மும்பை அடல் பாலம்

அடல் சேது அல்லது மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (Mumbai Trans Harbour Link) இதனை அதிகாரப்பூர்வமாக அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது என அழைப்பர். முன்னாள் இந்தியப் பிரதமர் அடல் பிகாரி வாச்பாய் நினைவாக இந்த கடல் பாலத்திற்கு அடல் சேது எனப்பெயரிடப்பட்டுள்ளது. 21.8 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இக்கடல் பாலம் மும்பை மற்றும் நவி மும்பையை 20 நிமிடங்களில் இணைக்கிறது.[6] அடல் பாலம் ஆறு வரிசைகளில் வண்டி செல்ல முடியும். ஒவ்வொரு திசைக்கும் 3 வரிசைகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அரபிக் கடல் மீது நிறுவப்பட்ட கடல் பாலமான அடல் சேது விரைவுப் பாலத்தை 24 ஏப்ரல்2018 அன்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி துவக்கி வைத்தார்.[7]இது உலகின் 12வது நீளமான கடல் பாலம் ஆகும். [8][9]

மும்பை அடல் பாலம்
அடல் சேது
அதிகாரப் பூர்வ பெயர் அடல் பிகாரி வாச்பாய் சேவ்ரி-நவ சேவா அடல் சேது
பிற பெயர்கள் அடல் சேது
போக்குவரத்து 6-வரிசைகள் (ஒவ்வொரு திசைக்கும் 3 வரிசைகள்)
தாண்டுவது தானே கடற்கழி
இடம் பெருநகரமும்பை மாநகராட்சி பகுதி, மகாராட்டிரம், இந்தியா
கட்டுமானப் பொருள் காங்கிரிட்-எஃகு
மொத்த நீளம் 21.8 கிலோமீட்டர்கள் (13.5 mi)[1]
அகலம் 27 மீட்டர்கள் (89 அடி)
உயரம் 25 மீட்டர்கள் (82 அடி)
அதிகூடிய அகல்வு 180 மீட்டர்கள் (590 அடி)[2]
கட்டியவர்
கட்டுமானம் தொடங்கிய தேதி 24 ஏப்ரல்2018[3]
கட்டுமானம் முடிந்த தேதி டிசம்பர் 2023[4]
சுங்கத் தீர்வை கார்: ₹ 200 (ஒரு முறை)
₹ 300 (சென்று வர)
பேருந்து: ₹ 320 (ஒரு முறை)
₹ 480 (சென்று வர)
இலகு ரக சரக்கு வண்டிகள்: ₹ 655 (ஒரு முறை)
₹ 985 (சென்று வர)
பெரிய சரக்கு வண்டிகள்: ₹ 715 ஒரு முறை)
₹ 1075 (சென்று வர)
கனரக சரக்கு வண்டிகள்: ₹ 1030 (ஒரு முறை)
₹ 1545 (சென்று வர)
பெரிய அள்விலான சரக்கு வண்டிகள்: ₹ 1255 (ஒரு முறை)
₹ 1885 (சென்று வர)[5]
அமைவு 18°58′52″N 72°55′01″E / 18.9811°N 72.9169°E / 18.9811; 72.9169
இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 12 சனவரி 2024 அன்று பாலத்தை ஆய்வு செய்யும் காட்சி

இப்பாலம் தெற்கு மும்பையில் உள்ள சேவ்ரி பகுதியில் தொடங்கி, எலிபெண்டா தீவுக்கு வடக்கே தானே கடற்கழியைக் கடந்து நவி மும்பையின் ஊரண் தாலுகாவில் உள்ள ஜவஹர்லால் நேரு துறைமுகம் அருகே சிர்லே பகுதியில் முடிகிறது. அடல் பாலம், கிழக்கில் மும்பை-புனே விரைவு நெடுஞ்சாலையையும், மேற்கில் மும்பை கடற்கரை சாலையையும் இணைக்கிறது. அவசரகால வழிகளுடன், 6 வரிசைகள் கொண்ட இக்கடல் பாலம் 27 மீட்டர் அகலம் கொண்டது.

இதன் மொத்த திட்டச் செலவு 17,843 கோடி (US$2.2 பில்லியன்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இக்கடல் பாலம் வழியாக ஒரு நாளைக்கு 70,000 வாகனங்கள் செல்கிறது.[10] ஏப்ரல் 2018ல் இப்பாலத்தின் பணி துவக்கப்பட்டது.

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Atal Setu: 5 facts about India's longest sea bridge ever constructed - Record length".
  2. Nair, Aishwarya (16 May 2018). "Longest steel span for MTHL". The Asian Age. பார்க்கப்பட்ட நாள் 27 April 2019.
  3. "Mumbai Trans Harbour Link Project Complete Details, Route Map, Contrators, Package Information". India Construction Info. 21 December 2022. பார்க்கப்பட்ட நாள் 5 January 2024.
  4. "Navi Mumbai's infra marvel! India's longest sea bridge project Mumbai Trans Harbour Link nears Jan 2024 deadline – Details inside" (in en). The Financial Express. 25 December 2023. https://www.financialexpress.com/business/roadways-navi-mumbais-infra-marvel-indias-longest-sea-bridge-project-mumbai-trans-harbour-link-nears-jan-2024-deadline-details-inside-3346969/. 
  5. Vijay, Amit (29 January 2024). "MTHL sees 3 lakh users after toll drops to Rs 200 for Sewri-Ulwe leg" (in en). Autocar India. https://www.autocarindia.com/industry/mthl-sees-3-lakh-users-after-toll-drops-to-rs-200-for-sewri-ulwe-leg-430507. 
  6. "Six-lane expressway of Mumbai-trans-harbour-link (MTHL) connecting Sewri on Mumbai Island".
  7. Mumbai Trans Harbour Link inaugurated: How the country’s longest sea bridge will cut travel time
  8. "Mumbai To Navi Mumbai In 20 Minutes As India's Longest Sea Bridge Opens" (in en). NDTV. 12 January 2024. https://www.ndtv.com/india-news/pm-inaugurates-mumbai-trans-harbour-link-indias-longest-sea-bridge-4848937. 
  9. "World's 12th Longest Sea Bridge In India" (in en). Rediff News. 8 January 2024. https://m.rediff.com/news/report/worlds-12th-longest-sea-bridge-in-india/20240108.html. 
  10. "Mumbai may have to pay toll for 23 years to cruise on MTHL". dna. 4 February 2018. பார்க்கப்பட்ட நாள் 15 October 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மும்பை_அடல்_பாலம்&oldid=4138810" இலிருந்து மீள்விக்கப்பட்டது