், 1926 இலும் 1950 இலும் ஏற்பட்ட வெடிப்புகள் பல கிராமங்களை அழித்தன. ஹைலோ நகரம் 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் ஏற்பட்ட கற்குழம்புகளினால் பகுதியாக உருவாக்கப்பட்டதாகும்.[4][5]

மேற்கோள்கள்

தொகு
  1. "Mauna Loa, Hawaii". Peakbagger.com. பார்க்கப்பட்ட நாள் 12 December 2012.
  2. 2.0 2.1 "Mauna Loa: Earth's Largest Volcano". ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 2-02-2006. Archived from the original on 2015-08-09. பார்க்கப்பட்ட நாள் 21-10-2015. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Kaye, G.D.(2002). "Using GIS to estimate the total volume of Mauna Loa Volcano, Hawaii". {{{booktitle}}}. பரணிடப்பட்டது 2009-01-25 at the வந்தவழி இயந்திரம்
  4. "The Mauna Loa Eruption of 1984". Hawaiian Volcano Observatory—ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 26-03-1998. Archived from the original on 2013-01-28. பார்க்கப்பட்ட நாள் 24-01-2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  5. "1984 Eruption: March 25 - April 15". Hawaiian Volcano Observatory—ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை. 17-09-2004. Archived from the original on 2013-01-31. பார்க்கப்பட்ட நாள் 24-01-2013. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுனா_லோவா&oldid=3613672" இலிருந்து மீள்விக்கப்பட்டது