முனீஸ்வரநாதர்
முனீஸ்வரநாதர் (Munisuvrata), சமண சமயத்தின் 20வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] முனீஸ்வரநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தவர். முனீஸ்வரநாதரின் காலத்தில் சைன ராமாயணம் படைக்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[2] இவரது குரு மல்லிநாதர் ஆவார்.
முனீஸ்வரநாதர் | |
---|---|
முனீஸ்வரநாதர் | |
அதிபதி | 20வது சமணத் தீர்த்தங்கரர் |
மன்னர் சுமித்திரருக்கும் - இராணி பத்மாவதிக்கும் பிறந்த முனீஸ்வரநாதர்[3] 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
முனீஸ்வரநாதர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனிலும், சமண சமய சாத்திரங்களின் படி, இவரது நிறம் கருமை, வாகனம் ஆமை, பரிவார யட்சினி பகுரூபினி ஆவார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.[5]
கோயில்கள்
தொகு- முனீஸ்வரநாதர், அரநாதர் மற்றும் மல்லிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்முக சமணக் கோயில், கர்நாடகாவின் கர்கலா கிராமத்தில் உள்ளது.[6]
- பாலிதானா சமணர் கோயில்கள் மற்றும் சிகார்ஜியில் முனீஸ்வரநாதரின் தனி சன்னதிகள் உள்ளது.
படக்காட்சியகம்
தொகு
|
இதனையும் காண்க
தொகுஅடிக்குறிப்புகள்
தொகு- ↑ Tukol 1980, ப. 31.
- ↑ Zvelebil 1992, ப. 65.
- ↑ "Lord Munisuvrata - Main Events of Life", e-jainism, archived from the original on 2013-02-27, பார்க்கப்பட்ட நாள் 2017-10-22
- ↑ "முனீஸ்வரநாதர்". Archived from the original on 2013-02-27. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
- ↑ "Munisuvrata". Archived from the original on 2017-10-08. பார்க்கப்பட்ட நாள் 2017-10-22.
- ↑ Sandhya, C D’Souza (19 November 2010), "Chaturmukha Basadi: Four doors to divinity Last updated", Deccan Herald
மேற்கோள்கள்
தொகு- Jain, Vijay K. (2015), Acarya Samantabhadra's Svayambhustotra: Adoration of The Twenty-four Tirthankara, Vikalp Printers, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-903639-7-6, archived from the original on 16 September 2015,
இந்தக் கட்டுரை பொது உரிமையில் உள்ள மூலத்திலிருந்து உரையைக் கொண்டுள்ளது.
- Sarasvati, Swami Dayananda (1970), An English translation of the Satyarth Prakash, Swami Dayananda Sarasvati, archived from the original on 2015-12-22, பார்க்கப்பட்ட நாள் 2017-10-22
- Tukol, T. K. (1980), Compendium of Jainism, Dharwad: University of Karnataka
- Zvelebil, Kamil (1992), Companion Studies to the History of Tamil Literature, Netherlands, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 90-04-09365-6
{{citation}}
: CS1 maint: location missing publisher (link)