மேற்கு வங்காள அரசுப் பள்ளிச் சேவை தேர்வில் ஊழல் 2022

மேற்கு வங்காள அரசுப் பள்ளிச் சேவை ஆணையத் தேர்வில் ஊழல் (West Bengal School Service Recruitment Scam), இந்தியாவின் மேற்கு வங்காள மாநில அரசின் அரசுப் பள்ளிச் சேவை ஆணையம், 2022ம் ஆண்டிலிருந்து செய்த பள்ளிப் பணியார்கள் தேர்வில் நடைபெற்ற ஊழல் மற்றும் முறைகேட்டைக் குறிக்கும்.[1] இந்த ஊழல் முறைகேடு வழக்கை நடுவண் புலனாய்வுச் செயலகம் மற்றும் அமலாக்க இயக்குனரகம் விசாரிக்கிறது.[2] இவ்வழக்கில் தொடர்புடைய அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு கடசியின் பொதுச் செயலாரும், மேற்கு வங்க அரசின் கல்வி அமைச்சரான பார்த்தா சாட்டர்ஜி 23 சூலை 2022 அன்று கைது செய்யப்பட்டார்.[3] 18 சூலை 2023 அன்று முன்னாள் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி மீது விசாரணை நடத்த நடுவண் புலனாய்வுச் செயலகத்திற்கு மேற்கு வங்காள ஆளுநர் அனுமதி வழங்கினார்.[4]

பின்னணி

தொகு

நவம்பர் 2021 அன்று கல்கத்தா உயர் நீதிமன்றம், சிபிஐயை மேற்கு வங்க அரசின் பள்ளிச் சேவை பணியாள்ர்கள் தேர்வு முறைகேட்டை விசாரிக்க உத்தரவிட்டது.[5]

மே 2022ல் முன்னாள் சிபிஐ அதிகாரியும், மம்தா பானர்ஜி அமைச்சரவையில் அமைச்சராக இருந்த உபேந்திரநாத் பிஸ்வாஸ்[6] தனது முகநூல் பக்கத்தில் அரசுப் பள்ளிச் சேவை தேர்வாணையத் தேர்வில் நடைபெறும் ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக் காட்டினார்.[7]

23 சூலை 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் மேற்கு வங்க கல்வி அமைச்சர் பார்த்தா சாட்டஜியை கைது செய்து விசாரணை நடத்தியது.[8]

பார்த்தா சாட்டர்ஜியின் தனி உதவியாளரும், நடிகையுமான அர்பிதா முகர்ஜியின் வீட்டை அமலாக்க இயக்குனரக அதிகாரிகள் 23 சூலை 2022 அன்று சோதனை நடத்தி ரூபாய் 21 கோடி பணம் மற்றும் 120 இலட்சம் மதிப்பிள்ள தங்க நகைகளைக் கைப்பற்றியதுடன், அர்பிதா முகர்ஜியை தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர்.[9][10] இருப்பினும் தான் தங்கியிருந்த வீட்டை அமைச்சர் பார்த்தா சாட்டர்ஜி பயன்படுத்தியதாக தெரிவித்தார்.[11] அடுத்த நாள் அர்பிதா முகர்ஜியின் மற்றொரு வீட்டை அமலாக்க இயக்க அதிகாரிகள் சோதனையிட்டதில் ரூபாய் 27.90 கோடி பணத்தாள்கள் மற்றும் 6 கிலோ தங்கத்தைக் கைப்பற்றினர்.[12]

10 ஆகஸ்டு 2022 அன்று மேற்கு வங்க பள்ளிப் பணியாளர்கள் தேவாணையததின் சிறப்பு அலோசகர் சாந்தி பிரசாத் சின்கா மற்றும் மேற்கு வங்க அரசின் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் அசோக் சாகாவை சிபிஐ விசாரணை செய்து கைது செய்தனர்.[13] 15 செப்டம்பர் 2022 அன்று சிபிஐ மேற்கு வங்காள பள்ளிக் கல்வி வாரியத்தின் தலைவர் கல்யாண்மாய் கங்கோபாத்தியாவை விசாரித்து கைது செய்தது.[14]

19 செப்டம்பர் 2022 அன்று மேற்கு வங்க மாநில பணியாளர் தேர்வு வாரியத்தின் முன்னாள் தலைவரும், வடக்கு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான சுபிரேஷ் பட்டாச்சாரியவை சிபிஐ கைது செய்தது.[15] 11 அக்டோபர் 2022 அன்று அமலாக்க இயக்குனரகம் திரிணாமூல் காங்கிஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினரும், மேற்கு வங்க பள்ளிச் சேவைகளுக்கான ஆணையத்தின் தற்போதைய தலைவருமான மாணிக் பட்டாச்சாரியாவை கைது செய்தது.[16][17]

