மூர்ஸ்
மூர்ஸ் (ஆங்கிலம்: Moors) என்ற சொல் முதன்மையாக மாக்ரெப், ஐபீரிய தீபகற்பம், சிசிலி மற்றும் மால்ட்டா ஆகிய இடங்களின் இடைக்கால முசுலீம் குடிமக்களை குறிக்கிறது . மூர்ஸ் என்பது ஆரம்பத்தில் பூர்வீக மாக்ரெபைன் போபர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.[1] இந்த பெயர் பின்னர் அராபியர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது.[2][3]
மூர்ஸ் ஒரு தனித்துவமான அல்லது இனமாக வரையருக்கபட்ட மக்கள் அல்ல,[4] மற்றும் 1911 பிரித்தானிகா கலைக்களஞ்சியம் "மூர்ஸ்" என்ற சொல்லுக்கு உண்மையான இனவியல் பொருள் இல்லை "என்று குறிப்பிட்டுள்ளது. இடைக்காலத்தின் ஐரோப்பியர்கள் மற்றும் நவீன காலத்தின் ஆரம்ப அராபியர்கள், வட ஆப்பிரிக்க பேர்பர்கள் மற்றும் முஸ்லீம் ஐரோப்பியர்கள் ஆகியோரைக் குறிக்க இந்த பெயரைப் பயன்படுத்தினர்.[5]
இந்த சொல் ஐரோப்பாவில் பொதுவாக முசுலிம்களைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது,[6] குறிப்பாக அரபு அல்லது பேர்பர் வம்சாவளியைச் சேர்ந்தவர்கள், எசுப்பானியத்தில் அல்லது வட ஆப்பிரிக்காவில் வாழ்ந்தாலும் மூர்ஸ் என்றே அழைக்கப்பட்டனர்.[7] போர்த்துகீசியர்கள் தங்களது காலனித்துவ காலத்தில், தெற்காசியா மற்றும் இலங்கை மூர்ஸ் " (சோனகர் " மற்றும் "இந்தியன் மூர்ஸ்" என்ற பெயர்களை அறிமுகப்படுத்தினர், மேலும் வங்காள முசுஸ்லிம்களையும் மூர்ஸ் என்றே அழைத்தனர்.[8]
ரோமனிய மூர்ஸ்
தொகுசவுத் சீல்டில் உள்ள ஆர்பியா ரோமன் அருங்காட்சியகத்தில் விக்டர் என்பவர் அமைத்த கல்லறை ஒன்று உள்ளது, அதில் அவர் தன்னை ஒரு மூர் (மௌரஸ்) என்று விவரித்துள்ளார்.
கட்டிடக்கலை
தொகுமூரிசு கட்டிடக்கலை என்பது வட ஆபிரிக்கா மற்றும் எசுப்பானியம் மற்றும் போர்ச்சுகலின் சில பகுதிகளின் காணப்படும் ஒரு இஸ்லாமியக் கட்டிடக்கலை ஆகும். அங்கு மூர்ஸ் இனம் 711 மற்றும் 1492 க்கு இடையில் ஆதிக்கம் செலுத்தியது. இந்த கட்டடக்கலை பாரம்பரியம் எஞ்சியிருக்கும் சிறந்த உதாரணங்களாக கோர்தோபா பள்ளிவாசல் - தேவாலயம் மற்றும் கிரனாதாவில் ஆலம்பரா[9] (முக்கியமாக 1338-1390) போன்றவை உள்ளன.
