மேயர் சுண்டெலி
மசு மயோரி (Mayor's mouse) என்பது எலிப் பேரினமான மசுவினைச் சேர்ந்த கொறிணி சிற்றினமாகும். இது பொதுவாக மேயர் சுண்டலி, மேட்டுநில சுண்டெலி[1] மற்றும் முள் சுண்டெலி என அழைக்கப்படுகிறது.[2] இது இலங்கையில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[1]
மேயர் சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. mayori
|
இருசொற் பெயரீடு | |
Mus mayori (தாமசு, 1915) | |
Subspecies | |
மசு மேயோரி மேயோரி |
வாழிடம்
தொகுமேயர் சுண்டெலி வெப்பமண்டல மற்றும் மிதவெப்பமண்டல காடுகள் மற்றும் ஈரமான புல்வெளி வாழ்விடங்களில் வாழ்கிறது. இது புதைகுழிகளைத் தோண்டி வசிக்கின்றது. இது இரவாடுதல் வழக்கமுடையது.[1]
அச்சுறுத்தல்
தொகுமேயர் சுண்டெலி சிற்றினம் இலங்கையின் சில பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. ஆனால் இது காடழிப்பு மற்றும் பூனைகள் உட்படப் பல வேட்டை விலங்குகளால் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது.[1]
வகைப்பாட்டியல்
தொகுமேயர் சுண்டெலி சிற்றினத்தில் இரண்டு துணையினங்கள் உள்ளன. அவை ம. ம. மேயோரி மற்றும் ம. ம. போகாக்கி. ஒரு சமீபத்திய ஆய்வு போகாக்கி என்ற துணையினம் பின்வரும்ஒட்டுண்ணிகளுடன் தொடர்புடையதாகப் பட்டியலிடப்பட்டுள்ளது: எச்சினோலாலாப்சு பேரினத்தின் ஒரு பூச்சி, ஐக்சோட்சு பேரினத்தின் உண்ணி மற்றும் உறிஞ்சும் பேன் பாலிப்ளாக்சு இசுபினுலோசா. ஒரு புதிய வகை சூடோசுகார்பியன் எலியில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டுள்ளது. இது மெகாசெர்னசு கன்னெலியென்சிசு என்று பெயரிடப்பட்டது.[3] மேயர் சுண்டெலி இலங்கையின் பூர்வீக தெள்ளு இசுடிவாலியசு போபரசை விருந்தோம்பியாகவும் உள்ளது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 de A. Goonatilake, W., et al. Mus mayori. The IUCN Red List of Threatened Species 2008. Downloaded on 07 January 2016.
- ↑ Wijesinghe, M. R. Predicting effects of rainforest fragmentation from live trapping studies of small mammals in Sri Lanka.[தொடர்பிழந்த இணைப்பு] Journal of Threatened Taxa 4(6): 2629-2636.
- ↑ Harvey, M. S., et al. (2012). A new species of the pseudoscorpion genus Megachernes (Pseudoscorpiones: Chernetidae) associated with a threatened Sri Lankan rainforest rodent, with a review of host associations of Megachernes. Journal of Natural History, 46(41-42), 2519-2535.
- ↑ Yathramullage, S., Meegaskumbura, M., and Meegaskumbura, S. (2014). Record of five new endemic small mammal hosts for four ectoparasite species from Sri Lanka. பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம் Journal of Asia-Pacific Entomology 17 473-476.
வெளி இணைப்புகள்
தொகு- Wilson, D. E. & Reeder, D. M. Mus (Coelomys) mayori. Mammal Species of the World. Third Edition. Johns Hopkins University Press.