17 ஏப்ரல் 2023 அன்று பல கட்ட விசாரணைகளுக்குப் பின்னர் சிபிஐ, திரிணாமூல் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினராக ஜிபன் கிருஷ்ணா சாகா கைது செய்யப்பட்டார்.[18][19]

28 மே 2023 அன்று முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் அண்ணன் மகனும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான அபிசேக் பானர்ஜியை அமலாக்க இயக்குனரகம் விசாரணை செய்தது.[20][21]

எதிர் விளைவுகள்

தொகு

28 சூலை 2022 அன்று ஊழல் முறைகேடு வழக்கில் தொடர்புடைய அமைச்சர் பார்த்தா சாட்டஜியை திரிணாமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்தும், கல்வி அமைச்சர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.[22][23]

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Explained: What is the West Bengal School Service Commission recruitment scam?". இந்தியன் எக்சுபிரசு. 15 April 2022. பார்க்கப்பட்ட நாள் 18 April 2022.
  2. "Kolkata: Besides CBI, ED to probe Bengal SSC Recruitment scam". தி எகனாமிக் டைம்ஸ். 15 April 2022. பார்க்கப்பட்ட நாள் 16 April 2022.
  3. "ED arrests Bengal minister Partha Chatterjee, finds link to money seized at close aide Arpita's house". இந்தியா டுடே. 23 July 2022.
  4. Teacher recruitment scam: WB Governor sanctions CBI prosecution against Partha Chatterjee
  5. "What is SSC scam? Latest 'CBI headache' for Mamata govt despite 3-week relief from HC". The Print. 25 November 2021. பார்க்கப்பட்ட நாள் 4 December 2021.
  6. Upendra Nath Biswas
  7. "শিক্ষক নিয়োগ নিয়ে বিস্ফোরক মন্তব্য, রাজ্যের প্রাক্তন মন্ত্রীর পুরনো ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য!" (in bn). bengali.abplive.com. 22 May 2022. https://bengali.abplive.com/district/ssc-scam-west-bengal-former-tmc-minister-upen-biswas-facebook-post-viral-890955. 
  8. "Teacher recruitment scam: Bengal mantri Partha Chatterjee arrested after 20-hour ED quizzing". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா.
  9. "₹28 cr cash, 5 kg gold found at Arpita Mukherjee's house after ED's 18-hr raid". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.
  10. "Who is Arpita Mukherjee, who has been arrested by ED?". Indian Express. 24 July 2022. பார்க்கப்பட்ட நாள் 1 August 2022.
  11. "Arpita Mukherjee claims Partha Chatterjee used her house as 'mini bank': Reports". Mint. 27 July 2022. பார்க்கப்பட்ட நாள் 30 July 2022.
  12. "WBSSC scam: Arpita Mukherjee makes BIG confession to ED about Belgharia residence". Zee News. 30 July 2022. பார்க்கப்பட்ட நாள் 4 August 2022.
  13. "Bengal SSC scam: CBI makes first arrests; two top officials nabbed". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 10 August 2022. பார்க்கப்பட்ட நாள் 23 August 2022.
  14. "Bengal school jobs scam: Ex-head of Secondary Education Board arrested by CBI". இந்தியன் எக்சுபிரசு. 15 September 2022. பார்க்கப்பட்ட நாள் 30 September 2022.
  15. "CBI arrests former West Bengal SSC chairman Subiresh Bhattacharya in recruitment scam". இந்தியன் எக்சுபிரசு. 19 September 2022. பார்க்கப்பட்ட நாள் 28 September 2022.
  16. "ED arrests TMC MLA Manik Bhattacharya in Bengal education scam". இந்தியா டுடே. 11 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 October 2022.
  17. "West Bengal: ED arrests primary board ex-chief Manik Bhattacharya in cash-for-jobs scam". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 12 October 2022. பார்க்கப்பட்ட நாள் 23 October 2022.
  18. "CBI arrests third TMC legislator in Bengal recruitment scam". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 17 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
  19. "Bengal teachers' recruitment scam: TMC MLA Jiban Krishna Saha arrested after 65-hour CBI questioning". இந்தியா டுடே. 17 April 2023. பார்க்கப்பட்ட நாள் 21 April 2023.
  20. "कड़ी सुरक्षा के बीच CBI के सामने पेश हुए अभिषेक बनर्जी, स्कूल भर्ती घोटाला मामले में पूछताछ". Hindustan. 20 May 2023.
  21. "Bengal jobs scam: CBI grills Abhishek Banerjee; ED conducts raids in Kolkata". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 20 May 2023.
  22. "Trinamool Congress suspends Partha Chatterjee from party". தி இந்து. 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 September 2022.
  23. "Partha Chatterjee, arrested in SSC scam, sacked as West Bengal cabinet minister". ஹிந்துஸ்தான் டைம்ஸ். 28 July 2022. பார்க்கப்பட்ட நாள் 3 August 2022.