மின்சாரம் (திரைப்படம்)

2011 திரைப்படம்

மின்சாரம் (Minsaram) என்பது 2011 ஆண்டைய இந்திய தமிழ் விழிப்புணர்வு திரைப்படம் ஆகும். என். செல்வகுமாரன் இயக்கிய இப்படத்தில் யுவராஜ், மதுச்சந்திரா, தொல். திருமாவளவன் ஆகியோர் முதன்மைப் பாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் அஜய் பிரதீப், ஆதித், கண்ணன், பாபு, சுகந்தி, முத்துசாமி, ராஜேந்திரநாத், பாலா சிங், ரமா, காதல் சுகுமார், நெல்லை சிவா ஆகியோர் பிற பாத்திரங்களில் நடித்துள்ளனர். எம். எஸ். தமிழரசன் மற்றும் பழனி எம். இலியாஸ் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இப்படத்ததிற்கு டி. தேவன் இசை அமைத்துளார். படமானது 2011 மார்ச் 18 அன்று வெளியிடப்பட்டது.

மின்சாரம்
இயக்கம்என். செல்வகுமாரன்
தயாரிப்புஎம். எஸ். தமிழரசன்
பழனி எம். இலியாஸ்
கதைஎன். செல்வகுமாரன்
இசைடி. தேவன்
நடிப்பு
ஒளிப்பதிவுகே. வி. சுரேஷ்
படத்தொகுப்புஎஸ். சலீம்
கலையகம்கோவை திரைப்பட நகரம்
வெளியீடுமார்ச்சு 18, 2011 (2011-03-18)
ஓட்டம்110 நமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

  • யுவராஜ் இளவரசுவாக
  • மதுசந்திரா ஆர்த்தியாக
  • தொல். திருமாவளவன் தமிழரசனாக
  • அஜய் பரதீப் இளவரசின் நண்பன் அஜயாக
  • ஆதித் இளவரசின் நண்பனாக
  • கண்ணன் இளவரசின் நண்பனாக
  • பாபு இளவரசின் நண்பனாக
  • சௌகாந்தி கதிராக
  • முத்துசாமி கோட்டை குமாரசாமியாக
  • ராஜேந்திரநாத் காவல் துணை ஆணையர் வெங்கடேசாக
  • பாலா சிங் இளவரசுவின் தந்தை சுந்தரமூர்த்தியாக
  • ரமா இளவரசுவின் தாயாக
  • காதல் சுகுமார் இளவரசின் நண்பனாக
  • நெல்லை சிவா தூயவனாக
  • மைனா நந்தினி ஜெயாவின் தோழியாக
  • கோவை செந்தில் தமிழ் பேராசிரியராக
  • அஞ்சு அமைச்சராக
  • லொள்ளு சபா பாலாஜி தமிழசரனின் உதவியாளராக
  • செல்வகுமார் அரசியல்வாதியாக
  • நிவேதா நிவேதாவாக
  • சுராஜ்
  • ஆர். எஸ். நாதன்
  • இம்ரான்
  • கவிதா பானர்ஜி
  • ரேகா
  • நகு பிங்கி சிறப்புத் தோற்றத்தில்
  • கானா உலகநாதன் சிறப்புத் தோற்றத்தில்
  • சுஜிபாலா சிறப்புத் தோற்றத்தில்

தயாரிப்பு தொகு

18 வயசு புயலே (2007) திரைப்படத்தை தயாரித்த பின்னர், தயாரிப்பாளர்கள் மாணவர்களின் ஆற்றல் குறித்து ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்தனர். என். செல்வகுமாரன் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். புதுமுகம் யுவராஜ் மற்றும் மதுச்சந்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தேர்வு செய்யப்பட்டனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தமிழக முதல்வர் வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார். மேலும் இந்த படத்தில் ஒரு பாடலுக்கான பாடல் வரிகளையும் எழுதினார்.[1][2][3]

இசை தொகு

படத்திற்கான பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கான இசை ஆகியவற்றை திரைப்பட இசையமைப்பாளர் டி. தேவன் அமைத்தார். 2009 இல் வெளியிடப்பட்ட ஒலிப்பதிவில், தொல். திருமாவளவன், முத்து விஜயன், சண்முக சீலன், வானவன், டி. தேவன் ஆகியோரால் எழுதபட்ட ஏழு பாடல்கள் இடம்பெற்றறன.[4]

பாடல்
# பாடல்பாடகர்(கள்) நீளம்
1. "ஆனந்த தீபம்"  ரஞ்சித், சைந்தவி (பாடகி) 4:51
2. "கோபாலா கோபாலம்மா"  மாணிக்க விநாயகம், மாலதி லட்சுமணன் 5:10
3. "விழித்தெழு மனிதா"  திப்பு 6:41
4. "புது ராகம் (இருவர்)"  சி. என். எஸ், தீபா மிரியம் 5:08
5. "காசிமேடு குப்பத்தாயா"  கானா உலகநாதன், டி. தேவன் 5:05
6. "ஒரு மாலைப் பொழுது"  ரஞ்சித், சுசித்ரா ராம் 4:26
7. "புது ராகம் (தனியாக)"  தீபா மிரியம் 5:07
மொத்த நீளம்:
36:28

வெளியீடு தொகு

இத்திரைப்படம் 2011 மார்ச் 18 அன்று முத்துக்கு முத்தாக, அவர்களும் இவர்களும், லத்திகா ஆகிய படங்களுடன் சேர்ந்து வெளியானது.[5]

ரோஹித் ராமச்சந்திரன் இப்படத்திற்கு 5 க்கு 0.5 மதிப்பெண் இட்டு, "நீங்கள் பொழுதுபோக்கு அல்லது கலையை எதிர்பார்கிறீர்கள் என்றால், ஏமாற்றமடைவீர்கள். இது தொல் திருமவாளவனின் இரண்டு மணி நேர தேர்தல் பிரச்சாரமாகும். மேலும் "மின்சாரத்துக்கு உயிர் இல்லை, உங்கள் வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது " என்று முடித்தார்.[6] தொல். திருமாவளவனின் உரையாடல் பாங்கையும், கானா உலகநாதன் பாடிய படலையும் தினமலர் பாராட்டியது. ஆனால் எழுத்தையும், கோணங்களையும் விமர்சித்தது.

குறிப்புகள் தொகு

  1. "'முதலமைச்சர் திருமாவளவன்'" [Chief Minister Thirumavalan] (in Tamil). filmibeat.com. 8 April 2009. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  2. "The CM in Minsaram". behindwoods.com. 7 February 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  3. "Student's power". kollywoodtoday.net. 30 June 2008. Archived from the original on 16 மார்ச் 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Minsaram (2009) - Devan T". mio.to. Archived from the original on 31 ஜனவரி 2021. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Friday Fiesta 180311". indiaglitz.com. 18 March 2011. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
  6. Rohit Ramachandran (20 March 2011). "Minsaram Review". nowrunning.com. பார்க்கப்பட்ட நாள் 3 August 2020.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மின்சாரம்_(திரைப்படம்)&oldid=3692248" இலிருந்து மீள்விக்கப்பட்டது