மேற்கிந்தியப் பெருங்கடல் சீலக்காந்த்

மேற்கிந்தியப் பெருங்கடல் சீலக்காந்த்
புதைப்படிவ காலம்:Ionian-Holocene,[1] 0.02–0 Ma
CITES Appendix I (CITES)[3]
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
ஆக்டினிசிடியா
வரிசை:
குடும்பம்:
லாட்டிமெரிடே
பேரினம்:
லேட்டிமெரியா
இனம்:
லே. சாலம்னே
இருசொற் பெயரீடு
லேட்டிமெரியா சாலம்னே
சுமித், 1939
லே. சாலம்னே பரம்பல் சிவப்பு நிறத்தில்
வேறு பெயர்கள் [4][5]
  • மலேனியா அஞ்சோவானே சுமித், 1953
  • லேட்டிமெரியா அஞ்சோவானே (சுமித், 1953)

மேற்கிந்தியப் பெருங்கடல் சீலக்காந்த் (West Indian Ocean coelacanth)[6] (லேட்டிமெரியா சாலம்னே)(சில சமயங்களில் கோம்பேசா,[2][7] ஆப்பிரிக்க சீலக்காந்த்,[8] அல்லது சீலக்காந்த்)[9] என்பது கிராசப்டெரிஜியன் மீனாகும்.[10] தற்போதுள்ள இரண்டு சிற்றினங்களில் ஒன்றாகும். சீலகாந்த், முதுகெலும்புகளின் ஒரு அரிய வரிசை ஆகும். பொதுவான கதிர்-துடுப்பு மீன்களை விட நுரையீரல் மீன் மற்றும் நாற்காலி உயிரினங்களுடன் மிகவும் நெருக்கமாகத் தொடர்புடையது. தற்போதுள்ள மற்ற வாழும் சிற்றினம், இந்தோனேசிய சீலக்காந்த் (லே. மெனடோயென்சிசு) ஆகும்.

மேற்கு இந்தியப் பெருங்கடல் சீலக்காந்த், வரலாற்று ரீதியாக மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள கொமோரோ தீவுகள் (இது கோம்பேசா என அழைக்கப்படுகிறது), மடகாசுகர் மற்றும் மொசாம்பிக் ஆகிய பகுதிகளைச் சுற்றியுள்ள மீனவர்களால் அறியப்பட்டது. [11] ஆனால் முதலில் 1938-இல் தென்னாப்பிரிக்காவில் சேகரிக்கப்பட்ட மாதிரியிலிருந்து இவை அறிவியல் பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டது.

இந்த சீலக்காந்த் ஒரு காலத்தில் பரிணாம ரீதியாகப் பழமையானதாக் கருதப்பட்டது. ஆனால் கண்டுபிடிப்புகள் ஆரம்ப உருவவியல் பன்முகத்தன்மையைக் காட்டின.[12] இது ஒரு தெளிவான நீல நிறமியைக் கொண்டுள்ளது. மேலும் தற்போதுள்ள இரண்டு சிற்றினங்களில் இது மிகவும் பிரபலமானது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியலில் இந்த சிற்றினம் மிக அருகிய இனமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[2]

உடற்கூறியல் மற்றும் உடலியல்

தொகு
 
ஆக்சுபோர்டு பல்கலைக்கழக இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் உள்ள லேட்டிமெரியா சாலம்னே மாதிரி

லேட்டிமெரியா சாலும்னேயின் சராசரி எடை 80 கிலோ (176 lb) ஆகும். மேலும் இவை 2 மீட்டர் நீளம் வரை வளரலாம். முதிர்ச்சியடைந்த பெண் மீன்கள் ஆண் மீன்களை விடச் சற்று பெரியவை. லேட்டிமெரியா சாலும்னே இரையை வேட்டையாடுவதற்கு உருமறைப்பு உத்தியாகப் புள்ளிகளுடன் அடர் நீல நிறத்தை வெளிப்படுத்துகிறது. இதேபோன்ற உடற்கூறியல் தழுவல்களில் ஒளி குறைவாக இருக்கும்போது பார்க்க உதவும் குச்சி போன்ற காட்சி உயிரணு ஏராளமாக உள்ளன.[10] இது மேற்கு இந்தியப் பெருங்கடலில் உள்ள சீலக்காந்தின் பெரிய கண்களுடன் இணைந்து இருண்ட நீரில் பார்க்க உதவுகிறது.[13]

