மெகாக் கேசர்

மேகாக் கேசர் (பிறப்பு: திசம்பர் 15, 1992) பஞ்சாப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்காக விளையாடும் இந்தியத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் ஒரு வலது கை எதிர்ச்சுழல் பந்து வீச்சாளர் மற்றும் வலது கை கீழ் வரிசை துடுப்பாட்ட வீரர். 2019-ல், 2018-19 மூத்தோர் மகளிர் இருபது20 போட்டியில் முதல் இருபது20 பட்டத்தை வென்றபோது, பஞ்சாப் பெண்கள் துடுப்பாட்ட அணியின் துணைத்தலைவராக இருந்தார்.[2] 2021-ல், இந்திய துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 2021–22 மூத்தோர் மகளிர் போட்டி கோப்பைக்கு முன்னதாக இந்தியா-ஏ அணியைப் பிரதிநிதித்துவப்படுத்த இவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[3]

மெகாக் கேசர்
Mehak Kesar
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மெகாக் கேசர்
பிறப்பு15 திசம்பர் 1992
சோனிபத், அரியானா
மட்டையாட்ட நடைவலது கை
பந்துவீச்சு நடைவலது கை எதிர்ச்சுழல்
பங்குபந்துவீச்சாளர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2010 - முதல்பஞ்சாப் மகளிர் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை முத இ20
ஆட்டங்கள் 9 58 54
ஓட்டங்கள் 63 146 65
மட்டையாட்ட சராசரி 4.84 6.34 4.06
100கள்/50கள் 0 0 0
அதியுயர் ஓட்டம் 21 24 8*
வீசிய பந்துகள் 783 2759 1026
வீழ்த்தல்கள் 8 82 45
பந்துவீச்சு சராசரி 39.12 19.40 17.53
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0 0
சிறந்த பந்துவீச்சு 2/30 4/6 3/8
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/- 13/- 6/-
மூலம்: CricketArchive, 19 சனவரி 2022

 

இளமை

தொகு

கேசர் 15 திசம்பர் 1992 அன்று அரியானாவின் சோனிபத்தில் பிறந்தார். இவர் மேசைப்பந்தாட்டம், அடிபந்தாட்டம் மற்றும் மென்பந்தாட்டம் ஆகியவற்றில் இளையோர் மற்றும் துணை-இளையோர் மட்டங்களில் அரியானாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

கேசர் தனது, 17 வயதில், பஞ்சாபின் ஜலந்தருக்கு குடிபெயர்ந்து துடுப்பாட்டத்தில் தனது ஆரம்ப பயிற்சியைத் தொடங்கினார்.[4]

கேசர் 2010-ல் பஞ்சாப் பெண்கள் அணிக்காக விளையாடத் தொடங்கினார். இவர் 2015-2018 வரை வடக்கு மண்டல அணியின் ஒரு பகுதியாகவும், 2011-2015 வரை குரு நானக் தேவ் பல்கலைக்கழக குழு உறுப்பினராகவும் இருந்தார். இவர் 2015-2016ஆம் ஆண்டில் 23 வயதுக்குட்பட்ட பஞ்சாப் பெண்கள் துடுப்பாட்ட அணிக்குத் தலைமை தாங்கினார்.

2016-2017-ல் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரிய மூத்தோர் பெண்கள் குழு மற்றும் 2016-2017- ல் நடந்த ரமா அத்ரே நினைவுப் போட்டியில் கலந்து கொண்ட கேசர் போட்டியின் சிறந்த பந்து வீச்சாளராகத் தேர்வு செய்யப்பட்டார்.[5]

கேசர் 2021–22 மூத்தோர் மகளிர் துடுப்பாட்ட போட்டியில் இந்தியா ஏ அணிக்காக விளையாடினார். இதில் இந்தியா ஏ வாகையர் பட்டத்தினை வென்றது.

மேற்கோள்கள்

தொகு
  1. "Mehak Kesar profile and biography, stats, records, averages, photos and videos". ESPNcricinfo (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  2. Service, Tribune News. "Punjab eves conquer T20 League". Tribuneindia News Service (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  3. "Squads for Senior Women's Challenger Trophy One Day Match 2021-22 announced". www.bcci.tv (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  4. "Interview with Mehak Kesar - Journey from Haryana to Punjab via Cricket". Female Cricket (in அமெரிக்க ஆங்கிலம்). 2019-04-02. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.
  5. "Punjab Eves Win Rama Atray Memorial Cricket Tournament". www.babushahi.com. பார்க்கப்பட்ட நாள் 2022-01-20.

வெளி இணைப்புகள்

தொகு

ESPNcricinfo இல் Mehak Kesar

கிரிக்கெட் காப்பகத்தில் மெஹக் கேசர் (சந்தா தேவை)

"https://ta.wikipedia.org/w/index.php?title=மெகாக்_கேசர்&oldid=3685251" இலிருந்து மீள்விக்கப்பட்டது