முர்லன் தேசியப் பூங்கா

முர்லன் தேசியப் பூங்கா இந்திய மாநிலமான மிசோரத்தின் சம்பாய் மாவட்டத்தில் உள்ளது. இந்த பூங்கா கிட்டத்தட்ட 200 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.[1] இது அய்சாலில் இருந்து 245 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த பூங்காவின் தெற்கில் லெங்தெங் காட்டுயிர் காப்பகம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.[2] இங்கு 25 வகையான பாலூட்டி இனங்களும், 150 வகையான பறவைகளும், 35 வகையான மருந்துச் செடிகளும், மூங்கில், ஆர்க்கிட் செடிகளும் உள்ளன.[3]

முர்லன் தேசியப் பூங்கா
Murlen National Park
Map showing the location of முர்லன் தேசியப் பூங்கா Murlen National Park
Map showing the location of முர்லன் தேசியப் பூங்கா Murlen National Park
இந்திய வரைபடம்
அமைவிடம்மியான்மர் எல்லைக்கு அருகில் சம்பாய் மாவட்டத்தில் உள்ள பூங்காவின் அமைவிடம்
ஆள்கூறுகள்23°37′01″N 93°18′00″E / 23.61694°N 93.30000°E / 23.61694; 93.30000ஆள்கூறுகள்: 23°37′01″N 93°18′00″E / 23.61694°N 93.30000°E / 23.61694; 93.30000
பரப்பளவு200 km2 (77 sq mi)
நிறுவப்பட்டது1991

இந்த இடம் 1991ஆம் ஆண்டில் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது.[4]

செடிகள்தொகு

காட்டிற்குள் சூரிய ஒளி புக முடியாத காரணத்தினால், இந்த பகுதிக்கு திரும்பி வர முடியாத இடம் என்ற பெயர் உண்டு.[5] இங்குகருவாலி மரம், சண்பகம், ஆர்க்கிட் உள்ளிட்ட செடி வகைகள் உள்ளன.

விலங்குகள்தொகு

இங்கு புலி, சிறுத்தை, கடமான், மான், அணில், கருங்கரடி, ஹுலக் கிப்பான், செம்முகக் குரங்கு, மலை மைனா உள்ளிட்ட பறவைகளும் விலங்குகளும் வாழ்கின்றன.[6]

சான்றுகள்தொகு