குருத்தெலும்பு மீன்களைப் போலவே, லேட்டிமெரியா சாலம்னேவிலும் மலக்குடல் சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, கணையம் மற்றும் முதுகெலும்பு உள்ளது. சவ்வூடுபரவல் அழுத்தத்தைச் சமநிலைப்படுத்த, இந்த மீன்கள் தங்கள் இரத்தத்தில் யூரியாவைத் தக்கவைத்துக்கொள்வதன் மூலம் ஊடுபரவல் சமநிலையினை திறமையாகப் பின்பற்றுகின்றன.

லேட்டிமெரியா சாலம்னே உள்பொரி முட்டையினை இடும் சிற்றினமாகும். அதாவது இவை குஞ்சு பொரிக்கும் வரை முட்டைகளை உடலின் உட்புறமாக வைத்திருக்கின்றன. இவற்றின் பாலின முதிர்ச்சியின் வயது பற்றி அதிகம் அறியப்படவில்லை என்றாலும், சுமார் 12 மாதங்கள் நீடித்த கர்ப்ப காலத்தின் காரணமாக இவை குறைவான முட்டைகளை இடுகின்றன.[14]

வாழ்விடம் மற்றும் நடத்தை

தொகு
 
தென்னாப்பிரிக்காவின் குவாசுலு-நடால் தென் கடற்கரையில் புமுலாவிலிருந்து 69 மீ தொலைவில் சீலாகாந்த்

லேட்டிமெரியா சாலும்னே பொதுவாக 180–210 மீட்டருக்கு இடைப்பட்ட ஆழப் பகுதியில் காணப்படும். ஆனால் சில சமயங்களில் 243 மீட்டர் ஆழத்தில் காணப்படுகின்றன.[11] லேட்டிமெரியா சாலும்னே நீருக்கடியில் காணப்படும் குகைகளில் வசிக்கின்றன. இவை இந்த ஆழங்களில் மிகவும் பொதுவானவை. இது இரையின் பற்றாக்குறையுடன் அவற்றின் அதிகபட்ச ஆழ வரம்பைக் கட்டுப்படுத்தலாம்.[15] இவை எரிமலைக் குகைகளுக்குள் பகல் நேரத்தைக் கழிப்பதாக அறியப்படுகிறது. இது வேட்டையாடுபவர்களிடமிருந்து பாதுகாப்பிற்காகவும், இரவில் சுற்றியுள்ள உணவுத் தளங்களைப் பயன்படுத்துவதாகவும் அறியப்படுகிறது.[14] சீலக்காந்த் மீன்கள் உணவுண்பதில் சந்தர்ப்பவாதிகளாகக் செயல்படுகின்றன.[16] இவற்றில் அறியப்பட்ட இரை இனங்களாக கொராந்தசு பாலிகாந்தசு, பெரிக்சு சிபிளென்டென்சு, லூசிகாடசு ஓரி மற்றும் புரோடுலா மல்டிபார்பாட்டா.[16] இவற்றின் மண்டையோட்டு மூட்டு மற்றும் தொடர்புடைய அடிப்படை கணைய தசை உணவளிப்பதில் ஒரு முக்கியமான ஆனால் தீர்க்கப்படாத பங்கினை.[16]

இதனுடைய உணவுப் பழக்கமாக தலைகீழாக நிற்கு பண்பு சில மீன்களில் காணப்பட்டது. இது எரிமலைக் குகைகளுக்குள் உள்ள பிளவுகளிலிருந்து இரையைப் பெறுவதற்கு இச்செயல் உகந்ததாக உள்ளது.[17] சீலக்காந்த் தன் மேல் மற்றும் கீழ் தாடை இரண்டையும் நகர்த்தும் திறனால் இந்த நடத்தையினைச் சாத்தியமாக்குகின்றது. இது எலும்புக்கூடுகளைக் கொண்ட முதுகெலும்பு உயிரிகளில் உள்ள ஒரு தனித்துவமான பண்பாகும்.[17]

