மெக்சிக்கோ மாநிலம்

மெக்சிக்கோ மாநிலம் (State of Mexico, எசுப்பானியம்: Estado de México) மெக்சிக்கோவின் 31 மாநிலங்களில் ஒன்றாகும். மெக்சிக்கோ நகரம் 32ஆவது கூட்டரசு மாவட்டமாக 32வது நிர்வாகப் பிரிவாக உள்ளது. மிகுந்த மக்கள்தொகை உள்ள மாநிலமாக உள்ளது. இதில் 125 நகராட்சிகளும் தலைநகரமான டோலுக்காவும் அடங்கியுள்ளன.

மெக்சிக்கோ மாநிலம்
எசுட்டாடொ டெ மெக்சிக்கோ
மெக்சிக்கோ மாநிலம்
மெக்சிக்கோ மாநிலம்-இன் கொடி
கொடி
அலுவல் சின்னம் மெக்சிக்கோ மாநிலம்
சின்னம்
குறிக்கோளுரை: லிபெர்டாடு, டிராபாயோ, குல்ச்சுரா
(விடுதலை, வேலை, பண்பாடு)
பண்: இம்னோ அல் எசுட்டாடொ டெ மெக்சிக்கோ
மெக்சிக்கோவினுள் மெக்சிக்கோ மாநிலத்தின் அமைவிடம்
மெக்சிக்கோவினுள் மெக்சிக்கோ மாநிலத்தின் அமைவிடம்
நாடுமெக்சிக்கோ
தலைநகரம்டோல்கா டெ லெர்டோ
மிகப் பெரும் நகரம்எகேடெபெக் டெ மோரெலோசு
பெருநகர் பகுதிமெக்சிக்கோ பெருநகரம்
ஏற்புதிசம்பர் 20, 1823[1]
மெக்சிக்கோவின் ஆட்புல படிவளர்ச்சிமுதல்
அரசு
 • ஆளுநர்எருவியல் அவலா வில்லெகாசு PRI
 • செனட்டர்கள்[2]அனா லிலியா எர்ராரா PRI
மாரியா எலெனா பார்ரெரா PVE
அலெசாண்ட்ரோ என்சினாசு PRD
 • மேலவை உறுப்பினர்கள்[3]
கூட்டரசு துணைவர்கள்
பரப்பளவு
 • மொத்தம்22,351 km2 (8,630 sq mi)
 25வது இடத்தில்
உயர் புள்ளி5,500 m (18,000 ft)
மக்கள்தொகை
 (2015)[6]
 • மொத்தம்1,61,87,608
 • தரவரிசைமெக்சிக்கோவில் முதலாவது
 • அடர்த்தி720/km2 (1,900/sq mi)
  அடர்த்தி தரவரிசைமெக்சிக்கோவில் முதலாவது
நேர வலயம்ஒசநே−6 (மத்திய நேர வலயம்)
 • கோடை (பசேநே)ஒசநே−5 (மத்திய பகல்சேமிப்பு நேர வலயம்)
அஞ்சல் குறியீடு
50-57
தொலைபேசி இலக்கத் திட்டம்
பரப்புக் குறிமுறை
ஐஎசுஓ 3166 குறியீடுMX-MEX
ம.மே.சு 0.742 உயர் 19வது இடத்தில்
மொத்த உள்நாட்டு உற்பத்திஅமெரிக்க$ 62,220,803.98[அ]
இணையதளம்அலுவல்முறை வலைத்தளம்
^ அ. 2008இல் மாநிலத்தின் மொ.உ.உ 796,426,291 பெசோசாக இருந்தது;[7] ஒரு அமெரிக்க டாலருக்கு 12.80 என்ற மாற்றுவீதத்தில் (சூன் 3, 2010 மதிப்பு) இது அமெரிக்க டாலரில் 62,220,803.98 ஆகும்.[8]

மெக்சிக்கோ மாநிலத்தின் எசுப்பானியப் பெயரான எசுட்டோடா டெ மெக்சிக்கோ என்பதை சுருக்கமாக "எடோமெக்சு" என்கின்றனர். இது மெக்சிக்கோவின் தெற்கு-மத்திய பகுதியில் அமைந்துள்ளது. இதன் வடக்கில் குயெரெடரோ, இடால்கோ மாநிலங்களும் தெற்கில் மோரெலோசு, குயிர்ரெரோ மாநிலங்களும் மேற்கில் மிக்கோகான் மாநிலமும் கிழக்கில் டிலாக்சாலா, புவெப்லா மாநிலங்களும் உள்ளன; இந்த மாநிலம் கூட்டரசு மாவட்டதை சூழ்ந்துள்ளது.

இந்த மாநிலம் ஆசுடெக் பேரரசின் ஆட்சிப்பகுதியாக இருந்தது. எசுப்பானியாவின் குடியேற்றக் காலத்தில் இது புதிய எசுப்பானியாவின் அங்கமாக இருந்தது. விடுதலைக்குப் பிறகு, புதிய நாட்டிற்கு மெக்சிக்கோ நகரம் தலைநகரமானது; தலைநகரப்பகுதி மாநிலத்திலிருந்து பிரிக்கப்பட்டது. பல ஆண்டுகளுக்குப் பின்னர், மாநிலம் மேலும் பிரிக்கப்பட்டு இடால்கோ, குயெர்ரெரோ, மோரெலோசு மாநிலங்கள் உருவாக்கப்பட்டன. இந்தப் பிரிவினைகளுக்குப் பறகு மாநிலம் தற்போதைய அளவை எட்டியுள்ளது.

மெக்சிக்கோவின் 1917ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டத்தின்படி இந்த மாநிலத்தின் பெயர் மெக்சிக்கோ என்பது மட்டுமே; ஆனால் நாட்டின் பெயரிலிருந்தும் நகரத்தின் பெயரிலிருந்தும் வேறுபடுத்துவதற்காக இது பரவலாக எசுட்டாடொ டெ மெக்சிக்கோ என்றே அழைக்கப்படுகின்றது.

மேற்சான்றுகள்

தொகு
  1. "Las Diputaciones Provinciales" (in Spanish). p. 15. http://biblio.juridicas.unam.mx/libros/6/2920/11.pdf. 
  2. "Senadores por el Estado de México LXII y LXIII Legislaturas". Senado de la República. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
  3. "Listado de Diputados por Grupo Parlamentario del Estado de México". Cámara de Diputados. Archived from the original on அக்டோபர் 17, 2015. பார்க்கப்பட்ட நாள் September 1, 2015.
  4. "Resumen". Cuentame INEGI. Archived from the original on மார்ச் 29, 2013. பார்க்கப்பட்ட நாள் February 12, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. "Relieve". Cuentame INEGI. Archived from the original on ஜூலை 23, 2011. பார்க்கப்பட்ட நாள் March 24, 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  6. "Encuesta Intercensal 2015" (PDF). பார்க்கப்பட்ட நாள் December 8, 2015.
  7. "Estado de Mexico". 2010. பார்க்கப்பட்ட நாள் March 24, 2011.
  8. "Reporte: Jueves 3 de Junio del 2010. Cierre del peso mexicano". www.pesomexicano.com.mx. பார்க்கப்பட்ட நாள் August 10, 2010.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மெக்சிக்கோ_மாநிலம்&oldid=3568411" இலிருந்து மீள்விக்கப்பட்டது