மினி
மினி | |
---|---|
மினி மம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | மினி செகர்சு மற்றும் பலர் 2019
|
மாதிரி இனம் | |
மினி மம் செகர்சு மற்றும் பலர் 2019 | |
உயிரியற் பல்வகைமை | |
3 சிற்றினங்கள் |
மினி (Mini-frog) என்பது சிறிய கூர்வாய்த் தவளை சிற்றினமாகும். இவை தென்கிழக்கு மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும். இவை தாழ் நிலக் காடுகளில் இலைக் குப்பைகளுக்கு மத்தியில் வாழ்கின்றன. மூன்று சிற்றினங்கள் இந்தப் பேரினத்தின் கீழ் அறிவியல் ரீதியாக 2019-ல் விவரிக்கப்பட்டுள்ளன. இவை பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் இன்னும் மதிப்பிடப்படவில்லை என்றாலும், இவை மிகச் சிறிய வரம்புகளைக் கொண்டுள்ளன. இவற்றில் இரண்டு மிக அருகிய இனம் உள்ளன. மினி ஏச்சர் சிற்றினம் குறித்ததரவுகள் போதாது என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.[1][2]
இவை சுமார் 8 முதல் 11.5 மி.மீ நீளமுடையது. மினி மம் மற்றும் மினி இசுயுள் உலகின் மிகச்சிறிய தவளை ஆகும். இப்பேரினத்தில் மிகவும் பெரிய தவளை மினி ஏச்சர் மட்டுமே. இது 15 மி.மீ. நீளமுடையது.[1][2][3][4] இவற்றை முன்பு மடகாசுகரில் உள்ள சிறிய தவளைப் பேரினமான இசுடம்ப்பியா உடன் ஒற்றுமைப்படுத்திக் குழப்பமடைந்தனர். இவை அனைத்தும் பழுப்பு நிறத் தவளைகளுடன் உருமறைப்பு கொள்கின்றன.[1]
சிற்றினங்கள்
தொகுமினி பேரினத்தில் தற்போது 3 சிற்றினங்கள் உள்ளன. அவை:[1]
- மினி ஏச்சர் செர்சு மற்றும் பலர்., 2019
- மினி மம் செர்சு மற்றும் பலர்., 2019
- மினி இசுகுல் செர்சு மற்றும் பலர்., 2019
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 Scherz, Mark D.; Hutter, Carl D.; Rakotoarison, Andolalao; Riemann, Jana C.; Rödel, Mark-Oliver; Ndriantsoa, Serge H.; Glos, Julian; Roberts, Sam Hyde et al. (2019-03-27). "Morphological and ecological convergence at the lower size limit for vertebrates highlighted by five new miniaturised microhylid frog species from three different Madagascan genera" (in en). PLOS ONE 14 (3): e0213314. doi:10.1371/journal.pone.0213314. பன்னாட்டுத் தர தொடர் எண்:1932-6203. பப்மெட்:30917162. Bibcode: 2019PLoSO..1413314S.
- ↑ 2.0 2.1 Donahue, Michelle Z. (2019-03-27). "New staple-size frog is one of the tiniest ever discovered". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
- ↑ Scherz, Mark D. "Meet the mini frogs of Madagascar -- the new species we've discovered". The Conversation (in ஆங்கிலம்).
- ↑ Solly, Meilan (28 March 2019). "Meet Mini mum, Mini scule and Mini ature, Three New Frog Species Among the World's Smallest". Smithsonian.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-04-30.