மக்கள்தொகை மற்றும் காப்பு

தொகு

லேட்டிமெரியா சாலும்னே பரவலாக ஆனால் மிகவும் அரிதாகவே மேற்கு இந்தியப் பெருங்கடலின் விளிம்பைச் சுற்றி, தென்னாப்பிரிக்காவிலிருந்து வடக்கே கிழக்கு ஆப்பிரிக்கக் கடற்கரையில், குறிப்பாக தான்சானியாவின் டாங்கா பகுதி முதல் கென்யா, கொமொரோசு மற்றும் மடகாசுகர் வரை சிறிய கூட்டமைப்புகளில் காணப்படுகிறது. 1991ஆம் ஆண்டில், கிராண்ட் கொமோரோவிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் தற்செயலாக 2-5 சீலக்காந்த் மீன்கள் பிடிபட்டதாக மதிப்பிடப்பட்டது. இது இதன் மக்கள்தொகையில் 1% ஆகும்.[14] 1991 மற்றும் 1994க்கு இடையில், சீலக்காந்தின் மொத்த எண்ணிக்கையில் 30% குறைந்தாக மதிப்பிடப்பட்டுள்ளது.[18] 1998ஆம் ஆண்டில், மேற்கு இந்தியப் பெருங்கடல் சீலக்காந்த்தின் மொத்த மக்கள்தொகை 500 அல்லது இதற்கும் குறைவாக இருந்ததாக மதிப்பிடப்பட்டது. இது உயிரினங்களின் உயிர்வாழ்வை அச்சுறுத்துவதாக அறியப்பட்டுள்ளது.[19] மடகாசுகரின் வடமேற்கே உள்ள ஒரு தீவான பெரும் கொமோரோவிற்கு அருகில், அதிகபட்சமாக 370 மீன்கள் வசித்தன.[14] லேட்டிமெரியா சாலும்னே பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தினால் மிக அருகிய இனமாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.[2] அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தின்படி, 1989ஆம் ஆண்டில் பின் இணைப்பு Iஇல் (அழிந்துபோகும் அபாயத்தில் உள்ளது) சீலக்காந்த் சேர்க்கப்பட்டது. இந்த ஒப்பந்தம் வணிக நோக்கங்களுக்காகப் பன்னாட்டு வர்த்தகத்தைத் தடை செய்கிறது. அனுமதி மூலம் அருங்காட்சியகங்களுக்கு மாதிரிகளை அனுப்புவது உட்பட அனைத்து வர்த்தகத்தையும் இது ஒழுங்குபடுத்துகிறது.

கண்டுபிடிப்பு

தொகு

தென்னாப்பிரிக்காவில் முதல் கண்டுபிடிப்பு

தொகு
 
இயற்கை வரலாற்று அருங்காட்சியகம், வியன்னா, ஆத்திரியாவில் லேட்டிமெரியா சாலும்னேவின் பாதுகாக்கப்பட்ட மாதிரி [நீளம்: 170 செமீ (67 இன்) - எடை: 60 கிலோ (130 lb) ]. இந்த மாதிரி 18 அக்டோபர் 1974 அன்று சாலிமணி/செலிமானிக்கு (கிராண்ட் கொமொரோ, கொமோரோ தீவுகள்) அடுத்ததாக பிடிபட்டது.
 
கண்காட்சி 2020 துபாயில் கொமொரோசு காட்சிமாடத்தில் கொமோரன் சீலக்காந்த்

திசம்பர் 23, 1938-இல், நெரின் என்ற இழுவைப்படகின் தலைவன் ஹென்ட்ரிக் கூசன், தென்னாப்பிரிக்காவின் கிழக்கு லண்டனில் உள்ள துறைமுகத்தில் சாலும்னா மற்றும் என்செரா ஆறுகளுக்கு இடையில் ஒரு இழுவைக்குப் பிறகு திரும்பினார். இவர் மீன்பிடி பயணத்திற்குப் பின் கிழக்கு லண்டன் அருங்காட்சியகத்தின் கண்காணிப்பாளரான மார்ஜோரி கோர்ட்டனே-லாடிமருக்குத் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு, தான் பிடிப்பதில் உள்ள பொருட்களை பார்க்க விரும்புகிறாளா என்று கேட்பதுண்டு. எனவே இவர் தான் பிடித்த மீன்களில் விசித்திரமாகக் காணப்பட்ட மீனைப் பற்றி அவரிடம் தெரிவித்தார்.[20] தென்னாப்பிரிக்க நீர்வாழ் பல்லுயிரி நிறுவன காப்பகங்களில் உள்ள கடிதங்கள், இந்த மீனுக்கு எந்த சேதமும் ஏற்படாமல் இருக்கக் குழுவினருக்கு உத்தரவிட்டதைக் காட்டுகிறது. மீன் முதலில் எஃகு நீலமாக இருந்தது. ஆனால் பல மணி நேரம் கழித்து மீன் அடர் சாம்பல் நிறமாக மாறியது.

