மேல் மூழியாறு அணை

மேல் மூழியாறு அணை (Upper Moozhiyar Dam) என்பது இந்தியாவின் கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சீதத்தோடு கிராமத்தில் மூழியாறு ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட ஒரு மண் அணை ஆகும். இந்த அணை சபரிகிரி விரிவாக்கத் திட்டத்தின் ஒரு பகுதியாகக் கட்டப்பட்டது.[1] இந்த ஆறு கக்கி நீர்த்தேக்கத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இது ஒரு கட்டுக்கரை அணையாகும்.[1] சபரிகிரி நீர்மின் திட்டம் (340 மெகாவாட்) கேரளாவின் இரண்டாவது பெரிய நீர்மின் திட்டமாகும். இது பத்தனம்திட்டா மாவட்டத்தில் அமைந்துள்ளது. பம்பை ஆற்றின் துணை ஆறான மூழியாறு ஆற்றின் மேல் பகுதிகளை ஒரு சுரங்கப்பாதை வழியாகக் கக்கி-அனதோடு நீர்த்தேக்கத்திற்கு நீரைத் திருப்பி விடுவதற்காக இந்த அணை கட்டப்பட்டது. சேமிப்பகத்தின் உபரியான நீர் பாறை மேல் வெட்டப்பட்ட கசிவுப்பாதையின் வழியே செல்கிறது. இது மூழியாறு ஆற்றுக்குச் செல்கிறது. இரன்னி, கோன்னி, கோழஞ்சேரி, திருவல்லா, செங்கன்னூர், குட்டநாடு, மாவேலிக்கரை மற்றும் கார்த்திகப்பள்ளி ஆகிய வட்டங்கள் வழியாக நீர் பாய்கிறது.[2] இதன் அருகிலுள்ள நகரம் வண்டிப் பெரியாறு ஆகும் .[3]

மேல் மூழியாறு அணை
மேல் மூழியாறு அணை is located in கேரளம்
மேல் மூழியாறு அணை
கேரளாவில் அணையின் அமைவிடம்
மேல் மூழியாறு அணை is located in இந்தியா
மேல் மூழியாறு அணை
மேல் மூழியாறு அணை (இந்தியா)
நாடுஇந்தியா
அமைவிடம்பத்தனம்திட்டா
புவியியல் ஆள்கூற்று9°17′00″N 77°08′00″E / 9.28333°N 77.13333°E / 9.28333; 77.13333
நோக்கம்நீர் திசைமாற்றம்
நிலைசெயல்பாட்டில்
திறந்தது1979

விவரக்குறிப்புகள்

தொகு
  • அட்சரேகை: 9°17′′00′′வ
  • தீர்க்கரேகை: 77°08′00′′கி
  • ஊராட்சி: சீதத்தோடு
  • கிராமம்: சீதத்தோடு
  • மாவட்டம்: பத்தனம்திட்டா
  • ஆற்றுப் படுகை: பம்பை
  • ஆறு: மூழியாறு
  • அணையிலிருந்து நீர் செல்லுமிடம்: மூழியாறு

அணை அம்சங்கள்

தொகு
  • அணையின் வகை: மண்
  • வகைப்பாடு: நடுத்தர உயரம்
  • அதிகபட்ச நீர்மட்டம்: EL 985.00 மீ
  • முழு நிலை: EL 983.00 மீ
  • அதிகபட்ச நீர் சேமிப்பு: 0.035 மிமீ 3
  • ஆழமான அடித்தளத்திலிருந்து உயரம்: 19.00 மீட்டர்கள் (62.34 அடி)
  • நீளம்: 97.00 மீட்டர்கள் (318.24 அடி)
  • நீர்க்கசிவு பாதை: தட்டையானது, கட்டற்றது
  • நிறைவு ஆண்டு: 1979[4][5]
  • முகடு[ நம்பமுடியாத ஆதாரம்? ] நிலை: 983.00 மீ
  • திட்டத்தின் பெயர்: சபரிகிரி நீர்மின் திட்டம்
  • திட்டத்தின் நோக்கம்: நீர் மின்சாரம்
  • திட்டத்தின் நிறுவப்பட்ட திறன்: 340 மெகாவாட்

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Emergency Action Plan (Tier- I) March 2021. Retrieved 29 January 2023
  2. "Diversion Structures in Pathanamthitta district – KSEB Limited Dam Safety Organisation". பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  3. "Dams in West flowing rivers from Tadri to Kanyakumari Basin".
  4. "DRIP Dams". damsafety.in. பார்க்கப்பட்ட நாள் 2021-07-28.
  5. Liji Samuel; Dr. Prasad A. K. (July–September 2018). "Hydro Electric Power Dams in Kerala and Environmental Consequences from Socio-Economic Perspectives". International Journal of Research and Analytical Reviews 5 (1): 989–992. பன்னாட்டுத் தர தொடர் எண்:2349-5138. http://ijrar.com/upload_issue/ijrar_issue_2021.pdf. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மேல்_மூழியாறு_அணை&oldid=4140437" இலிருந்து மீள்விக்கப்பட்டது