மஹேந்திரா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி)

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி

மஹேந்திரா பொறியியல் கல்லூரி (தன்னாட்சி) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த கல்வி நிறுவனத்தில் சுமார் 10000 மாணவ மாணவியர் பொறியியல் சார்ந்த பல படிப்புகளை கற்று வருகின்றனர். இந்த கல்லூரி இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திர பொறியியல், கட்டட பொறியியல், மின் மற்றும் மின்னணு பொறியியல்,கணினி அறிவியல் மற்றும் பொறியியல், தகவல் தொழில்நுட்பம் என பல துறைகள் சார்ந்த பொறியியல் படிப்புகள் மற்றும் முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்பில் இயந்திர பொறியியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் என பல துறைகள் சார்ந்த பொறியியல் படிப்புகள் மற்றும் முதுகலை வணிக மேலாண்மை, கணினி கணினி பயன்பாடு ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.

மஹேந்திரா பொறியியல் கல்லூரி
முதன்மை கட்டிடம்
வகைதன்னாட்சி
உருவாக்கம்1995
Academic affiliation
அண்ணா பல்கலைக்கழகம்
தலைவர்எம்.ஜி. பரத் குமார்
அமைவிடம்,
11°28′40″N 77°59′59″E / 11.477815°N 77.999737°E / 11.477815; 77.999737
இணையதளம்http://www.mahendra.info

அமைவிடம் தொகு

மஹேந்திரா பொறியியல் கல்லூரி இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நாமக்கல் மாவட்டத்தின் மல்லசமுத்திரம் என்ற ஊரில் SH86-A மாநில நெடுஞ்சாலை என்ற (திருச்செங்கோடு-சேலம்) சாலையின் இடது புறம் அமைந்துள்ள ஒரு தன்னாட்சி பெற்ற பொறியியல் கல்லூரி ஆகும்.

வரலாறு தொகு

திரு.எம்.ஜி.பரத் குமார் என்பவர் 1995 ஆம் ஆண்டில் இந்த கல்லூரிரை நிறுவினார்.[1] [2] மேலும் இவர் இக்கல்லூரியின் தாளாளரும் ஆவார்.

வசதிகள் தொகு

மஹேந்திரா பொறியியல் கல்லூரி சுமார் 250 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இக் கல்லூரியில் இருந்து மாணவ மாணவியர் வசதிக்காக 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சேலம் மாநகருக்கும், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருச்செங்கோடு நகருக்கும், நாமக்கல் நகருக்கும் மற்றும் ஈரோடு மாநகருக்கும் கல்லூரி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.[3] தமிழ்நாடு, கேரளா, ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம், பிகார், டில்லி, ராஜஸ்தான், மணிப்பூர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் என இந்திய நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் மற்ற நாடுகளில் இருந்தும் மாணவ மாணவியர் பொறியியல் சார்ந்த படிப்புகளை கற்க இங்கு வருகின்றனர். இங்கு மாணவர்கள் மற்றும் மாணவியர்கள் என இரு பாலருக்கும் தனித்தனியாக உணவு விடுதி மற்றும் தங்கும் விடுதிகள் கல்லூரியின் வளாகத்தின் உள்ளேயே அமைந்துள்ளது. இளங்கலை, முதுகலை மற்றும் புதிய மாணவ மாணவிகளுக்கு தனித்தனியாக வசதிகள் அமைந்துள்ளது.

மகேந்திரா பொறியியல் கல்லூரி சமூகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளை சார்ந்த மாணவ மாணவிகள் பயின்று நன்மை பெற அமைக்கப்பட்டது. ஊக்கத்தொகை மற்றும் உதவித்தொகைகள் தேவைப்படும் மாணவ மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. கல்லூரியில் கல்விக்கட்டணம் அண்ணா பல்கலைக்கழகம் நிர்ணயம் செய்த அளவே பெறப்படுகிறது. படிப்பில் சிறந்து விளங்கும் மாணவ மாணவிகளுக்கு ஊக்கமும் உதவிகளும் வழங்கப்படுகிறது.

ஒப்புதல் தொகு

தென்னிந்தியாவில் தொழில்நுட்பக் கல்வியில் ஒரு முன்னோடி மகேந்திரா கல்வி அறக்கட்டளையால் நிறுவப்பட்டது. இது 1980 ஆம் ஆண்டு முதல் கல்வியை வழங்கி வருகிறது.

மகேந்திரா பொறியியல் கல்லூரி கீழ்க்கண்ட

மூலம் ஒப்புதல் பெறப்பட்ட கல்லூரி ஆகும்.

படிப்புகள் தொகு

மகேந்திரா பொறியியல் கல்லூரி இளங்கலைப் பொறியியல் பட்டப்படிப்புகள், முதுகலைப் பொறியியல் பட்டப்படிப்புகள் மற்றும் முதுகலை வணிக மேலாண்மை, முதுகலை கணினி பயன்பாடு ஆகிய படிப்புகள் கற்பிக்கப்படுகிறது.[4]

இளங்கலை படிப்புகள் (பிஇ) தொகு

முதுகலை படிப்புகள் (எம்.இ) தொகு

மற்றும்

நடவடிக்கைகள் தொகு

இந்திய தேசிய மாணவர் படையின் இந்திய வான்படை பிரிவின் 5வது பிரிவான தமிழ்நாடு பிரிவு மகேந்திரா பொறியியல் கல்லூரியில் ஒவ்வொரு கல்வியாண்டில் சுமார் 50 மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்து வருகிறது. இந்த காலகட்டத்தில் நிறுவண அளவில், மாநில அளவில் மற்றும் தேசிய அளவில் தகுதி தேர்வு நடத்தி சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றது. மகேந்திரா பொறியியல் கல்லூரியில் தேசிய மாணவர் படைக்கான பயிற்சி வழங்குதல் சார்ந்த பல உபகரணங்கள் உள்ளன. இதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு பயிற்சியளித்தும் மற்றும் சமுக சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். [5]

மேற்கோள்கள் தொகு

  1. "தாளாளர்".
  2. "வரலாறு".
  3. "வசதிகள்".
  4. "பாடபிரிவுகள்".
  5. "இந்திய தேசிய மாணவர் படை".