இந்த உயிரினத்தின் தகவலைக் கண்டுபிடிக்கத் தவறியதால், கோர்ட்டனே-லாடிமர் தனது நண்பரான பேராசிரியர் ஜே. எல். பி. சுமித்தைத் தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் அவர் நத்தார் விடுமுறை காரணமாக வெளியே இருந்தார். இதனால் மீனைப் பாதுகாக்க முடியாமல், தயக்கத்துடன் பாடம் செய்ய அனுப்பினார். சுமித் விடுமுறை முடிந்து திரும்பியதும், உடனடியாக இதை ஒரு சீலக்காந்த் என்று அடையாளம் கண்டுகொண்டார். இது அழிந்து போன மீனினம் எனப் புதைபடிவங்களிலிருந்து மட்டுமே அறிவியலாளர்களுக்குத் தெரியும். சுமித், மார்ஜோரி கோர்ட்டனே-லாடிமர் மற்றும் இது கண்டுபிடிக்கப்பட்ட பகுதியின் நினைவாக இந்த மீனுக்கு லேட்டிமெரியா சாலம்னே என்று பெயரிட்டனர். இரண்டு கண்டுபிடிப்பாளர்களுக்கும் உடனடி அங்கீகாரம் கிடைத்தது. மேலும் மீன் "வாழும் தொல்லுயிர் எச்சம்" என்று அறியப்பட்டது. கிழக்கு லண்டன், தென்னாப்பிரிக்கா, அருங்காட்சியகத்தில் 1938-இன் சீலாக்காந்த் இன்றும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், மாதிரி பாதுகாக்கப்பட்டதால், செவுள்கள் மற்றும் எலும்புக்கூடு ஆகியவை ஆய்வுக்குக் கிடைக்கவில்லை. எனவே இது உண்மையிலேயே அதே சிற்றினம்தானா என்பதில் சிலருக்குச் சந்தேகம் இருந்தது. சுமித் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக எடுக்கும் இரண்டாவது மாதிரிக்கான வேட்டையைத் தொடங்கினார்.

மேற்கிந்தியப் பெருங்கடலின் சீலக்காந்த் பின்னர் கிராண்டே கொமோர் மற்றும் அஞ்சோவான் தீவுகளின் மீனவர்களுக்குத் தெரிந்ததாகக் கண்டறியப்பட்டது. இங்கு இது 150 மற்றும் 700 மீட்டர்கள் (500 மற்றும் 2,300 அடி) ஆழத்தில் உள்ள சரிவுகளில் வாழ்கிறது.[18]

இரண்டாவது மாதிரி, மலானியா அஞ்சோவுனே

தொகு

முதுகுத் துடுப்பு இல்லாமல் சிதைந்த வால் துடுப்புடன் இரண்டாவது மாதிரி 1952-இல் அஞ்சோவான் (கொமோரோசு) கடற்கரையில் கைப்பற்றப்பட்டது. இந்த நேரத்தில் இது ஒரு புதிய சிற்றினம் என்று நம்பப்பட்டது. புதிய சிற்றினமாக வைக்கப்பட்டது. இந்த நேரத்தில் தென்னாப்பிரிக்காவின் பிரதமர் டேனியல் பிரான்சுவா மலானின் நினைவாகப் பெயரிடப்பட்ட மலானியா. இவருடைய உதவியின் காரணமாகவே இந்த மாதிரியின் தசைகள் மற்றும் உள் உறுப்புகள் பாதுகாக்கப்பட்டன.[21] இது லேட்டிமெரியா சாலம்னே என ஏற்றுக்கொள்ளப்பட்டது.

