மாந்தர்ரே
மாந்தர்ரே (Monterrey, எசுப்பானிய ஒலிப்பு: [monteˈrei] ( கேட்க)) மெக்சிக்கோவின் வடகிழக்கிலுள்ள நுவோ லியான் மாநிலத்தின் தலைநகரமும் மிகப்பெரும் நகரமும் ஆகும்.[4] மெக்சிக்கோவின் மூன்றாவது மிகப்பெரிய பெருநகரத் தொகுப்பும் ஒன்பதாவது பெரிய நகரமுமாகும்.[5][6] மாந்தர்ரே வடக்கு மெக்சிக்கோவின் வணிக மையமாகவும் பல பன்னாட்டு நிறுவனங்களின் இருப்பிடமாகவும் விளங்குகின்றது.
மாந்தர்ரே, நுவோ லியான் | |
---|---|
நகரம் | |
மாந்தர்ரே | |
அடைபெயர்(கள்): வடக்கின் சுல்தானா, மலைகளின் நகரம் | |
குறிக்கோளுரை: பணியே ஆத்மாவை வலுவாக்குகிறது | |
ஆள்கூறுகள்: 25°40′N 100°18′W / 25.667°N 100.300°W | |
நாடு | மெக்சிக்கோ |
மாநிலம் | நுவோ லியான் |
நிறுவல் | செப்டம்பர் 20, 1596 |
நிறுவப்பட்டபோது | எங்களன்னை மாந்தர்ரேயின் பெருநகர நகரம் (Ciudad Metropolitana de Nuestra Señora de Monterrey) |
தோற்றுவித்தவர் | டியாகோ டெ மான்டெமேயர் |
அரசு | |
• நகரத் தந்தை | அத்ரியன் டெலா கர்சா |
பரப்பளவு | |
• நகரம் | 969.70 km2 (374.40 sq mi) |
• மாநகரம் | 5,346.80 km2 (2,064.41 sq mi) |
ஏற்றம் | 540 m (1,770 ft) |
மக்கள்தொகை (2015[3]) | |
• நகரம் | 11,09,171 [1] |
• அடர்த்தி | 2,532/km2 (6,560/sq mi) |
• பெருநகர் | 47,04,929 [2] |
• பெருநகர் அடர்த்தி | 923/km2 (2,390/sq mi) |
நேர வலயம் | ஒசநே−6 (மத்திய சீர்தர நேரம்[4]) |
• கோடை (பசேநே) | ஒசநே−5 (மத்திய பகலொளி சேமிப்பு நேரம்[4]) |
இணையதளம் | (எசுப்பானியம்) www |
இந்த நகரம் மெக்சிக்கோவின் செல்வச்செழிப்பு மிக்க நகரங்களில் ஒன்றாக விளங்குகின்றது. 2017இல் இதன் மொத்த உள்நாட்டு உற்பத்தி US$142 பில்லியனாக இருந்தது. மாந்தர்ரேயின் கொள்வனவு ஆற்றல் சமநிலைப்படுத்திய தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி கிட்டத்தட்ட US$35,500 ஆக உள்ளது; இது நாட்டின் தனிநபர் உற்பத்தியான US$18,800 போல இருமடங்கானது.[7] இது உலக பீட்டா நகர்களில் ஒன்றாக கருதப்படுகின்றது.[8][9] உலகப் பொதுவர் மாநகராகவும் போட்டிமிகு நகராகவும் உள்ளது.[10] ஆழ்ந்த வரலாறும் பண்பாடும் உள்ள மாந்தர்ரே மெக்சிக்கோவின் மிகவும் முன்னேற்றமடைந்த நகரங்களில் ஒன்றாகும். இது மிகவும் "அமெரிக்கத்தனம்" கொண்ட நகராகவும் குறிப்பிடப்படுகின்றது.[11]
முக்கியமான தொழில் மற்றும் வணிக மையமாக உள்ளதால் மாந்தர்ரேயில் பல மெக்சிக்கோ நிறுவனங்களின் தாயகமாக விளங்குகின்றது; குருப்போ அவாந்தே, இலானிக்சு எலெக்ட்ரானிக்சு, ஓக்ரேசா, CEMEX, வித்ரோ, OXXO, FEMSA, தினா, குரூப்போ ஆல்பா இங்குள்ள சில நிறுவனங்களாகும்.[12][13] இங்குள்ள பன்னாட்டு நிறுவனங்களாவன: சீமென்ஸ், அக்சென்ச்சர், டெர்னியம், சோனி, தோஷிபா, கேரியர், விர்ல்பூல், சேம்சங், டொயோட்டா, பாப்காக் & வில்காக்ஸ், டேவூ, பிரித்தானிய அமெரிக்க புகையிலை, நோக்கியா, டெல், போயிங், எச்டிசி, ஜெனரல் எலக்ட்ரிக், ஜான்சன் கன்ட்ரோல்சு, கமேசா, எல்ஜி, SAS நிறுவனம், குருண்ட்போசு, டான்போசு, குவால்போன், டெலிபர்பார்மன்சு[6][14][15]
