முதலை மீன் (உயிரியல்:Atractosteus spatula, ஆங்கிலம்: Alligator gar) என்ற மீன் இனமானது, வட அமெரிக்கா மீன்களிலேயே, மிகப்பெரியதென அறிவிக்கப் பட்டுள்ளது. இம்முதலை மீன் பல்லாண்டுகளாக இருக்கும் மிகப் பழமையான மீன் இனமாக புவியில் வாழ்கிறது. பரந்த உப்புநிலை மாற்றத்திற்கிசைவான மீன் இனமானது, வாழும் தொல்லுயிர் எச்சம்ஆகும். இது கடல்வாழ் உயிரினங்களின் வகைப்பாட்டியல் படி அக்டினோட்டெரிகீயை என்று அழைக்கப்படும் நடுத்துடுப்பு மீன் கீழ்வகுப்பைச் சார்ந்தது ஆகும். இதன் தொல்லுயிர் எச்சச் சுவடுகள், முன்கிரிடேசியசு (Cretaceous) காலத்திலேயே உள்ளதாகத் தெரிவிக்கிறது. அதாவது 10கோடி ஆண்டுகளுக்கு முன்னமேயே இருந்தது. இந்த இனமே, இந்த உயிரியல் வகுப்பில் மிகப்பெரிய இனமாகத் திகழ்கிறது.

முதலைமீன்
Alligator gar
புதைப்படிவ காலம்:புத்துயிரிக் காலம் – அண்மை
மீன் அருங்காட்சியகத்தில் முதலை மீன்
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
அக்டினோட்டெரிகீயை
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
A. spatula
இருசொற் பெயரீடு
Atractosteus spatula
(Lacépède, 1803)
வேறு பெயர்கள் [1]
Species
  • Lepisosteus spatula Lacépède 1803
  • Esox cepedianus Shaw 1804
  • Litholepis adamantinus Rafinesque 1818
  • Atractosteus adamantinus (Rafinesque 1818)
  • Lepisosteus ferox Rafinesque 1820
  • Atractosteus ferox (Rafinesque 1820)
  • Lepidosteus chasei Wailes 1854
  • Lepisosteus berlandieri Girard 1858
  • Atractosteus lucius Duméril 1870

வாழிடம்

தொகு

இவ்வகை மீன் இனங்கள், அமெரிக்க ஐக்கிய நாடுகளின் தென்பகுதி முழுவதும் உள்ள அமெரிக்க மாநிலங்களிலும், மெக்சிகோ வளைகுடாவிலும் பரந்து காணப்படுகின்றன. இது பலதரப்பட்ட நீர்நிலைகளிலும் வாழும் இயல்புடையன என்பதால், உப்புகளின் அளவு வேறுபட்டு இருக்கும் இடங்களிலும், புதர் நிறைந்துள்ள நீர் நிலைகளிலும், நன்னீர் பகுதிகளிலும் ஏரிகளிலும் நன்கு வாழ்கின்றன. அமெரிக்க நாடுகளில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இவை தொந்தரவு தரும் ஆபத்து மீனினமாகத் தடைசெய்யப்படு, அவைகளை நீர்நிலைகளில் இருந்து அகற்றும் பணியை அரசே செய்தது.[2] 1980 களுக்குப் பிறகு, இது குறித்த சூழியல் விழிப்புணர்வால், இம்மீன் இனத்திற்கு சட்டப் பாதுகாப்பு தந்துள்ளனர்.[3]

உடலமைப்பு

தொகு

ஏனெனில், இவற்றின் உருவவியல் கூறுகள் தொல்லுயிர்களின் உடற்கூறுகளை அதிகம் பெற்று இருக்கிறது. எடுத்துக்காட்டாக, இதன் குடலில் சிலந்தி வலைப்போன்ற தடுப்பிதழ்கள் உள்ளன. இத்தடுப்பிதழ், சுறாவின் செரிமான மண்டலத்தில் பொதுவாகக் காணப்படுகின்றன. நீரில் உள்ள காற்றையும், நிலத்தில் உள்ள காற்றினையும் இதன் நுரையீரல் மண்டபம் பயன் படுத்திக் கொள்கிறது.