வகைப்பாட்டியல்

தொகு

மேற்கு இந்தியப் பெருங்கடல் சீலக்காந்த் (லேட்டிமெரியா சாலம்னே) லேட்டிமெரியா பேரினத்தின் கீழ் வைக்கப்பட்டது. இது இந்தோனேசிய சீலக்காந்த் (லேட்டிமெரியா மெனடோயென்சிசு) சிற்றினத்துடன் இனவுறவினை பகிர்ந்து கொள்கிறது.[22] செப்டம்பர் 1997-சூலை 1998 முதல், இந்தோனேசியாவின் சுலவேசியில் உள்ள மனாடோ துவா தீவின் கடற்கரையில் இரண்டு சீலக்காந்த் மீன்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இது கொமோர்சு அருகே கண்டுபிடிக்கப்பட்ட லேட்டிமெரியா சாலம்னேவிலிருந்து வேறுபட்டது. இந்தோனேசிய சீலக்காந்த் இதன் பழுப்பு நிற சாம்பல் நிறத்தால் அடையாளம் காணப்படுகிறது.[22]

மரபியல்

தொகு

நாற்காலுயிரி பரிணாமத்தைப் பற்றிய நுண்ணறிவைப் பெற 2013-இல் லேட்டிமெரியா சாலம்னேவின் மரபணுத்தொகை வரிசைப்படுத்தப்பட்டது.[20] சீலக்காந்து இவற்றின் உடல் குணாதிசயங்கள் காரணமாக நிலத்தில் உள்ள முதல் நாற்காலுயிரிகளின் மிக நெருங்கிய உறவினர்கள் என்று நீண்ட காலமாக நம்பப்பட்டது.[8] மரபணு வரிசை முறை நுரையீரல் மீன்கள் உண்மையில் நில நாற்காலுயிரிகளுக்கு நெருங்கிய உறவினர்கள் என்பதை நிரூபித்தது.[8] மரபணுத்தொகை உள்ளீட்டின் முழு வரிசை சிறுகுறிப்புடன் Ensembl மரபணுத்தொகை உலாவியில் கிடைக்கும்.[23]