வடகிழக்கு மெக்சிக்கோவில், மாத்ரே ஓரியன்டல் மலையின் அடிவாரத்தில் மாந்தர்ரே அமைந்துள்ளது. இந்த குடியிருப்பை 1596இல் டியாகோ டெ மான்ட்மேயர் நிறுவினார். மெக்சிகோ விடுதலைப் போருக்குப் பின்னர் மாந்தர்ரே ஓர் முக்கியமான வணிக மையமாக மாறியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
- ↑ http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
- ↑ http://cuentame.inegi.org.mx/monografias/informacion/NL/Poblacion/default.aspx?tema=ME&e=19
- ↑ 4.0 4.1 4.2 "Ubicación Geográfica". Gobierno del Estado de Nuevo León. பார்க்கப்பட்ட நாள் June 24, 2009.
- ↑ "2010 INEG Census Tables". INEG. Archived from the original on May 2, 2013. பார்க்கப்பட்ட நாள் June 4, 2011.
- ↑ 6.0 6.1 "NAI Mexico Study" (PDF). NAI Mexico. Archived from the original (PDF) on May 27, 2010. பார்க்கப்பட்ட நாள் January 7, 2009.
- ↑ "Archived copy". Archived from the original on June 4, 2013. பார்க்கப்பட்ட நாள் November 18, 2014.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ "The World According to GaWC 2010". Globalization and World Cities Research Network. Archived from the original on February 1, 2013. பார்க்கப்பட்ட நாள் August 20, 2012.
- ↑ "GaWC - The World According to GaWC 2010".
- ↑ "Archived copy" (PDF). Archived from the original (PDF) on May 16, 2012. பார்க்கப்பட்ட நாள் May 9, 2012.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link) - ↑ Joseph Contreras (March 16, 2009). In the Shadow of the Giant: The Americanization of Modern Mexico. Rutgers University Press. p. 276. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8135-4482-3. பார்க்கப்பட்ட நாள் August 13, 2012.
- ↑ Rovelo, Carlos A. (2002). "Breeding success in Monterrey: Mexico's industrial powerhouse provides an end market for many secondary commodities – 2002 Latin-American Markets Supplement". BNET இம் மூலத்தில் இருந்து November 9, 2011 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20111109054538/http://findarticles.com/p/articles/mi_m0KWH/is_9_40/ai_92724941/?tag=content%3Bcol1. பார்த்த நாள்: July 1, 2009.
- ↑ "Beer Me! – Cervecería Cuauhtémoc-Moctezuma – Monterrey, Nuevo León, México". beerme.com. Archived from the original on January 4, 2014. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.
- ↑ "Journal of Business Research: Carrier Mexico S.A. de C.V." (Web/பி.டி.எவ்). Journal of Business Research 50: 97–110. doi:10.1016/S0148-2963(98)00111-8. http://www.sciencedirect.com/science?_ob=ArticleURL&_udi=B6V7S-417FB6N-C&_user=10&_rdoc=1&_fmt=&_orig=search&_sort=d&_docanchor=&view=c&_searchStrId=945653660&_rerunOrigin=google&_acct=C000050221&_version=1&_urlVersion=0&_userid=10&md5=af905e9d93ea0ef91f38d8cca23d9e92. பார்த்த நாள்: July 1, 2009.
- ↑ "Teleperformance Mexico S.A. de C.V." Monterrey, Mexico: goliath.ecnext.com. Archived from the original on June 15, 2011. பார்க்கப்பட்ட நாள் July 1, 2009.