இதன் ஒட்டு மொத்த வடிவம் நீர்மூழ்கிக் குண்டு போன்று இருக்கும். இதன் செதில்கள், மற்ற மீன்களைப் போல அல்லாமல், எலும்புகள் போல (ganoid scales)காணப்படுகிறது. மேற்புற நிறமானது பழுப்பாகத் தொடங்கி, அடிப்பகுதி வரவர மஞ்சளாகவும், சாம்பல் நிறமாகவும் அமைந்து உள்ளது. அவற்றின் மேற்புற பற்கள் இரு வரிசையாக, சுறாவில் இருப்பது போல இருக்கிறது. அதனால் தனது இறையை நன்கு கவ்விக் கொள்ளப் பயனாகிறது. நீர்பறவைகளையும், சிறிய பாலூட்டிகளையும் இது விரும்பு உண்ணும் இயல்பு உடையதாக உள்ளன. இதற்காக இவை நீரின் மேற்பரப்புக்கு வந்து ஒளிந்து பிடிக்கும் திறனைப் பெற்றுள்ளன.

இதன் ஆங்கிலப் பெயரானது, அமெரிக்க முதலை (Alligator mississippiensis)யை ஒத்துள்ளது. அம்முதலைக்கு நீண்ட மூக்குப்பகுதியும், அதன் கூர்மையான பற்கள் அமைப்புமே ஆகும். துண்டு துண்டாகக் கிடைக்கும் நெடிய அறிவியல் ஆதாரங்களின் படி, இவ்வகை மீன்கள், 10 அடிகள் நீளம் வரையிலும், எடையானது 300 lb (140 kg)வரையிலும் இருப்பதாகக் காட்டுகிறது. இருந்தபோதிலும் 2011 ஆம் ஆண்டு, பிடிக்கப்பட்ட முதலைமீன் 8 அடி 5+14 அங் (2.572 m) நீளமும், 327 lb (148 kg) எடையும் கொண்டதாக இருந்தது. மேலும், அம்மீனின் சுற்றளவு 47 அங் (120 cm) இருந்தது. இந்த மீன் இனங்களிடம், வெண்மைத் தோல் நோய் (albinism) காணப்படுவது உறுதி செய்யப் பட்டுள்ளது.

இதன் எண்ணிக்கைக் குறைந்து வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளதால், அமெரிக்கா, மெக்சிகோ நாடுகளில் இதனைப் பிடிக்கும் அளவிற்கு சட்டங்கள் உள்ளன. இவற்றில் உடற் கழிவுகள் குறைவாக இருப்பதால், இலாபம் தரும் மீன் விற்பனையாளர், இவற்றினை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இவற்றின் வயிறுகளை ஆய்ந்த போது, மீன் பிடி சிறு கருவிகளும், படகுகளின் பாகங்களும், நீர்பறைவைகளும் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.[4][5] இவற்றின் நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக உள்ளதாலும், புது வாழிடங்களை இது ஏற்றுக் கொண்டு வளர்வதாலும், இதனை அருங்காட்சியகங்களிலும், ஆவலுடன் வளர்த்து வருகின்றனர்.

ஊடகங்கள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Froese, R.; Pauly, D. (2017). "Lepisosteidae". http://www.fishbase.se/Summary/FamilySummary.php?ID=34. பார்த்த நாள்: 18 May 2017. 
  2. Brady, Tony (August 2013). "Fleur De Lis Fisheries" (PDF). US Fish & Wildlife Service. p. 2. Archived from the original (PDF) on 2018-11-14. பார்க்கப்பட்ட நாள் 2018-05-30.
  3. Milbrath, Lester W. (1989). Envisioning a Sustainable Society: Learning Our Way Out. SUNY Press. p. 271. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780791401620.
  4. "Missouri Alligator Gar Management and Restoration Plan" (PDF). Missouri Department of Conservation Fisheries Division. சனவரி 22, 2013. Archived from the original (PDF) on மே 6, 2016. பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 1, 2016.
  5. Buckmeier, David L. (July 31, 2008). "Life History and Status of Alligator Gar (Atractosteus spatula), with Recommendations for Management" (PDF). Heart of Hills Fisheries Science Center. Texas Parks and Wildlife Department. p. 5. பார்க்கப்பட்ட நாள் July 7, 2014.

வெளி இணைப்புகள்

தொகு
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Atractosteus spatula
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=முதலை_மீன்&oldid=3587932" இலிருந்து மீள்விக்கப்பட்டது