மக்கள் தொகை
தொகுஒரு பெரிய மற்றும் பரவலான இனக்குழுவாக, மூர்ஸ் பெரும்பாலும் மொராக்கோ மற்றும் மேற்கு அல்ஜீரியாவிலிருந்து வந்த பேர்பர்கள், மவுரித்தேனியா, வடக்கு செனகல் மற்றும் மேற்கு மாலி, அரபு பெதோயின்சு மற்றும் யேமன் மற்றும் சிரியாவிலிருந்து வந்த துணை சகாரா ஆப்பிரிக்கர்கள் போன்றவர்கள் அடங்குவர்.[10]
பரவலர் பண்பாட்டில்
தொகுவில்லியம் ஷேக்ஸ்பியரின் ஒத்தெல்லோ நாடகத்தின் முதன்மை பாத்திரமும், வெர்டியின் ஓபரா ஓதெல்லோவில் பெறப்பட்ட முதன்மை பாத்திரமும் ஒரு மூர் ஆகும். இந்த கதாபாத்திரத்தை பல்வேறு நடிகர்கள் பல்வேறு வகையான பொழுதுபோக்கு கலைகளில் நடித்துள்ளனர். ஷேக்ஸ்பியரின் முந்தைய சோக நாடகமான் டைட்டஸ் ஆந்த்ரோனிகசில் ஆரோன் என்று குறைவாக அறியப்பட்ட மூரிஸ் பாத்திரம் உள்ளது. 1991 ஆம் ஆண்டில் வெளியான ராபின் ஹூட்: பிரின்ஸ் ஆஃப் தீவ்ஸ் திரைப்படத்தில் மார்கன் ஃப்ரீமேனின் அஜீம் என்ற கதாபாத்திரத்தை, ராபின் ஹூட் சிறையிலிருந்து காப்பாற்றுகிறார். 2009 இல் எடுக்கப்பட்ட ஜர்னி டூ மெக்கா என்ற ஆவணப்படத்தில் 1325 இல் அவரது சொந்த நாடான மொரோக்கோவிலிருந்து மெக்காவிற்கு ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இப்னு பதூதா ஒரு மூர்ஸ் ஆவார்.
குறிப்பிடத்தக்கவர்கள்
தொகுவிசிகோத்சை தோற்கடித்து கிசுபானியாவை 711 இல் கைப்பற்றிய தளபதி தாரிக் இப்னு சியாத் ஒரு மூர்ஸ் ஆவார். 756 இல் குர்துபாவின் உமையாத் கலீபகத்தை நிறுவனர் முதலாம் அப்துர்-ரஹ்மான் மற்றும் குர்துபா கலீபத்தின், அடுத்தடுத்த வம்சம் மூன்று நூற்றாண்டுகளாக இசுலாமிய ஐபீரியாவை ஆட்சி செய்தது இவர்கள் மூர்ஸ் ஆவார்கள். ஆர்திபியஸ், மற்றும் பல ரசவாத நூல்களை எழுதிய ஒரு எழுத்தாளர் ஒரு மூர்ஸ் ஆவார். ஒரு மருத்துவரும், பல்துறை நிபுணருமானவரும் ஒட்டுண்ணிகள் இருப்பதைக் கண்டுபிடித்து, பரிசோதனை அறுவை சிகிச்சைக்கு முன்னோடியாக இருந்த இப்னு ஜுகர் (1091–1161) ஒரு மூர்ஸ் ஆவார்
குறிப்புகள்
தொகு- ↑ Africanus, Leo (1526). The History and Description of Africa. Hakluyt Society. pp. 20 & 108. பார்க்கப்பட்ட நாள் 30 August 2017.
the Mauri -- or Moors -- were the Berbers
- ↑ The Arabs called the latter Muwalladun or Muladi. Menocal (2002). Ornament of the World, p. 16
- ↑ Richard A Fletcher, Moorish Spain (University of California Press, 2006), pp.1,19.
- ↑ Ross Brann, "The Moors?", Andalusia, New York University. Quote: "Andalusi Arabic sources, as opposed to later Mudéjar and Morisco sources in Aljamiado and medieval Spanish texts, neither refer to individuals as Moors nor recognize any such group, community or culture."
- ↑ . 2009.
{{cite book}}
: Missing or empty|title=
(help) - ↑ Menocal, María Rosa (2002). Ornament of the World: How Muslims, Jews and Christians Created a Culture of Tolerance in Medieval Spain. Little, Brown, & Co. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-316-16871-8, p. 241
- ↑ . 1974.
- ↑ Pieris, P.E. Ceylon and the Hollanders 1658-1796. American Ceylon Mission Press, Tellippalai Ceylon 1918
- ↑ Curl p. 502.
- ↑ Assouline, David. "'Moors' from Oxford Islamic Studies Online". Muslim Journeys. The Oxford Encyclopedia of the Islamic World in the Oxford Islamic Studies Online. Archived from the original on 20 மே 2018. பார்க்கப்பட்ட நாள் 30 May 2018.