மாநில தேர்தல் ஆணையம் (இந்தியா)

மாநில தேர்தல் ஆணையம் (State election commission) என்பது சுதந்திரமான, நியாயமான மற்றும் நடுநிலையான முறையில் தேர்தல்கள் நடத்தப்படுவதை உறுதி செய்வதற்காக இந்தியாவின் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய பகுதிகளில் செயல்படும் தன்னாட்சி பெற்ற அரசியலமைப்பு அமைப்பு ஆகும். இந்திய அரசியலமைப்பு சட்டப்பிரிவு 324-இன் படி தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களை இது பாதுகாக்கிறது. இந்தியாவில் உள்ள மாநில தேர்தல் ஆணையம், ஊராட்சி, நகராட்சிகள், மாநகராட்சிகள் போன்ற நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்கள் மற்றும் இந்தியத் தேர்தல் ஆணையத்தால் குறிப்பிடப்பட்ட பிற தேர்தல்களுக்குப் பொறுப்பாகும். மாநில தேர்தல் ஆணைய அமைப்பு மாநில ஆளுநரால் நியமிக்கப்படுகிறது.

வரலாறும் நிர்வாகமும் தொகு

அந்தந்த மாநிலங்களுக்கான இந்தியாவில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அதிகாரங்களின்படி உருவாக்கப்பட்டது. இது 1950ஆம் ஆண்டு [1] மாநில அளவிலான தேர்தல்களை மேற்பார்வையிட உருவாக்கப்பட்ட அமைப்பாகும்.[2] மாநில தேர்தல் ஆணையர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுகிறார்.[3][4] இப்பதவியின் சுயாட்சியை உறுதி செய்வதற்காக, உயர் நீதிமன்ற நீதிபதிக்குக் குறிப்பிடப்பட்ட அடிப்படைகள் மற்றும் முறைகளைத் தவிர, மாநிலத் தேர்தல் ஆணையரைப் பதவியிலிருந்து நீக்க முடியாது.

பொறுப்புகள் தொகு

இந்தியாவில் உள்ள மாநில தேர்தல் ஆணையம் பின்வருவனவற்றிற்குப் பொறுப்பாகும்:

  • மாநிலத்தில் உள்ள மாநகராட்சிகளுக்குத் தேர்தல் நடத்துதல்.
  • மாநிலத்தில் உள்ள ஊராட்சிகளுக்கான தேர்தலை நடத்துதல்.
  • உள்ளாட்சித் தேர்தல்களில் நடத்தை விதிகள் அமல்படுத்தல்.
  • புதிய சேர்த்தல்களுடன் வாக்காளர் பட்டியல்களைப் புதுப்பித்தல்.
  • வாக்காளர் பட்டியலில் ஏதேனும் பிழைகள் இருந்தால், அவற்றை அகற்றுதல்.

கட்டமைப்பு தொகு

மாநிலத் தேர்தல் ஆணையமானது தலைமைத் தேர்தல் அதிகாரி[2] மற்றும் அந்தந்த மாநில அரசாங்கங்களின் சட்டங்களின்படி குறிப்பிடப்பட்ட உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்களை உள்ளடக்கியது. மாநில தேர்தல் ஆணையர்கள் மத்திய அல்லது மாநில அரசு நிறுவனங்களில் பதவி அல்லது பதவியை வகிக்காத சுதந்திரமான நபர்கள் ஆவர்.[5]

அரசியலமைப்பு தேவைகள் தொகு

73 மற்றும் 74 ஆவது அறிவிப்புடன் அரசியலமைப்பு திருத்தத்திற்குப் பிறகு மாநில தேர்தல் ஆணையம் உருவாக்கப்பட்டது.[6] அரசியலமைப்பின் 243கே விதியின்படி மாநில தேர்தல் ஆணையங்கள் உருவாக்கப்பட்டன. இது சட்டப்பிரிவு 324ன் படி இந்தியத் தேர்தல் ஆணையத்தை அமைப்பது போல ஆகும்.[2]

மாநில தேர்தல் ஆணையங்களின் பட்டியல் தொகு

இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலம் மற்றும் ஒன்றிய பிரதேசத்திற்கான தேர்தல் ஆணையங்களின் பட்டியல் பின்வருமாறு:

மாநிலம் தேர்தல் ஆணையம்
ஆந்திரப் பிரதேசம் ஆந்திரப் பிரதேச தேர்தல் ஆணையம்
அருணாச்சலப் பிரதேசம் அருணாச்சல பிரதேச மாநில தேர்தல் ஆணையம்
அசாம் அசாம் மாநில தேர்தல் ஆணையம்
பீகார் பீகார் மாநில தேர்தல் ஆணையம்
சத்தீசுகர் சத்தீசுகர் மாநில தேர்தல் ஆணையம்
தில்லி தில்லி மாநில தேர்தல் ஆணையம்
கோவா கோவா மாநில தேர்தல் ஆணையம்
குசராத்து குசராத்து மாநில தேர்தல் ஆணையம்
அரியானா அரியானா மாநில தேர்தல் ஆணையம்
இமாச்சலப் பிரதேசம் இமாச்சலப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம்
ம்மு காசுமீர் சம்மு காசுமீர் மாநில தேர்தல் ஆணையம்
சார்க்கண்ட் சார்கண்ட்டு மாநில தேர்தல் ஆணையம்
கருநாடகம் கருநாடக மாநில தேர்தல் ஆணையம்
கேரளம் கேரள மாநில தேர்தல் ஆணையம்
மத்தியப் பிரதேசம் மத்தியப் பிரதேச மாநில தேர்தல் ஆணையம்
மகாராட்டிரம் மகாராட்டிரா மாநில தேர்தல் ஆணையம்
மணிப்பூர் மணிப்பூர் மாநில தேர்தல் ஆணையம்
மேகாலயா மேகாலயா மாநில தேர்தல் ஆணையம்
மிசோரம் மிசோரம் மாநில தேர்தல் ஆணையம்
நாகாலாந்து நாகாலாந்து மாநில தேர்தல் ஆணையம்
ஒடிசா ஒடிசா மாநில தேர்தல் ஆணையம்
பஞ்சாப் பஞ்சாப் மாநில தேர்தல் ஆணையம்
புதுச்சேரி புதுச்சேரி தேர்தல் ஆணையம்
இராசத்தான் ராஜஸ்தான் மாநில தேர்தல் ஆணையம்
சிக்கிம் சிக்கிம் மாநில தேர்தல் ஆணையம்
தமிழ்நாடு தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம்
தெலங்காணா தெலங்காணா மாநில தேர்தல் ஆணையம்
திரிபுரா திரிபுரா மாநில தேர்தல் ஆணையம்
உத்தரப்பிரதேசம் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் ஆணையம்
உத்தராகண்டம் உத்தரகாண்ட் மாநில தேர்தல் ஆணையம்
மேற்கு வங்காளம் மேற்கு வங்க மாநில தேர்தல் ஆணையம்

மேலும் பார்க்கவும் தொகு

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு