மேற்கு சீனா

மேற்கு சீனா (Western China எளிய சீனம்: 中国西部பின்யின்: Zhōngguó Xībù, அல்லது எளிய சீனம்: 华西பின்யின்: Huáxī) என்பது சீனாவின்  மேற்கு ஆட்சிப்பகுதிகளைக் குறிப்பிடுகிறது. இதனுள் ஆறு சீன மாகாணங்கள் அடங்கியுள்ளன. சிச்சுவான், குயிசூ, யுன்னான், சென்சி மாகாணம், கான்சு, கிங்ஹாய் மாகாணம் ஆகியன அம்மாகாணங்கள் ஆகும். இத்துடன் மூன்று தன்னாட்சிப் பகுதிகள் அடங்கியிருக்கின்றன. திபெத் தன்னாட்சிப் பகுதி, நின்ஷியா தன்னாட்சிப் பகுதி, சிஞ்சியாங்) ஆகியனவே அந்தத் தன்னாட்சி பகுதிகளாகும். சோங்கிங் என்ற நேரடி ஆட்சிப் பகுதியும் இதில் சேர்ந்துள்ளது.

மேற்கு சீனா

நகரமயமாக்குதல்

தொகு

2025 ஆம் ஆண்டுக்குள் 25 கோடி இந்நிலப்பகுதி மக்களை நகர அமைப்புகளை நோக்கி நகர வைக்க சீன அரசு திட்டமிட்டுள்ளது.[1](p8)

இவற்றையும் காணவும்

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. Rodenbiker, Jesse (2023). Ecological States: Politics of Science and Nature in Urbanizing China. Environments of East Asia. Ithaca, NY: Cornell University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-5017-6900-9.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேற்கு_சீனா&oldid=3910848" இலிருந்து மீள்விக்கப்பட்டது