மேற்கோள்கள்

தொகு
  1. Brouwers, Lucas (February 6, 2012). "Coelacanths are not living fossils. Like the rest of us, they evolve". Scientific American Blog Network (Scientific American). http://blogs.scientificamerican.com/thoughtomics/coelacanths-evolve-indian-ocean-is-home-to-distinct-populations/. 
  2. 2.0 2.1 2.2 2.3 Musick JA (2000). "Latimeria chalumnae". IUCN Red List of Threatened Species 2000: e.T11375A3274618. doi:10.2305/IUCN.UK.2000.RLTS.T11375A3274618.en. https://www.iucnredlist.org/species/11375/3274618. பார்த்த நாள்: 19 February 2022. 
  3. "Appendices | CITES". cites.org. பார்க்கப்பட்ட நாள் 2022-01-14.
  4. Part 7- Vertebrates. http://mave.tweakdsl.nl/tn/genera7.html. பார்த்த நாள்: 30 June 2016. 
  5. Haaramo M (2007). "Coelacanthiformes – Latimeria-like coelacanths". Mikko's Phylogeny Archive. பார்க்கப்பட்ட நாள் 3 July 2016.
  6. "The taxonomist - an endangered race. A practical proposal for its survival". Frontiers in Zoology 8 (1): 25. October 2011. doi:10.1186/1742-9994-8-25. பப்மெட்:22029904. 
  7. Bruton MN (2018). The annotated Old fourlegs : the updated story of the coelacanth. Gainesville. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0813064642. இணையக் கணினி நூலக மைய எண் 1006479644.{{cite book}}: CS1 maint: location missing publisher (link)
  8. 8.0 8.1 8.2 "The African coelacanth genome provides insights into tetrapod evolution". Nature 496 (7445): 311–6. April 2013. doi:10.1038/nature12027. பப்மெட்:23598338. Bibcode: 2013Natur.496..311A. 
  9. "Latimeria chalumnae". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2018 version. N.p.: FishBase, 2018.
  10. 10.0 10.1 Locket, N. A. (1973). "Retinal Structure in Latimeria chalumnae". Philosophical Transactions of the Royal Society of London. Series B, Biological Sciences 266 (881): 493–518. doi:10.1098/rstb.1973.0054. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4622. பப்மெட்:4148821. Bibcode: 1973RSPTB.266..493L. 
  11. 11.0 11.1 Fricke, H.; Hissmann, K. (2000-03-28). "Feeding ecology and evolutionary survival of the living coelacanth Latimeria chalumnae". Marine Biology 136 (2): 379–386. doi:10.1007/s002270050697. பன்னாட்டுத் தர தொடர் எண்:0025-3162. https://archive.org/details/sim_marine-biology_2000-03_136_2/page/379. 
  12. Gess, Robert W.; Coates, Michael I. (October 2015). "Fossil juvenile coelacanths from the Devonian of South Africa shed light on the order of character acquisition in actinistians: Fossil Coelacanths from the South African Devonian" (in en). Zoological Journal of the Linnean Society 175 (2): 360–383. doi:10.1111/zoj.12276. 
  13. Forey, P. L. (1980). "Latimeria: A Paradoxical Fish". Proceedings of the Royal Society of London. Series B, Biological Sciences 208 (1172): 369–384. doi:10.1098/rspb.1980.0056. பன்னாட்டுத் தர தொடர் எண்:0080-4649. Bibcode: 1980RSPSB.208..369F. 
  14. 14.0 14.1 14.2 14.3 Fricke, Hans; Hissmann, Karen; Schauer, Jürgen; Reinicke, Olaf; Kasang, Lutz; Plante, Raphael (1991). "Habitat and population size of the coelacanth Latimeria chalumnae at Grand Comoro" (in en). Environmental Biology of Fishes 32 (1–4): 287–300. doi:10.1007/BF00007462. பன்னாட்டுத் தர தொடர் எண்:0378-1909. 
  15. Fraser, Michael D.; Henderson, Bruce A.S.; Carstens, Pieter B.; Fraser, Alan D.; Henderson, Benjamin S.; Dukes, Marc D.; Bruton, Michael N. (26 March 2020). "Live coelacanth discovered off the KwaZulu-Natal South Coast, South Africa". South African Journal of Science 116 (3/4 March/April 2020). doi:10.17159/sajs.2020/7806. https://www.sajs.co.za/article/view/7806/9870. 
  16. 16.0 16.1 16.2 White, Nicholas (2016-03-04). "ADW: Latimeria chalumnae: INFORMATION". Animaldiversity.org. பார்க்கப்பட்ட நாள் 2022-08-23.
  17. 17.0 17.1 Hensel, Karol; Balon, Eugene K. (2001). "The sensory canal systems of the living coelacanth, Latimeria chalumnae: a new instalment". Environmental Biology of Fishes 61 (2): 117–124. doi:10.1023/A:1011062609192. https://archive.org/details/sim_environmental-biology-of-fishes_2001-06_61_2/page/117. 
  18. 18.0 18.1 Plante, Raphaël; Fricke, Hans; Hissmann, Karen (1998). "Coelacanth population, conservation and fishery activity at Grande Comore, West Indian Ocean". Marine Ecology Progress Series 166: 231–236. doi:10.3354/meps166231. பன்னாட்டுத் தர தொடர் எண்:0171-8630. Bibcode: 1998MEPS..166..231P. 
  19. "On the Trail of the Coelacanth, a Living Fossil". The Washington Post. 1998-11-11. 
  20. 20.0 20.1 "The African coelacanth genome provides insights into tetrapod evolution". Nature 496 (7445): 311–6. April 2013. doi:10.1038/nature12027. பப்மெட்:23598338. Bibcode: 2013Natur.496..311A. Amemiya CT, Alföldi J, Lee AP, Fan S, Philippe H, Maccallum I, et al. (April 2013).
  21. Weinberg, Samantha (2006). A Fish Caught in Time: the Search for the Coelacanth. New York, NY: HarperCollins Publishers. pp. 63–82.
  22. 22.0 22.1 Holder, Mark T.; Erdmann, Mark V.; Wilcox, Thomas P.; Caldwell, Roy L.; Hillis, David M. (1999-10-26). "Two living species of coelacanths?" (in en). Proceedings of the National Academy of Sciences 96 (22): 12616–12620. doi:10.1073/pnas.96.22.12616. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:10535971. Bibcode: 1999PNAS...9612616H. 
  23. "Ensembl genome browser 78: Latimeria chalumnae - Description".

வெளி இணைப்புகள்

தொகு