மூகூர் சுந்தர்
மூகூர் சுந்தர் என்பவர் தென்னிந்திய திரைப்படங்களில் நடன நடன இயக்குனராக இருந்தவராவார்.[1][2]
மூகூர் சுந்தர் | |
---|---|
பிறப்பு | மூகூர் சுந்தர் 31 அக்டோபர் 1938 இந்திய ஒன்றியம், மைசூர் மாநிலம், மைசூர், மூகூர் |
மற்ற பெயர்கள் | சுந்தரம் சுந்தரம் மாஸ்டர் |
பணி | நடன அமைப்பாளர், இதைர்ரப இயக்குநர், நடிகர் |
பிள்ளைகள் |
ஆரம்ப கால வாழ்க்கை
தொகுசுந்தர் கர்நாடகத்தின் மைசூர் மாவட்டத்தில் அமைந்துள்ள மூகூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவருக்கு பிரபுதேவா, ராஜூ சுந்தரம், நாகேந்திர பிரசாத் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். அவர்கள் திரைப்பட நடன அமைப்பாளர்களாக கோலிவுட் படங்களில் பணியாற்றியுள்ளனர். இவர்கள் மூவரும் தனித்துவமான நடிகர்கள். இவர்களில் பிரபுதேவா ஒரு வெற்றிகரமான கோலிவுட் நடிகராகவும் உள்ளார்.
தொழில்
தொகுஇவர் முதலில் சென்னையில் உள்ள சந்தமாமா அச்சகத்தில் மாதம் ரூ .40 சம்பளத்தில் பணியாற்றினார். நடனத்தில் உள்ள ஆர்வம் காரணமாக ரூ .10 செலுத்தி நடனம் கற்றுக்கொண்டார். 1962 ஆம் ஆண்டில் கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் குழு நடனக் கலைஞராக ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இவர் நடன அமைப்பாளர் தங்கப்பன் மாஸ்டரின் உதவியாளராக நான்கு ஆண்டுகள் பணியாற்றினார்.[3] நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக தனது தொழில் வாழ்க்கையில் தமிழ் திரையுலகில் பணியாற்றியுள்ளார். 1970 களின் பிற்பகுதியில் திரைத்துறையில் சேர்ந்த அவர் 1980 களின் முற்பகுதியில் இருந்து மிகவும் பரபரப்பாக இயக்கியள்ளார். 1980 களில் பரபரப்பான நடன இயக்குனராக இருந்த இவர் 1980 களின் முற்பகுதியில் இருந்து கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களுடனும் பணியாற்றியுள்ளார். 1980 இல் வெளியான ஆறாத காயா இவரது ஆரம்பகால படங்களில் ஒன்றாகும். அதைத் தொடர்ந்து பிரீத்திசி நோடு, பிரச்சந்தா புதானிகலு, அனுபமா, நீ நன்ன கல்லலர, கெரலிடா சிம்ஹா ஆகியவை இவரது ஆரம்பகால படங்களாகும். 2000 களின் நடுப்பகுதி வரை திரைத்துறையில் தீவிரமாக இருந்தார். சுமார் மூன்று தசாப்தங்களாக நீடித்த வாழ்க்கையில் சுமார் 1000 திரைப்படங்களுக்கு நடனமமைத்துள்ளார்.
பிற பாத்திரங்கள்
தொகு2001 ஆம் ஆண்டில், இவர் முதன்முதலில் மனசெல்லா நீனே என்ற கன்னடத் திரைப்படத்தை இயக்கினார். இது தெலுங்குத் திரைப்படமான மனசந்தா நுவ்வேவின் மறுஆக்கம் ஆகும். அப்படத்தில் இவரது மகன் நாகேந்திர பிரசாத் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.[2][4]
கன்னடத் திரைப்படங்களான தபாலி (2009), ஜானி (2017) ஆகியவற்றில் சுந்தர் விருந்தினர் வேடத்தில் நடித்தார். மேலும் இவர் ஒரு பழைய படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் அமைத்தார்.[5] பா. ர. பழனிச்சாமி (2010) என்ற தமிழ் படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
தொலைக்காட்சி
தொகுதெலுங்கு தொலைக்காட்சி அலைவரிசையான ஜீ தெலுங்கில் ஒளிபரப்பப்படும் பிரபல நடன நிகழ்ச்சியான ஏஏடிஏ 4 இல் இவர் நடுவர்களில் ஒருவராக இருந்தார். விஜய் தொலைக்காட்சியின் பிரபலமான நிகழ்ச்சியான ஜோடி எண் 1, ஜோடி நம்பர் 1 பருவம் இரண்டில் சுந்தரம் நடுவராக இருந்தார். இதில் பிற நடுவர்களாக சிலம்பரசன், சங்கீதா ஆகியோர் இருந்தனர்.
திரைப்படவியல்
தொகு- குறிப்பு எதுவும் குறிப்பிடப்படாத, எல்லா படங்களும் கன்னடப் படங்களாகும்.
ஆண்டு | படம் | பாத்திரம் | குறிப்புகள் |
---|---|---|---|
2002 | மனசெல்லா நீனே | அவராகவே | விருந்தினர் தோற்றம் |
2007 | சங்கர் தாதா ஜிந்தாபாத் | முதியோர் இல்லத்தில் உள்ள முதியவர் | தெலுங்கு படம் |
2009 | தபாலி | அவராகவே | விருந்தினர் தோற்றம் |
2010 | பா. ர. பழனிச்சாமி | பா .ரா. பழனிசாமி | தமிழ் படம் |
2017 | ஜானி | அவராகவே | விருந்தினர் தோற்றம் |
விருதுகள்
தொகு- 1993 ஆம் ஆண்டில் திருடா திருடா திரைப்படத்தில் நடன அமைப்புக்காக சிறந்த நடனத்திற்கான தேசிய திரைப்பட விருதை வென்றார்.
- தென்னிந்திய பிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது (1999)
- 2010 இல் தமிழ் சினிமாவுக்கு பங்களித்ததற்காக விஜய் விருது.
குறிப்புகள்
தொகு
- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2019-03-28. பார்க்கப்பட்ட நாள் 2021-07-01.
- ↑ 2.0 2.1 Prabhu Deva's dad turns director. Articles.timesofindia.indiatimes.com (2001-12-13). Retrieved on 2013-10-28.
- ↑ https://www.youtube.com/watch?v=FEhn8OXVqT0
- ↑ "Manesella Neene" team in Malaysia. indiainfo.com
- ↑ Prabhu Deva's father in 'Thabbali' – Sandalwood News & Gossips பரணிடப்பட்டது 2019-03-28 at the வந்தவழி இயந்திரம். Bharatstudent.com (2008-02-16). Retrieved on 2013-10-28.